Thursday, November 4, 2010

 

தீவாளி வாழ்த்துக்கள்!!!


கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கும் நாந்-ஸ்டாப் கொண்டாட்டம். ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில்.
காலையில் டிவியில் பாத்துட்டு, மதியம் போனேன்.
அப்ப்பா...அப்பப்பா...! வீட்டில் பண்டம் பலகாரம் செய்ய திண்டாடும் கூட்டம்.
அங்கு தங்கள் வீட்டு சமையலறையை பூட்டீட்டு குழுமியிருந்தார்கள்.


வாசலில் வரவேற்கும் லாரலோ? ஹார்டியோ?


ஐந்தாம் தேதி காலை எட்டு மணி வரைதான் என்பதால், இன்றே போனேன். எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்க.
பொருளை வாங்கிவிட்டு பணம் செலுத்துமிடம்.
அழகழகான திருவுருவங்கள் பொறித்த சின்ன சின்ன டப்பாக்களில் ஒத்தை ஒத்தை மைசூர்பாகு!! தீவாளி பரிசாகக் கொடுக்க. சாய்பாபா, கிருஷ்ணர், முருகன், சிருங்கேரி சுவாமிகள் படங்கள்.
நல்லாருக்கில்ல?

நானும் அதில் ஆறு டப்பாக்கள் வாங்கிக்கொண்டேன். யாருக்கெல்லாம் என்பதை பிறகு
தீர்மானித்துக் கொள்ளலாம். (துள்சி ! எனக்கொண்ணுன்னு ஓடி வாங்க!)இனிப்ப வகைகள் கார வகைகள் வாங்க காரசாரமாய் கூடியிருக்கும் கூட்டம்.

ஆண்கள் பெரும்பாலும் பரிசாகக் கொடுக்கவே வாங்குகிறார்கள். பெண்கள்? தாங்கள் வீட்டில் செய்ய முடியாததை வாங்கிக் கொள்கிறார்கள்.
பிஸியான

பிஸியான கவுண்டரின் உள்பக்கம்.
சுடச்சுட மினி ஜாங்கிரி....ஹூலாஹுப் மாதிரி சுத்துது.
மிதமான இனிப்புடன் கூடிய, "கிறார்..கிறார்..கிறார்! பாதுஷா மிதக்..கிறார்!!!!
அடுப்படியை மூடிவிட்டு வந்த கூட்டம். எதை எடுப்பது எதை விடுப்பது என்று

சிந்திக்கிறது.


ஃபுல் மீல்ஸ்!! வேண்டுமானால் ஒரு கட்டுக் கட்டலாம்.


அல்லது விதவிதமான சிற்றுண்டிகள். காட்சிக்கு...அல்லது மெனு கார்ட் மாதிரி பரப்பி வைத்திருக்கிறார்கள்.
"என்ன வேணும் கேளுங்கடா...இஷ்டம் போல வெட்டுங்கடா....!!" என்று வெட்டும் கூட்டம்.

செங்கரும்பு சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிச்ன்றன. தனியாக ஐஸ் க்யூப் சேர்க்க வேண்டாமில்லையா? இதுவும் நல்ல ஐடியா!!!

மிஷினில் அ..ப்படிக் கொடுத்து இ..ப்படி ஜூஸாக ஜாரில் பிடிக்கிறார்.


கடைசியில் நான் எனக்காக வாங்கிக் கொண்டது. "தண்ணீர் பூரி, உப்பு, மிளகு போட்ட கரும்புச்சாறு!!

தீவாளி வாழ்த்துக்கள்!!!

அளவோடு உண்டு, அளவோடு வெடித்து அழக்காக கொண்டாடுங்கள் தீவாளியை!!!!!!

தீவாளி வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!கண் கொள்ளாமல் இனிப்பு கார வகைகளை கண்களால் விழுங்கி, வரும் வழியில் டப்பா செட்டிக் கடையில் தீவாளி லேகியம் வாங்கப் போய் பயங்கர ட்ராப்பிக்கில் சிக்கி வாங்க முடியாமல் அதையும் கண்களால் விழுங்கி, திருப்தியாக வீடு வந்து சேர்ந்தேன்.

Labels:


Comments:
அருமையான பகிர்வு.

ஈ சுத்தாத சுத்தமான கரும்புச் சாறு பார்க்கவே நல்லாயிருக்கே:)!

தீபாவளி வாழ்த்துக்கள்!
 
Happy Deepavali Nanani,
Adupadiyil viyarthu viruviruthu sweet karam seidhu vittu vandhal ingu yellorum nogamal vangugirarkal.
Krishna sweetsin pirandhgamana Kovaiyil indha vizha nadakalaye.
Shobha
 
நான் இப்போதான் அதிரசமும் முறுக்கும் செய்தேன். சாந்தி ஸ்வீட், இருட்டுக்கடை எல்லாம் போனால் கூட்டம் தாங்க முடியாது. நீங்கள் வாங்கிய பாக்கெட்கள் அனுப்ப லிஸ்ட் போட்டாச்சா? என் பெயர் உண்டா?
தாமரை
 
