Tuesday, February 15, 2011

 

பிப்ரவரி 15 பிறந்தநாள் நினைவு அஞ்சலி

எங்கள் அன்புத் தந்தையின் பிறந்தநாள் பிப்ரவரி 15. இந்நாளில் அன்னாருக்கு எங்கள் நினைவஞ்சலி.

சமூகத்தில் உயரிய இடத்தில் இருந்திருந்தாலும். எங்களுக்கு மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்து காட்டியாவர்.

"அப்பா! நம்ம வீட்டுக்கு ப்ரிட்ஜ் வேணும்." நானும் தங்கையும்.
"அதெல்லாம் லக் ஷூரி ஐட்டம். அதெல்லாம் வேண்டாம்." அப்பா.
அவர் இருந்தவரை வீட்டில் ப்ரிட்ஜ் கிடையாது.

ஆனால் எங்கள் தனிப்பட்ட விருப்பங்களை தட்டாது நிறைவேற்றுவார்.
அந்தக்காலத்தில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிக்கையின் கடைசி பக்கங்களில் வரும் விளம்பரங்களைப்பார்த்து எனக்கு வேண்டிய பொருட்களை வி.பி.பியில் ஆர்டர் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுவேன்.

பதினைந்து நாட்கள் கழித்து பார்சல் வரும். 'நீ ஆர்டர் செய்தாயா?' ஆமா!
அவ்வளவுதான் பேசாமல் பணத்தைக்கட்டி வாங்கி பார்சலை என்னிடம் கொடுத்துவிடுவார்.

இப்படித்தான் என வாட்சுக்கு கலர்கலர் ஸ்ட்ராப்கள், நைலான் வலை செருப்பு என்று கண்டதுகழியதெல்லாம் வாங்குவேன்.

ஒவ்வொரு முறையும் ப்ராக்ரஸ் ரிப்போர்டில் கையெழுத்து வாங்கும் போதெல்லாம்...ரிப்போர்டை வாங்கி நேரே கையெழுத்து போடுமிடத்தில் கையெழுத்திட்டுவிட்டு,'ம்ம், அடுத்த முறை இன்னும் அதிக மார்க் வாங்கவேண்டுமென்பார். நான் நூத்துக்கு நூறே வாங்கியிருந்தாலும் இதையே சொல்லியிருப்பார் போலும்.

பின்னாளில் நினைத்துக் கொள்வேன்....படிப்பில் கண்டிப்பாய் இருந்திருந்தால் நானும் பெரிய படிப்பாளி ஆகியிருந்திருப்பேனோ? அப்பாவுக்கு எங்கள் படிப்பு, பட்டப்படிப்பு எல்லாம் கல்யாணத்துக்கான குவாலிபிகேஷன் மட்டும்தான்.
அப்பாவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.


1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. பழுத்த காங்கிரஸ்காரரான அப்பாவின் செல்வாக்கைப்பற்றி கேள்விப்பட்டு, திருநெல்வேலியில் அனைத்து, ரோட்டரி, டிஸ்ட்ரீக்ட் க்ளப், நெல்லை சங்கீத சபா ஆகியவற்றில் நிரந்தர பொருளாளர் என்றறிந்து, சிறுசேமிப்புத் துறையின் தலைவரான எம்.ஜி.ஆர். திருநெல்வேலி சிறுசேமிப்புக்கு பொருளாளராக அப்பாவை நியமித்தார். சந்திரகாந்தாவின் நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நல்ல தொகை வசூல் செய்து கொடுத்தார்.
அச்சமயம் எடுத்த படம். உடனிருப்பவர் அப்போதைய நெல்லை கலெக்டர் எம்.எம்.ராஜேந்திரன்(பின்னாளில் ஒரிஸ்ஸா மாநில கவர்னராக பணியாற்றியவர்).


புரட்சித்தலைவருடன் மகிழ்ச்சியான தருணம்.

நடுவிலிருப்பவர் அன்றைய எம்.எல்.ஏ. திரு. ஏ.எல். சுப்பிரமணியன், பின்னாளில் நெல்லை மேயராகவும் ஆனவர்.

இப்படம் ஓர் அரிய பொக்கிஷம். பெரிய பெரிய தலைவர்களுடன். சர் சி.பி.ராமசாமி ஐயர், மூதறிஞர் ராஜாஜி. அவருக்குப் பின்னால் அப்பா. நாலாவது வரிசையில் டார்பன் அணிந்திருப்பவர்...சர் சி.வி.ராமனோ? வலது புறம் இரண்டாவது வரிசையில் எங்கள் பெரிய தாத்தா ஏ.ஆர்.சண்முகம் பிள்ளை. இன்னும் பெயர் தெரியா பிரபலங்கள். இப்படம் அப்பாவுக்குப் பிறகுதான் கைக்குக் கிடைத்தது. அதனால் படம் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் போயிற்று.

