Saturday, January 15, 2011

 

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக

தைத் திங்கள் திருநாளில் பால் பொங்குவது போல் மங்களமெல்லாம் பொங்க இப்பொங்கல் நாளில் எல்லோருக்கும் நெய் மணக்க அதும் பளபளக்க, வறுத்த முந்திரிப்பருப்பு மினுமினுக்க
‘சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துக்கள்!!!


காரில் ஊர்கோலம் போகும் பொங்கல் வாழ்த்து!!!!!

Labels:


Thursday, January 13, 2011

 

முகங்கள் ஜனவரி பிட்

இறைவன் படைப்பில் எத்தனை முகங்கள். அவற்றில்தான் எத்தனை எத்தனை பாவங்கள்!!!!

பிள்ளையார் முகத்தோனே!! பியூட்டி பார்லர் போய் வந்தாயா?


சின்னக்குட்டி, செல்லக்குட்டி, தங்கக்கட்டி, வெல்லக்கட்டி!!!!!


ஆசைமுகம், அழகுமுகம்!!!சோகமுகம், சோர்ந்த முகம்!!ரெண்டு விரல்களும் எவ்ளோ டேஸ்டியாயிருக்கு!!!அழகோவியம்!!!முகமும் தீர்க்கம் தலைமுடியும் தீர்க்கம், திருத்தம்!!!!எல்லையில்லா மகிழ்ச்சி பொங்குதே!!!!குத்தடி குத்தடி சைலக்கா குனிந்து குத்தடி சைலக்கா!!!!!Labels:


Wednesday, January 12, 2011

 

விண்டேஜ் கார் ராலி நான் ரசித்தது உங்களுக்கும்

" பழைய ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம் !"-ன்னு விக்கிறவங்ககிட்ட போட்டு பேரீச்சம்பழம் வாங்கி தின்னு தீக்காமல். பொக்கிஷம் மாதிரி பாதுகாத்து, பழைய கருக்கழியாமல் சொந்த பாகங்களோடு உருண்டு ஓட வரிசை கட்டி காத்திருக்கும் கார்கள் கண்களுக்கு நல்விருந்து.
சனிக்கிழமை 8-1-11 காலை 8-மணிக்கு ஈ.சி.ஆர். சாலையில் உள்ள வி.ஜி.பி. கிங்டம்.

பார்கிங் லாட்டின் இருபுறமும் அழகாக, பெருமிதத்தோடு அணிவகுத்து நிற்கிறது பழம்பெருமை வாய்ந்த கார்கள். ஒவ்வொன்றாக உள்ளே நுழைந்து கம்பீரமாக காலியிடங்களை நிரப்புகிறது. என்ன அழகு!!!

சுமார் நாற்பது கார்களுக்கும் மேல் கலந்து கொண்டன.

தி ஹிந்து பத்திரிகையும் பாண்டிச்சேரி டூரிசமும் சென்னை மோட்டார் க்ளப்பும் சேர்ந்து நடத்திய ‘விண்டேஜ் கார் ராலி’.

p>

"அழகிய மிதிலை நகரினிலே..."என்று பாடத்தோன்றுகிறதா? டூரர் 1946ஸ்டெப்னியை எங்கே இடுக்கிக்கொண்டிருக்கிறது பாருங்கள்!!!


பழைய மிலிடிரி ஜீப்...புத்தம் புதுசாக. இதைப் பாத்ததும் இவருக்கு அவரது ஆபீஸ் ஜீப் ஞாபகம் வந்துவிட்டதாம்!! வில்லீஸ் ஜீப் 1948பென்ஸ் டூரர்!!கன்வர்டிபிள்....டூ சீட்டர்.


ஹிந்துஸ்தான் 14 - 1950.
இதே போல் கருப்பு கலர் கார்.....நான் மாமியார் வீட்டிலிருந்து பொறந்த வீட்டுக்கு வர காருக்கு போன் செய்தால், போனை எடுக்கும் விடலைப் பருவத்து அண்ணன் மகன்கள் சந்தர், பாபு யாராவது ஒருவர்....லைஸன்ஸ் இல்லாமல் போன் செய்த பதினைந்தாவது நிமிடம் பறந்து வருவது இந்த மாடல் காரில்தான்.வோக்ஸ்வாகன் பீட்டில் 1964. ரெண்டாக உடைந்து சர்க்கஸ் வேலையெல்லாம் காட்டேன்!’ என்றேன். அதுக்கு என்ன மூடோ இந்த பாட்டி சொல்லை தட்டிவிட்டது. ரொம்பத்தான் இது!!!! எது? பீத்து!!


