Monday, March 21, 2011

 

சாராள் தக்கர் கல்லூரி பழைய மாணவியர் சந்திப்பு

பல வருடங்களுக்குப் பிறகு, நான் படித்த 'சாரள் தக்கர் கல்லூரி'யின் பழைய மணவியர் சந்திப்பு சென்னையில் நடந்தது. என் தோழி திருமதி ரேய்ச்சல் பத்மினி ஆல்ஃபிரட் என்க்கு போன் செய்து, 'வருகிறாயா?' என்று கேட்டார்.

முப்பத்தியிரண்டு வருடங்களுக்கு கழித்து இப்போதுதான் நினைவு வந்ததா என்று செல்லமாக கடிந்து கொண்டேன்.
நான் இந்த வருடம்தான் சென்னையில் கலந்து கொள்கிறேன். அதனால்தான் உன் நினைவு வந்தது என்றார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சி எஸ் ஐ பள்ளியில் நடக்கிறது, மாலை நான்கு மணிக்கு வந்துவிடு.

ரொம்ப சரியாக ஐந்தே முக்காலுக்கு(ஏதோ ஊர்வலம்....டேக் டைவர்ஷன்)ப் போய்ச் சேர்ந்தேன்.

அன்றைய கூட்டத்தில் எங்கள் கல்லூரியின் பழைய முதல்வராக இருந்த
MISS DORA DAVID அவர்களின் நூறாவது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு அன்னாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதில் அவரை அறிந்தவர்கள், அவர் கீழ் பணி புரிந்தவர்கள், அவரிடம் படித்த மாணவிகள் என்று பலர் அவரைப் பற்றி எழுதியிருந்தார்கள்

அன்றைய கூட்டத்திலும் அவர்களில் பல பேர் தாம் அறிந்ததையும் அனுபவித்ததையும் சுவை பட பேசி விழாவை கலகலப்பாக்கினார்கள்.

MISS DORA DAVID THE LEGEND என்ற புத்தகத்தையும் வெளியிட்டு சிறப்பித்தார்கள்.

SARAH TUCKER COLLEGE - SOUTH INDIA'S FIRST WOMEN'S COLLEGE.
சாரா டக்கர் என்ற அன்பு இதயம் (kind hearted) கொண்ட ஓர் ஆங்கிலேயப் பெண்மணியால் 1896-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

மிஸ் டேவிட்....ஆம் அவர் தன்னை இப்படி அழைப்பதேயே விரும்பினார்.....

1944-1949 வரை விரிவுரையாளராகவும் பின்னர் 1950-1969 வரை முதல்வராகவும் பணியாற்றினார். அவர்தம் நினைவுகளை அன்போடு நினைவு கூர்ந்தார்கள், உடன் பணியாற்றியவர்களும் மாணவிகளும்.

"Sit & Study உக்காந்து படி"

மிஸ் டேவிட் முதல்வராக இருந்த காலத்தில் இந்த தமிழிஷ் வார்த்தைகளைக் கேட்காத மாணவிகளே இருக்க முடியாது!!!மாணவிகளை அன்போடு வழி நடத்திய அவர் வாய் வழியே வழிந்தோடும் சொற்றொடர்தான் இது. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக என்னவொரு ரைமிங்கோடு கூடிய சொல்லடுக்கு!!!!!!!மேடையின் தோற்றம். பழைய ஆசிரியர்கள், மாணவிகளால் நிரம்பியிருக்கிறது


கூட்டத்துக்கு வந்திருந்த பழைய மலர்கள்!


எழுத்துலகில் பிரபலமான திருமதி ரமணி சந்திரனும் ஒரு பழைய மாணவி.


விழா மலரில் கட்டுரை எழுதியவர்களுக்கு அப்புத்தகம் வழங்கப்பட்டது. மிஸ் டேய்சி பால் அவர்களிடமிருந்து ரமணி சந்திரன் விழா மலரைப்பெற்றுக் கொள்கிறார்.


அவரோடு ஒரு சிறிய சந்திப்பு. தான் படித்த காலம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். நானும் இப்போதுதான் ப்ளாக்கில் எழுதுகிறேன் என்றதுக்கு 'உம் எழுதுங்கள்..எழுதுங்கள் என்று உற்சாகப் படுத்தினார்.


என் மதிப்புக்குரிய தமிழாசிரியர் மிஸ் உமா மகேஸ்வரி அவர்களுக்கு விழாமலர் வழங்குகிறார்கள்


மலரைப் பெற்றுக்கொண்ட சிலர். இடமிருந்து இரண்டாவது தோழி பத்மினி.


