Saturday, December 18, 2010

 

சொதப்பவும் தெரியும்...ஆக்காங்!!

வழக்கமாக சமையல் குறிப்புகள் கொடுத்துவிட்டு முத்தாய்ப்பாக அல்லது க்ளைமாக்ஸாக, ‘ரொம்ப ருசியாயிருக்கும், சுவையாயிருக்கும் பெரியவர்களுக் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.’ என்று முடித்திருப்பார்கள்.

இப்பதிவு அப்படியல்ல. பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி.....ஏன்? ‘ஏம் பேச்சை நானே கேக்கமாட்டேன்’ என்பது போல் நான் செய்ததை நானே சாப்பிடமாட்டேன், என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்போதும் ‘டீல்’ மட்டும் சொல்வதற்குப் பதில், ‘நோ டீல்’ லும் சொல்லலாமே என்று எண்ணிய எண்ணம்தான் இப்பதிவு. அதாவது நான் ‘சொதப்பியதையும்’ சொகுசாக சொல்லப் போகிறேன்.

நள்ளிரவு.....!!!இந்த செவத்துக்கொழியெல்லாம் சிகுசிகுசிகுனு சத்தம் போடுமே! அம்மாதிரியான ஓர் இரவு. ஊரெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில். அப்போது மெல்ல சத்தம் செய்யாமல் ஓர் உருவம் அந்த அறைக்குள் நுழைகிறது. அறைக் கதவை சாத்தி....”டொப்” ஒண்ணுமில்ல ஸ்விட்ச்! அந்த உருவம் லைட்டைப் போடுகிறது.

ஏதோ ரெண்டு மாவு டப்பாக்களை எடுத்து அதிலிருந்த மாவுகளை ஏதோ ஓர் அளவில் ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பும் வெண்ணையும் போட்டு தண்ணீர் விட்டு கட்டியாகப் பிசைகிறது. அடுப்பில் எண்ணை சட்டியை வைத்து, அது காய்ந்ததும் பிசைந்து வெச்ச மாவை உருட்டி முறுக்கு குழாயில், தேன் குழல் அச்சைப் போட்டு கொதிக்கும் எண்ணையில் பிழிகிறது. நன்று வெந்ததும் எடுத்து எண்ணை வடிய டிஷ்யூ பேப்பரில்(ரொம்பத்தான் ஒழுங்கு) போடுகிறது. மொதல் ஈடு ஆறியதும் எப்படி இருக்கிறது என்று ருசி பார்க்காமல் மொத்த மாவையும் பிழிந்தெடுக்கிறது.

ஆறியதும் ஒரு முறுக்கை...இல்லல்ல தேன் குழலாம்!!!!எடுத்து வாயில் வைத்து கடிக்கிறது. ’கடக்’ ஆடிக்கொண்டிருக்கும் பல் ஒன்று முறுக்கோடு வெளியில் வருகிறது.
ஐயையோ!!!நமக்கும் இப்படி ஆச்சேன்னு திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி, அத்தனை தே. குழலையும் சில்வர் தூக்கில் போட்டு லாஃட்டில் தொங்கவிடுகிறது.

தீபாவளிக்கு எண்ணைச் சட்டி வைக்கவேண்டுமே என்ற நெனப்பில் பகலெல்லாம் விட்டுவிட்டு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல் வந்த ஞானோதயத்தால் வந்த விளைவு....தேன் குழலுக்கு தூக்குதண்டனை!!!!!

கொடுத்தது.....அடியேள்தான்!!!!

அளவுகள் ஒன்றுக்கொன்று முறுக்கிக்கொண்டதால் வந்த விளைவு.
சேரீ, எப்பவும் ஜெயிச்சுக்கிட்டே இருக்கணுமின்னால் முடியுமா? தோல்வி தந்த சுவையையும் ருசிக்கணும்.