எனக்கு திருமணம் ஆகுமுன்..அதாவது நிச்சயக்கப்பட்டபின் அப்பாவோடு எங்காவது வெளியூர் கூட்டிச்செல்லும் படி கேட்டோம். காரணம் அப்பாவோடு பிக்னிக் தவிர வேறெங்கும் சென்றதில்லை. என்ன நினைத்தாரோ..சரியென்று என்னையும் கோமாவையும் திருவனந்தபுரம் அழைத்துச் சென்றார். எங்கள் செவர்லே காரில் ஐயம்பெருமாள்பிள்ளை சாரதியாக சந்தோஷாமான பயணம்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், ஆர்ட்கேலரி, கோவளம் பீச், மிருகக்காட்சி சாலை எல்லாம் அப்பாவோடு சுற்றியது மறக்க முடியாத அனுபவம். ஜூவில் ஓட்டகச்சிவிங்கி தலை வணங்கி உணவை னாங்கிக் கொள்கிறது.

அட! எனக்கும் தலை வணங்க்குகிறதே!!!
தங்கை கோமா கொடுக்கும் இலைகளையும் வாங்கிக்கொள்கிறது.

இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன். பிறந்தநாள் பதிவை இன்றே வெளீயிட வேண்டுமென்பதால் இத்துடன் முடிக்கிறேன்.
எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பாக அப்பாவுக்கு இதய பூர்வமான அஞ்சலியை அவரின் பிறந்தநாளன்று செலுத்துகிறேன்.
அப்பா! எங்கள் எல்லோருக்கும் உங்கள் அன்பையும் ஆசியையும் வேண்டுகிறேன்.

Labels:


Comments:
நினவு அஞ்சலி நெகிழ வைத்துவிட்டது
 
பிரசுரத்துக்கு அல்ல
-----------------------
அப்பா.
அவர் இருந்தவரை வீட்டில் ப்ரிட்ஜ் கிடையாது.

இந்த வரிகள் வேண்டாம்.அதாவது அப்பா போகக் காத்திருந்தது போல் ஒரு தொனியை ஏற்படுத்துகிறது ...ஃப்ரிட்ஜ் வாங்கியவர்களின் மனநிலை கில்டியாகும்
 
அன்பு என்ற தலைப்பிற்கு அழகான படம் கோமா ஒட்டகச்சிவிங்கிக்கு இலை தருவது.உயரபேதமில்லா அன்பு பரிமளிக்கிறதே
 
நான் அறிந்தவரை,”பிர்ட்ஜ் எல்லாம் தண்ணி போடுரவங்களும் சிக்கன் சாப்பிடுரவங்களும்தான் வச்சிருப்பாங்க...”என்று சொல்லியாதாக நினைவு.

செவர்லே மட்டும் லக்‌ஷுரி இல்லையா?
 
அருமையான பகிர்வு.

இதய பூர்வமான அஞ்சலியை நானும் செலுத்தி, ஆசியைப் பெற்றுக் கொள்கிறேன்.
 
எங்கள் அன்பும் அஞ்சலிகளும்.


அருமையான பொக்கிஷம்தான் இந்தப் படங்கள்.

பகிர்வுக்கு நன்றி நானானி.
 
என் அஞ்சலிகள்.

\\செவர்லே மட்டும் லக்‌ஷுரி இல்லையா?
//

இப்ப ஏங்க :))
 
நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு.
உங்கள் அன்பு அப்பாவுக்கு என் வணக்கங்கள்.

படங்கள் அருமையான நினைவு பொக்கிஷங்கள்.
 
கோமா,
ம்ம்ம்ம்ம்.
 
கோமா,
மீதி ரெண்டு படங்களிலும் சம உயர அன்பு பரி...மளிக்குதோ?
 
கோமா,
மீதி ரெண்டு படங்களிலும் சம உயர அன்பு பரி...மளிக்குதோ?
 
கோமா,
ப்ரிட்ஜுக்கு நீங்க அவையில் வைத்த அறிந்தது சரிதான்...ஆனால் செவர்லே சமூக அந்தஸ்துக்குத் தேவை அல்வா? மேலும் எங்க மொத்த குடும்பத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு செல்ல தோதானதல்லவா?
 
ராமலக்ஷ்மி,

நல்லது.
 
துள்சி,
நன்றிம்மா!!
 
முத்துலெட்சுமி,

//\\செவர்லே மட்டும் லக்‌ஷுரி இல்லையா?
//

இப்ப ஏங்க :))//

அப்படிப் போடுங்க ஒடு குட்டு!!
 
கோமதி அரசு,
எங்களோடு கலந்து கொண்டதுக்கு மிக்க நன்றி!
 
அப்பா பேரு சொல்லவேயில்லையே? காங்கிரஸ்காரர்னா, எங்க தாத்தாவையும் தெரிஞ்சிருக்கலாம் அவங்களுக்கு ஒருவேளை.

