Thursday, November 18, 2010

 

ஆப்பத்திலே பல வகையுமுண்டு....!

நான் அப்படியொன்றும் தில்லாலங்கடி இல்லை. இப்போ கொஞ்ச நாளாய்த்தான் ஆப்பத்துக்கும் எனக்கும் ஓர் ஒப்பந்தம் நல்ல படியாய் கையெழுத்தாயிருக்கிறது.
ஒப்பந்தத்தை மீறாமல் நல்லாவே வருகிறது.

அதுவும் ஹோட்டல்களியில் ஆப்பம் ஊத்துவதை நேரில் பார்த்த பிறகு பூ மாதிரி இதழ் இதழாய் ஊத்தப் பழகிக்கொண்டேன். பாருங்கள் கடாயில் பூத்த ஆப்பம்!!!

பல வகை என்றேனே என்னவாச்சு என்கிறீர்களா? வர்ரேன்...வர்ரேன்..!

கீழே பார்ப்பது கருப்பட்டி-வேர்க்கடலை ஆப்பம். ஆப்ப மாவில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அதில் கரைத்து வடிகட்டிய.....கொஞ்சம் திக்காக இருக்கணும், கருப்பட்டிப் பாகுவை சேர்த்து கரைத்து, ஆப்பச்சட்டியில் ஊற்றி அதில் வறுத்த வேர்கடலையை தூவி மூடிவைத்து முறுக வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம். மிகவும் சுவையாயிருக்கும்

கருப்பட்டிப் பூவாய் மலர்ந்த ஆப்பம்!!! தேங்காய் பாலோடு கொண்டாட்டமாயிருக்கும்.


இது இன்னொரு வகை. சாதரணமாக ஆப்பத்தை கடாயில் ஊத்தி சுழற்றி விட்டு, பின் அதில் முட்டையை உடைத்து ஊற்றி ஹாஃபாயிலாகவும் அல்லது முட்டையை கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்கு கலக்கி பின் ஆப்பத்தில் ஊத்தி சுழற்றி முறுக வெந்ததும் எடுத்து கார கிரேவியுடன் 'நண்பேண்டா' என்று இணைந்து சுவை கொடுக்கும்.

மலர்ந்த தாமரையினுள் மஞ்சள் கண் கொண்டு மிரட்டும் முட்டை ஆப்பம்!!!சேரி......எல்லாஞ்சொல்லீட்டு ரெசிப்பி சொல்லாம போனா எப்படீங்கிறீங்களா?
சொன்னாப் போச்சு.

பச்சரிசி, புழுங்கல் அரிசி சமபங்கு(கால் கிலோ
உளுத்தம்பருப்பு ஒரு குத்து
வெந்தயம் ஒரு மேஜைக் கரண்டி


இவற்றை ஊற வைத்து இரவே அரைத்து க்ரைண்டர் கழுவிய தண்ணீரும் சேர்த்து தேவையான உப்பு, இரண்டு மேஜைக் கரண்டி சர்க்கரை, சோடா உப்பு ரெண்டு சிட்டிகை சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

காலையில் பொங்கியிருக்கும் மாவில் தேங்காய் பாலுக்காக உடைக்கும் தேங்காய் தண்ணீரை மாவுடன் சேர்த்து தேவையான பதத்தில்
கரைத்து ஆப்பச் சட்டியை அடுப்பில் காய வைத்து மொத்து மொத்துன்னு
ஆப்பத்தை சுட்டெடுக்க வேண்டியதுதான்.

உங்களுக்குத் தெரிந்த வேறு வகை ஆப்பங்கள் இருந்தால் சொல்லுங்களேன்.
நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.

கருப்பட்டி ஆப்பம் எனக்குச் சொல்லிக் கொடுத்தது....தூத்துக்குடியில் நாங்கள் இருந்தபோது, அடுத்த வீட்டிலில் இருந்த அருமைத்தோழி திருமதி விவேகவதி.

ஆப்பத்துக்கு தேங்காய் பால் மட்டும்தான் என்றிருந்த காலத்தில், ஆப்பத்துக்கு கிரேவியையும்(எழுபதுகளில்) அறிமுகப் படுத்தியதும் இவர்தான். "பட்டாணி, கொத்துக்கறி கிரேவி" சூப்பராயிருக்கும். என்ன...என்ன...? ரெசிப்பியா? பின்னாடி பாப்போம்!!

அவரை இந்நேரம் நினைத்துக் கொள்கிறேன். இப்போது மதுரையில் வசிக்கிறார்.

ஆப்பம்.......நடுவில் மொத்து மெத்து என்றிருந்தால்தான் எனக்குப் பிடிக்கும்.
அப்ப...உங்களுக்கு?

Labels:


Comments:
ஊத்தப்பத்துக்கான எல்லா டாப்பிங்குகளையும் இதில் முயற்சித்தாலென்னன்னு தோணுது நானானிம்மா... விதவிதமா!! வித்யாசமா :-)). முதல் கட்டமா, பனீர் டாப்பிங்.. எப்பூடி :-)))))
 
ஆப்பக் கடை விரிச்சிட்டேன்.

நேற்று தவறுதலாக பதிந்து உடனே திருப்பி எடுத்த, அந்த சில வினடிகளில் படித்து பின்னூட்டமும் இட்ட அருமை அமைதிச்சரலுக்கு நன்றிகள்!!!

இந்த பதிவு உங்களுக்கே காணிக்கை,அமைதிச்சாரல்!!!!
 
