Saturday, January 1, 2011

 

குப்பையிலே கலை வண்ணம் கண்டாள்

2011-ஆம் ஆண்டின் முதல் நாளில் முதல் பதிவு.....”ஜாலிடே!!”

1/1/11

அவள்விகடன் பத்திரிக்கை நடத்திய ‘ஜாலிடே’ விழாவுக்கு அக்கா அழைத்தாள். நீ வருவதாயிருந்தால் போகலாம், என்னால் தனியாக போக இயலாது என்று. நானும் அவளுக்காக, அவ கூட துணையாகப் போனேன். அவ்வளவுதான்.

விழா 25-ஆம் தேதி, ஆனால் அதற்கு முந்தியநாள், 24-ஆம் தேதி விழாவுக்கான போட்டிகள் நடத்திவிடுவார்கள். அதற்காக திநகர் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அக்கா கலந்து கொள்ள விரும்பியது ‘வீணாக்காதே’ என்ற தலைப்பில் தேவையில்லை என்று குப்பையில் போடும் பொருட்களைக் கொண்டு உருப்படியாக ஏதாவது கலைப் பொருள் செய்து காட்ட வேண்டும்.

அக்கா, ஏற்கனவே இதே போட்டியில் சில வருடங்களுக்கு முன் பரிசு பெற்றிருந்தாள். அவள் செய்தது. பூண்டின் தோலை ஜாக்கிரதையாக உறித்து, அதன் கீழ் பாகத்தை பிடித்தால் அழகான பூ மாதிரி வரும். அப்படி நிறைய செய்து கொண்டு, மரத்தடிகளில் கிடக்கும் குச்சிகளில் நிறைய கிளைகள் உள்ளது போல் எடுத்து, ஒவ்வொரு கிளையின் நுனிகளிலும் அப்பூண்டுப் பூவை வைத்து நூல் கொண்டு கட்டி, அதை சின்ன மண் தொட்டியில் சொருகி பூண்டுத்தோல் செடியாக உருவாக்கியிருந்தாள்.

அவள் வீட்டுக்குப் போனால்...’வாவ்..வாவ்..வாவ்!’ என்று சொல்லிக் கொண்டேயிருக்கவேண்டும், அவள் செய்து வைத்திருக்கும் கலைப் பொருட்களைப் பார்த்து..பார்த்து. உருளைக்கிழங்கு போல் வழுவழுவென்றிருக்கும் கூழாங்கல்லில் வண்டு சிரிக்கும். உடைந்த கண்ணாடி வளையல்களை நெருப்பில் காட்டி வளைத்த பலவித அலங்காரப் பொருட்கள்,

அவள் தனக்காக கொண்டு வந்திருந்தது.....பூசனிவிதைகள் வெள்ளரி விதைகள், மக்காசோளதோல்.....வாழைப்பழம் போல் உரிப்போமே...அதோடு சில குச்சிகள், ஃபெவிக்கால், கலர் பேனாக்கள்.

நீயும் ஏதாவது செய் என்று என்னையும் சேர்த்துக்கொண்டாள். ஐயோ! நான் ஒண்ணும் கொண்டுவரவில்லையே என்றதுக்கு பையிலிருந்து நாலு டிஸ்போஸபிள் பேப்பர் கப்புகளை எடுத்து தந்து செய் என்றாள். கப்புகள் எல்லாம் வீட்டிலேயே வெட்டி தயாராய் எடுத்து வந்திருந்தாள். அங்கிருந்த கண்காணீப்பாளர், ‘நோ..நோ..! இங்கு வந்துதான் வெட்ட வேண்டும். வெட்டி எடுத்து வரக் கூடாது.’ என்றார்.

ஙே!!!!என்று விழிக்காமல், ‘அக்கா! நீ ஆரம்பி.’ என்று சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து ஒரு கடையில் பெரிதும் சிறிதுமாக நாலு பேப்பர் கப்கள் வாங்கிக் கொண்டு வந்து வெட்ட ஆரம்பித்தேன். ஒரு மணிநேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டும்.

இருவரும் ஆரம்பித்துவிட்டோம்!!