மை ஃபிரண்ட் பத்மினி பேசும் போது எனக்கு கல்லூரி அட்மிஷன் கிடைத்த விவரத்தையும் தன் பேச்சினூடே போட்டுடைத்தார். கல்லூரி ஆரம்பித்து பத்து நாட்கள் கழிந்த பின் என் மார்க் ஷீட்டோடு மிஸ் டேவிட் முன் போய் நின்றேன். இன்னார் மகள் என்று தெரியுமாதலால், என்னை எதுவுமே கேட்காமல் மார்க் ஷீட்டைப்பார்த்து மேத்ஸ் க்ரூப் ( எஸ்.எஸ்.எல்.சி.யில் நான் சென்டம்)போட்டு கையேழுத்திட்டு 'க்ளாஸுக்குப் போ' என்று விரட்டிவிட்டார்கள். நானும் க்ளாஸைத் தேடிப் போய் உக்காந்தேன். வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது அட்டெண்டர் வந்து அப்ளிக்கேஷன் ஃபார்மில் என் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு போனார். மற்ற இடங்களெல்லாம் ஏற்கனவே நிரப்பட்டிருந்தது!

அப்போதெல்லாம் காலை வகுப்புக்குள் நுழையும் போது வகுப்பறை வாசலில் சிறு கூடை நிறைய முளைகட்டிய பயறு இருக்கும். இதுவும் மிஸ் டேவிடின் ஏற்பாடு. மாணவிகளின் ஆரோக்கியத்தில்தான் எவ்வளவு அக்கறை!! இன்று விலாவாரியாகப் பேசப்படும் முளைகட்டிய பயறை சாப்பிட்டதும் அப்போதுதான். கை நிறைய அள்ளிக் கொண்டு அவரவரிடத்தில் அமர்ந்து கொண்டு அசை போட்டுக் கொண்டே பாடத்தையும் கவனிப்போம்.ஒருவரும் ஒன்றும் சொல்லமட்டார்கள்.


1945-ல் படித்த மாணவி ஒருவர் மலர் பெற்றுக் கொள்கிறார். சொல்லப்போனால் அவர்தான் ஆண்டிக் மாணவி! டயாஸில் நிற்கும் திருமதி ஜாஸ்மின் ரிச்சர்ட் பேசும் போது பல சுவாரஸ்யமான தகவல்களைச் சொன்னார்.


அக்காலத்தில் கல்லூரி பற்றி, 'கொழுத்தும் வெயில், கரையும் காக்கை, நெடிதுயர்ந்த பனை மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம் முட்புதர்கள், சுற்றுச் சுவரில்லா கல்லூரி, அங்கு சுடர் விடும் கவின் மிகு மலர்கள் கூட்டம்!' , இவ்வளவு பாதுகாப்பின்மையிலும் கல்லூரி மற்றும் மாணவிகளின் கண்ணியத்தையும் கட்டிக்காத்தார் என்று புகழாரம் சூட்டினார். பெற்றோர்கள் இதற்காகவே அவரை நம்பி தம் பெண்களை கல்லூரி விடுதியில் சேர்ப்பார்கள். இரவு ரெண்டு மணிக்கும் விடுதியை சுற்றி வந்து காவல் காக்கும் காவல் தெய்வம் என்றும் வர்ணித்தார். விடுதியில் படித்த மாணவிகளுக்கு இது நன்கு புரியும்.

WILD LIFE DAY அன்று விலங்கியல் மாணவிகளின் வில்லுப் பாட்டில், "காட்டுக்கல்லூரி கோட்டையிலே கதவுகளில்லை- அதை காவல்காக்க பிரின்சிபாலையன்றி ஒருவருமில்லை" என்று பாடி அதிர வைத்தனர்.

கல்லூரி விழாக்களில் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடும்போது பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு ஆண் வேடத்தில் ஆடும் போது....மிஸ் டேவிட் மேடையின் எதிரே வந்து நின்று கொண்டு, "Separate Yourself!! Separate Yourself!" கூவுவாராம். இப்போது நினைத்துப் பாருங்கள்!!!!!!! இவ்வாறு கல்லூரியோடு ஒன்றியதால்தான்
"DORA TUCKER SARAH DAVID" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.


வந்திருந்த மொத்த பேரையும் க்ரூப் போட்டோ எடுத்தார்கள். என் சின்ன கேமராவில் அத்தனை பேரையும் அடக்க முடியாதாதலால் அந்த போட்டாகிராபரிடம் என் கேமராவைக் கொடுத்து அதன் கொள்ளளவில் எடுக்கச் சொன்னேன். கொள்ளியமட்டும் வந்தது, நடுவில் நான். தெரியிறேனா?


என்னோடு பொருளதார வகுப்பில் படித்த ராஜேஸ்வரி. அன்போடு கட்டித்தழுவி கொஞ்சி," நீ இன்னும் அப்படியே இருக்கிறாய்! அதே ஹேர்ஸ்டைல்...காதோரம் கட் செய்த முடி!!!" என்று உண்மையான அன்பை வெளிப்படுத்தினார். இன்று அவள் அதே பொருளாதாரத் துறைத் தலைவராக சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறாள். கேட்க சந்தோஷமாயிருந்தது.


பத்மினி ஆல்ஃபிரட் மற்றும் ஆங்கில இலக்கிய வகுப்பு தோழி ரோஹிணியுடன்


வாடிய மலர்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெற்று மீண்டும் புத்தம் புதியதாக பூத்தது போன்ற உணர்வுதான் என்று எல்லோர் மனதிலும். கல்லூரி நினைவுகள் என்றுமே வாடா மலர்கள்தான்!!!!!

