Monday, October 18, 2010

 

கொலு க்விஸ்

திருநெல்வேலி போயிருந்தபோது, சின்ன மதினி பத்மா கொலு வைத்திருப்பதாகவும் கட்டாயம் வரணும் என்றும் அழைத்தார்கள். அம்மா இருக்கும் போது வைத்திருந்த பொம்மைகளை சின்ன அண்ணன் எடுத்துப் போய் அவர் வீட்டில் கொலு வைக்கவாரம்பித்தார்கள். நவராத்திரி சமயம் ஊருக்குப் போகும் வாய்ப்பில்லையாததால், இம்முறை கண்டிப்பாக போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். காரணம் சிறுவயதில் நாங்கள் படிப்படியாக அடுக்கிய பொம்மைகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பல்லவா? விடலாமா?


அம்மா காலமான பிறகு எனக்குத் திருமணம் ஆகி வெளியே வரும் வரை அண்ணன்கள், மதனிகள் அனைவரையும் இழுத்துப் பிடித்து வழக்கம் போல் கொலு வைத்துக்கொண்டிருந்தேன். அதன் பிறகு அப்படி இழுத்துப் பிடிக்க யாருக்கும் தெம்பில்லை. அப்படியே கொலுவில்லாமல் காலம் கழிந்து கொண்டிருந்தது. பொம்மைகளும் கும்பகர்ணன் உறக்கம் போல் நீண்ட உறக்கமாக உறங்கிக்கொண்டிருந்தன.


சும்மாதானே இருக்கிறது என்று சின்ன அண்ணன் திருநெல்வாலிக்கு ட்ரான்ஸ்வராகி வந்ததும் பொம்மைகளை தன் வீட்டுக்குக் கொண்டு போய் கொலு வைக்கவாரம்பித்தார். எனக்குப் பார்க்க இம்முறைதான் வாய்ப்பு கிடைத்தது.


கொலு முன் அமர்ந்தவுடன் நெடுநாள் சந்திக்காதவர்களை பார்த்த மாதிரி உள்ளுக்குள் ஒரு பரவசம்!!! “ஹலோ! நீ எப்படியிருக்கிறாய்...நீ எப்படியிருக்கிறாய்?” என்று ஒவ்வொரு பொம்மைகளாக கேட்க, அவைகளும் என்னைப்பார்த்து, ‘நீ இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ “ என்று கேட்க சுகமாக உறவாடிக்கொண்டிருந்தோம்.


ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்து நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே மனதில் ஓர் எண்ணம் ஓடியது. ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு பாட்டு அல்லது ஜோக் என்று வழிந்தோடியது.


அவைகள் என்னென்ன என்று பார்க்கலாமா?

மூன்றடி உயர கண்ணன் பொம்மை அம்மா ஆசையாக வாங்கியது. கண்ணனின் அழகு கொஞ்சும் முகத்தோடு அவன் கொஞ்சும் அழகுக் கிளி.


பார்த்துக்கொண்டேயிருக்கலாம்போல் அப்படி ஓர் அழகு!!!!

நிறைய பொம்மைகள் சிதிலமடைந்தும் ஜோடி இல்லாமலும் இருந்தன. மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

இதுவும் முன்றடி உயர சரஸ்வதி வெள்ளைத்தாமரையில்.....கைப் பொருளை இழந்து நிற்கிறாள். இதே போல் செந்தாமரையில் லக்ஷ்மி,
உலக உருண்டை மேல் பாரதமாதா என்று மூன்று பொம்மைகள்.
இந்த பொம்மைகளைப் பார்த்ததும் என்ன பாட்டு உங்க மனதில் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்ததை அவையில் வைக்கிறேன். தெரியாததை, மறந்ததை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

”மயிலேறும் வடிவேலனே.....”
”வருகலாமோ ஐயா.....”


”ஏச்சுப்புட்டேனே தாத்தா ஏச்சுப்புட்டேனே...!”


”மாடுகள் மேய்த்திடும் பையன் தன்னை மதிப்பவர்க்கே மெய்யன்....”


”மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி....”


”ஹோயோ தெரக்கம்சியோ...”


”பாரத நாட்டுக்கிணை பாரதநாடு.....”


இது உங்களூக்காக. சுமைதாங்கி படத்தில் குமாரிக்கமலா ஆடும் மயில் டான்ஸ். தெரிந்தவர்கள் சொல்லலாம்.


”தங்கச்சரிகை சேலை எங்கும் பளபளக்க......”


”பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளிகொண்டாய் ரங்கநாதா.....”


கண்ணன்,”முருகா! பழம் என் கையிலிருக்கிறது. நீ ஏன் உன் அண்ணனிடம் கோபித்துக்கொண்டு மலையேறியிருக்கிறாய்? பாவம் விநாயகன்!!


முருகன்,”கண்ணா! ஈதென்ன புதுக்கதையாயிருக்கிறது?”
”அறம் செய விரும்பு, குழந்தாய் அறம் செய விரும்பு.....”


”பறக்கும் பந்து பறக்கும்....”


”ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜெகமே ஆடிடுதே....”


”கல்வியா செல்வமா வீரமா.....”


“ப்ருஹிமுகுந்தேஹி ரசனே....”பக்த மார்க்கண்டேயா என்ற படத்தில் டிஎமெஸ் பாடும் ஒரு அருமையான பாடல். மறந்துவிட்டது. சொல்லுங்களேன்!!!!

இதுவும் இரண்டடி உயரத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்று நால்வரும் எப்போதும் மேல் படியில் கொலுவிருப்பார்கள். இப்போது நால்வராயிருந்தவர்கள் ஒருவராகிவிட்டார். இராமாயணகதையில் வருவதுபோல் ‘ஒருவரானோம் இருவரானோம் மூவரானோம் நால்வரானோம் ஐவரானோம்’ என்பது உல்டாவாக நால்வர் ஒருவரானார். தனியே சுந்தரர் மட்டும்.

“சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே.....””வேழமுகத்து விநாயகனைத்தொழ வாழ்வு மிகுத்து வரும்.....”


ஸ்ரீராம பக்த ஹனுமான் படத்தில் அதே டி எம் எஸ் பாடும் பாடல். யாருக்காவது ஞாபகமிருக்கா?
பழைய ஞாபகங்கள் எல்லாம் கிளர்ந்தெழுந்து, பரிமளித்துவிட்டன. அல்லவா?

பெரியக்கா இந்தப் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு சொன்னது,” நாற்பத்து ஏழாம் வருடம், (யம்மாடீ...எனக்கு அப்போது இரண்டு வயது!!)நான் சிறுமியாய் இருந்த போது அம்மா என்னை ஒரு வீட்டுக்கு கொலு பாக்க அழைத்துச் சென்றார்கள். அதைப் பார்த்துவிட்டு வந்து நம்ம வீட்டிலும் கொலு வைக்க வேண்டுமென்று அம்மாவிடம் சொன்னேன். சரியென்று என்னை காந்திமதி அம்மன் கோயில்வாசலுக்கு எதிரே உள்ள மண்டபத்தில் உள்ள கடைக்கு கூட்டிச் சென்று ஒன்பது படிகளுக்குமான பொம்மைகளை வெறும் முப்பதே முப்பது ரூபாய்க்கு வாங்கிவந்தோம்.” என்றாள். அசந்துட்டேன். இப்ப முப்பது ரூபாய்க்கு குட்டீயோண்டு பொம்மை கூட கிடைக்காது.

எங்க வீட்டு கொலுவுக்கு காரியகர்த்தாவும் காரணகர்த்தாவுமான பெரியக்காவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!!!!!


இதிலிருந்து பெரியவர்களிடமிருந்து நல்ல தகவல்களையெல்லாம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அக்காவும் இதுவரை என்னிடம் சொன்னதில்லை. அவளுக்கும் பழைய பொம்மைகளைப் பார்த்ததும் உள்ளே பொங்கியிருக்க வேண்டும். சரிதானே?