ஆப்பமும்,இடியாப்பமும் பிடிச்ச உணவுகள்.. அதான் கடை தொறந்ததுமே ஓடியாந்தேன்.. எங்கூட்லயும் ஆப்பத்துக்கு குருமா, மஷ்ரூம் வறுவல்ன்னுதான் சைடிஷ் இருக்கும் நானானிம்மா :-)))
 
அமைதிச்சாரல்,
சுட்டெடுக்குமுன் தட்டேந்தி நிற்கும் குழந்தையைப் போல், பதியுமுன்னே வந்து,கமெண்டும் சொன்ன உங்கள் அன்புக்கு நன்றி!!

//விதவிதமா!! வித்யாசமா :-)). முதல் கட்டமா, பனீர் டாப்பிங்.. எப்பூடி :-)))))//

கலக்கிப்புட்டுவோம். நீங்களே ஆரம்பியுங்க. நான் பின்னாடி வந்து சேந்துக்கிறேன். சேரியா?
 
அப்படி நீங்க ஓடியாந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துது, சாரல்!!
 
suparaappam
 
காலையில் உங்கள் பதிவைப் பார்த்ததும் தாமரையிடம் நீ ஆப்பம் செஞ்சு ரொம்ப நாளாச்சே என்றேன். ஆப்பமா? அதுக்கு மாவு அரைக்கணும், தேங்காய் பால் எடுக்கணும். இன்னிக்கு முடியாது. நாளை பாப்பம்ன்னு சொல்லிட்டா
சகாதேவன்
 
என்னோட ஃபேபவரிட். ஆப்பத்தோட கடலக்கறி சாப்பிட்டுப் பாருங்க. சூப்பரா இருக்கும். ஆப்பத்துக்கு மாவு ஊத்திட்டு நடுவுல கொஞ்சம் சர்க்கரை + துருவிய தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். சைட் டிஷ் எதுவுமே இல்லாம ரொம்ப நல்லாருக்கும்.
 
எங்க வீட்ல யாருக்கும் ஆப்பம் பழக்கமில்லை. தங்கமணி வந்ததற்குப் பிறகு ஆப்பம், வடகறி பழக்கமாகிடுச்சு.. ;-)
 
ஊரில இருந்து கொண்டு வந்த கருப்பட்டிய பாகு எடுத்துட்டிருக்கேன்:)!
 
சகாதேவன்,

//ஆப்பமா? அதுக்கு மாவு அரைக்கணும், தேங்காய் பால் எடுக்கணும். இன்னிக்கு முடியாது. நாளை பாப்பம்ன்னு சொல்லிட்டா//

ஆப்பம்....நாளைக்குப் பாப்பம்!!!
என்ன ஒரு கவிதை நயம்!!!
சூப்பர் தாமரை!

இருந்தாலும் கேட்ட பிறகு செய்து கொடுக்காமல் இருப்பது....

சினிமா பாப்பமா? என்று நீங்க கேட்டு..நாளைக்குப் பாப்பம்-னு சகாதேவன் சொன்னால் எப்படியிருக்குமுன்னு 'பாப்பமா?'
 
கோமா,
நீங்களும் நாளைக்கு ஆப்பமா..?இல்லை 'பாப்பமா..?
 
வித்யா,

நான், கடலக்கறி...கொழாப்புட்டுவோட சாப்பிட்ருக்கேன். இன்னும் விதவிதமான சைட்டிஷ்கள் கிடைக்கும்போல. சந்தோஷம்தான்!!
 
தமிழ்பிரியன்,

வருகைக்கு நன்றி!

ஆப்பம்-வடகறி!!!!சைதாப்பேட்டை கிரி..கிரி..

எத்தனை வகையான தொடுகறி!!!

வரட்டும்..வரட்டும்.

எல்லாம் செஞ்சுபாத்திடுவோம்.
 
நீங்கதான் சமத்து...ராமலஷ்மி,

கருப்பட்டிபாகு மணம்....கம்முன்னு வீசுது. ஜமாயுங்க!!ஆங்...வேர்க்கடலை இருக்குதுல்ல?
 
அமைதிச்சாரல்,
நாம கேக்கவே வேண்டாம் போல, வந்து குவியுது சைட்-டிஷ் வகைகள்.

நல்லாருக்கில்ல?
 
காலையில் ஆப்பம் பார்த்துட்டுத் தின்ன ஓடோடிவந்த என்னை ஏமாத்திட்டீங்க!

அப்புறம் இப்பதான் கருப்பட்டி ஆப்பம் கிடைச்சது. டேங்கீஸ்.

சண்டிகரில் ஆப்ப மாவு, கேரளா தயாரிப்பு கிடைக்குது. கரைச்சு வச்சால் ரெண்டு மணி நேரத்தில் ரெடி!

போனவருசம் நம்ம ஆப்பக்கடைக்கு நீங்க வரலைபோல இருக்கே.

http://thulasidhalam.blogspot.com/2009/08/blog-post_19.html

எட்டிப்பார்த்துட்டுப் போங்க நேரம் இருந்தால்.
 
துள்சி,
விடுவேனா? உடனே எட்டிப்பாத்துட்டேனே!!

அதேமாதிரி ஆப்பச்சட்டி என்னிடமும் இருந்துது. ஆப்பமா....சுட்டு சுட்டு தனக்கே வச்சுகிச்சு ஆப்பு!!

போட்டுட்டு வேற வாங்கிட்டேன்.
 
ஆப்பம் பூ பூவாய் அழகு.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]