நான் தான் முதல் என்று நினைத்தேன். அதற்குள் இரண்டு பேரா?
தகவல், போட்டோ எல்லாம் பார்த்ததுமே இனிப்பாக இருக்கிறது. நன்றி.
லாரலா ஹார்டியா என்றீர்களே- அது ஆலிவர் ஹார்டிதான். மற்றவர் ஸ்டான் லாரல்.
சகாதேவன்
 
நான் தான் முதல் என்று நினைத்தேன்.
தகவல், போட்டோ எல்லாம் பார்த்ததுமே இனிப்பாக இருக்கிறது. நன்றி.
லாரலா ஹார்டியா என்றீர்களே- அது Oliver Hardyதான். மற்றவர் StanLaurel
சகாதேவன்
 
ஆஹா.....ஆஹா...... இப்படி எல்லாத்தையும் கோட்டைவிட்டுட்டு இங்கே வந்துட்டேனே.........


எனக்கொரு டப்பா எடுத்து வச்சுருங்க:-)))


இங்கே வட இந்திய இனிப்பு எல்லாம் பால் பனீர் சமாச்சாரம். நாலைஞ்சு முறைக்கப்புறம் போரடிச்சுருச்சு.

அதிரசம் முறுக்குக்கு மனசெ ஏங்குதுப்பா.

இப்ப ஒரே ஒரு முடிவுக்கு வந்துட்டேன். சண்டிகருக்கு சென்னை எவ்வளவோ மேல்:-)


உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் குறிப்பா நம்ம ஷன்னுக்கும் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்!
 
அற்புதம்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
 
அவரு ஹார்டி :) எனக்கு ரொம்ப பிடிக்கும்..
 
அவரு ஹார்டி :) எனக்கு ரொம்ப பிடிக்கும்..
 
தீபாவளி வாழ்த்துகள் ..
ஜாங்கிரியையும் பாதுஷாவை பாத்து நாக்கு ஊறுது. :)
 
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
 
சுவைத்தோம்.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துகள்.
 
ராமலஷ்மி,

அதுவும் பல வகை ஃப்ளேவரில்...உப்பு மிளகு, இஞ்சி, மிண்ட் போன்ற சுவைகளில்.
 
ஷோபா,
உங்களை யார் வேர்த்து விருவிருத்து....எல்லாம் ச்ய்யச் சொன்னது?

எங்களை மாதிரி நோகாமல் நொங்கெடுக்கணும். சேரியா?
 
தாமரை,

உங்களுக்கில்லாததா? நான் வரும் போது அல்லது நீங்க வரும்போது....எந்த நிலையில் இருக்கிறதோ அப்படியே! சேரியா?
 
சகாதேவன்,

சேரி...சேரி...!ஹார்டிதான், அதா எனக்குத் தெரியுமே!!!!
 
துள்சி,

வாங்கும் போதே முதல் டப்பா உங்களுக்குன்னு ரிசர்வ் செஞ்சாச்சு!

//இப்ப ஒரே ஒரு முடிவுக்கு வந்துட்டேன். சண்டிகருக்கு சென்னை எவ்வளவோ மேல்:-)//

அப்படி வாங்க வழிக்கு!!!
 
துள்சி,

//குறிப்பா நம்ம ஷன்னுக்கும் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்!//

ஷன்னுக்கு உங்க வாழ்த்துக்களைச் சொன்னேன், அவன்,"தேங்யூ ஆச்சி!!விஷ் யூ த சேம்!" அப்டீன்னான்.

உங்களுக்கும் கோபாலுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.

சண்டீகரில் உங்க 'கர்ரில்' எண்ணை சட்டி காய்ந்ததா?
 
மிக்க நன்றி! எஸ்.கே.!
 
முத்துலெட்சுமி,

அவர் ஹார்டிதான். இப்பத்தான் எனக்குத் தெரியுமே!!
 
கயல்,

//ஜாங்கிரியையும் பாதுஷாவை பாத்து நாக்கு ஊறுது. :)//

நாக்கு ஹூலாஹூப்பா சுத்தணுமே!!!
 
கயல்,
டெல்லியில் பாதுஷா இல்லையா?
 
வி.ராதாகிருஷ்ணன்,

வருகைக்கு நன்றி!
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்!!
 
மாதேவி,

சுவையாயிருந்ததா? நல்லது.

//உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துகள்.//
உங்களுக்கும் அப்படியே!!!!
 
அசத்தீட்டீங்க
இந்த தீபாவளி பதிவு, ஒரு 1000 வாலா
 
அன்பின் நானானி

அருமையான நேரடி ஒளிபரப்பு - அட்டகாசம் போங்க - படங்க வேற சூப்பர் - எப்படி உங்கள அனுமதிச்சாங்க - ஆமா ஆமா எப்படி தீவாளிக்கு வூட்ல ஒண்ணுமே பண்ணலியா /r

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் நானானி - நட்புடன் சீனா
 
படங்களுடன் பகிர்வு ... ஒரு விளம்பரம் பார்த்த மாதிரி உணர்வு. தீபாவளி வாழ்த்துக்கள்.
 
எங்கூட்லயும் இந்த வருஷம் கிருஷ்ணா கொடுத்த மினிஜாங்கிரியும்,மைசூர்பாவும் உண்டு.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]