தமிழ்மணத்தில் ஓர் ஓட்டு போட்டுடுங்களேன், அன்பர்களே!!!!!ஏற்கனவே போட்டாச்சுன்னால் ‘இக்னோர் இட்’ நன்றி!!!

Labels:


Comments:
கொள்ளை அழகு அத்தனை பொம்மைகளும்...இது போல் அம்சமான தெய்வீகமான பொலிவான பொம்மைகள் எங்கு தேடினாலும் கிடைக்காது.
அருமையான கொலுக் கொண்டாட்டம்.

[இந்த கொலுவைக் காண இத்தனை ஆண்டுகள் உங்களுக்கு சமயம் வாய்க்காதது வருந்தத்தக்க ஒரு விஷயம்]
 
உண்மைதான் கோமா,
நெஞ்சில் பொங்கியெழும் நினைவுகள் அருவியாய் வழிந்தோடியது.
அக்கா சொன்ன விபரமும் இதுவர கேட்டதில்லை.

சேரீ....விட்டுப்போன கேள்விகளுக்கென்ன் பதில்?
 
யம்மாடீ!!!!!!! ஒவ்வொன்னும் மூக்கும் முழியுமா எவ்வளோ அழகு!!!!!இவ்வளோ பெரிய பொம்மைகளைக் கோவிலில் வைக்கும் கொலுவில்தான் பார்த்துருக்கேன்.

என்னுடைய இனிய வாழ்த்து(க்)களை பத்மா மதினியிடம் சொல்லுங்கோ!

நம்ம வீட்டில் அம்மா காலத்தில் வருசாவருசம் வேற ஊர் என்றதால் சின்னப்பொம்மைகள்தான். அதுவும் ஏதோ சாஸ்த்திரத்துக்கு வைப்பது போல் வைப்பாங்க. அக்காக்கள் கல்யாணம் முடிச்சதும் பொம்மைப்பெட்டியை வெளியே எடுக்க ஆளில்லை:(
 
அருமையான மலரும் நினைவுகள்.. எங்கூட்லயும் நான் மொதமொத கொலு வைச்சப்ப வாங்கின பொம்மைகள் நாலஞ்சு இன்னும் இருக்கு. என்னோட இப்பத்திய கொலுவிலும் வெச்சிருந்தேன்.
பழைய ஃப்ரெண்டை பார்த்த உங்க மன நிலையை புரிஞ்சிக்க முடியுது :-))

நானும் காந்திமதி வீட்டுக்கு எதிர்க்க இருக்கிற மண்டபத்துல இருந்துதான் பெரிய வூட்டு கல்யாணஜோடியை கூட்டிவந்திருக்கேன். சல்லிசா கிடைக்குது.அடுத்ததடவை ஊருக்கு போனா,அள்ளிட்டு வாங்க....
 
அருமையான மலரும் நினைவுகள்.. எங்கூட்லயும் நான் மொதமொத கொலு வைச்சப்ப வாங்கின பொம்மைகள் நாலஞ்சு இன்னும் இருக்கு. என்னோட இப்பத்திய கொலுவிலும் வெச்சிருந்தேன்.
பழைய ஃப்ரெண்டை பார்த்த உங்க மன நிலையை புரிஞ்சிக்க முடியுது :-))

நானும் காந்திமதி வீட்டுக்கு எதிர்க்க இருக்கிற மண்டபத்துல இருந்துதான் பெரிய வூட்டு கல்யாணஜோடியை கூட்டிவந்திருக்கேன். சல்லிசா கிடைக்குது.அடுத்ததடவை ஊருக்கு போனா,அள்ளிட்டு வாங்க....
 
நல்லாச் சொன்னீங்க துள்சி!

அந்த அழகு இப்ப இல்லை.
கொலு வச்சது அண்ணன், அழைத்தது பத்மா மதினி. வாழ்த்துக்களை யாருக்கு சொல்ல?
அதே நேரம் இவ்வளவு கலெக்‌ஷனுக்கும் காரணமான பெரியக்காவுக்கு?
 