Labels:


Comments:
எனக்குக் கற்பித்த பலரையும் காண முடிந்தது. பழைய மாணவியருக்கு பரவசம் தரும் பகிர்வு. மிக்க நன்றி.
 
நான் சாராள் தக்கர் பள்ளி மாணவி கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை,ஆனால் கல்லூரிப்பக்கம் வீடு என்பதால் அடிக்கடி அதனைக்க்டந்து செல்லும் வாய்ப்பு,என்னோட நெய்பர்ஸ் இப்பொழுது அங்கு பணியாற்றி கொண்டிருக்கும் நிம்மி & ஜெகதி மிஸ்.எங்கள் ஏரியா முழுவதும் சாராள் தக்கர் ப்ரொபசர்ஸ் வீடுகள் தான்..
பகிர்வு அருமை,மிக்க மகிழ்ச்சி.
 
ராமலஷ்மி,
உங்களுக்குள்ளும் பூப்பூத்ததா? மகிழ்ச்சி!
 
ஆசியா ஒமர்,
நீங்க சாராதக்கர் பள்ளி மாணவியா?
அப்படியானால் உங்களுக்கு அங்கு பாணியாற்றிய மிஸர்ஸ். வில்லியம்ஸ் அவர்களை தெரிந்திருக்குமே? பள்ளியின் வாசலருகே உள்ள குடியிருப்புகளில் முதல் வீட்டில் இருந்தார்கள். என் சிநேகிதி பத்மினியில் தாயார்.
 
அருமையான தொகுப்பு..
முளைகட்டிய பயிறு அசைப்போட்டுக்கொண்டே பாடம் ..வாவ்.
அவங்க அக்கறை ஒவ்வொரு செயலிலும் தெரியுது ..
 
அன்பின் நானானி - பள்ளி கல்லூரி நாட்கள் நமது வாழ்வின் வசந்த நாட்கள். அவைகளை நினைத்து அசை போட்டு மகிழ - பழைய மாணவர்கள் சந்திப்பு - என்பது கை கொடுக்கும். மலரும் நினைவுகளாய், அக்கால நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் இப்போது கூடி மகிழ்வது எல்லோருக்கும் கொடுத்து வைக்காத ஒன்று. வாழ்க வளமுடன். நட்புடன் சீனா
 
என்னால் யாரையும் இனங்காணமுடியவில்லையென்றாலும் என்னுடைய கல்லூரி எவ்வளவு சிறப்பானது என்ற பெருமிதம் தோன்றுகிறது.

பகிர்வுக்கு மிக்க நன்றி.
 
முதல் முறையாக உங்கள் பதிவில் கமென்ட் எழுதுகிறேன். நான் யார் என்பதை கோமாவிடமோ, ராமலக்ஷ்மியிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் :)

கல்லூரி பற்றிய பதிவைக் கண்டதும் மனம் பொங்கி விட்டது. அதுவும் உங்கள் தோழி பத்மினி ஆல்ஃபிரட் அவர்களும், மிஸ் டேய்சி பால் அவர்களும் என்னுடைய ஆசிரியைகள். அவர்களைக் காண ரெம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
 
முத்துலெட்சுமி,
கல்லூரி படிப்பு இந்த முளைகட்டிய பயறால் களை கட்டியது.
 
அன்பு சீனா,
நீங்கள் கூறியது முற்றிலும் முக்காலும் உண்மை!
 
சுந்தரா,
எனக்கும் நிறைய பேரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. காரணம் முகத்தில் காலம் வரைந்த கோடுகள்!!
 
தேவையில்லை...அம்மு,
எழுத்தாளரின் மகளுக்கு என் வீட்டுக்கு இப்போதுதான் வழி தெரிந்தது பற்றி.....ஆவலாதிகள் இல்லை, சந்தோஷமே!!

அடிக்கடி வரணும்! சேரியா?
 
அன்பு நானானி, என் தோழிகள் இருவர் அங்கு கல்லூரியில் படித்தார்கள். ஷாந்தா,வசந்தா.

முகம் மாறியிருக்கலாம். மிக நன்றாக நினைவுகளைப் பரிமாறி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி நானானி.
 
புன்னகைப் பூக்கள் பூத்தநேரம்.
 
இன்று தான் இந்த பதிவை படித்தேன். மிக நன்றாக இருந்தது .
நானும் நெல்லை நகரை சேர்ந்தவன் என்ற முறையில் ஊரில் இருக்கும் கல்லூரி பற்றி எழுதும் போது மிகவும் மகிழ்ச்சி ஆக இருக்கிறது.
திருமதி வள்ளி ஸ்ரீனிவாசன் என்று physics டெபர்ட்மெண்ட் இந்த கல்லூரியில் நீண்ட நாள்கள் வேலை பார்த்தார்கள். என் உடைய ஆதர்சம் அவர்கள். நிறைய பேருக்கு உதவிகள் செய்துள்ளார்கள்
நன்றி
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]