Thursday, February 17, 2011

 

வாயிலே என்ன? கொழுக்கட்டை - சமையல் குறிப்பு

கொழுக்கட்டைகளில் பல விதம். இங்கு இரு விதம் சொல்லப் போகிறேன்.

பிள்ளையாருக்கு நேவேத்தியம் செய்யும், அவருக்கு பிடித்தமான மோதக கொழுக்கட்டை.
ஒரு பங்கு பச்சரிசி மாவுக்கு ரெண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். நாந்-ஸ்டிக் கடாயை அடுப்பில் ஏத்தி கரைத்த மாவை ஊற்றி கட்டி வீழாமல், கை விடாமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.

மாவு வெந்து கையில் ஒட்டாத பதம் வந்ததும் ஆற வைத்து, பின் சிறிது நல்லெண்ணை விட்டு நன்றாக பிசைந்து உருட்டி வைத்துக்கொள்ளவும்.

தேங்காயை துருவி, வெல்லப் பாகு வடிகட்டி, அதில் துருவிய தேங்காய், ஏலக்கா பொடி சேர்த்து கட்டியாக உருண்டு வரும் வரை கிளறவும்.

பின் மாவில் சிறு உருண்டை எடுத்து சொப்பு சொப்பாக குழி பண்ணி அதில் சிறிது தேங்காய் பூரணம் வைத்து அழகாக மூடி, குவித்து ஒட்டவும். மீதி மாவையும் பூரணத்தையும் இதே போல் சொப்பு செய்து இட்லி தட்டில் எண்ணை தடவி வைத்து ஆவியில் வெந்தெடுக்கவும்.

அழகாக தட்டில் அடுக்கினால் விநாயகர் நம் வினை தீர்க்க ஓடோடி வந்து தட்டு முன் அமர்ந்து விடுவார்.

சேரீ.....கொஞ்சம் மாத்தி யோசித்ததில் இதே கொழுக்கட்டையை காரமாக செய்தால்.....?

உருளைக்கிழங்கு போண்டாவுக்கு செய்வது போல் உருளை மசாலா செய்து கொண்டு(அது எப்படி என்று கேக்க மாட்டீர்கள்தானே?) இதே போல் பச்சரிசி மாவு தயாரித்துக் கொண்டு சொப்பாக குழி பண்ணி அதன் உள்ளே உருளை கார மசாலா சிறிய உருண்டை உள்ளே வைத்து மூடி ஆவியில் வெந்தெடுத்தால் காரக் கொழுக்கட்டையும் ரெடி!!!
விருப்பமான வடிவில் செய்து கொள்ளலாம். உருண்டையாகவோ அல்லது பாய் சுருட்டியது போலவோ செய்து "ஒரு இனிப்பு ஒரு காரம்" என்று பரிமாறலாம். காரக்கொழுக்கட்டைக்கு யார் வந்து உக்காருவார்கள் என்று கேட்பீர்கள். வேறு யார்........? நீங்கதான்!!!!!

இனிப்பு பூரணக் கொழுக்கட்டை 108+108=216 வேண்டுதலுக்காக செய்து நானும் மகளும் அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு சங்கட சதுர்த்தி அன்று பூஜைக்கு கொண்டு சென்று பூஜை முடிந்ததும் வினியோகிக்கையில் பக்தர்கள் ஆர்வமாக வந்து வந்து, 'நல்லாருக்கு...நல்லாருக்கு, இவ்வளவு மெதுவாக எப்படி செய்தீர்கள்?' என்று கேட்க, மகள் அங்கேயே மினி குக்கரி க்ளாஸ் எடுத்தது ஓர் இனிய நிகழ்வு.

Labels:


Comments:
ஆஹா..... கோயில் விவரம் தெரிஞ்சுருந்தால் முதல் ஆளா வந்துருப்பேன்!

சுலபமா இருக்கே இந்த செய்முறை!


மாவை குக்கரில் வச்சுட்டு அப்புறம் பிசைய முடியாமல் மிக்ஸியில் போட்டு 'நீல இலை'க்கு கேடு வரவச்சதை இங்கே குறிச்சு வைக்கிறேன்:-)
 
//காரக்கொழுக்கட்டைக்கு யார் வந்து உக்காருவார்கள்?//
பிள்ளையார் வாயில்தான் இனிப்பு கொழுக்கட்டை இருக்கே. நாங்க தான் வரணும்.

சகாதேவன்
 
துள்சி,

கோவிலில் கொழுக்கட்டை வினியோகம் செய்யும் போது...முதன்முதலா ஒரு கை மட்டும் நீண்டது. அது உங்க கைதானு புரிஞ்சிக்கிட்டு முக்கா முக்கா மூணு கொழுக்கட்டை வெச்சேனே!!!
 
சகாதேவன்
நீங்கதான் வரணும்னுதான் நான் சொல்லிட்டேனே!!!!
 
அருமை
 
இப்பவே சாப்பிடணும்போல இருக்கு :-)))
 
ஒண்ணு செய்வோமா நானானி. நீங்க கொழுக்கட்டை செய்வீங்களாம் . ஒரு போன் அழைப்பு கொடுப்பீங்களாம். உடனே நாங்க ஆஜர் ஆகிடுவோம். :)

செரியா.!காரக் கொழுக்கட்டை ரொம்ப ஈசியா இருக்கே. இத நானே செய்துக்கறேன். சூப்பார் நானானி வாழ்க.
 
கோமா,
நீங்களும் செய்து பாருங்களேன்.
வினை தீர்த்த விநாயகர் மகிழ்வார்.
 
அமைதிச்சாரல்,

இப்பவே எப்படி சாப்பிட முடியும்?

அடுத்த முறை செய்யும் போது சொல்கிறேன்....அப்பவே வந்து வேண்டுமட்டும் சாப்பிடலாம், சேரியா?
 
வல்லி,
ஒண்ணு என்ன நூறே செய்யலாம்.

அடுத்த சங்கடசதுர்த்திக்கு செய்யும் போது கட்டாயம் போன் அடிப்பேன். தவறாமல் ஆஜராகி வேண்டு மட்டும் உண்ணலாம்...இன்னும் கொஞ்சம் கேக்கலாம். சேரிய?
 
அய்யோ - நாங்க பேசாம சென்னைக்கு மாத்திக் கிட்டு வந்துடட்டுமா - டெய்லி ஏதாச்சும் வாங்கித் திண்ணுகிட்டே இருக்க்லாமே ! ம்ம்ம்ம்ம் - பாக்கலாம்
 
காரக் கொழுக்கட்டை புதிதாக இருக்கு.
 
இனிப்பும் காரமும் சேர்ந்து அசத்துது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]