சேரீ.....முறுக்குத்தான் முறுக்கிக்கிச்சு. இனிப்பாவது செய்யலாமே என்று ஒரு பல்ப் எரிந்தது. நார்மல் ஸ்வீட் என்றால் நல்லா வரும். ரங்ஸுக்கு சுகர். ஆகவே செயற்கை இனிப்பு சேர்த்து இனிப்பு செய்தால் என்ன என்ற எண்ணம் காலை ஒரு மணிக்கு வந்தது. ஏற்கனவே ஊற வைத்திருந்த பாதாம் பருப்பு ஒரு கப் இருந்தது. ஆஹா! அவருக்கு பாதாம் ஸ்வீட் செய்து தரலாமே என்ற நல்ல எண்ணம் அந்த கெட்ட நேரத்தில் உதித்தது.

பாதாமை நன்கு மிக்ஸியில் அரைத்து, சத்தம் அக்கம்பக்கம் கேக்குமே என்கிறீர்களா? அதான் வெடியெல்லாம் போட ஆரம்பிச்சாச்சே!!!!

அமெரிக்காவில்லிருந்து உறவுக்காரர் கொண்டு தந்த ’ஸ்ப்ளண்டர்’ செயற்கை இனிப்பு ஒரு பாக்கெட் இருந்தது. சர்க்கரை என்றால் இவ்வளவுக்கு இவ்வளவு என்று அளவு தெரியும். இதை எவ்வளவு போடுவது? நூறு கிராம் நார்மல் சுகர் என்றால் ஸ்ப்ளண்டர் ஒரு ஸ்பூன் போடலாமா? ஓகே...நொழஞ்சாச்சு...ஆனது ஆச்சு என்று சுமாரான அளவில் செயற்கை சர்க்கரையை பாதாம்பேஸ்டில் கலந்து பாலில் ஊற வைத்த குங்குமப்பூ(ரொம்பத்தான்!) வைத்து அடுப்பில் வைத்து கிளற ஆரம்பித்தேன்.

நெய்யை கொண்டா கொண்டா என்று குடித்தது. ஒரு வழியாக திரண்டு வரும்போது இறக்கி ஆற வைத்தது.
துண்டு போட ஏதுவாக கோடு போட்டு கட் பண்ண ரெடியாயிருக்கிறது.


துண்டு போட்ட பின்.
ஆஹா!! ஏதோ தேறி வந்துவிட்டதே...கட் செய்யவும் இடம் கொடுத்ததே.....துண்டுகளும் போடப் பட்டுவிட்டதே!!!! வேலைகள் எல்லாம் முடியும் போது நள்ளிரவு (அதிகாலை?) ரெண்டு மணி!!!! கமுக்கமாக போய் படுத்துக்கொண்டேன்.காலையில் பூஜைக்கு வீட்டில் செய்த பலகாரமாக இதுவாச்சும் இருக்குதேன்னு அப்போ ருசி பாக்க வில்லை. காலையில் குளித்து முடித்து பூஜையும் முடித்து , பாதாம் ஸ்வீட்டை மட்டும் தட்டில் எடுத்துக்கொண்டு போய் ரங்ஸிடம் பெருமையாக, ‘ நான்...நானே கிச்சனில் வேறு யாரும் செய்யாமல் செய்தது. உங்களுக்காகவே நேச்சுரல் சுகரில் செய்தது.’ சாப்பிட்டுப் பார்க்கும்படி தந்தேன்.


ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டு சுவைத்துவிட்டு என்னைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தார். என்னவென்று புரியாமல் நானும் வாயில் போட்டுப் பார்த்துவிட்டு, ஆமாம் பாதாம் ஸ்வீட் அசட்டு இனிப்பு இனித்தது!!!!!
அடடா..! சாமிக்கும் நெய்வேத்தியம் செய்தோமே..! சாமி என்ன சிரிப்பு சிரித்தாரோ...?

Labels:


Comments:
:)அட எப்பாயாச்சும் நடக்கிறதுதான்ன்னு சமாளிச்சிட்டு போய்டுவோம்..
 
