Friday, October 1, 2010

 

இன்று உலக முதியோர் தினமாமே.....மாமே!

இன்று காலை வெளியில் சென்றிருந்தபோது, அக்டோபர் ஒன்று உலக முதியொர் தினமாக கொண்டாடப் படுவதாக அறிந்தேன். உலகமே கொண்டாடுவது உனக்குத்தெரியாதா என்று கேட்காதீர்கள். என் மெமரியில் அது ரிஜிஸ்டர் ஆகவில்லை. அம்புடுதேன்.

இந்த நாளில் நான் முதியோர் கேட்டகிரிக்குள் அடியெடுத்து வைத்த நாள் நினைவுக்கு வந்தது. ஔவையார் மாதிரி கோலூன்றி நடப்பதைச் சொல்லவில்லை. இப்போதெல்லாம் அறுபது வயதில் ட்ரிம்மாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்களே. திருக்கடையூர் சென்று பார்த்தால், கோயில் சந்நதி, பிரகாரம் முழுவதும் அறுபதாம் கல்யாணம் விழாவாகக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்தால், சின்னச்சின்னப் பையன்களாகவும் பெண்களாகவுமிருப்பார்கள். வயதில்தான் முதுமையைச் சொல்லலாமே தவிர தோற்றத்தில் சுமார் 40-50 வயது மதிக்கத்தக்கவர்களாகத்தான் இருப்பார்கள். காலத்தின் நல்ல மாற்றம் இது.

சரி...நான் 60- வயதை எட்டிய இடம் கொஞ்சம் வித்தியாசமானது. 2005-ல் ஆகஸ்ட் 24 அன்று சிகாகோவிலிருந்து அதிகாலை நியூயார்க் செல்ல விமானம் ஏறினோம். நான், ரங்கமணி, அவர் சகோதரர் மூவரும். அவர் மனைவியிடம் ரங்கமணி,’இன்று இவளுக்குப் பிறந்தநாள்.’ என்று மட்டும் சொல்லிவிட்டு விமானம் ஏறினோம்.
நியூயார்க்கில் இறங்கி நேரே சுதந்திரதேவி சிலையைப் பார்க்கப் போனோம்.


அங்கு தனிமையில் பக்கத்தில் என் சொந்தங்கள் இல்லாமல் பிறந்தநாள் பாட்டி அமர்ந்திருகிறேன். படத்தில் 24-ம் தேதி பதிவாகியிருக்கிறாது பாருங்கள்!


லிபர்டி சிலையை சுத்தி சுத்தி வந்தோம். எனக்கு நீ...உனக்கு நான் என்றவாறு.
என்னதான் சுதந்திர சிலை அருகே இருந்தாலும் ஏதோ கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. நாங்கள் சகோதரிகள் நால்வரும் எப்படிக் கொண்டாடியிருப்போம் என்று நினைத்துப் பார்த்தோம். பெரியக்கா அறுபதாவது பிறந்தநாளை அவள் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினோம். தங்கைகள் மூவரும் சேர்ந்து அவளுக்கு தங்க வாட்ச் பரிசளித்தோம்.

பின் சின்னக்கா 60-வது பிறந்தநாளில் நாங்கள் மூவரும் அவளுக்கு தங்க மோதிரம் பரிசளித்து ஹோட்டலில் விருந்து வைத்துக் கொண்டாடினோம். அன்று நான் சுதந்திரதேவி சிலையிடம் மாட்டிக் கொண்டேன்.


ஒரு சின்ன ஆறுதல் பெரும் பெரும் தலைவர்கள் பர்சனாலிட்டிகள் ஆகியோரை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். ஆம்!!!
நாளை அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்தநாள். அந்த மாபெரும் மனிதரை சந்தித்து ஆசி பெறும் பாக்கியம் பெற்றேன்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்(சீனியர்) அவ்ர்களிடமும் வாழ்த்துப் பெற்றேன். நான் பின்னால் நிற்கிறேன். அவர் பார்க்காமல் முன்னால் கை நீட்டுகிறார், வாழ்த்த.

உலக மக்கள் எல்லோரது மதிப்புக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய மறந்த அதிபர் ஜான் கென்னடி அவர் மனைவி ஜாக்குலின் கென்னடி அவ்ர்களையும் விட்டு வைக்கவில்லை. மனசார வாழ்த்தினார்.


அட! அங்கே டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ஸ்டெஃபி க்ராஃபும் அருகே அழைத்து வாழ்த்தினார்.

அன்றிரவு நியூயார்க் தெருக்களில் வலம் வந்த போது எனக்கு “ஹாப்பி பெர்த்டே” சொன்ன ஒரே சொந்தம் கலிபோர்னியாவிலிருக்கும் அருமை மருமகள் லதா. ரொம்ப சந்தோஷமாயிருந்தது. காரணம் இந்தியாவில் இருக்கும் சகோதரிகளுக்கு நான் நியூயார்க் தெருக்களில் லோலோ என்று சுத்துவது தெரியாது. இந்த கைபேசி எண்ணும் தெரியாது. அன்று இரவு டின்னர் என்னோடது என்று சொல்லி(சிகாகோவிலிருக்கும் வரை எங்களை செலவு செய்ய விடவில்லை, ஷாப்பிங் தவிர) அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் நாங்கள் மூவரும் மட்டும் விருந்து சாப்பிட்டுவிட்டு கார்ட் பேமெண்ட் செய்து விட்டு வந்தோம்.