//அக்காக்கள் கல்யாணம் முடிச்சதும் பொம்மைப்பெட்டியை வெளியே எடுக்க ஆளில்லை:(//

நீங்க எடுத்திருக்கலாமே துள்சி? என்னைப் போல.”அப்பா வைக்கச் சொல்லீட்டாங்க” என்று அண்ணன்களிடமும், ”அண்ணாச்சி ஓகே சொல்லீட்டாங்க” என்று அப்பாவிடமும் சொல்லி, எல்லாரையும் இழுத்து வைக்க நான் பட்ட பாடு....இப்ப நினைத்தாலும் இனிக்கிறது
 
எடுத்திருக்கலாம்தான். ஆனால் பத்துவயசுக்காரிக்கு அது கஷ்டமாப்போச்சு. அடுத்த வருசமே அம்மா இறந்துட்டதால் குடும்பம் கொஞ்சம் பேஜாராப் போய் பாட்டி வீட்டுக்கே வந்து............. ப்ச்..... விடுங்க. போனது போச்சு:(
 
அமைதிசாரல்,

//பழைய ஃப்ரெண்டை பார்த்த உங்க மன நிலையை புரிஞ்சிக்க முடியுது :-))//

ரொம்ப சரியாச் சொன்னீங்க.

போன வாரம் நேரமின்மையால் அம்மன் சந்நதிக்கு மட்டும் சென்று காந்திமதியிடம்,”உள்ளேன் அம்மா!” என்று அட்டெண்டென்ஸ் கொடுத்துவிட்டு எதிரே உள்ள மண்டபம் வழியாகத்தான் கார் பார்கிங்குக்கு வந்தோம். அந்த மண்டபம் காலியாகவல்லவா உள்ளது? கடைகள் ஏதுமில்லை.
ஆனால் கோயில் மண்டபத்துக்குள் பொம்மைகள் விலைக்கு வைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் செட் பொம்மைகளுக்குத்தான் மவுசு.
சின்னச் சின்னதாய் செட்டுகள் அழகாயிருக்கின்றன.
 
ரொம்ப சாரி துள்சி!
வருத்தமாய்தானிருக்கு.
 
பெரிய்ய்ய் கிருஷணன்,கோவில் கோபுரம் மயில் மீது அமர்ந்திருக்கும் முருகன் & பேமிலி எங்க வீட்லயும் கொலுவில் இருக்காங்களே:))))) ஸேம்!ஸேம்! :)
 
சேரீ....விட்டுப்போன கேள்விகளுக்கென்ன் பதில்?

என் சார்பில் சகாதேவன் பதில் சொல்வார்...
ஹி ஹி
உங்களுக்க்க்க்கே மறந்து போச்சாம் எனக்கு நினைவிருக்குமா....
 
கண்ணப்பர் , நந்தனார்ன்னு கதை சொல்லும் பொம்மைகள் அழகா இருக்கு.. இப்பல்லாம் பழைய பொம்மைகளைக் கூட
புதுப்பித்து தருவாதாக கேள்விபட்டேன்.. விசாரித்து வைக்கச் சொல்லுங்க..
பாட்டெல்லாம் தூள் .. க்விஸ் க்கெல்லாம் பதில் சொல்லத்தெரியல .யாராச்சும் சொல்வாங்களாம் நாம கேட்டுபோமாம் சேரியா :)
 
ஆயில்யன்,

//ஸேம்!ஸேம்! :)//!!!????
இருக்கா...? அப்படீன்னா ஸேம்..ஸேம்தான்! மிக்க மகிழ்ச்சி!!
 
துள்சி,

எல்லா குடும்பங்களிலும் கலகலவென்று இருந்த குடும்பம் அம்மாவுக்குப் பிறகு கொஞ்சம் கலகலத்துதான் போகும் போல!
இங்கேயும் அதே கதைதான்.
 
கோமா,
சேரி..சேரி...விட்டுட்டேன் போங்க.
 
கோமா,

சகாதேவனுக்கே தெரியுமோ தெரியாதோ?
 
ஆமாம்ப்பா...கயலு சொன்னது சரி. நம்ம வல்லி வீட்டில் ஒரு லக்ஷ்மியைப் புதுப்பிச்சாங்களாம்.
 