ஸ்டுடிபேக்கர் பிரஸிடெண்ட் 1956.


பக் பியட் டூரர் 1952.


ஆஸ்டின் 1927 மாடல். வந்ததிலேயே பழையது. நாலு வயசில் நான் காவாயில் உருட்டியது.


உள்ளே எவ்வளவு சுத்தமாகவும் புதிதாகவும் உள்ளது!!


ப்ரவுட் ஓனரம்மா!!! ’உங்க வண்டி ‘ப்ராண்ட் நியூவாக இருக்குது.’ என்றதும் சந்தோஷம்!!!! இருக்காதா பின்ன?


மோட்டர் சைக்கிளின் வீலை கழற்றி மாட்டியிருக்குதோ?


செல்ப் ஸ்டார்டர் வேலை செய்யலைன்னா.... கீ போட்டு ஒரு சுத்து சுத்தினா...டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஸ்டாட்டாயிடும்!!!


ராலியில் ஓட கிளம்பிவிட்டது, பின்னழகைக் காட்டி!!!


1948 மாடல் செவர்லெட் ஸ்டைல் லைன்!


பியட் மிலிசெண்டோ 1100.


ஆண்டிக் லுக்கோடு மற்றொரு பேபி ஆஸ்டின். அதன் கியர் கண்ணுக்க்குள்ளேயே நிற்கிறது.


அதுக்கும் பழைய நினைவு வந்துட்டுதோ? என்னை அருகில் அழைத்து படமெடுத்துக் கொண்டது.


எங்கள் செல்லம்!!! ஆனால் இது வேறு மாடல். இது நம்ம காரா என்று எங்க வீட்டு முதல் வாண்டுவைக் கேட்டால்,’ஹூஹும்!’ என்று சொல்லிவிட்டு இது எப்படியிருக்கிறது என்று செய்கையால் காண்பிப்பான். ஈன்னு சிரிச்சிட்டு ஆள்காட்டி விரலை வாயில் உஷ்...என்பதுபோல் வைத்துக்கொண்டு.


நானே ஓஓஓடிப் போய் அருகில் நின்று ஆசையாய் படமெடுத்துக் கொண்டேன். செவர்லெட் ஃப்ளீட்மாஸ்டர் 1948


வாக்சால் கார். நல்ல தெளிவாயிருக்கிறது.


கிரிக்கெட்டுக்குத்தான் சியர் கெர்ல்ஸ் தேவையா என்ன? இங்கேயும் உண்டு. பியட் எலிகண்ட் 1957. எங்கள் ஸ்கூல் கார். முன் கதவைத் திறந்து உள்ளே உக்காருவதே ஸ்டைலாயிருக்கும். மீசைக்கார ட்ரைவர் பிள்ளைகளை ஒன்று சேர்த்து, கதைகள் சொல்லியபடி பத்திரமாக அழைத்து வருவார்.


ப்ளைமவுத் சவாய் சடான் 1956!!! அக்காலத்தில் அலட்டலின் அடையாளமாக இருந்தது.


பாயும் புலிச் சின்னத்தோடு...ஜாகுவார் 1968!!!


பென்ஸ் டூரர் 1961! தன்னை பார்க் செய்து கொள்கிறது.


டி.ஜி.பி. லத்திகா சரண்,


கொடியசைத்து ராலியை துவக்கி வைக்க வருகிறார்.


பழைய கார்களை பாசத்தோடு பொக்கிஷம் மாதிரி பாதுகாத்து பார்வைக்கு வைக்கும் உரிமையாளர்களின் ஆர்வத்தை பாராட்டுகிறார். உண்மையில் அந்த உரிமையாளர்கள் முகங்களில்தான் எத்தனை பெருமை, மகிழ்ச்சி!!!!


அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு.


