Wednesday, March 9, 2011

 

ஹைஜாக் செய்யப் பட்டோம்...!

பயமில்லாமல் ஜாலியாக உற்சாகமாக சந்தோசமாக ஹைஜாக் செய்யப்பட்டோம்.

அதுவும் எப்படி? முன் பதிவு செய்து!! தேவையா இது? என்கிறீர்களா? தேவைதான்.

வாழ்கையில் முதன் முதலாக அனுபவித்தது.

சாதாரண ரெஸ்டொரண்ட் போயிருக்கிறோம், ட்ரைவின் ரெஸ்டொரண்ட் போயிருக்கிறோம். ரிவால்விங் ரெஸ்டொரெண்டும் போயிருக்கிறோம். மூவிங் ரெஸ்டொரெண்ட் போயிருப்போமா?

சென்னையில் ...தென்நாட்டில் முதன்முதலாக அறிமுகமாயிருக்கும் ஒரு ரெஸ்டொரண்ட்தான் “DOUBLE DECKER MOVING BUS RESTAURANT!!!"
WHEN WAS THE LAST TIME YOU DID SOMETHING FOR THE FIRST TIME? னு கேக்குறாங்க. நமக்குத்தான் ‘மீ த ஃப்ர்ஸ்ட்’ பிடிக்குமே! ஆக வடை எங்களுக்குத்தான்!!!
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கைலாஷ் ஹோட்டல்தான் இந்த சிறப்பு ஏற்பாட்டை நமக்காக வழங்குகிறார்கள்

ஹோட்டலின் உள்ளே “HIJACKK" நம்மை கடத்திக்கொண்டு போக தயாராய் நிற்கிறது. இரண்டடுக்கு கொண்டது. கீழ் தளம் க்ளோஸ்ட் மூவிங் ரெஸ்டொரெண்ட்.


மேல் தளம் திறந்த வெளியாய் இருக்கிறது.

காற்றாடச் செல்லத்தானே நமக்கு விருப்பம். மேலும் பஸ் நகரும் போது வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே செல்லலாமே!
கிளம்பும் முன் கைலாஷ் ஹோட்டலின் பக்கத்தோற்றம்.

காற்றாட வேடிக்கைப் பார்த்துக் கொண்டே போகலாமென்று நாங்கள் மேல் தளத்தில் ஏறிக்கொண்டோம். ஹோட்டலின் வெளி வாசல் தெரிகிறது.

வண்டி கிளம்பிடுச்சு! பத்து அல்லது பதிநைந்து கிலோமீட்டர் வேகத்தில் நகருகிறது. ஷன்னு நல்லா எஞ்ஜாய் பண்ணினான்...நானும்தான். கேமராவும் கையுமாக அங்கும் இங்கும் ஓடி ஓடி நகரும் பஸ்ஸில் விழுந்துவிடாமல் க்ளிக் செய்தேன். ஓடும் பஸ்ஸில் கூடியவரை ஷேக் ஆகாமல் எடுக்க முயற்சித்தேன். ஆனாலும் கொஞ்சம் ஷேக்கிக்கித்தானிருக்கிறது.


முதலில் வெல்கம் ட்ரிங், அடுத்து வெஜ் க்ளியர் சூப்.
நாம் எதுவும் நமக்கு வேண்டியதை ஆர்டர் செய்ய முடியாது. உள்ளே கிச்சன் இல்லையாதலால் ப்ளைட்டில் தருவது போல் எல்லாம் முன்கூட்டியே தயார் செய்து எடுத்து வருகிறார்கள். இதை முதலிலேயே அறிவித்து விடுகிறார்கள்.


பிறகு சலாட் வந்தது.

பரோட்டா, மூன்று வகை க்ரேவி, டால் மக்கானி.

காய்கறி குருமா, காஷூ பனீர் க்ரேவி.

பஸ் விஜிபி-யை கடக்கிறது.

விஜிபி வாசலில் உள்ள யானைகள் .

வழியில் கண்ட ஒளி மயமான காட்சிகள்.

ரீ-பாக் ஷோரூம்.

குஷல் செயற்கை தாவரங்கள் கடை.

பெப்பர்-சால்ட்.....நான் ஹைஜாக் செய்யவில்லை, அங்கேதான் இருந்தது.

ரைட் வந்த இளஞ்ஜோடிகள் இந்திப்பாடல்க்ள் பாடிக்கொண்டே வந்தார்கள்..அப்பப்ப மேஜைக்கு வந்து சாப்பிடவும் செய்தார்கள். எனக்கும் எதாவது பாட ஆசைதான்...நம்ம குரல்தான் எங்கோ போயிடுச்சே. மருமகனை வற்புறுத்தி பாடச் சொன்னேன். அழகாக பாடினார்கள்.

பஸ் அசைந்தாடிக்கொண்டே நாற்பது நிமிடங்கள் கழித்து சோழிங்கநல்லூர் வரை சென்று, அங்கு உள்ள சத்யபாமா யூனிவர்சிட்டி தாண்டி ‘யூ டர்ன்’ எடுத்து ஹோட்டல் கைலாஷை நோக்கித் திரும்பியது.

திரும்புகிறது. வழியெங்கும் கண்ட காட்சிகள் கண்களுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. சிலுசிலுவென காற்றும் உடலை வருடிச் சென்றது.