அருமையான கலெக்‌ஷன்.
 
சேரி...துள்சி,
அண்ணனிடம் புதுப்பிக்க சொல்கிறேன்.
நானே சொன்னேன் கோல்ட் போஸ்டர்கலர் வாங்கி அந்தந்த இடங்களிலும் அடிக்கலாமே என்று நான் அப்படித்தான் செய்வேன்.
 
ஆசியா ஓமர்,

பாரட்டுக்கு மிக்க நன்றி!
இதை என் பெரியக்காவிடம் தெரிவித்து விடுகிறேன்.
 
அன்பு நானானி பாட்டி வீட்டுக் கொலுவுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்மா. எவ்வளவு பெரிய பொம்மைகள். கண் கொள்ளவில்லை.
இங்க சரஸ்வதி பொம்மையை இந்த தடவை புதுசு செய்யணும்.
நீங்க எக்ஸிபிஷனே வைக்கலாம்:)
சொல்ல வார்த்தைகளே இல்லப்பா. அழகு அழகு.கமல லக்ஷ்மண் ஆடறது நெஞ்சம் இருக்கும் வரை' படம். முத்துராமனுக்கு எதிராப்பில ஆடுவாங்கன்னு நினைக்கிறேன்.
தொண்டையில இருக்கிற பாட்டு உதடுக்கு வர மறுக்கிறது:)
 
வாங்க...வாங்க வல்லி,
உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்பா!
அறுபத்து ஏழாம்வருடம் வரை நாங்கள் வைத்த கொலுவுக்கு உங்களை அழைத்துச் சென்றதில் மிக்க மகிழ்ச்சி!

மயில் டான்ஸ்...சுமைதாங்கி படத்தில் ஜெமினி, தேவிகா இருவரும் சென்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் குமாரிகமலா ஆடும் நடனம். சமீபத்தில் டிவியில் பார்த்தேன். எனக்கும் தொண்டையில் நிக்குது வெளியே வர மாட்டேங்குது.

சேரி, மத்த ரெண்டு என்னாச்சு?
 
கண்ணன் கையில் மட்டுமா ? அவ்வளவு பொம்மையும் கிளி கொஞ்சுது. சரஸ்வதி மட்டும் புதுப்பிக்கலாம் போல இருக்கு. எங்க அம்மா வீட்டு கொலு நினைவு வந்தது . இப்போவெல்லாம் பெரிய பொம்மைகள் அரிதாகி விட்டன.
வள்ளித் திருமண பொம்மைக்கு "தாகம் தீர்ந்ததடி தங்கமே" பாட்டு போடலாம் . அடுத்த பொம்மைக்கு அருணா சாய்ராமின் "மாடு மேய்க்கும் கண்ணே " ஓகேவா ?
ஷோபா
 
வரணும் ஷோபா,
இத...இதத்தான் எதிர்பார்த்தேன்!!

வள்ளி பொம்மையில் ஆனை இல்லாமலிருந்தால் நீங்க சொன்ன பாட்டு சரி. ரெண்டாவது பாட்டு ஓகேதான்.

க்விஸ்ஸில் கலந்து கொண்டதுக்கு நன்றி!!
 
பேரழகுப் பொம்மைகள்
மீட்டெடுத்த நினைவுகளால்
மொத்த குடும்பமும்
நெகிழ்ச்சியான மகிழ்ச்சியில்!

சரிதானே:)?

கலைமகளுக்குக் கைப்பொருள் மரத்தில் சின்ன அளவில் கிடைக்கின்றன குமரிமுனைக் கடைகளிலே:)!
 
எதுக்குக் குமரி முனை போகணும்?

நம்ம ஸ்ருதிலயா ( ராயப்பேட்டா ஹை ரோடு)கடையில் அச்சு அசலா 'நரம்போடு' கிடைக்குது:-)

நான் ஒன்னு வாங்கிப்போனேன் சில வருசங்கள் முன்னே.

