Friday, April 8, 2011

 

நாகலிங்கப்பூ எடுத்து நாலு பக்கம் கோட்டைகட்டி

திருநெல்வேலியில் எங்கள் வீட்டு தெருக் கோடியில் இருக்கும் சிவன் கோவிலுக்குப் போகும் போதெல்லாம், கோவிலின் பின்புறம் இருக்கும் நெட்ட நெடிய நாகலிங்க மரத்தில் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்திருக்கும். ‘பறிச்சிக்கலாமா’ என்று கேட்பேன். அதுக்கு, ஐயையோ! சிவன்சொத்து குல நாசம் என்பார்கள்னு சொல்லி நோ-ன்னுடுவார்கள். வீபூதியைக்கூட அங்கேயே தட்டிவிட்டு வர வேண்டுமாமே!!! சில இடங்களில் பாதையோரம் கேட்பாரில்லாமல் பூத்து சொரிந்திருக்கும். ஆனால் நாம் வாகனத்தில் செல்லும் போது பறிக்க முடியாது பொறுக்கவும் முடியாது. ஏதாவது ஒரு கோவிலில் பிரசாதம் தரும் போது உதிரிப் பூக்களோடு ஒரு நாகலிங்கபூவும் கிடைக்கும். சந்தோஷமுன்னா அப்படி ஒரு சந்தோஷமாயிருக்கும். இப்படியாக அப்பூவின் மேல் ஓர் ஆசை மனசுக்குள் பூத்து சொரிந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு போய்க் கொண்டிருக்கையிலே எங்க ப்ளாட்டுக்குள் பிரம்மாண்டமாய் வளர்ந்திருந்த முருங்கை மரமொன்று காற்றில் விழுந்துவிட்டது. உடனே முழு மரத்தையும் அடியோடு வெட்டி விட்டார்கள். அதன் பிறகுதான் அதன் பின் பக்கத்திலிருந்த மரங்கள் என்ன என்ன வென்று தெரிந்தது. ஆம்! முருங்கைக்கு இடப்புறம் நெடுநெடு என்று வளர்ந்திருந்த மரம்.....நாகலிங்கமரம்!!!!! வாவ்!!! அடிமரத்துக்குக் சிறிது மேலே நிறைய கைகள் போல குச்சிகுச்சியாய் வளைந்திருந்தது. பூக்கள் ஒன்றுமில்லை. அது எப்போது பூக்கும்...எப்போது பூக்கும் னு காத்துக்கொண்டிருந்தேன். ஆஹா..! மொட்டுக்கள் கொத்துகொத்தாக... பூத்தது.... பூத்தது..........!! பூத்தே...விட்டது...!! அதுவும் கொத்துக் கொத்தாக!! பஞ்சபூதங்களாக ஐந்து இதழ்கள், அவற்றை உள்வாங்கி நடுவில் சிவலிங்கமாக மகரந்தம் அதன் மேல் ஐந்து தலை நாகம் குடை விரித்தாற்போல் பூவின் பாகம்தான் அதன் சிறப்பு, எந்தப் பூவிலும் இல்லாத ஒன்று. இப்போது அடிக்கடி ரெண்டு அல்லது மூன்று பூக்கள் பூக்கிறது. எங்கள் ஃப்ளாட் வாட்ச்மேன் பூக்கும் பூக்களைப் பறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுக்கு கொடுத்துவிடுவார். ஒரு மூன்று வீடுகளில்தான் விரும்பிக் கேட்பார்கள். சில சமயம் எனக்கு நான்கு அல்லது மூன்று பூக்கள் கிடைக்கும். இயற்கையின் சிறப்பான ஓர் அமைப்பைப் பெற்ற இந்நாகலிங்கப்பூ பூஜைக்குகந்த பொற்ப்பூ. அது என் பூஜைக்கு கிடைத்தது பெரும் சிறப்பூ!!!

Labels:


Comments:
பூப்பூவா பூத்திருக்கு.
 
நல்ல பதிவு.
மரத்தில் ஒரு அட்டையில் பெயர் எழுதி வைக்க சொல்லுங்கள். இப்போதைய குழந்தைகள் தெரிந்து கொள்ளட்டும்.
நன்றி.
 
ரத்னவேல் ஐயா,

அப்படியே ஆகட்டும். நன்றி, முத்ல் வரவுக்கு.
 
எந்த சிவன் கோவில், நெல்லைஅப்பர் கோவில் அல்லது பாளை சிவன் கோயில்.

உங்கள் பதிவின் பெயர் ஈர்ப்பாக இருக்கிறதே, நைன்வெஸ்ட் என்ற பெயர். கனடா நாட்டு காலனி நிறுவனம் ஆச்சே.

எதனால் இந்தப் பெயர்க் காரணம். அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்
 
ராம்ஜி_யாஹூ,

முதல் வருகைக்கு வந்தனம்.

அந்த சிவன் கோயில் என் பிறந்த வீடிருக்கும் சிந்துபூந்துறையிலுள்ள சிவன் கோயில்.

பதிவின் பேர் ஈர்த்ததுக்கு பெருமைதான்.

நீங்கள் சொன்னாற்போல் அப்பெயர் காலணி நிறுவனத்தின் பேர்தான். அக்கடையின் பெயர் பலகையைத்தான் என்னோட எம்பளமாக வைத்திருக்கிறேன். அதும் போக, ‘9-வெஸ்ட்’ என்பது என் பிறந்தவீட்டின் விலாசமுமாகும்.
அமெரிக்காவிலிருந்த போதுதான் பதிவெழுத ஆரம்பித்தேன். அதனால் அக்கடைப் பெயரையும் என் விலாசத்தையும் இணைத்து, பதிவின் பேராக வைத்துக் கொண்டேன். என் கமெண்டுக்கருகில் உள்ளது நைன்வெஸ்டின் படமே!!!
போதுமா? உஸ்ஸ்ஸ்..இப்பவே கண்ணைக்கட்டுதே!!!
 
அழகிய பூ. எங்கள் ஊரிலும் இருக்கிறது.

பூங்கா சென்ற நேரம் படம் எடுத்திருந்தேன்.அப்பதிவில் போட எண்ணியிருந்தேன் ))
 
உண்மையில் நாகலிங்கப் பூவைப் பற்றி
கேள்விப்பட்டிருக்கிறேன்
இதுவரை பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை
தங்கள் பதிவின் மூலம்
விதம் விதமாக குடும்பமே
பார்த்து ரசித்தோம்
நன்றி வாழ்த்துக்கள்
 
சின்ன வயதில் அபூர்வமாக கிடைத்த பூ இது. இப்பொழுது பார்க்க ஆனந்தமாக இருக்கிறது நானானி. பகிர்வுக்கு நன்றி
 
இனிய சித்திரை புதுவருடவாழ்த்துகள்.
 

அருமையான பதிவு..

தங்களுக்கு நினைவு வந்த அதே பாடல் எனக்கும் நினைவு வ்ந்தது ஆச்சரியமாக இருக்கிறது...

http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_27.html

 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]