இவ்விழாவை நடத்தும் தி ஹிந்து, சென்னை மோட்டார் க்ளப், புதுச்சேரி டூரிஸம் ஆகியோருக்குப் பாராட்டு.


டி.ஜி.பி லத்திகா சரண் ‘கொடி அசைத்ததும் முதல் வண்டி கோலாகலமாக கிளம்புகிறது.


எங்க செல்லமும் கிளம்பிட்டான்யா.....கிளம்பிட்டான்யா!!!


உள்ளே அப்பா இருப்பது போல் ஒரு நெனப்பு.


செல்லமே! உன்னையும் நல்ல, ஓடும் நிலமையில் பாதுகாத்து வைத்திருந்தால் நீயும் இது போல் ராலியில் கம்பீரமாக சென்றிருக்கலாமல்லவா? நாங்களும் உன் மீது பெருமையோடும் பெருமிதத்தோடும் ஊர்கோலம் போயிருப்போமல்லவா?
செவர்லெட் ஃப்ளீட்மாஸ்டர் 1947!!

அன்று வி.ஜி.பி.க்கு வந்திருந்த பார்வையாளர்களில், கேமராவும் கையுமாக அலைந்தவர்களில் அறுபத்தைந்தை தாண்டிய ஒரே...ஒரு விண்டேஜ் வுமன்.......நாந்தான் நாந்தான் நானேதான்!!!!! நான் ஒருவள் மட்டும்தான்.பி.கு.
இந்த ராலியில் செவர்லெட்டிலோ அல்லது ஆஸ்டினிலோ சிறிது தூரம் ஒரு ரைட் கேட்டிருந்தால் போயிருக்கலாமோ என்று கேட்டேன். ‘அட! முதலிலேயே சொல்லியிருந்தால் போயிருக்கலாமே! ஓனர்களும் சந்தோசமாக சேரி என்றிருப்பார்களே!! என்றார் ரங்ஸ். ராலி கிளம்பிய பிறகல்லவா அந்த எண்ணம் தோன்றியது. அதுவரை கேமராவும் கையுமாக அல்லவா அலைந்து கொண்டிருந்தேன்!!!!! இதுவே சந்தோஷம்!!!! அந்த ரெண்டு கார்களையும் பார்க்கும் ஆசையில்தான் போனேன். நிறைய படங்கள் எடுத்தேன். அத்தனையும் போட்டால் பதிவும் ஒரு ராலி மாதிரி ஆகிவிடும். போரும் அடிக்கும். ஆகவே குறைந்த பட்சம் சில பல படங்கள். சேரியா?

மீதியும் வேண்டுமானால் இன்னொரு பதிவுதேன்!!!!

Labels:


Saturday, January 1, 2011

 

குப்பையிலே கலை வண்ணம் கண்டாள்

2011-ஆம் ஆண்டின் முதல் நாளில் முதல் பதிவு.....”ஜாலிடே!!”

1/1/11

அவள்விகடன் பத்திரிக்கை நடத்திய ‘ஜாலிடே’ விழாவுக்கு அக்கா அழைத்தாள். நீ வருவதாயிருந்தால் போகலாம், என்னால் தனியாக போக இயலாது என்று. நானும் அவளுக்காக, அவ கூட துணையாகப் போனேன். அவ்வளவுதான்.

விழா 25-ஆம் தேதி, ஆனால் அதற்கு முந்தியநாள், 24-ஆம் தேதி விழாவுக்கான போட்டிகள் நடத்திவிடுவார்கள். அதற்காக திநகர் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அக்கா கலந்து கொள்ள விரும்பியது ‘வீணாக்காதே’ என்ற தலைப்பில் தேவையில்லை என்று குப்பையில் போடும் பொருட்களைக் கொண்டு உருப்படியாக ஏதாவது கலைப் பொருள் செய்து காட்ட வேண்டும்.