கவனிக்க ஆள் இல்லாம அது இப்போ நியூஸியில்:-)
 
அழகிய கொலு.
 
துள்சி,
நானும் மூன்றடிக்கு ஒரு சின்ன வீணை, மைலாப்பூர் கச்சேரி ரோட்டில் ஒரு சந்தில் மேட் டு ஆர்டர், ஒரு வீணை செய்யும் கடையில் சொல்லி செய்து எங்கள் ஊர் கோவில் அம்மனுக்கு நவராத்திரி சமயம் காணிக்கையாக செலுத்தினேன். மூன்று நான்கு வயது குழந்தை வாசிக்கலாம். அதே கடையில் ஒரு அடிக்கு வீணை செய்து வைத்திருந்தார்கள். அந்த வீணைக்கு கொசுறுவாக கொடுங்களேன் என்றதுக்கு. நோன்னுட்டார். கையில் கொண்டுபோன பைசா காலி. அப்புரம் மறந்தே போச்சு!!
 
மாதேவி,
மிக்க நன்றி!!!
 
நெல்லைக்குக் குமரி பக்கமேன்னு சொன்னேன்:)!
 
ராமலக்ஷ்மி,

நெல்லைக்காரவுகளுக்கு குமரி பக்கமின்னாலும்...இதுக்காக அலைவாகளா? அதே, அடிக்கடி சென்னை வரும் வாய்ப்பிருப்பவர்கள், சென்னையிலேயே இருப்பவர்களுக்கு அது பொருந்துமல்லவா?
 
நானானிம்மா.. கரெக்டா சொல்லணும்ன்னா, அந்தப்பொம்மைக்கடை.. கோயில்வாசல்ல ஒரு ஆர்ச் இருக்குதில்லியா, அதுல ஃபேன்சி நகைகளெல்லாம் வெச்சிருப்பாங்களே அந்தக்கடைகளுக்கு பின்னால் அடுத்த வரிசையில் இருக்குது.வலது பக்கமா, இடதுபக்கமான்னு கேட்டீங்கன்னா.. இருட்டுக்கடைக்கு பக்கமா வரும். தெளிவா சொன்னேனா :-)))))))))))))
 
அமைதிசாரல்,
நானும் சரியாச் சொல்லணுமின்னா...நிங்க சொல்றது சுவாமி சந்நதிக்கு எதிரே இருட்டுகடை, சரவணாஸ் பக்கத்திலுள்ளது

நாஞ்சொல்றது அம்மன் சந்நதிக்கு எதிரே உள்ள மண்டபம். அந்தக்காலத்தில் அதிலும் கடைகள் இருந்திருக்கும் போலும். அங்கேதான் இப்பொம்மைகளை அம்மா வாங்கித் தந்ததாக அக்கா சொன்னாள்.

இப்ப சேரியா?
 
அனைத்தும் மிக அழகு! மிக அழகு!
 
எஸ்.கே.’
நன்றி சொல்வதொன்றே எனக்கு அழகு!
 
கொலு பொம்மைகள் எல்லாம் அழகு,
அற்புதம்.

நாரதர் தெய்வீக சிரிப்பு நல்லா இருக்கு.

உங்கள் பழைய நினைவுகள் அருமை.

உங்கள் அக்காவிற்கு நன்றி.
 
கோமதி அரசு,

நீங்க மட்டும்தான் அக்காவை நினைத்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி.

எனக்கே இவ்வளவு பொங்கியிருந்தால் அக்காவுக்கு எவ்வளவு பொங்கியிருக்க வேண்டும்?
அக்காவிடம் உங்க நன்றியை தெரிவித்து விடுகிறேன், சேரியா?
 
உங்க கொலு விவரிப்பு அழகு தான்...
அதிலும்....
...////கண்ணன்,”முருகா! பழம் என் கையிலிருக்கிறது. நீ ஏன் உன் அண்ணனிடம் கோபித்துக்கொண்டு மலையேறியிருக்கிறாய்? பாவம் விநாயகன்!!

முருகன்,”கண்ணா! ஈதென்ன புதுக்கதையாயிருக்கிறது?” ////

ஹா ஹா ஹா.. இது உண்மையில் ரசித்து சிரித்தேன்...

