Sunday, November 7, 2010

 

THE EXTRA TERRESTRIALS போனேன்...பாத்தேன்...அசந்தேன்!!!

பத்து நாட்களுக்கு முன் ‘தி ஹிந்து’ வில் விளம்பரம் ஒன்று பாத்தேன். வித்தியாசமாயிருந்தது. சும்மா சும்மா டேன்ஸ், ட்ராமா, கச்சேரி என்று போவதைவிட இதுக்குப் போலாமே என்று தோன்றியது. உடனே செயல் படுத்த வேண்டாமா?

சங்கரிடம் கேட்டேன். ‘தீபாவளியன்று நமக்கு வேறு கால்ஷீட் இருக்கிறதா?’
’ஹாங்!! டஷ் கெட்டால் டஷ் சுவர், ஏங்கையும் போலை வீட்டில்தான் இருப்போம்.’ என்றார். அப்ப இந்த ப்ரோக்ராம் போலாமா? சம்திங் டிஃபரெண்ட்!(எனக்குத்தான் பிடிக்குமே)

சரி என்றார். மனசு மாறதுக்குள்ளே உடனே நெட்டில் டிக்கெட் புக்கினேன். ஒரு டிக்கெட் எண்ணூறு ரூபா.....அதனால் வேஸ்ட் பண்ண மாட்டார் என்ற தைரியம்!

ட்ராபிக்கில்லா தீபாவளி மாலை இருபது நிமிஷத்தில் அடையாறியிலிருந்து சேத்பட் போய் சேர்ந்தோம். முதலில் கூட்டம் குறைவாயிருந்து. நேரமாக...மாக ஹால் நிரம்பியது.


எழுபத்தைந்து நிமிட அட்டகாசங்கள்!!! நிகழ்ச்சி ஆரம்பிக்கு முன் செய்த அறிவிப்பில் எட்டு நிகழ்ச்சிகளுக்குப் பதில் ஏழுதான் நிகழ்த்திக்காட்ட முடியும் என்றும் அதற்கான மன்னிப்பையும் கோரினார்கள். காரணம், ஒரு சக்கர சைக்கிளில் சாகசம் செய்பவர் நேற்றைய நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கி மருத்துவனையில் இருக்கிறார் என்றார்கள்.

சேரி..சேரி...நமக்கு இதுவே எதேஷ்டம்!!!சாகசக்காரர்களின் பெயர்கள் எல்லாம் வாயில் நுழையவில்லை தமிழிலும் அடிக்கத்தெரியவில்லை. எனவே ஆங்கிலத்திலேயே தருகிறேன். (உபயம் ஹிந்து வீக்கெண்ட்)

1) Golden Power - Sandor Vlah and Gyula Takacs from Hungary
தங்க முலாம் பூசிய இருவர். அவர்களின் பலமும் பாலன்ஸ் செய்யும் திறமையும் நளினமாகவும் பொறுமையாகவும் செய்து காட்டிய வித்தைகள் அ....பாரம்.

2) Duo Buzovetsky - Yuriy and Alfiya Buzovetsky grom Germanay
மாயஜால தம்பதிகள் ரோலர் ஸ்கேடிங் செய்து தம் அபார திறமைகளை வர்ணஜால விளக்கொளியில் அதி அற்புதங்கள் செய்தார்கள். கண்களுக்கு நல்விருந்து.

3) Nicholas Galzin - King of the German wheel, from the US
சுமார் எட்டடி விட்டமுள்ள இரு வளையங்களை இரண்டடி இடைவெளிவிட்டு இணைத்து பல விதமாக அவ்வளையத்துக்குள் உருண்டு காட்டினார்.

