Sunday, April 3, 2011

 

மதர் அலெக்ஸ் மறைந்தார்!


எங்களின் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ரெவ். சிஸ்டர் மேரி அலெக்ஸ் அவர்கள் சென்ற 20-2-2011 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.

அப்போது நான் திருநெல்வேலியில் இருந்தேன்.

பதிவர் சகாதேவன் இல்லத்துக்கு காலை சென்ற போது ஹிந்து பேப்பரில் செயிண்ட் இக்னேஷியஸ் கான்வெண்ட் பேரில் ஓர் இரங்கல் அறிவிப்பு பார்த்து பதறிவிட்டேன்.

காரணம் நூறு வயதைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்...போன டிசம்பரில் அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்தச் சென்ற போது அடுத்த வருடம் பார்ப்போமோ என்று பேசிக் கொண்டே நாங்கள் கலைந்தோம்.

அப்போது, அப்படி நிகழும் போது, கடவுள் புண்ணியத்தில் நாமும் இருந்தால் கட்டாயம் நேரில் மலர்வளையத்தோடு சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று மனதில் நினைத்துக்க் கொண்டேன்.

சென்னையில் இல்லாமல் இங்கு வந்துவிட்டேனே...என்று கோமாவுக்கு போன் செய்து கேட்டபோது மதர் சீரியஸாக இருக்கும் போதே திண்டுக்கல் மிஷின் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அங்குதான் நடந்தது. சென்னையில் இருந்தாலும் பார்த்திருக்க முடியாது என்றாள்.

மனசில் நினச்சுட்டேனே...என்ன செய்வது என்று மனது பிறாண்டியது.

ஆங்!! கான்வெண்டில் அவரது படம் வைத்து அஞ்சலி செய்திருப்பார்கள், அங்காவது செல்லலாம் என்று, நானும் சகாதேவனும் கிளம்பினோம்.

மதியம் மூன்று மணியாதலால் எங்கும் பூ கிடைக்கவில்லை. விடக்கூடாது என்று பாளை மார்க்கெட்டுக்குப் போனால் அங்கும் புதுப் பூ இன்னும்வரவில்லை.

ஒரே ஒரு கடையில் பொக்கேவுக்கான ரோஜாக்கள் சிலது இருந்தது

எதேஷ்டம்!

ஆளுக்கு ரெண்டிரண்டு ரோஜாக்களை வாங்கிக்கொண்டு கான்வெண்டுக்குப் போனோம்.

ஏண்டா...போனோம் என்றாகிவிட்டது.

ஆபீஸ் ரூமுக்கருகில் ஒரு சிஸ்டர் நின்று கொண்டிருந்தார்கள்.

நாங்கள் வந்த விபரம் சொல்லி, நாங்கள் இருவரும் முன்னாள் மாணவர்கள், மதர் அலெக்ஸிடம் படித்தவர்கள் என்று எங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு, சிஸ்டர் அலெக்ஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தோம் என்றோம்.

நீங்கள் அவரது படம் வைத்து மாலை போட்டு வைத்திருப்பீர்கள் என்று வந்தோம்.

அதற்கு அவர்கள், ‘ அதெல்லாம் எங்க சிஸ்டர்ஸ் நேற்றே திண்டுக்கல் போய் செய்துவிட்டு வந்துவிட்டார்கள். இன்று மற்ற சிஸ்டர்ஸ் ஃப்யூனரலுக்குப் போயிருக்கிறார்கள், என்றுசாதாரணமாக சொல்லிவிட்டார்கள்.

அவர்தான் தற்போதைய தலைமையாசிரியர் என்று தெரிய வந்தது.

எங்களுக்கு தாங்கவில்லை,’இங்கு ஆபீஸ் ரூம் வாசலில் படம் வைத்து மாலை போட்டு வைத்திருக்கலாமே, எங்களைப் போல் வருபவர்களுக்கு ஒர் ஆறுதலாக இருக்குமே, என்றதுக்கு சரியாக பதில் சொல்லாமல் அடுத்து நிற்பவர்களிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.

நொந்து போனோம்.

ஒரு பொறுப்புள்ள தலைமையாசிரியரிடம் இதை எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் தேடிவந்தவர்களை வரவேற்கும் விருந்தோம்பல் கூட இல்லை.

பன்னிரண்டு வருடங்கள் தலைமையாசிரியராகப் பணி புரிந்து பள்ளிக்கு நல்ல பேரையும் மாணவிகளுக்கு நல்ல ஆங்கிலத்தில் பேசும் திறமையையும் நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுத்த அன்னாருக்கு அப்பள்ளியில் அவர் படம் வைத்து அஞ்சலி செலுத்தக்கூட யாருக்கும் மனமில்லை.

நல்ல வேளையாக நாங்கள் நின்ற இடத்துக்க்குப் பின்னால் சுவரில் பழைய தலைமையாசிரியர்களின் படங்கள் வரிசையாக மாட்டப் பட்டிருந்தது. மதர் அலெக்ஸ் படம் எனக்கு நேர் பின்னாலிருந்தது. ஆனால் உயரத்திலிருந்தது. நாங்கள் இருவரும் கொண்டு போன பூக்களை அப்படத்தின் அடியில் எட்டி வைத்து விட்டு மனதார மதர் அலெக்ஸ் அவர்களுக்கு எங்கள் அஞ்சலியை எங்கள் குடும்பத்திலிருந்து கான்வெண்டில் அவரிடம் படித்த(பெரியக்கா பொன்னம்மாள், சின்னக்கா செம்பா, சின்னண்ணன் வடிவேல்முருகன், நான், கோமா, சித்தப்பா பெண் சிப்பிலி, அண்ணணன் பிள்ளைகள் சோமசுந்தரம், ராமலக்ஷ்மி ஆகிய) அனைவரது சார்பாக செலுத்திவிட்டு வந்தோம். மனசு கொஞ்சம் லேசானது.