பகிர்வுக்கு நன்றிங்க..
 
ஆனந்தி,
நீங்க மட்டும்தான் அந்த ஜோக்கை ரசித்திருக்கிறீர்கள். இந்த ஜோக்குக்காகவே அப்பொம்மைகளை மாற்றி வைத்தேன்.
நன்றி!
 
அன்பின் நானானி, /r

அருமை அருமை - இப்படிப்பட்ட அக்கால வ்ண்ணமயமான, கண்ணைக் கவரும் பொம்மைகள் இப்பொழுது இல்லை அல்லவா. பத்மா மதனிக்கும் சின்ன அண்ணனுக்கும் நன்றிகள் - ஒரு அழகான் இடுகையினை நானானி இடுவதற்கு வழி செய்து கொடுத்ததற்கு. /r

ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும் - இக்கால கட்டத்தில் மிகவும் கடினமான செயல் - அனைவ்ரும் ஒன்று சேர்ந்து விழாக்கள் கொண்டாடுவது என்பது. /r

பல் ஆண்டுகள் கழித்து - உறவுகளைச் சந்திக்கும் பொழுது ஏற்படும் இன்பம் அலாதியானது. அத்தகைய இன்பத்தினை அனுபவித்த நானானி - ஒவ்வொரு பொம்மையுடனும் பேசிப் பேசி - மகிழ்ந்து பேசி - பழைய நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து ...... அப்பப்பா - நானானி கொடுதது வைத்தவர். /r

என்னை விட ஐந்து வயது மூத்த சகோதரி நானானி தன் இரண்டு வயதில் பொம்மை வேண்டுமெனக் கேட்க - அன்புடன் அம்மா அக்காலத்திலேயே முப்பது ரூபாய்க்கு பொம்மை வாங்கி கொடுத்திருக்கிறார். மகிழ்ச்சி பொங்குகிறது. /r

நல்வாழ்த்துகள் நானானி - நட்புடன் சீனா
 
அன்பின் நானானி,

அருமை அருமை - இப்படிப்பட்ட அக்கால வ்ண்ணமயமான, கண்ணைக் கவரும் பொம்மைகள் இப்பொழுது இல்லை அல்லவா. பத்மா மதனிக்கும் சின்ன அண்ணனுக்கும் நன்றிகள் - ஒரு அழகான் இடுகையினை நானானி இடுவதற்கு வழி செய்து கொடுத்ததற்கு.

ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும் - இக்கால கட்டத்தில் மிகவும் கடினமான செயல் - அனைவ்ரும் ஒன்று சேர்ந்து விழாக்கள் கொண்டாடுவது என்பது.

பல் ஆண்டுகள் கழித்து - உறவுகளைச் சந்திக்கும் பொழுது ஏற்படும் இன்பம் அலாதியானது. அத்தகைய இன்பத்தினை அனுபவித்த நானானி - ஒவ்வொரு பொம்மையுடனும் பேசிப் பேசி - மகிழ்ந்து பேசி - பழைய நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து ...... அப்பப்பா - நானானி கொடுதது வைத்தவர்.

என்னை விட ஐந்து வயது மூத்த சகோதரி நானானி தன் இரண்டு வயதில் பொம்மை வேண்டுமெனக் கேட்க - அன்புடன் அம்மா அக்காலத்திலேயே முப்பது ரூபாய்க்கு பொம்மை வாங்கி கொடுத்திருக்கிறார். மகிழ்ச்சி பொங்குகிறது.

நல்வாழ்த்துகள் நானானி - நட்புடன் சீனா
 
///ஆனந்தி,
நீங்க மட்டும்தான் அந்த ஜோக்கை ரசித்திருக்கிறீர்கள். இந்த ஜோக்குக்காகவே அப்பொம்மைகளை மாற்றி வைத்தேன் ///

ஹ்ம்ம்.. உண்மையில் ரசிக்கும் படியான அருமையான ஐடியா... :-))
 
அன்பு சீனா,
அழைத்தவள் குரலுக்கு வந்ததுக்கு மிக்க நன்றி!!