அக்கா பூசணிவிதைகளை அழகாக இதழிதழாக அமைத்து ஒட்டி வெள்ளரிவிதைகளை இலைகளாக ஒட்டினாள். நடுவில் மகரந்தம்...பூண்டின் வேர் பகுதி ட்ரிம் செய்தது.

நானோ அவள் வாயால் இட்ட பணியை கைகளால் செய்ய ஆரம்பித்தேன்.
கரக்..கரக்..என்று பேப்பர் கப்பின் வட்டமான விளிம்பை வெட்டி எடுத்துவிட்டு
கப்பை இதழ்களாக வெட்டி....பெரிய கப்பை பெரிதாகவும் சிறிய கப்பை சிறிய இதழ்களாகவும் , சூரியகாந்திப் பூ போல் வெட்டி பெரிய பூவின் உள்ளே சிறியப்பூவை வைத்து ஒட்டி வண்ணம் தீட்டி வால்ஹாங்கிங் போர்ட் மேல் ஒட்டி, முதலில் வெட்டிய விளிம்பை துண்டுகளாக்கி ஆங்காங்கே ஒட்டி. சோளத்தோலை இலைகளாக அமைத்து, இலந்தைப்பழம் போட்டு கடைகளில் கிடைக்குமே ஒருவலைப் பை! அதை வெட்டி குச்சியில் கட்டி அழகுக்கு அழகு சேர்த்தேன்.
வெள்ளைப்பூண்டின் வேர்ப்பகுதியை சூரியகாந்தியின் மகரந்தமாக ஒட்டினேன்.

இப்போது முழுமையடைந்தது எங்கள் வேலை


ஃபினிஷ்ட் ப்ராடக்ட்!!!!என்னுது
இது அக்காவோடது
ஒரு மணிக்குள் முடிந்ததும் மேஜையில் வைத்துவிட வேண்டும்.


இது முடிந்ததும் நாங்கள் ’வினாடி வினா’ போட்டியிலும் கலந்து கொண்டோம். அப்ஜெக்டிவ் கேள்விகள்.....டிக்கிவிட்டு வந்தோம். பின்னர் நான் மட்டும் ‘மௌன மொழி’யில் கலந்து கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. எங்கள் குடும்ப கெட்-டு-கெதரில் கண்டிப்பாக இருக்கும். பிள்ளைகளோடு மிகவும் சுவாரஸ்யமாயிருக்கும்.
ஆஹா...! என்ன பெருமை!!!!!
மற்றவர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள்...என்று ஸர்ஃபினேன்.
இளநியின் காம்புப் பகுதியில் இருக்கும் பூ போன்றதை வண்ணம் தீட்டி அழகான வால்ஹாங்கிங் ஆக செய்திருந்தார் ஒரு பெண்மணி.


தேங்காய் சிரட்டை, அதன் நார் கொண்டு உருவெடுத்த திருஷ்டிப் பூசணிக்காய்!!
உடைத்த முட்டை ஓடுகள், பென்சில் சீவியபின் கிடைக்கும் மரச் சிலும்பல் அருமையான பூக்களாக ஜாடியில் சிரிக்கிறது.
வண்ண வண்ண வளையல்களின் பென் ஸ்டாண்ட். ‘கூட்டத்திலே கோயில் புறா..’ன்னு ஒரு பாட்டு. இங்கே கூட்டத்திலே ‘மணல் புறா’ பேப்பரில் புறாவை வரைந்து கம் தடவி அதன் மேல் மணல் தூவி உருவான பறக்கத் தயாராக மணல் புறா!!
எல்லோரும் எங்கே போகிறார்கள். கண்களுக்கு ஈந்தாச்சு. அப்புரம் வயிறுதானே? அதான்!!
சாம்பார் சாதம், புலாவ், தயிர் சாதம், தயிர் பச்சடி, உருளை காரக்கறி(இது இல்லாமல் இலை நிறையாது போலும்), ஊறுகாய், பின்ன...ஒரு ஸ்வீட்!எதேஷ்டம்!!!!
'டாடி மம்மி ஊரில்லில்லே....தடை போட யாருமில்ல’ இந்தப் பாட்டுக்கு போட்டார்கள் பாருங்கள்...குத்தாட்டம்! அசந்தே போனேன்! குடும்பத்தலைவிகளின் ஆழ்மனதின் நீரோட்டம் பெருக்கெடுத்து ஓடியது.
ஆனால் பாட்டு இப்படி இருந்திருக்க வெண்டும். “புள்ள குட்டி, புருஷங்காரன் பக்கத்திலில்ல...தடை போட ஆருமில்ல!!!” சரிதானே?