அக்கா, ஏற்கனவே இதே போட்டியில் சில வருடங்களுக்கு முன் பரிசு பெற்றிருந்தாள். அவள் செய்தது. பூண்டின் தோலை ஜாக்கிரதையாக உறித்து, அதன் கீழ் பாகத்தை பிடித்தால் அழகான பூ மாதிரி வரும். அப்படி நிறைய செய்து கொண்டு, மரத்தடிகளில் கிடக்கும் குச்சிகளில் நிறைய கிளைகள் உள்ளது போல் எடுத்து, ஒவ்வொரு கிளையின் நுனிகளிலும் அப்பூண்டுப் பூவை வைத்து நூல் கொண்டு கட்டி, அதை சின்ன மண் தொட்டியில் சொருகி பூண்டுத்தோல் செடியாக உருவாக்கியிருந்தாள்.

அவள் வீட்டுக்குப் போனால்...’வாவ்..வாவ்..வாவ்!’ என்று சொல்லிக் கொண்டேயிருக்கவேண்டும், அவள் செய்து வைத்திருக்கும் கலைப் பொருட்களைப் பார்த்து..பார்த்து. உருளைக்கிழங்கு போல் வழுவழுவென்றிருக்கும் கூழாங்கல்லில் வண்டு சிரிக்கும். உடைந்த கண்ணாடி வளையல்களை நெருப்பில் காட்டி வளைத்த பலவித அலங்காரப் பொருட்கள்,

அவள் தனக்காக கொண்டு வந்திருந்தது.....பூசனிவிதைகள் வெள்ளரி விதைகள், மக்காசோளதோல்.....வாழைப்பழம் போல் உரிப்போமே...அதோடு சில குச்சிகள், ஃபெவிக்கால், கலர் பேனாக்கள்.

நீயும் ஏதாவது செய் என்று என்னையும் சேர்த்துக்கொண்டாள். ஐயோ! நான் ஒண்ணும் கொண்டுவரவில்லையே என்றதுக்கு பையிலிருந்து நாலு டிஸ்போஸபிள் பேப்பர் கப்புகளை எடுத்து தந்து செய் என்றாள். கப்புகள் எல்லாம் வீட்டிலேயே வெட்டி தயாராய் எடுத்து வந்திருந்தாள். அங்கிருந்த கண்காணீப்பாளர், ‘நோ..நோ..! இங்கு வந்துதான் வெட்ட வேண்டும். வெட்டி எடுத்து வரக் கூடாது.’ என்றார்.

ஙே!!!!என்று விழிக்காமல், ‘அக்கா! நீ ஆரம்பி.’ என்று சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து ஒரு கடையில் பெரிதும் சிறிதுமாக நாலு பேப்பர் கப்கள் வாங்கிக் கொண்டு வந்து வெட்ட ஆரம்பித்தேன். ஒரு மணிநேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டும்.

இருவரும் ஆரம்பித்துவிட்டோம்!!

அக்கா பூசணிவிதைகளை அழகாக இதழிதழாக அமைத்து ஒட்டி வெள்ளரிவிதைகளை இலைகளாக ஒட்டினாள். நடுவில் மகரந்தம்...பூண்டின் வேர் பகுதி ட்ரிம் செய்தது.

நானோ அவள் வாயால் இட்ட பணியை கைகளால் செய்ய ஆரம்பித்தேன்.
கரக்..கரக்..என்று பேப்பர் கப்பின் வட்டமான விளிம்பை வெட்டி எடுத்துவிட்டு
கப்பை இதழ்களாக வெட்டி....பெரிய கப்பை பெரிதாகவும் சிறிய கப்பை சிறிய இதழ்களாகவும் , சூரியகாந்திப் பூ போல் வெட்டி பெரிய பூவின் உள்ளே சிறியப்பூவை வைத்து ஒட்டி வண்ணம் தீட்டி வால்ஹாங்கிங் போர்ட் மேல் ஒட்டி, முதலில் வெட்டிய விளிம்பை துண்டுகளாக்கி ஆங்காங்கே ஒட்டி. சோளத்தோலை இலைகளாக அமைத்து, இலந்தைப்பழம் போட்டு கடைகளில் கிடைக்குமே ஒருவலைப் பை! அதை வெட்டி குச்சியில் கட்டி அழகுக்கு அழகு சேர்த்தேன்.
வெள்ளைப்பூண்டின் வேர்ப்பகுதியை சூரியகாந்தியின் மகரந்தமாக ஒட்டினேன்.