கான்வெண்டில் உள்ள மதர் படம் நாங்கள் வைத்த பூக்கள் கேமராவில் கவராகவில்லை.சென்ற ஆண்டு பிறந்தநாளில் நான் மதர் அலெக்ஸுக்கு பிறந்தநாள் பரிசாக அவரது போட்டோக்களை ஃப்ரேம் செய்து கொடுத்தேன். அப்போது அவர் சொன்னது இன்னும் மனதில் நிழலாடுகிறது.

“நான் இந்த படத்திலிருப்பதை விட உங்கள் மனங்களில் இருப்பதையே விரும்புகிறேன்”உண்மைதான். மதர் அலெக்ஸ் என்றென்றும் எங்கள் மனங்களில் இருப்பார்.


இப்போதைய கான்வெண்ட் என்ன இருந்தாலும் மதர் அலெக்ஸ் காலத்து கான்வெண்ட் போல ஜொலிக்கவில்லை. இதை எங்களுக்ளுக்கு கிடைத்த கசப்பான அனுபவத்தால் சொல்லவில்லை உண்மையிலேயே ஏதோ ஒன்று குறைந்துள்ளது.

அது என்னது...? பழைய கம்பீரம்?!

Labels:


Comments:
அன்னாருக்கு இங்கும் என் அஞ்சலி.
 
சென்ற ஆண்டில் மதர் அலெக்ஸ் பிறந்த நாள் பதிவினை நினைவில் நிறுத்தியபடியே,அன்பால் மனதில் அமர்ந்திட்ட ஆசிரிய அன்னைக்கு என் அஞ்சலிகளும்!
 
மதர் அலெக்ஸ் அவர்களுக்கு அஞ்சலிகள்.
 
எனது அஞ்சலிகள்.
 
ஆழ்ந்த அஞ்சலிகள்!
 
’இருக்கும் வரைதான் மதிப்பும் மரியாதையும்’ என்ற பாடத்தை,நாம் படித்த பள்ளியில் 40 50 ஆண்டுகள் கழித்து கற்றுக் கொண்டதை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.

அவர் கல்வித் தொண்டாற்றிய பள்ளியின் மனதில் கூட அவர் இல்லையே...
 
நல்ல வேளையாகச் சென்ற வரூடம் பார்த்தீர்கள்.
மதர் அலெக்ஸுக்கு என் அஞ்சலிகள்.
பள்ளிகளும் மனிதர்களும் மாறத்தான் சேய்கீறார்கள் நானானி.
எப்பொழ்ழுதும் பழைய நாட்களும் பண்பும் திரும்புவதில்லை.
 
அப்போது, அப்படி நிகழும் போது, கடவுள் புண்ணியத்தில் நாமும் இருந்தால் கட்டாயம் நேரில் மலர்வளையத்தோடு சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று மனதில் நினைத்துக்க் கொண்டேன்.

என்ற இந்த வரிகள் வேண்டாமே
 
ஆயில்யன்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரிய அன்னைக்கு அஞ்சலி செலுத்த வந்தமைக்கு மிக்க நன்றி!
 
கோமதி அரசு,
நன்றிகள்!
 
மாதேவி,
உங்களுக்கும் என் நன்றி!!
 
ராமலக்ஷ்மி,
உங்களுக்கும் நன்றி.
 
கோமா,
நினைத்தால் வருத்தமாகத்தானிருக்கு.
 
வல்லி,
உண்மைதான்.

//எப்பொழ்ழுதும் பழைய நாட்களும் பண்பும் திரும்புவதில்லை//
 
என்னுடைய அஞ்சலிகள்..

அந்த கான்வெண்டில் இருப்பவங்களே அவங்களுக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செஞ்சிருக்கலாம்.. வருத்தமாத்தான் இருக்கு.
 
கோமா,

// இந்த வரிகள் வேண்டாமே//

இருந்துட்டுப் போகட்டுமே! நெருப்பென்றால்.......

உண்மையில் நான் அப்படித்தானே நினைத்தேன்.
நீங்கதானே சொல்வீர்கள்...’அறுபது வயதுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஆண்டவன் நமக்குக் கொடுக்கும் போனஸ் நாட்கள் என்று?
 
அமைதிச்சாரல்,
நன்றி.

பாவம் அவர்களை விட்டுவிடுவோம்.
மதர் அவர்களின் அருமை தெரியாதவர்கள்.

ஆனாலும் அன்று கொஞ்சம் கோபமாக வந்தது. அதான் பதிவிலே கொட்டிட்டேன்.
 
மனப்பூர்வ அஞ்சலி.
 
இருந்துட்டுப் போகட்டுமே! நெருப்பென்றால்.......

உண்மையில் நான் அப்படித்தானே நினைத்தேன்.

நானானி
உங்களிடம் இருக்கும் இந்த பிராங்நஸ் ..ஐ லைக் இட்
 
ரத்னவேல் ஐயா,

மிக்க நன்றி!
 
கோமா,
//நானானி
உங்களிடம் இருக்கும் இந்த பிராங்நஸ் ..ஐ லைக் இட்//

ஹையோடா...!!!
 
மதருக்கு அஞ்சலி.

நாங்கள் படிக்கும் போது இவர்கள் இல்லையென்றாலும் அத்தை, அக்கா, மதினி மூலமாக இவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]