:)))
 
துண்டு போட்டு நான் தான் முதல் சீட்டைப்பிடித்தேன்
 
//சுவையாயிருக்கும் பெரியவர்களுக் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்//
உங்கள் சமையல் நிகழ்ச்சியில் "தேன்குழலும் பாதாம்ஸ்வீட்டும் ரெடி" என்று முத்தாய்ப்பு வையுங்கள்.

//சாமி என்ன சிரிப்பு சிரித்தாரோ//
தெய்வீக சிரிப்புதான்.
சகாதேவன்
 
//சுவையாயிருக்கும். பெரியவர்களுக் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்//
உங்கள் சமையல் நிகழ்ச்சியில் "தேன்குழலும் பாதாம்ஸ்வீட்டும் ரெடி" என்று முத்தாய்ப்பு வையுங்கள்.

//சாமி என்ன சிரிப்பு சிரித்தாரோ//
தெய்வீக சிரிப்புதான்.
சகாதேவன்
 
சாமி சந்தோச சிரிப்புதான் சிரித்திருப்பார். நீங்க அன்பாக் கொடுத்ததாயிற்றே:)!

சுவாரஸ்யம்.

கூடவே அருமையான தத்துவம்.
//தோல்வி தந்த சுவையையும் ருசிக்கணும்.//
சரியாச் சொன்னீங்க. அதுதான் நம்மைப் பக்குவமாய் புடம் போடும். வெற்றி ருசியின் வித்தியாசத்தைக் காட்டும்.

நல்ல பதிவு.
 
கயல்,
சமாளிப்பதும் ஒரு கலையல்லவா?
அதை கம்பீரமாக பதிவதும் ஒரு சுவையல்லவா?
 
எல்கே,

இது என்ன சிரிப்பு?
அசட்டு சிரிப்பா?
தெய்வீக சிரிப்பா?

மொத்தத்திலே சிரிப்பா சிரிச்சிட்டீங்க!!
 
கோமா,
துண்டு போட்ட ஸ்வீட்டைப் பிடிச்சீங்களா?

சாப்பிட்டீங்களா? எப்படி சிரிச்சீங்க?
 
சகாதேவன்,

////சாமி என்ன சிரிப்பு சிரித்தாரோ//
தெய்வீக சிரிப்புதான்.

தெய்வீக சிரிப்பையா உமது சிரிப்பு!!!
 
கயல்,

//சமாளிச்சிட்டு போய்டுவோம்..//

நான் சமாளிச்சது மட்டுமல்லாமல் உங்க எல்லோரையும் ஒரு வழி பண்ணிட்டேன்ல!
 
ராமலக்ஷ்மி,

சரியாச் சொன்னீங்க. தோல்வியின் சுவை கசப்பாக இருந்தாலும் அந்த சுவையும் சேர்ந்ததல்லவோ ‘அறுசுவை’?
 
நானானிம்மா.. பலகாரம் சொதப்பினாலும், அடுத்ததடவை அளவுகள் எவ்ளோ இருக்கணும்ன்னு இப்ப சொல்லிக்கொடுத்துடுச்சுல்ல.. வந்தவரை லாபம் :-)))))
 
அன்பின் நானானி

நானானி செய்தது சரியா வரலியா - ஆனைக்கும் அடி சறுக்குதா ? நடு ராத்ரிலே அடுப்பங்கரைக்குப் போனா இப்ப்டித்தான் - அசட்டுச் சிரிப்பு சிரித்த ரங்க்ஸ் பாவம்ல - ஆமா அவருக்குக் கோபமே வராதா ? இல்ல நல்ல நாளும் அதுவுமா ஆசயா செஞ்சது - ஒண்ணூம் சொல்ல்ப்பிடாதுன்னுட்டு வுட்டுட்டாரா -
 
அமைதிச்சாரல்,

// அளவுகள் எவ்ளோ இருக்கணும்ன்னு இப்ப சொல்லிக்கொடுத்துடுச்சுல்ல..//

அளவுகளெல்லாம் தெரியும்தான். கொலாஸ்ரல்...அம்மா! கொலாஸ்ரல்!!!
 
