Friday, July 15, 2011

 

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

மறுபடி பிறந்து வரச் சொல்லடி
விருப்பமில்லயானல்...
இங்கிருப்பர் எவரேரையும்
அவனைப் போல் மாற்றி வைக்கச் சொல்லடி

'பாக்கலாம்' என்ற உங்க வழக்கமான வார்த்தையைச்
சொல்லி தப்பிக்கப் பாக்காதீங்க.
எங்களுக்குத் தெரியும், மாத்திவைப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்!!

கண்ணுக்கெட்டிய தூரம் சுத்தமான தலைவனையே காணோம்.
அப்படி இருக்கலாமென நினைப்பவரையும் இருக்க விடுவதில்லை.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? என்ன செய்யப் போகிறது?
ஒரு வேளை நீ மறுபடி பிறந்து வந்தாயானாலும்
இங்கிருக்கும் சாக்கடைச் சேற்றில் உன்னையும் புரட்டி எடுத்துவிடுவார்கள்.

அந்தச் சேற்றில் பிறந்து அதை சுத்தப் படுத்தவாவது வா!!!!

இன்று நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயங்களை செய்து காட்டியவன் நீ.

ஆம், பெற்ற தாயை ஒரு நாளுக்கு மேல் உன்னோடு தங்க வைத்ததில்லை
விருதுப்பட்டிக்கு விரசாக அனுப்பி வைப்பாய், விருது ஏதும் வாங்காத தலைவனாய்.

கருமம் மட்டுமே கண்ணாய்...வேறு நினைப்பேதும் காணாய், கர்மவீரர் எனும் பேர் பெற்றாய்.

நீ மறைந்தவுடன் உன் கணக்கில் இருந்தது வெறும் அறுபத்தைந்து ரூபாய் மட்டுமே!

இன்றைய நிலைமையில் வேதனைச் சிரிப்புத்தான் வருகிறது.

அறுபத்துரெண்டில் இந்தோ-சைனா போர் வெடித்ததும், அன்றைய பிரதமர் நேரு நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

எதிரியை வீழ்த்த ராணுவச் செலவுகளுக்கு குடிமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய வேண்டும்.

உதவி என்றால் பணமாகவும் தங்கமாகவும் தேவை என்று சொன்னவுடனே, மக்கள் பொங்கியெழுந்து பணமழையாகவும் தங்கம்..நகைகளாகவும் தங்கக்காசுகளாகவும் வாரி வழங்கி விட்டார்கள். தேசபக்தி நிரம்பி வழிந்த காலமல்லவா?

அவ்வகையில் கர்மவீரர் காமராஜர் தமிழ் நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்து பெரும் நிதி திரட்டி(புறங்கையை நக்காமல்), விள்ளாமல் விரியாமல் பிரதமரிடம் கொண்டு சேர்த்தார்.

எங்கள் பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வெண்டுக்கு வருகை தந்து பள்ளியின் நன்கொடையையும் மற்றும் மாணவ மாணவிகளின் தனிப்பட்ட, தேசத்துக்கான பங்களிப்பையும் அன்போடு பெற்று சென்றது மறக்க முடியாதது.

என் தந்தை, அப்போது படித்துக்கொண்டிருந்த எங்கள் நால்வரது கைகளிலும் ஆளுக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்தார்.
மறக்க முடியாது நிகழ்வு.

பொற்சாசை அக்கருப்பு வைரக்கரங்களிடம் சேர்ப்பிக்கும் நான்.அடுத்து என் தங்கை கோமா.


பின் அண்ணாச்சி மகன்.


கடைசியாக சின்னண்ணன் மகள்.ஜூலை பதினைந்தாம் நாள். ஈடு இணையில்லாத்தலைவன் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான இன்று அன்னாரது நினைவைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையிலேயே இப்பதிவு பிறந்தது.


இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைக்க மாட்டார்களா என்ற மக்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைவேற அவரிடமே வேண்டுவோம்.