எல்லாம் அம்மன் அருள்.

என் பெரியக்கா பத்துவயதில் அம்மாவிடம் கேட்டதும் அருமை அம்மா உடனே கடைக்கு கூட்டிச் சென்று மொத்த பொம்மைகளையும் அன்போடு வாங்கிக்கொடுத்திருக்கிறார். அப்போது எனக்கு ரெண்டு வயது. எனக்கு நினைவு தெரிந்து சுமார் பத்து வயதிலிருந்துதான் கொலுவே தெரியும்.
எனக்கே இப்படி பொங்கியிருந்தால் அக்காவுக்கு எவ்வளவு பொங்கியிருக்கும்?!!!
 
நன்றி! ஆனந்தி!
 
முப்பது ரூபாய்க்கு ஒன்பது படிகள் வைக்கும் அளவு பொம்மைகளா? அக்கா சொல்லவே இல்லையே.

50களில் எல்லாம் எங்கள் வீட்டு கொலு பார்க்க எல்லோரும் வருவார்கள். பெரிய அண்ணனின் நண்பர் சிமியோன், ஒருமுறை வந்தபோது, தரையில் பார்க், ஃபெளண்டன் எல்லாம் அமைத்து சிறப்பாக்கினார். இப்போ அதெல்லாம் செய்ய முடியவில்லை. ஆனாலும் விடாது கொலு வைக்கிறோம்.

பத்மா தன் லேடீஸ் க்ளப் சினேகிதிகளை ஒரு மாலை அழைத்து எல்லோரும் சுலோகங்கள் பாடி சுண்டல் தந்து அனுப்பி வைப்பாள். வருடம் ஒரு புது பொம்மை வாங்குவேன். இம்முறைதான் நான் வாங்கவில்லை. நானானிதான் சென்னையிலே ஒரு திருப்பதி சாமி பொம்மையும் தங்கக்கோபுரம் பொம்மையும் வாங்கிக் கொண்டுவந்து தந்தார். அவருக்கு நன்றி.

சகாதேவன்
 
முப்பது ரூபாய்க்கு ஒன்பது படிகள் வைக்கும் அளவு பொம்மைகளா? அக்கா சொல்லவே இல்லையே.

50களில் எல்லாம் எங்கள் வீட்டு கொலு பார்க்க எல்லோரும் வருவார்கள். பெரிய அண்ணனின் நண்பர் சிமியோன், ஒருமுறை வந்தபோது, தரையில் பார்க், ஃபெளண்டன் எல்லாம் அமைத்து சிறப்பாக்கினார். இப்போ அதெல்லாம் செய்ய முடியவில்லை. ஆனாலும் விடாது கொலு வைக்கிறோம்.

பத்மா தன் லேடீஸ் க்ளப் சினேகிதிகளை ஒரு மாலை அழைத்து எல்லோரும் சுலோகங்கள் பாடி சுண்டல் தந்து அனுப்பி வைப்பாள். வருடம் ஒரு புது பொம்மை வாங்குவேன். இம்முறைதான் நான் வாங்கவில்லை. நானானிதான் சென்னையிலே ஒரு திருப்பதி சாமி பொம்மையும் தங்கக்கோபுரம் பொம்மையும் வாங்கிக் கொண்டுவந்து தந்தார். அவருக்கு நன்றி.

சகாதேவன்
 
உண்மைதான் சகாதேவன்,
அக்கா சொன்னதும் அசந்துட்டேன். நிறைய பழய விஷயங்கள் சொன்னாள். ஒரு நாள் அவளை உக்காத்தி வைத்து மலரும்நினைவுகளை கிளப்பிவிடவேண்டும்.
 
சகாதேவன்,
க்விஸ்ஸுக்கு என்ன பதில்?
ரெண்டு விட்டுப் போயிருக்கிறதே!!!
 
Beautiful Kolu & your writing is good.
Congratulations.
 
Rathinavel,

thank you for reading my post and for the appriciation. do visit again.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]