எம்ஜியார் கூட இருக்க படத்துல, ரெண்டு பேர் கால்மேல் கால் போட்டுகிட்டு என்னா ஜபர்தஸ்தா உக்காந்திருக்காங்க, அரசு அதிகாரிகளா? ஹூ.. அன்னிக்கு படிச்சவங்களுக்கு (அதிகாரிகளுக்கு) அவ்வளவு மரியாதை!! இன்னிக்கு, இவங்களுக்கு அவங்க கைகட்டி நிக்க வேண்டியிருக்கு!!

நல்ல நினைவலைகள்!!

//goma said...
செவர்லே மட்டும் லக்‌ஷுரி இல்லையா?//
இந்த கடைக்குட்டிகளே (அல்லது தங்கைகளே) இப்படித்தான், துடுக்காகக் கேள்விகள் கேட்பார்கள்!! :-)))))))))
 
இப்ப ஏங்க :))

முத்துலெட்சுமி பிரிஜ் வாங்காததன் காரணம் லக்‌ஷுரி காரணமாக இருக்க முடியாது என்பதற்கு ப்ரூஃப் ,அந்த கேள்வி ....[.கொஞ்சம் விளக்கமாக நான் எழுதியிருக்க வேண்டும்]
 
பொக்கிஷங்களான படங்கள் நானானிம்மா..
 
ஹூஸைன்னம்மா,

அப்பா பேரு...எம்.சோமசுந்தரம் பிள்ளை.
உங்க தாத்தா பேர்? அவர் திருநெல்வேலிக்காரரா?

அதிகாரிகள் கால் மேல் கால் போட்டு அமர்வது....உன்னிப்பாக கவனித்திருக்கிறீர்கள். இன்று? கால்மேல்...??உக்காந்தால் போதாதா? கார் கதவை திறந்தல்லவா விட வேண்டியிருக்கிறது. கழக ஆட்சி வந்த புதுசல்லவா? பக்தவச்சலம் சொன்னது இன்று பலித்துவிட்டாதல்லா?
 
ஹூஸைன்னம்மா,

அப்பா தீவிர காங்கிரஸ்காரார். நேரு,காமராஜ் ஆகியோர் மீது அதீத மதிப்பு வைத்திருந்தார்.

பண்டித நேரு மறைந்த போது ரேடியோவில் கமெண்டரி கேட்டு தேம்பி தேம்பி அழுதது இன்றும் நினைவில் இருக்கிறது.
 
கோமா,

ப்ரிட்ஜ் லக் ஷூரி என்று சொன்னதாகத்தான் ஞாபகம்.
 
அமைதிச்சாரல்,
உண்மைதான் எல்லாம் பொக்கிஷங்கள்தான்.
நன்றி!!
 
பிரசுரத்துக்கு அல்ல
மேயர் ’சி’ப்பிரமணியானா அது யாரு?

யாராவது சொல்லும் முன் மாத்துங்கள் நானானி
 
காலையில் பார்த்ததும் மத்தியானம் போட்டோவில் உள்ள எல்லோர் பேரையும் சொன்ன நீங்கள் அப்பா பேர் சொல்லவில்லையே என்று கேட்க இருந்தேன்.. வேலை காரணமாக வெளியே சென்று வந்து இப்போ உட்கார்ந்ததும் பார்த்தால் அதற்குள் ஹூசைனம்மா கேட்டுவிட்டார்கள். அப்பாவின் அரிய போட்டோக்களுடன் நல்ல பதிவு.
சகாதேவன்
 
எங்க பாத்தாலும் தமிழ் இணையவலையில நம்ம ஊர்க்காரங்களா இருக்காங்க... எல்லாரும் நல்லா, ச்சும்மா தீயா பதிவு எழுதுராவ... என்ன சொல்றீங்க, நான் ச்சொல்றது சரிதான...

நெல்லை மணம் என் மனமயக்குது...!

அப்பா பற்றி கிடைக்காத அறிய புகைப்படத்தோட, பிறந்த நாளன்று பதிவெழுதி அவரின் ஆன்மாவை குளிர செய்துள்ளீர்கள்... என்போன்று அப்பா நேசிக்கும் எல்லா மக்களுக்கும் அவர்களின் பாசத்தை நினைத்து பார்க்க உதவியாயிருந்திருக்கும் இந்த பதிவு... நன்றி.
 
அன்பின் நானானி - அருமைத் தந்தையின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு இதயபூர்வமான அஞ்சலி செலுத்தி உள்ளீர்கள். அவரின் நல்வாழ்த்தும் ஆசிகளும் என்றுமே உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உண்டு. நட்புடன் சீனா
 
அன்பின் நானானி - அருமைத் தந்தையின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு இதயபூர்வமான அஞ்சலி செலுத்தி உள்ளீர்கள். அவரின் நல்வாழ்த்தும் ஆசிகளும் என்றுமே உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உண்டு. நட்புடன் சீனா
 
உங்கள் அப்பாவுக்கு அஞ்சலிகள்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]