வயசும் ஸைசும் பாராமல் ஆடிய ஆட்டங்கள் ரசிக்க கூடியவை. எல்லோராலும் அவ்வாறு ஆடிவிட முடியாது.
சின்னஞ்சிறு பெண்கள் ஆடும் போது என்னவொரு உற்சாகம்!!
இருவர் பாடினார்கள்.
இந்த குரூப் ஆடியது ரசிக்கும் படியிருந்தது. போஸ் கொடுக்கச் சொன்னேன். அதுமட்டுமில்லை ஒரு மினி பேட்டி கூட! “வீட்டில் இது போல் ஆடுவீர்களா?” ஒருத்தி சொன்னாள்,”அம்மாடீ!”ன்னு தலையை இடவலமாக வேகமாக ஆட்டினாள். இன்னொருத்தி, ‘ஆடுவேன்னு தெரியும், ஆனா ஆடியதில்லை.’ மற்றொருத்தி,’!’ கல்லூரி நாட்களுக்குப் பின் இப்போதுதான் ஆடுகிறோம்


போட்டோ எடுத்ததும் அவர்கள், ‘எங்க வீட்டு வாசலில் படத்தை போஸ்டர் போட்டு ஒட்டிவிடாதீர்கள்...ப்ளீஸ்!’ என்றார்கள். நானும் வடிவேலு ஸ்டைலில்,’ ம்ம்ம்...அந்த பயம் இருக்கட்டும்!’ என்று எண்ணிக்கொண்டேன்!

இவர்கள் உற்சாகத்துக்கு ஏத்தபடி ஒரே குத்துப் பாடல்கள்தான்!!!
தாயும் மகளுமாக வந்த இருவரை நிறுத்தி இதே கேள்வியைக் கேட்டேன்.
தயக்கத்தோடு தன் டீனேஜ் மகளைப் பார்த்துவிட்டு, ‘இல்லை!’ என்றார்.

ஆக மொத்தத்தில் குடும்பப் பெண்களிடம் பள்ளி, கல்லூரி விடுமுறை விட்டால் பிள்ளைகளைப் பார்த்து ‘அவுத்துவிட்ட டஷ் ‘ என்போமே அத்தகைய மனநிலையில் கொண்டாடி மகிழ்ந்தார்கள். கான்செப்டே அதுதானே! ஒரு நாள் ஒரே ஒரு நாள்......மாதவம் செய்திருக்கும் மங்கையர் அனைவரையும், மறந்திருக்கும், மறைந்திருக்கும் அவர்தம் திறமைகளை வெளிப்படுத்தி , வீட்டு வேலைகளிலிருந்து விடுதலை கொடுத்து, அவர்களுக்கு மதிய உணவு. காபி, டிபன் கொடுத்து உபசரித்த ‘அவள்விகடன்’ குழுமம் எல்லோரது பாராட்டையும் அள்ளிச் சென்றுவிட்டது.
மறைந்திருக்கும், மறைக்கப்பட்டிருக்கும் பல கலைகளையும் வெளிக் கொணரும் ஒரு நிகழ்ச்சியாகவே அமைந்திருந்தது.


வீட்டிலேயே இந்த சுதந்திரம் இருந்தால் ஒரு நாள் ஜாலிடே தேவையேயில்லை....எந்நாளும் ஜாலிடேதான்!!!!!

’இவ்வளவு தாளிச்சயே, நீ என்னா செய்தே? ஆடினாயா? பாடினாயா?’ என்கிறீர்களா?

அட..போங்கப்பா!!!

