Saturday, October 16, 2010

 

மேக்கிங் ஆஃப் மை கொலு

திரைப்படங்களுக்கு மட்டும்தான் ‘மேகிங் ஆஃப்’ உண்டா என்ன? என் கொலுவுக்கும் அது உண்டே!!!!
என்னோட கொலுவில் பொம்மைகள் தவிர பேக் ட்ராப் வருடாவருடம் விதவிதமாயிருக்கும். எந்த வருடம் நேரமின்மையால் ஐடியா கோடவுன் ஷட்டவுன் ஆகிவிட்டது. ‘என்ன இன்னும் யோசிக்கவில்லையா?’ என்று கேள்விகள் வட்டமிட்டன.
நான் சொன்னேன்....அம்மா அவளுக்கு வேண்டியதை என்னிடமிருந்து வாங்கிவிடுவாள். ஆகவே பொறுங்கள்.

திடீரென்று கோடவுன் திறந்தது. ஐடியாவும் வந்து விழுந்தது. அண்ணன் வீட்டில் நடமாடிய மயில்கள் என் மனதை வருடிக்கொண்டேயிருந்தன.
ஸோ....மயிலே பேக் ட்ராப்பாகியது.

டிவியில் ஆர்ட் அட்டாக் என்றொரு நிகழ்ச்சி வருமே!! பேப்பர்களை கச்சா முச்சா என்று கசக்கி பெவிக்காலும் டிஷ்யூ பேப்பரும் கொண்டு வித வித மான உருவங்கள் செய்து கலரடித்து செய்வார்களே, அதைப்போல் மயிலின் உருவம் செய்து சுவற்றில் ஓட்டினேன். பின் அண்ணன் வீட்டில் மயில்கள் உதிர்த்துப் போட்ட மயிலிறகுகளையும் பத்தாததுக்கு விலைக்கு வாங்கியும் ஒட்டினேன். என்னிடமிருந்த கிரிஸ்டல் கற்களை வெள்ளை சார்ட் பேப்பரில் கண்கள் வரைந்து அதில் ஒட்டி கண்களாகப் பொருத்தினேன். பாசி வைத்த குண்டூசிகளை கொண்டைகளாக சொருகினேன். டிப் டீயோடு வரும் குச்சிகளை கால்களாக அமைத்து சேர்த்தேன். அம்புடுதேன்......மயில் அழகாக தன் தோகையை விரித்தாடியது என் கொலுவுக்கான பேக் ட்ராப்பில்.
கொலு வைக்க படிகள் அடுக்கப் பட்டன.

பச்சரசி நிரப்பி மாவிலை சொருகி தேங்காய் வைத்து பூப்போட்டு குங்குமம் இட்டு கலசம் தயார். அதை நல்ல நேரத்தில் மேல் படியின் நடுவில் பிரதிர்ஷ்டை செய்து முப்பெரும் தேவிகளை அமர செய்தாயிற்று.

பூரண கலசம்.

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி....என் அம்மாவும் வந்தாச்சு.

இந்த வருடம் மைலாப்பூர் குளத்தருகே வாங்கிய புது பொம்மைகள்.

ஆஞ்சனேயர், ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீராம்.....என்று நெஞ்சைப் பிளந்து சீதா ராமரைக் காட்டும் நெஞ்சை உருக்கும் காட்சி!! இதுவும் புதுசு.

இரண்டாம் படியில் மதினி பரிசளித்த அண்ணாமையார்- உண்ணாமுலை அம்மை.

அண்ணாமலைக்கு அரோஹரா!!!!
முழுமை அடைந்த கொலு, நீரில் மிதக்கும் விளக்குகளுடன்.

ஆஹா...! பூஜைக்குத்தயார்!
ஒன்பது நாட்களும் விளக்கேற்ற ஏதுவாக எம்மாம் பெரிய தீக்குச்சி!!!ப்ளேம்லெஸ் காண்டில்.

பேரன் கொலுவுக்காக மனமுவந்து தந்த அவனது டாய். அனிமேனி!! பக்கத்தில் அவனது பேவரைட் ‘தாமஸ் டிரைன்.

வாருங்கள்...எல்லோரும் வந்து சந்தனம் குங்குமம் எடுத்துக்கொள்ளுங்கள்!!அதோடு ரவா கேசரி, பூம்பருப்பு சுண்டல் பிரசாதம். வேண்டிய மட்டும் எடுத்து சாப்பிடுங்கள். காரணம் அவை அக்ஷ்ய பாத்திரங்களாக்கும்!!!!பதிவுலக அன்பர்கள், மற்றும் அனைவருக்கும் என் அன்பான நவராத்திரி தின வாழ்த்துக்கள்!!!

Labels:


Comments:
மஞ்சக்குங்குமம் எடுத்துக்கிட்டேன் நானானிம்மா.. அழகான அம்சமான கொலு..
 
