Friday, June 24, 2011

 

நொங்கு நொங்குன்னு நொங்கணும் சமையல் குறிப்பு

மாம்பழம் போல சம்மரில் மட்டுமே கிடைக்கும் ஓர் அருமையான இயற்கையின் அன்பளிப்பு 'நுங்கு'

'பனைமரமே பனைமரமே, ஏன் வளர்ந்தாய் பனைமரமே!' என்றொரு சிறுவர்களுக்கான பாடல் உண்டு. அதில் பனைமரத்தின் உச்சி முதல் பூமிக்குள் புதைந்த உள்ளங்கால் வரை அனைத்தும் பல வகையில் பயன் படக் கூடியவை என்பதை தெரிவிக்கும்.

அவற்றுள் உண்ணக்கூடியவை பதநீர், நுங்கு, பனங்கிழங்கு. பனங்கிழங்கு பொங்கல் சமயங்களில் கிடைக்கும்.

பதநீரும் நுங்கும் வெயில் காலங்களில் அபரிமிதமாக கிடைக்கும்.
திருநெல்வேலிக்கு இச்சமயங்களில் சென்றால், நான் விரும்பிக் கேட்பது 'பதநீரும் நுங்கும்தான்'.

சைக்கிளில் வைத்து விற்பனை செய்வார்கள். பாத்திரத்தில் வாங்கி வருவதாக சொல்வார்கள். ஹூஹும்.....அதிலென்ன சுவாரஸ்யம்?

சைக்கிளை வீட்டு வாசலுக்கே வரவழைத்து, பனை ஓலையை கப் மாதிரி வளைத்து அவ்வோலையாலேயே கட்டி, அதில் ஒரு டம்ளர் பதநீரும் அதில் ஒரு நுங்கை ஸ்லைஸ் ஸ்லைஸாக சீவிப் போட்டு அருந்தத் தருவார். ஆஹா....'பிடித்தவர்களுக்கு' அது தேவாமிர்தம்தான்!

பல சமயங்களில் எனக்கு காலை உணவே அதுதான்.

இங்கு சென்னையில் நுங்கு ஆங்காங்கே நடைபாதையில் குமித்து வைத்து சீவி சீவி விற்பார்கள். ஆரம்பத்திலெல்லாம், ஏற்கனவே சீவி வைத்திருக்கும் நுங்குகளை வாங்கி
வருவேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் பத்து நுங்குகளுக்கு ரெண்டு அல்லது மூன்று முத்தலாயிருக்கும், கடிக்கவே முடியாது.

அதை என்ன செய்வது என்று யோசித்த பொழுது கிடைத்த ஐடியாதான், நுங்கை வைத்து கிரேவி செய்து பார்க்கலாம் என்று.


சீவி எடுத்த நுங்கு, அதிலுள்ள ஜூஸ் வெளிவராமல். கூட, மேலாக சீவிய நுங்கும்.

தோலுரித்து துண்டுகளாக்கப் பட்ட நுங்கு.

வழக்கம் போல் வெங்காயம்,தக்காளி, இஞ்சி பூண்டு, எல்லாப் பொடிகள், அரைத்த முந்திரி விழுது சேர்த்து துணைக்கு பட்டாணியும் நுங்கும் சேர்த்து கலக்கி தேவையான அளவு இறுகி வரும் வரை கொதிக்க வைத்த 'நுங்கு கிரேவி'

சப்பாத்தி, டால் உடன் நுங்கு கிரேவி அமர்களமாயிருக்கும்.

இப்போதெல்லாம் பொறுமையாக நின்று உடனுக்குடன் நுங்குவின் உள்ளே உள்ள ஜூஸ் வடியாமல் வெட்டித்தர வேண்டும், அதுவும் இளம் நுங்காக இருக்க வேண்டும் என்ற கண்டிஷனோடுதான் நுங்கு வாங்குகிறேன்.

நீங்களும் அப்படியே வாங்குங்கள். சேரியா?

Labels:


Comments:
நுங்கு அமர்க்களம்.

கிராமத்திற்குப் போனால்தான் நுங்கு.இங்கு கிடைக்காது.
 
அருமையாய் நோகாமல் நொங்கெடுத்து நொங்கு நொங்குன்னு நொங்கி சூப்பராய் செய்த கிரேவிக்குப் பாராட்டுக்கள்.
அற்புதமான ஐடியா.
 
அருமை.
நுங்கு அருமையான உணவு. சமையலில் சேர்க்கலாம் என்று இப்போது தெரிந்து கொண்டோம். ஒரு கல்யாண வீட்டில் மறு நாள் சமையலுக்கு வெட்டிக் கொண்டிருந்தார்கள். எதற்கு என்று தெரியவில்லை. இப்போது தெரிந்து கொண்டோம்.
சாப்பாட்டில் நல்ல ரசனை.
வாழ்த்துக்கள் அம்மா.
 
நொங்கு நொங்குன்னு நொங்கணும் நொங்கணும்
 
சூப்பர்
உங்களுக்கு
’நொங்கினார்க்கு இனியர்’ என்ற பட்டத்தைப் பதிவர்கள் சார்பில் அளிக்கிறேன்
 
மாதேவி,

நுங்கு எங்கெங்கு என்று தேடாமல் எங்கு கிடைக்குதோ
அங்கங்கு சென்று நுங்கு
வாங்குங்கள். சேரியா?
 
இராஜராஜேஸ்வரி,

நோகாமல் நொங்கெடுத்தேனா?
இந்த நுங்கை வாங்க, அதெ என்னை நொங்கெடுத்துவிட்டது. கூட்டம் இல்லாத நேரம் பாத்து நான் மட்டுமே நின்று, ஒவ்வொன்றாக சீவி வாங்குவதுக்குள், அடுத்த வாடிக்கையாளி வந்து,'ஏங்க முப்பதா வாங்குகிறீர்கள்?' என்று சலித்துக் கொண்டாள்.
அப்படி என்னை நொங்கெடுத்து வாங்கிய நுங்கு.

விடமாட்டேனே....இன்னும் நொங்குவேன்.
 
ரத்னவேல் ஐயா,

நானே நாலைந்து வருடங்களாகத்தான் சமையலில் சேர்த்துக் கொள்கிறேன்.

கல்யாண வீட்டு சமையலிலா....?
ஹை....யோ! ஒரு பனந்தோப்பே வேணுமே!!
நீங்களும் பந்தியில் சாப்பிட்டீர்களா?
அப்படியானால் எதில் சேர்த்திருந்தார்கள்?

ரசித்து செய்யும் சமையல் ருசிக்கும்தானே!!
மிக்க நன்றி ஐயா!!
 
கோமா,
எனக்கும் நொங்குநொங்குன்னு நொங்குவது பிடிக்கும்.
மும்பையில் ஒரு வீடியோகேம் ஆடினோமே...நினைவிருக்கா?
 
கோமா,
இப்பட்டத்தை பல தமிழறிஞர்கள்....தமிழ் பதிவர்கள் மத்தியில் தந்தமைக்கு மிக்க நன்றி!!!

பட்டத்துக்கேற்ப என்னை நொங்கினார்க்கும் இனியவளாகவே இருப்பேன்.
 
nAANAANI NAAN ANGU ILLAIYE:)

NUNGU PAARTHTHE NAALAACCHU...
ITHIL KOOTTU VERA.HMM.:)
 
புதுசா இருக்கே..
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]