Thursday, June 23, 2011

 

கத்தரிக்காய் க்ரேவி அல்லது காரக் குழம்பு சமையல் குறிப்பு

ரொம்ப நாளாச்சு..சமையல் பதிவு போட்டு. அதா வந்துட்டேன் கரண்டியும் கடாயுமாக. இப்பெல்லாம் டிவியில் எந்த சானலை, எந்த நேரம் போட்டாலும் யாரவது ஒருத்தர், கரண்டியும் கடாயுமாக வர ஆரம்பிச்சுட்டாங்க.

கத்திரிக்காயில் ஒரு கார கிரேவி அல்லது குழம்பு செய்யப் போறேன். வர்றீங்களா?

தேவையானவை:

பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ நாலாக வகுந்தது
வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, பட்டை, சோம்பு
கரைத்த புளித் தண்ணீர் சிறிய கப்
தேங்காய், கசகசா அரைத்த விழுதுகடாயில் எண்ணை ஊற்றி பட்டை சோம்பு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


நன்கு வதங்கியதும் வகுந்து வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு நன்கு பிரட்டி, மூடி போட்டு மூடி வைக்கவும். அதிலுள்ள நீரிலேயே கத்தரிக்காய் நன்கு வெந்ததும் சிறிது நேரம் பிரட்டி கொடுக்கவும். கொஞ்சம் ப்ரை ஆனதும்,


புளித்தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், கசகசா விழுதை சேர்த்து தேவையான அளவு கெட்டியானதும்,


பொடியாக அரிந்த கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடும்.


சூடான சாதத்தோடு அருமையாயிருக்கும். மேலும் புலாவ், சப்பாத்திகூடவும்
சந்தோஷமாக சொந்தம் கொண்டாடும்.
brinjal நல்ல பிriஞ்சaகவும் காரலில்லாமலும் இருக்கணும்.

Labels:


Comments:
thanks. kandipa senju pakkaren
 
Thendral,
thanksmma. it's nice to see you again.
once again thanks for the cooool breeeeze!
 
சுவையோ சுவை .....
 
கமகமக்குது. செய்து பார்க்கிறேன். குறிப்புக்கு நன்றி.
 
மூணு சந்தேகங்கள்:

1. மசாலாப் பொடி எதுவுமே சேர்க்கலையே? அப்புறம் எப்படி “காரம்” வரும்?

2. சமைப்பது மண்சட்டியிலா? புளி சேர்த்து செய்யும் எந்தக் குழம்பானாலும் மண் சட்டியில் செய்யலாமா?

3. இது ரெண்டும் பதிவு சம்பந்தப்பட்ட சந்தேகமில்ல... ஆனாலும், பெரியவுங்க அனுபவம் இருக்குமின்னு.. ஹி.. ஹி..
அ.) புது மண்பானை வாங்கி வந்து, கழுவி வெயிலில் 2 நாள் காயவச்சு அப்புறம், குடிதண்ணி ஊத்தி வச்சிருக்கேன். ஆனாலும், தண்ணியில பயங்கரமா ”மண்வாசனை” அடிக்குது. என்ன செய்யலாம்?
ஆ.) முருங்கை மரத்துல, புழுக்களும், மைக்ரோ சைஸுல குட்டிப் பூச்சிகள் இருக்குது. இலையெல்லாம் அரிச்சு அரிச்சு இருக்கு. சில இலைகள் அப்படியே வாடி தொங்குது. பச்ச மிளகாய்+இஞ்சி+பூண்டு அரைச்சு தண்ணியில் கலந்து நேத்து தெளிச்சு விட்டிருக்கேன். போதுமா?
 
குழம்பு ஜூப்பரு நானானிம்மா..

காரத்துக்கு பச்சைமிளகா மட்டுமே போதுமா?..
 
கோமா,
சந்தோசம்.
 
ராமலஷ்மி,
செய்து, சாப்பிட்டுப் பாத்து சொல்லவும்.
 
ஹூஸைனம்மா,
சேரி..சேரி...சாரி..சாரி.
1) பொடிகள் சேர்ப்பதை விட்டு விட்டேந்தான். இருந்தாலும் உங்களைப் போன்ற தில்லாலங்கடிகளுக்கு இதெல்லாம் சொல்லாமலே புரிந்தூ கொள்ள வேண்டிய சமாச்சாரங்கள்.
 
2) எந்த சமையலானாலும் மண்சாட்டிகளில் தாராளமாக செய்யலாம்.
சுவை கூடும், சூடு அதிக நேரம் இருக்கும், கேசரோலில் வைத்தாற்பொல்.
 
3) மண்பாத்திரங்கள் வாங்கியதும் அவற்றை ஓர் இரவு முழுதும் மூழ்குமளவு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி ஊற விடவேண்டும் மறுநாள் நன்கு காய்ந்தபின் உபயோகிக்கலாம்.
மண் பானை தண்ணீர் சிறிது மண்வாசனை அடிக்கும்தான். வெட்டிவேரை வெள்ளைத் துணியில்
மூட்டை கட்டி மண் மானைக்குள் போட்டு வையுங்கள். தண்ணீர் வெட்டிவேர் வாசத்தோடு குளிர்ச்சியாகவிம் இருக்கும்.
 
ஆ) முருங்கை மரத்துக்கு பூச்சிகள் போக புகை மூட்டம் போடுவார்கள்.
மற்றபடி மருந்து அடிப்பதெல்லாம் அக்ரி-ஆட்களுக்குத்தான் தெரியும்.
எனக்குத் தெரிந்ததை சொல்லிவிட்டேன்.

"நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க"

சேரியா?
 
எல்லா சந்தேகத்துக்கும் பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி!! சந்தோஷம்.

பானையைத் தண்ணீரில் மூழ்கடித்துப் பார்க்கிறேன், “மணம்” மாறுகிறதா என்று!! ;-)))
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]