இவ்ளோ பெரிய தீக்குச்சியை எங்கேர்ந்து பிடிச்சாந்தீங்க நானானிம்மா :-))))). ஊருக்கே விளக்கேத்தலாம் போலிருக்கே!!
 
நேரில் வந்து பார்க்க முடியாத குறையே தெரியாமல் ‘படிப்படியாய்’ வந்து சேர்ந்திருக்கிறது பதிவு ‘மேக்கிங் ஆஃப் மை கொலு’வாக!

தோகை மயில் சூப்பர்.

பொம்மைகளை ரசித்தாயிற்று. மஞ்சள் குங்குமம் எடுத்தாயிற்று.

பிரசாதம் மிகச் சுவை.

நன்றி:)! பை பை!
 
அட்டகாசம்.. 'மேக்கிங் ஆஃப் மை கொலு' ராக்ஸ்..மயில் நல்லா இருக்கு.. எங்க வீட்டிலும் ஆர்ட் அட்டாக் வச்சித்தான் ஜாக் அண்ட் த பீன்ஸ்டாக் செய்தாள் மகள்.. ;)
ஹேண்டி மேனி சூப்பர்..
கொலு மன நிறைவு.
 
ரொம்ப சந்தோஷம்...அமைதிசாரல்!!
 
வித்தியாசமான பொருட்களெல்லாம் எப்படியாவது நம்ம கண்ணில் படும்... விலை ஓகேன்னா பசக்குன்னு வாங்கிடுவேன்.

ஊருக்கே விளக்கேத்தக் கூடிய இந்த தீக்குச்சி...அமெரிக்காவில் பிடிச்சாந்தது.
 
ராமலக்ஷ்மி,
தாம்பூலம் வைக்க கவர் கொடுக்க மறந்திட்டேன். ஓடி வந்து வாங்கிக்கோங்க....சேரியா?
 
கயல்,
உங்களுக்குப் பிடிச்சிருக்கா? ரொம்ப சந்தோஷம். என்ன...நேரில் வர முடியாததுதான் வருத்தம்!!
 
கொலுக்கள் மிக அழகு! இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
 
பிஹைண்ட் த ஸீனும் முஹைண்ட் த ஸீனும் விளக்கமும் சூப்பரோ சூப்பர்.

ரசித்தேன். எடுத்தேன் கேசரி முழுவதையும்:-))))

ஆமாம்... அதென்ன பூம்பருப்பு?

ரெஸிபி ப்ளீஸ்.
 
மிக்க நன்றி....எஸ்.கே.!!
 
அடடே...!டீச்சருக்கே சந்தேகமா..?
அது ஒண்ணுமில்ல, துள்சி!
பாசிப்பருப்பை சரியான பதத்தில் வேகவைத்து, நீரை வடிகட்டி, தாளிதம் போட்டு பிரட்டி எடுத்தால்..அதுதான் "பூம்பருப்பு". எங்க பக்கத்திலே அப்படித்தான் சொல்லுவாக.
இப்ப ஓகேவா?
 
கயல்,

ஷன்னுவின் டாய் பேர் நீங்க சொன்னா மாதிரி 'ஹேண்டி மேனி' தான். அவன் மழலையில் சொல்வதை வைத்து அதான் பேராக்குமென்று பதிந்துவிட்டேன். பின்னர் விஜாரித்ததில் தெரிந்தது.

நாசூக்காக தெரியப்படுத்தியதுக்கு நன்னி!
 
சித்துச்சிறுக்குன்னு சொல்வீங்களே, அது மாதிரி அழகான கொலு.
மயிலே மயிலே இறகு போடு என்றதும் இத்தனை இறகுகள் தந்ததா.
நல்ல கொலு. பாராட்டுக்கள்.
தாமரை
 
மயில் தோகை விரித்திருப்பது ரொம்ப அழகு. அம்சமான பொம்மைகள்.
ஆமா, கலைமகள் கைப்பொருளை கவனிக்கவில்லையா? என்ன பாட்டு வாசித்தீர்கள்.

//இரண்டாம் படியில் மதினி பரிசளித்த அண்ணாமையார்//
அண்ணாமலையார் - திருத்திவிடுங்களேன்

சகாதேவன்
 
நான் வந்தபோது பேரன் தந்த பொம்மைதான் மிஸ்ஸிங்
சூப்பர் கொலு...
 
’’மேக்கிங் ஆஃப் கொலு” ராக்கிங்!!

மயில் சூப்பர்!! மயில் வளர்க்கிற அண்ணன் வீடு எங்கே? வேறு என்னல்லாம் வளர்க்கிறாங்க?

//"பூம்பருப்பு"//

எங்க பக்கம், கடலைப் பருப்புதான் பூம்பருப்புக்கு!!
 
தாமரை,
அதெல்லாம் போடு போடு என்றதும் போட்ட இறகுகளில்லை. அதுவே நாம் பார்பர்ஷாப் போய் மொட்டை போடுவதுபோல் அதுக்கு வேண்டாமென்று கழித்த இறகுகள். இன்னும் சொல்லப்போனால் பொறுக்கின இறகுகள்.