இப்போது முழுமையடைந்தது எங்கள் வேலை


ஃபினிஷ்ட் ப்ராடக்ட்!!!!என்னுது
இது அக்காவோடது
ஒரு மணிக்குள் முடிந்ததும் மேஜையில் வைத்துவிட வேண்டும்.


இது முடிந்ததும் நாங்கள் ’வினாடி வினா’ போட்டியிலும் கலந்து கொண்டோம். அப்ஜெக்டிவ் கேள்விகள்.....டிக்கிவிட்டு வந்தோம். பின்னர் நான் மட்டும் ‘மௌன மொழி’யில் கலந்து கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. எங்கள் குடும்ப கெட்-டு-கெதரில் கண்டிப்பாக இருக்கும். பிள்ளைகளோடு மிகவும் சுவாரஸ்யமாயிருக்கும்.
ஆஹா...! என்ன பெருமை!!!!!
மற்றவர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள்...என்று ஸர்ஃபினேன்.
இளநியின் காம்புப் பகுதியில் இருக்கும் பூ போன்றதை வண்ணம் தீட்டி அழகான வால்ஹாங்கிங் ஆக செய்திருந்தார் ஒரு பெண்மணி.


தேங்காய் சிரட்டை, அதன் நார் கொண்டு உருவெடுத்த திருஷ்டிப் பூசணிக்காய்!!
உடைத்த முட்டை ஓடுகள், பென்சில் சீவியபின் கிடைக்கும் மரச் சிலும்பல் அருமையான பூக்களாக ஜாடியில் சிரிக்கிறது.
வண்ண வண்ண வளையல்களின் பென் ஸ்டாண்ட். ‘கூட்டத்திலே கோயில் புறா..’ன்னு ஒரு பாட்டு. இங்கே கூட்டத்திலே ‘மணல் புறா’ பேப்பரில் புறாவை வரைந்து கம் தடவி அதன் மேல் மணல் தூவி உருவான பறக்கத் தயாராக மணல் புறா!!
எல்லோரும் எங்கே போகிறார்கள். கண்களுக்கு ஈந்தாச்சு. அப்புரம் வயிறுதானே? அதான்!!
சாம்பார் சாதம், புலாவ், தயிர் சாதம், தயிர் பச்சடி, உருளை காரக்கறி(இது இல்லாமல் இலை நிறையாது போலும்), ஊறுகாய், பின்ன...ஒரு ஸ்வீட்!எதேஷ்டம்!!!!
'டாடி மம்மி ஊரில்லில்லே....தடை போட யாருமில்ல’ இந்தப் பாட்டுக்கு போட்டார்கள் பாருங்கள்...குத்தாட்டம்! அசந்தே போனேன்! குடும்பத்தலைவிகளின் ஆழ்மனதின் நீரோட்டம் பெருக்கெடுத்து ஓடியது.
ஆனால் பாட்டு இப்படி இருந்திருக்க வெண்டும். “புள்ள குட்டி, புருஷங்காரன் பக்கத்திலில்ல...தடை போட ஆருமில்ல!!!” சரிதானே?


வயசும் ஸைசும் பாராமல் ஆடிய ஆட்டங்கள் ரசிக்க கூடியவை. எல்லோராலும் அவ்வாறு ஆடிவிட முடியாது.
சின்னஞ்சிறு பெண்கள் ஆடும் போது என்னவொரு உற்சாகம்!!
இருவர் பாடினார்கள்.
இந்த குரூப் ஆடியது ரசிக்கும் படியிருந்தது. போஸ் கொடுக்கச் சொன்னேன். அதுமட்டுமில்லை ஒரு மினி பேட்டி கூட! “வீட்டில் இது போல் ஆடுவீர்களா?” ஒருத்தி சொன்னாள்,”அம்மாடீ!”ன்னு தலையை இடவலமாக வேகமாக ஆட்டினாள். இன்னொருத்தி, ‘ஆடுவேன்னு தெரியும், ஆனா ஆடியதில்லை.’ மற்றொருத்தி,’!’ கல்லூரி நாட்களுக்குப் பின் இப்போதுதான் ஆடுகிறோம்


போட்டோ எடுத்ததும் அவர்கள், ‘எங்க வீட்டு வாசலில் படத்தை போஸ்டர் போட்டு ஒட்டிவிடாதீர்கள்...ப்ளீஸ்!’ என்றார்கள். நானும் வடிவேலு ஸ்டைலில்,’ ம்ம்ம்...அந்த பயம் இருக்கட்டும்!’ என்று எண்ணிக்கொண்டேன்!