'படிக்காதமேதையான' பெரும்தலைவர் காமராஜர் பிறந்தநாளை "கல்வி எழுச்சி" நாளாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

Labels:


Comments:
மாமனிதரைப் பற்றிய அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் அம்மா.
 
Thank You Madam.
I have shared your Blog in my face book.
 
அருமையான பதிவு
 
அருமை.

இன்னும் அவர் பெயரைச் சொல்லித்தானே மக்களை ஏ'மாத்தி'க்கிட்டே இருக்காங்க நம்ம அரசியல் வியாதிகள்!

தன்னலம் கருதா கர்ம வீரர் அவர்!
 
எல்லோரும் கர்மவீரர் என்று எழுதும்போது நீங்கள் சிவகாமி மகன் என்று அந்த பாட்டு அடியை சொன்னது அருமை.
//நிதி திரட்டி( ), விள்ளாமல் விரியாமல்// அந்த அடைப்புக்குள் இருக்கும் வார்த்தைகளை மட்டும் டெலீட் செய்து விடுங்களேன்.

சகாதேவன்
 
கர்மவீரரைப் பற்றி கர்மசிரத்தையாய் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
 
//அந்த அடைப்புக்குள் இருக்கும் வார்த்தைகளை மட்டும் டெலீட் செய்து விடுங்களேன்.//

வேண்டாம் சகா. அவை இருக்கணும். அந்த சொற்கள் ஒரு முக்கியமானவரின் பொன்மொழி. அவரவர் லட்சணம் அப்படி.
 
karaipadathakarmaveeraraininaivilvaithatharkunandrigal1000
 
longlivekingmakerfame
 
ஐயா,

அம்மாமனிதரைப் பற்றி இக்காலத்தவரை விடவும் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். காரணம் இவர்கள் ஏட்டில் மட்டுமே படித்து அறிந்திருப்பார்கள்.
காமராஜர் ஆட்சி..காமராஜர் ஆட்சி என்று ஆட்சியாளர்கள் காட்டிய பிம்பமும் தெளிவில்லாமலேயிருக்கும்.

வாழ்த்துக்கு நன்றி ஐயா!
 
மிக்க நன்றி!
 
கோமா,
சந்தோசம்.
 
துள்சி,

//அரசியல் வியாதிகள்!//

சரியாகச் சொன்னீர்கள். இந்த வியாதிக்குத்தான் மருந்தே இல்லை.
 
சகாதேவன்,,

இல்லையில்லை. அவ்வார்த்தைகள் மிக முக்கியம்! அச்சொல்லடி இன்றிருப்போர்க்கு சரியான நெத்தியடி!

ஆனால் உறைக்கத்தான் செய்யாது.
 
இராஜராஜேஸ்வரி,

கர்மவீரரைப் பற்றி கர்ம சிரத்தையாக
பதிவிட்ட என் கர்மத்தை அதே கர்ம சிரத்தையோடு பாராட்டியமைக்கு நன்றி!
 
துள்சி,

பாருங்கள்...சகா! டீச்சரே சொல்லீட்டாங்க. அப்புரம் என்ன?

இப்போல்லாம் முழுக்கையையே......காலம்!
 
பெயரை உடையவரே உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
 
காமராஜ்,
அவர் நாமம் என்றும் வாழ்க.
 
ஸாரி ஃபார் லேட் கமிங்!!

அருமையான பதிவுங்க.
 
ரொம்பலேட்டா வந்திருக்கேன் ஆனாலும் அருமையான இடுகையை படிச்சேன் என்னும் த்ருப்தி நானானி..
கர்ம்வீரரைக்கண்ட காரிகையை நான் எப்போ நேரில் பார்ப்பது?
 
மாமனிதரைப் பற்றிய அருமையான பதிவு.

https://www.facebook.com/PerunthalaivarKamaraj?ref=hl
 
மாமனிதரைப் பற்றிய அருமையான பதிவு

https://www.facebook.com/PerunthalaivarKamaraj?ref=hl
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]