4) Alla Klyshta - Queen of rings, from Russia
அழகான இளம் பெண்ணொருத்தி சிரித்த முகத்தோடு ஜிலுஜிலு என்று பளபளக்கும் ஹூலாஹுப்பை வைத்துக்கொண்டு வளைந்தும், நெளிந்தும், கிழே உருண்டும் வளையத்தை சுத்திக்காட்டிய விதம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதுவும் ஒவ்வொரு ஹூலாஹூப்பாக அவர் அழைக்க, அழைக்க உள்ளிருந்து உருண்டோடி வந்த ஏழு வளையங்களையும் உடம்பில், கையில், இடுப்பில் கழுத்தில், செங்குத்தாக தூக்கிய காலில், மார்பில், கால் முட்டியில் என்று சுழற்றி சுழற்றிக் காட்டியது கண்ணுக்குள்ளேயேநிற்கிறது.

இறுதியில் கொத்தாக சுமார் பதினைந்து இருபது ஹூலாஹூப்களை மொத்தமாக உடலெங்கும் பரவ விட்டு சுழன்றது அற்புதம்...அற்புதம்!!!கைதட்டல்களை அள்ளிக்கொண்டார்.

5) Trio Torime
மூன்று பெண்கள் ஒரு போல் உடையணிந்து அக்ரோபாட்ஸையும் நடனத்தையும் இணைத்து நளினமாக நடத்திக்காட்டியது ரொம்ப நல்லாயிருந்தது. என்னமோ...ஊசியில் நூலைக் கோத்து எம்ராய்டரி செய்வதுபோல் ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து மிகவும் மென்மையாக செய்து அசத்தினார்கள்

6) Topchii Vlandimir - One wheel wonder, from Sweden
இவர்தான் முன் தின நிகழ்ச்சியில் அடிபட்டுக் கொண்டு மருத்துவமனையிலிருக்கிறார். தவறவிட்ட நிகழ்வு. இருப்பினும் நல்லபடியாக திரும்ப கடவுளை வேண்டிக் கொண்டேன்.

7) Jerome Murat - Bringing statues to life, from France
மிகவும் ரசிக்க வைத்த ஒரு நிகழ்ச்சி. சிலை போல் நின்று கொண்டு ஒரு கையில் தன் தலையைக் கையில் ஏந்திக்கொண்டு அட்டகாசம் புரிந்துவிட்டார். போங்கள். அந்த ட்ரிக்கைத்தான் கண்டு பிடிக்க முடியவில்லை. வெண்டாக்ளிஸம் கலந்த ஒரு நளினமான படைப்பு. கையிலிருக்கும் தலை செய்யும் குறும்புகள்.....தனியாக சிலையின் தோளுக்கு மேலேயும் கீழேயும் செல்கிறது, கண்கள் இமைக்காமல் பார்க்க வைத்தது.
’இருமனம் கொண்ட....’ என்று பாடுவதற்குப் பதிலாக ‘இரு தலை கொண்ட...’ என்று பாடத் தோன்றியது.

8) Laser man - Wizard with the laser, from France
நிகழ்ச்சியின் “உயரமான விளக்கு” இதுதான். அதாங்க ‘ஹைலைட்!!!’
கணினி பொறியாளரான இவர் தன் சோதனைகள் மூலம் கண்டுபிடித்தவைகளை அழகாக கோத்து அற்புதமான ஒரு விருந்தை கண்களுக்குப் படைத்தார்.
லேசர் பீம் செங்குத்தாக நிற்கிறது, அதை ரெண்டாக உடைக்கிறார், அதை திருப்பி சுத்திவிடுகிறார். விசிறி போல் விரிக்கிறார்,(ஹார்ப் வாத்தியம் வாசிப்பது போல் இருக்கிறது) விரித்து தன்னைச் சுற்றி கூண்டு போல் அமைக்கிறார், அதையும் சுழற்றி விடுகிறார்....அப்பப்பா..!!!இன்னும் என்னென்னமோ செய்கிறார். அசத்தப் போவது யாரு...? இ..வர்தான்..இவர்தான். நிகழ்ச்சி முழுவதும் கைதட்டல்களாலும் “வாவ்” களாலும் பொங்கிப் பெருகியது.