இவர்கள் உற்சாகத்துக்கு ஏத்தபடி ஒரே குத்துப் பாடல்கள்தான்!!!
தாயும் மகளுமாக வந்த இருவரை நிறுத்தி இதே கேள்வியைக் கேட்டேன்.
தயக்கத்தோடு தன் டீனேஜ் மகளைப் பார்த்துவிட்டு, ‘இல்லை!’ என்றார்.

ஆக மொத்தத்தில் குடும்பப் பெண்களிடம் பள்ளி, கல்லூரி விடுமுறை விட்டால் பிள்ளைகளைப் பார்த்து ‘அவுத்துவிட்ட டஷ் ‘ என்போமே அத்தகைய மனநிலையில் கொண்டாடி மகிழ்ந்தார்கள். கான்செப்டே அதுதானே! ஒரு நாள் ஒரே ஒரு நாள்......மாதவம் செய்திருக்கும் மங்கையர் அனைவரையும், மறந்திருக்கும், மறைந்திருக்கும் அவர்தம் திறமைகளை வெளிப்படுத்தி , வீட்டு வேலைகளிலிருந்து விடுதலை கொடுத்து, அவர்களுக்கு மதிய உணவு. காபி, டிபன் கொடுத்து உபசரித்த ‘அவள்விகடன்’ குழுமம் எல்லோரது பாராட்டையும் அள்ளிச் சென்றுவிட்டது.
மறைந்திருக்கும், மறைக்கப்பட்டிருக்கும் பல கலைகளையும் வெளிக் கொணரும் ஒரு நிகழ்ச்சியாகவே அமைந்திருந்தது.


வீட்டிலேயே இந்த சுதந்திரம் இருந்தால் ஒரு நாள் ஜாலிடே தேவையேயில்லை....எந்நாளும் ஜாலிடேதான்!!!!!

’இவ்வளவு தாளிச்சயே, நீ என்னா செய்தே? ஆடினாயா? பாடினாயா?’ என்கிறீர்களா?

அட..போங்கப்பா!!!

அக்கா தன் கை வண்ணம், கலை வண்ணம் காட்டவே வந்தாள். நானோ அவளுக்கு துணைக்குப் போனேன். நாங்கள் போனபோது ஹால் நிரம்பியிருந்தது. பார்த்தோம்...ஹாலில் கடைசியில் இருந்த நாலு இருக்கைகள் இழுத்தோம். ஒன்றில் உக்காந்து கொண்டு மற்றொன்றில் காலை நீட்டி சௌகரியமாய் அமர்ந்தோம்.

ஒரு பத்து நிமிடம் சுகமான தூக்கம். அதே வரிசையில் உக்காராமல் நிகழ்ச்சிகளை ரசித்துக்கொண்டிருந்தார் அவள் விகடன் ஆசிரியர் பா.ஸ்ரீயும் ஸ்பான்சரும்.

அவர்களிடம் சென்று, ‘போட்டி முடிவுகளை எப்போது அறிவிப்பார்கள்?’ என்று கேட்டேன்.
அவர் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டிகளின் முடிவுகளையும் நேற்றைய முடிவுகளையும் நிகழ்ச்சியின் முடிவில் அறிவிப்பார்கள்.’ என்றார். அதோடு,?’ ’ஏன் நிகழ்ச்சி ஜாலியாகஇல்லையா?’

என்றும் கேட்டார்.

நான் உடனே, ‘எங்கள் இருவரைப் பொறுத்தவரை இது ஜாலிடே இல்லை ரெஸ்ட்டே என்றேன். சிரித்துவிட்டார். ஓஹோ இப்படி ஒண்ணும் இருக்கோ என்று நினைத்திருப்பார்.


பி.கு.
என் அக்காவுககும் தங்கைக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வெல்லும் ஓர் அதிர்ஷ்டம் உண்டு.

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]