மேலிருந்து சாலையின் போக்குவரத்து மிக அழகாக ரசிக்கும்படியிருந்தது.

வாகனங்கள் விர்ர்ர்ர்ரிடுகின்றன.

கைலாஷிலிருந்து திரும்பி கைலாஷுக்கே வந்தடைந்தோம்.

ஹோட்டல் வாசலில் இறக்கிவிடப்பட்டோம். கடந்த ஒன்றரை மணிநேரமும் போனதே தெரியவில்லை. சாப்பாடு சுமார்தான். ஆனால் பயணம் மிகமிக உற்சாகமாயிருந்தது. ஹாங்! சொல்லவில்லையே!

இந்த ஏற்பாடு மகளின் பிறந்தநாள் ட்ரீட்!!!

பயணம் முடியுமுன் ஷன்னுவை “அந்த அங்கிள் மாதிரி நீயும் பாடு. அம்மாவுக்கு ஹாப்பி பர்த்டே பாடு’ என்றதும் அப்பாவைக் கூட்டிகொண்டு போய் அங்கிருந்த மைக்கை வாங்கி அழகாக பிறந்தநாள் வாழ்த்துப்பாடினான். உடனே நேயர் விருப்பமாக ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடு’ அங்கு பாடிய பெண் கேட்கவும் உடனே அதையும் பாடி பயணத்தையும் ட்ரீடையும் அழகாக நிறைவு செய்தான்.


கீழே இறங்கியவுடன். ஹைஜாக்கின் தோற்றம்.
மறக்க முடியாத இந்த உல்லாச பயணத்தை ஏற்பாடு செய்த எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம். நீங்களும் சந்தர்ப்பம் கிடைத்தால்....கிடைத்தால் என்ன, சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு சென்று அனுபவித்து வாருங்கள். தேவை முன் பதிவு, தலைக்கு ஐநூத்தி அறுபது ரூபாய்கள். மாலை ஏழு மணிக்கும் எட்டேமுக்கால் மணிக்கும் மட்டும். என்ன கொஞ்சம் வெளிச்சத்தோடு கிளம்பியிருந்தால் காட்சிகள் இன்னும் ரசிக்குபடியாயிருக்கும்.

இது மகளிர்தினத்துக்குமான ட்ரீட்டும் கூட!

Labels:


Comments:
ஆகா ஆகா - நானானி - மகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் - மாப்பிள்ளை பாட - பேரன் பாடி வாழ்த்த - புதுமையான கொண்டாட்டம் - ஓடும் பேருந்தில். காமெராவிற்கு ஓய்வில்லாமல் புகைப்படங்கள். பலே பலே ! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அன்பு மகளுக்கு.
 
நல்ல பதிவு.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் குழந்தைக்கு.
 
அருமையான பயணம்....
 
ஆஹா,

அருமையான அனுபவம்தான் நானானி.
 
கலக்கல்!!!!!!

மகளுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்!


எங்கூருக்கு வாங்க. ட்ராம்லே சாப்பிட்டுக்கிட்டே போகலாம். மெனு ஆர்டர் செஞ்சுக்கலாம். சமைச்சே தருவாங்க!
 
மகளுக்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்:)!
 
எங்களின் வாழ்த்துக்களும் சொல்லிடுங்க..
நல்ல புதுமையான அனுபவம்.
 
அருமையான பயணம்தான் நானானிம்மா..
 
//எனக்கு ரெண்டு காதுகளிலிருந்தும் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுன்னு புகை//

மகளிர் தினத்தை மகிழ்ச்சியாகவே கொண்டாடியிருக்கிறீங்க.
ஷன்னு அம்மாவுக்கு ஹாப்பி பெர்த்டே சொல்லுங்க

சகாதேவன்
 
அன்பு சீனா,
மகளுக்கு உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி!
 
ரத்தினவேல்,

பெரியவர்களின் வாழ்த்துக்கள் கிடைத்ததுக்கு கொடுத்து வைத்திருக்கிறோம். நன்றி!
 
கோமா,
நன்றி!
 
புதுகைத்தென்றல்,
நன்றி..உங்களுக்கு.
 
துள்சி,
நன்றி!

உங்கவூருன்னா? சண்டியா? நியூசியா?
எதுன்னாலும் வந்துடுவேன்! ஆமா!
 
ராமலக்ஷ்மி,
வாழ்த்துக்கு நன்றி!
 
முத்துலெட்சுமி,
உங்கள் வாழ்த்துக்களையும் சொல்லிடறேன். சேரியா?
 
அமைதிச்சாரல்,
மிகமிக நன்றி!!
 
சகாதேவன்,

//எனக்கு ரெண்டு காதுகளிலிருந்தும் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுன்னு புகை//

அண்ணே! நாமளும் இன்னொரு நாள் ஹைஜாக்கிலே போவோம்..சேரியா?

இப்ப புகையெல்லாம் விர்ர்ர்ன்னு திரும்ப காதுக்குள் போயிடுச்சா?
 
புதிய மகிழ்ச்சியான அனுபவம்தான்.

மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
 
மாதேவி,
உங்கள் வாழ்த்துக்களை மகளிடம் சொல்லிவிடுகிறேன். மிக்க நன்றி!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]