அக்கா தன் கை வண்ணம், கலை வண்ணம் காட்டவே வந்தாள். நானோ அவளுக்கு துணைக்குப் போனேன். நாங்கள் போனபோது ஹால் நிரம்பியிருந்தது. பார்த்தோம்...ஹாலில் கடைசியில் இருந்த நாலு இருக்கைகள் இழுத்தோம். ஒன்றில் உக்காந்து கொண்டு மற்றொன்றில் காலை நீட்டி சௌகரியமாய் அமர்ந்தோம்.

ஒரு பத்து நிமிடம் சுகமான தூக்கம். அதே வரிசையில் உக்காராமல் நிகழ்ச்சிகளை ரசித்துக்கொண்டிருந்தார் அவள் விகடன் ஆசிரியர் பா.ஸ்ரீயும் ஸ்பான்சரும்.

அவர்களிடம் சென்று, ‘போட்டி முடிவுகளை எப்போது அறிவிப்பார்கள்?’ என்று கேட்டேன்.
அவர் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டிகளின் முடிவுகளையும் நேற்றைய முடிவுகளையும் நிகழ்ச்சியின் முடிவில் அறிவிப்பார்கள்.’ என்றார். அதோடு,?’ ’ஏன் நிகழ்ச்சி ஜாலியாகஇல்லையா?’

என்றும் கேட்டார்.

நான் உடனே, ‘எங்கள் இருவரைப் பொறுத்தவரை இது ஜாலிடே இல்லை ரெஸ்ட்டே என்றேன். சிரித்துவிட்டார். ஓஹோ இப்படி ஒண்ணும் இருக்கோ என்று நினைத்திருப்பார்.


பி.கு.
என் அக்காவுககும் தங்கைக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வெல்லும் ஓர் அதிர்ஷ்டம் உண்டு.

Labels:


Comments:
Fantastic commentary.
 
நேரில் வர இயலாதவர்களும் கலந்து கொண்டார்போல் அருமையான படங்களோடு அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
 
என் அக்காவுககும் தங்கைக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வெல்லும் ஓர் அதிர்ஷ்டம் உண்டு. ஆனால் இம்முறை ஒரு பரிசும் கிடைக்கவில்லை. நான் வந்ததாலோ என்னவோ? என்று முடித்திருக்கிறீர்கள்.
அந்த வரிகளில் கடைசி மூன்று வார்த்தைகளை டெலிட் செய்து விடுங்களேன்.
புத்தாண்டில் எண்ணங்கள் ஏறுமுகமாக இருக்க வேண்டும்
 
புத்தாண்டு வாழ்த்துக்கள் நானானிம்மா..
 
ஆடுவதற்குத்தான் நமக்கு எவ்ளோ தயக்கம்.. ஆனந்தமாய் ஆடுபவர்கள் பார்த்தாம் பொறாமையும் மகிழ்ச்சியும்
ஒருசேரத்தோன்றும்.. :)
 
நேரில் பார்த்தாப்ல இருந்துச்சு.. புது வருட வாழ்த்துக்கள்
 
அன்பின் நானானி - அருமை ருமை - இடுகை அருமை - அக்காவும் தங்கச்சியும் சேந்து கலக்கீட்டீங்க போல ..... சூப்பர் நேரடி ஒளி பரப்பு .. பரிசு பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனான்
 
அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்களுடன் படங்களுடன். நன்றி. உங்கள் இருவரின் கைவண்ணமும் பிரமாதம். வாழ்த்துக்கள்:)!
 
இனிய நாள்...

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 
Rathnavel,
Engaraging complement.
Thanks!
 
கோமா,
நன்றி!
 
அமைதிச்சாரல்,
உங்களுக்கும் அதே..அதே..!!
 
கயல்,
எனக்கு மகிழ்ச்சி மட்டுமே தோன்றியது.
 
மனக்குதிரை,
நன்றி.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
 
சீனா,
நன்றிகள்...அனைத்துக்கும்!!!
 
ராமலக்ஷ்மி,

நன்றிம்மா!!!
 
மாதேவி,
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
 
என் அக்கா தங்கையின் மறக்காத, ஆனால் மறைந்திருக்கும் திறமையை பார்த்து ரசித்தேன்.பாராட்டுக்கள். ஒரு வாரமாக நிறைய வேலை. உடனே எழுத முடியவில்லை

சகாதேவ்ன
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]