சித்துசிறுக்குன்னு நல்லாருக்கா? ரொமப சந்தோஷம்!!!
 
சகாதேவன்,
கலைமகள் கைப்பொருளை கவனிக்காமலா? அது படத்தில் வரவில்லை. என்ன வாசித்தேன் தெரியுமா? கொலுபாக்க வந்த சிறுமிக்கு அலங்காரம் எப்படி வாசிப்பது என்று வாசித்துக் காட்டினேன். ஹி....ஹி...!
 
சகாதேவன்,
ராத்திரி இரண்டு மணிக்கு தூக்கம் கண்ணை சொக்க அடிக்கும் போது நிகழ்ந்த தவறு. அந்த அண்ணாமலையாரே மன்னித்துவிடுவார், நீங்களும் கண்டுக்காதீங்களேன்.

நல்ல வேளை நம்ம துள்சி கண்களில் படவில்லை. தப்பித்தேன்.
இல்லைன்னா நூறு தடவை “அண்ணாமலைக்கு அரோஹரா”ன்னு எழுதச் சொல்லிடுவாங்க.
 
ஹூஸைனம்மா,
வாங்க. மயில் வளர்க்கும் அல்ல மயில்கள் வந்து போகும் அண்ணன் வீடு திருநெல்வாலி பெருமாள்புரத்தில் உள்ளது.

பாசிப்பருப்பு சுண்டலைத்தான் நாங்க ‘பூம்பருப்பு’ என்று சொல்வோம்.
 
எல்லோர் மனங்களையும் மயில்தான் கொள்ளை கொண்டுவிட்டது. சந்தோஷமாயிருக்கு.
 
..மதினி அதாவது.அண்ணாவோட அம்மையார் அதாவது அண்ணாவோட மிஸர்ஸ் தந்ததால் அண்ணாமையார் என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.
 
ஹூஸைன்னம்மா,

அண்ணன் வீட்டிலே...ஆடு வளக்கல, கோழி வளக்கல, நாய்கள்தான் வளக்காங்க! சேரியா?
 
கோமா,
உங்க உடம்போடு பிறந்த நல்ல லொள்ளு விளக்கம்!!!ரசித்தேன்.
அண்ணாமையாரும் ரசித்திருப்பார்.
 
பறக்கும் மயிலார் கைவண்ணம் அழகு.
 
ungal karpanai thiran kolu veertirukum pommaikalukku melum alazhuttukindrana.
 
தாங்க்ஸ்....மாதேவி!
 
Many many thanks SIVARAMU!!!
 
அன்பின் நானானி

அருமை அருமை - மேக்கிங்க் ஆஃப் மை கொலு சூப்பர் - மயில் பேக்ட்ராப்பீல் இருந்து - வெண்மையான வெள்ளிக் கலசத்தில், பசுமையான மாவிலையில், மரக்கலரில் ( பிரவுனில் ) தேங்காய், மஞ்சள் நிறத்தில் சாமந்திப் பூ, குங்குமக் கலரில் குங்குமம் - அடடா அடடா அருமை அருமை. மங்களம் உண்டாகட்டும். மயில் தயார் செய்ய எத்தனை எத்தனை பொருட்கள் - பொறுமையின் திலகமே ! நீ வாழ்க சகோதரி நானானி.

வெள்ளைப் படியில் - பச்சரிசி - மேல் ப்டையின் நடுவில் பிரதிஷ்டை - சிம்மாசனம் ரெடி. தேவி - முப்பெரும் தேவியர் அமர எவெரி திங்க் ரெடி.

மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி - எவ்வளவு பொம்மைகள் இருந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு புதுப் புது பொம்மைகள் - மதினி அளித்த அரும் பரிசு அண்ணாமலையார் - உண்ணாமுலை

நீரில் மிதக்கும் பூக்கள் - தீபமேற்ற ஒன்பது நாட்களுக்கும் சேர்த்து ஒரே தீக்குச்சி இறக்குமதி - ஃப்ளேம்லெஸ் காண்டில் - பேரனின் ஃபேவரைட் - சந்தனம் குங்குமம் - ரவா கேசரி பூபருப்பு சுண்டல் - அடடா அட்டா - கொஉவுக்கு வந்திருக்காலாம் போலெருக்கே - வட போச்சே ! ம்ம்ம்ம்ம்

நானானி - நல்வாழ்த்துகள் நானானி - நட்புடன் சீனா
 
அன்பு சீனா!
அடடே..!கொலுவுக்கு உங்களையும் செல்வியையும் அழைத்திருக்கலாம் போல. அடுத்த வருடத்துக்கு இப்போதே அழைக்கிறேன். சேரியா?
நீங்கள் குடும்பத்தோடு வந்து, மஞ்சள்,குங்குமம் வாங்கிக்கொள்ளுங்க. சேரியா?
நன்றியுடன் நான்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]