முடிந்ததும் வெளியில் வந்த போது(உள்ளே போகும் இது இல்லை) யானை வரும் ஓசையா...? கோயில் மணி ஓசையா...? அதை செய்ததாரோ என்று குழம்பிய படியே வெளியில் வந்தோம். “டாண்...டாண்..”என்று மணியோசை கேட்டுக் கொண்டேயிருந்தது. பார்த்தால்........! ”நீங்கள் ரசித்திருந்தால்....அதை நாங்களும் தெரிந்துகொள்கிறோம்” என்ற அறிவிப்பின் கீழ் மணி ஒன்றை தொங்க விட்டிருந்தார்கள். அதைத்தான் எல்லோரும் அடித்து விட்டு போய்க் கொண்டிருந்தார்கள்!!!

பாருங்கள் குழந்தை கூட அடிக்கிறது. அனைத்து வயதினரும் ரசிக்கும் விதமாக அமைந்திருந்த இந்நிகழ்ச்சியைக் கண்டு.....நானும் “வாவ்”-வியிருந்தேனே!! அதுக்காக நானும் மணியை இரண்டு முறை நல்ல ‘டாண்..டாண்..! என்று அடித்து என் மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு வந்தேன்.
பிள்ளைகள் இருவரும் வெவ்வேறு இடங்களில்....நாங்க மட்டும் இங்கே. ஆனால் தீபாவளியை இப்படித்தான் கொண்டாடினோம்.

உள்ளே கேமராவுக்கும் வீடியோவுக்கும் தடை, மொபைல் ஸ்விட்ச் ஆஃப் என்ற அறிவிப்பால் கொண்டு போன கேமராவுக்கு உள்ளே வேலையில்லை. கொஞ்சம் வருத்தமாயித்தானிருந்தது. காரணமும் சொன்னார்கள். வித்தைகள் செய்பவர்களுக்கு முழு கவனமும் சிந்தாமல் சிறாமல் இருக்க வேண்டியது அவசியம்.

Labels:


Comments:
கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.
 
கலக்கல் பகிர்வு
 
கோமா,
இன்றே கடைசி....முடிந்தால் போய்ப் பாருங்கள். தவற விடாதீர்கள்!!!!
 
ஹைய்ய்யோ!!!!!

வாசிக்கும்போதே அட்டகாசமா இருக்கே!
 
ஓ அருமையான தீபாவளி கொண்டாட்டம்..:)
அந்த தலை தனியா கையில் வைப்பதை ஒரு சிறுவன் கொஞ்சநாள் முன்ன எதோ ஒரு டீவ்யில் செய்து காமிச்சான்..
 
ஓ அருமையான தீபாவளி கொண்டாட்டம்..:)
அந்த தலை தனியா கையில் வைப்பதை ஒரு சிறுவன் கொஞ்சநாள் முன்ன எதோ ஒரு டீவ்யில் செய்து காமிச்சான்..
 
துள்சி,

அப்படியானால் கண்களால் பார்த்தால்
எப்..படியிருந்திருக்கும்!!!!
 
கயல்,
நான் முதன்முறையாகப் பார்க்கிறேன். சிலவற்றை டிவீ ஷோக்களில் பார்த்திருக்கிறேன்.
 
வாவ், வாவ், வாவ், வாவ், வாவ், வாவ், வாவ்
- எட்டு நிகழ்ச்சின்னு 800 வாங்கிக்கிட்டு, ஏழு நிகழ்ச்சிதானா? அதான் ஏழு வாவ்.

நீங்கள் 100 ரீஃபண்ட் கேட்கலையா?

சகாதேவன்
 
வாவ், வாவ், வாவ், வாவ்,
வாவ், வாவ், வாவ் -

எட்டு நிகழ்ச்சின்னு 800 வாங்கிக்கிட்டு, ஏழு நிகழ்ச்சிதானா? அதான் ஏழு வாவ்.

நீங்கள் 100 ரீஃபண்ட் கேட்கலையா?

சகாதேவன்
 
தேவன்...தேவன்...சகாதேவன்....

800ரூபாய்க்கு 100ரூபாய் திருப்பிக்கேட்டால்.....அப்ப 300-500ரூபாய் டிக்கெட்டுகளுக்கு எவ்வளவு கேட்பார்கள்?
நீங்கதான் கணக்கிலே புலியாச்சே...சொல்லுங்க பாப்போம்!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]