அன்பு சீனா,
தெரிந்தே சறுக்கியதுக்கு ஆனைக்கு வேணும். தேன்குழலாவது பரவாயில்லை. பாதாம்? அதுவும் ஒரு கப்?
இதுக்கெல்லாம் கோபமே வராது.
 
மிச்சம் மீதி ஒன்னும் இல்லைதானே?

ச்சும்மா உறுதி செஞ்சுக்கத்தான்.
அடுத்தவாரம் வர்றேனே அதுக்கான முன் ஜாக்கிரதை:-)
 
துள்சி,

//மிச்சம் மீதி ஒன்னும் இல்லைதானே?

ச்சும்மா உறுதி செஞ்சுக்கத்தான்.
அடுத்தவாரம் வர்றேனே அதுக்கான முன் ஜாக்கிரதை:-)//

ஹை..!ஹை..! தப்பிக்க முடியாதே..தங்கமே!
மறுபடி அதே....அதே போல சொதப்பி வச்சுக்குவேனே!!!உங்களுக்காக!!!!
 
தீபாவளிக்கு எண்ணை சட்டி வைக்கணம் என்கிற உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு 'ஓ' போட்டுக்கறேன்
ஷோபா
 
’ஓ’ போட்ட ஷோபாவுக்கு ‘ஓ..ஓ’ ரெண்டு ஓ போடறேன்.

கடமை உணர்ச்சியோடு எண்ணைச் சட்டியை வச்சேந்தான்....ஆனா..?
 
உங்கள் பதிவைப் பார்த்ததும் என் தங்கை செய்த மெகா சொதப்பல் நினைவு வந்தது. எனக்கு கல்யாணம் ஆன புதிது. தன் வீட்டில் விருந்துக்கு அழைத்தாள். நாங்கள் - தாமரை, அப்பா, அண்ணன், மதினி - எல்லோரும் சென்றோம். குழம்பு காய் எல்லாம் நல்லா செய்திருந்தாள். சாதம் வைக்க தன் கையால் ஒரு ஆளுக்கு, குழம்புக்கு இவ்வளவு, ரசத்துக்கு, தயிருக்கு இவ்வளவு என்று அளந்து போட்டு, ஒரு பத்து பேருக்கு அவள் பண்ணிய சாதம் முப்பது பேர் சாப்பிடலாம். அப்பா எங்கள் பஸ் ஆபீசில் இருந்த டிரைவர், கண்டக்டர் எல்லோரையும் வரச்சொல்லி அன்று பெரிய விருந்தாக அமைந்து விட்டது.

சகாதேவன்
 
நள்ளிரவு எழுந்து செய்த உங்களுக்கு முதலில் பாராட்டு.

ரசனை.
 
சகாதேவன்,

ஹி..ஹி....!!!
//மெகா சொதப்பல் நினைவு வந்தது.//
//குழம்பு காய் எல்லாம் நல்லா செய்திருந்தாள்.//

இதில் சொதப்பல் எங்கேயிருந்து வந்தது? சொதப்பல் என்றால்..வாயில் வைக்க விளங்காதது.
 
சகா,
அவளுக்கும் சமையல் புதிதாயிருந்திருக்குமல்லவா?

//பத்து பேருக்கு அவள் பண்ணிய சாதம் முப்பது பேர் சாப்பிடலாம்.//

அவ்வள்வு தாராள மனசு.
 
சகா...சகாதேவன்,


//அப்பா எங்கள் பஸ் ஆபீசில் இருந்த டிரைவர், கண்டக்டர் எல்லோரையும் வரச்சொல்லி அன்று பெரிய விருந்தாக அமைந்து விட்டது.//

இதுவே பெரிய விஷயமில்லையா?

அப்பா புண்ணியத்தில் அன்னதானமும் ஆயிற்று. அவள் பெற்ற பேறு.
 
என்ன சகாதேவன்,
தங்கையை கவிழ்த்துப் போட நினைத்து, அவளை நிமிர்த்தி போட்டு விட்டீர்கள்!!!!!!!
 
மாதேவி,
மிகவும் நன்றி!!

நள்ளிரவு பலகாரம்! யார் இப்படி செய்வார்கள்?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]