சிகாகோ திரும்பிய பிறகு நானே அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டேன். ‘உன்னை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். நல்லவேளை!!’ என்றார்கள்.
இப்படியாகத்தானே நானும் சீனியர் சிடிசன் ஆனேன்.
உலக முதியோர் தினமான இன்று என் அன்பான வாழ்த்துக்களை முதியோர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹை!!!!எனக்கு இன்னும் வயசாகவில்லை என்போரை விட்டுவிடுவோம். சேரியா?
Labels:


Comments:
சுதந்திர தேவி சிலைக்கு முன்னாடி ஒரு சுதந்திரா தேவி.. ;-)

வாழ்த்துக்கள் சீனியர் சிட்டிசன்!
மீண்டும் ஒருக்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
 
த்மிழ்பிரியன்,

நீண்ட நாட்களுக்குப் பிறகு யூ த ஃபர்ஸ்ட். ரொம்ப சந்தோஷம்!!!
 
அக்டோபர் ஒன்னாம் தேதியே போட வேண்டுமென்று நேற்றிரவு பத்து மணி வாக்கில் பிரசுரம் செய்தேன்.
 
சீனியர் சிட்டிசன் ஆன தினத்தின் அப்டேட்ஸ் படங்களுடன் சுவாரஸ்யம்:)!

காந்தியிடம் பெற்ற ஆசிர்வாதம் இன்றைய தினத்துக்குப் பொருத்தம்.
 
ராமக்ஷ்மி,
நேற்று வெளியில் இருந்து வீடு வரும் வரை, என்ன செய்யலாம் எப்படி பதிவு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே வந்தேன். சரியாக க்ளிக் ஆகியது.
 
பெருந்தலைகளின் ஆசி கிடைச்சுருச்சே!!!!
சுதந்திர தேவின்னா சும்மாவா?

அப்படியே அங்கிருந்த ஆர்ச் பிஷப்பிடம் ஆசி வாங்கி இருந்துக்கலாமேப்பா.

இந்தியாவில் 40 வயது முதியவர்ன்னு பத்திரிகையில் வரும்போது .......

41 முதல் சீனியர் சிட்டிஸந்தான்.

நியூஸிக் கணக்கில் 65 ஆனால்தான் சீனியர்.

இனிய வாழ்த்து(க்)கள்.
 
துள்சி,

//பெருந்தலைகளின் ஆசி கிடைச்சுருச்சே!!!!
சுதந்திர தேவின்னா சும்மாவா?//

அது ஒன்றுதான் ஆறுதலாயிருந்தது.

எல்லோரோடும் ஆசிபெற்று படமும் எடுத்துக்கொண்டேன். அத்தனையும் போட்டால் போரடிக்காது?
அதா...!
 
உங்கள் 60 ஆவது பிறந்தநாளை ரொம்ப அமெரிக்கையாக கொண்டாடிவிட்டீர்கள்.
-தாமரை
 
தாமரை,
அனைவரும் அவரவர் இடத்தில் அமெரிக்கையாக இருந்ததால்தான்.
 
தாமரை,

அமெரிக்கையாக அமெரிக்காவில் கொண்டாடி விட்டீர்கள்ன்னு சொல்லலாம்:-)))))
 
60 ம் ஆண்டில் அருமையாக அடி எடுத்து வைத்திருக்கிறீர்கள்.
 
60 ம் ஆண்டில் அருமையாக அடி எடுத்து வைத்திருக்கிறீர்கள்.
 
கோமா,
நல்லாத்தாஞ் சொல்லீட்டீங்க!!
 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

முதியோர் தின வாழ்த்துக்கள்!
 
உங்கள் இன்னொரு சகோதரி இன்னுமா ஜூனியர் சிடிசன்....அவரைப் பத்தி சொல்லவே இல்லையே....
 
ஆமாம், கோமா!
அவள் முதியோர் ”வயதுக்கு வந்து” மூணு வருசமாகுது.
 
நானானி
அப்போ நீங்கல்லாம் GOLDEN GIRLS தான்னு [famous comedy serial heroins ]சொல்லுங்க.

மூன்று முதியோருக்கும் என் முத்தான வாழ்த்துக்கள்
 
கோமா,
நன்றி!
உங்கள் தங்கமான வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்துவிடுகிறேன். சேரியா?
 
சிக்ஸ்ட்டீ ஆனதை, ஏதோ சிக்ஸ்டீன் ஆன மாதிரி “மாமே”ன்னு ராப்லாம் பாடி கொண்டாட்டமாச் சொல்றீங்க!!

இப்போ “சீனியர் 65” ஆனதுக்கும் வாழ்த்துகள்!! ;-))))

//வயதில்தான் முதுமையைச் சொல்லலாமே தவிர தோற்றத்தில் சுமார் 40-50 வயது மதிக்கத்தக்கவர்களாகத்தான் இருப்பார்கள்//

அந்தக் காலத்துல 40லயே பாட்டியாகிடுவாங்க இல்லியா - அப்ப அவங்க பார்க்க இன்னும் இளமையா இருந்தாங்க. நீங்க சொல்ற மாதிரி, இப்போ நவீன சிகிச்சை மூறைகளால், ஆரோக்கியமும் மேம்பட்டிருக்கிறது.
 
//சிக்ஸ்ட்டீ ஆனதை, ஏதோ சிக்ஸ்டீன் ஆன மாதிரி//

ஹூஸைனம்மா,

யார் சொன்னது நான் சிக்ஸ்டின்னு நான் இன்னும் சிக்ஸ்டீன்தான்(மனதளவில்).
 
கோமா,
நம் இருவருக்கும் என்ன பொருத்தம்!!
இருவரும் 60-வது பிறந்தநாளை உள்நாட்டில் கொண்டாடவில்லை.

மற்றுமொரு முறை ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!நாளைக்கும் சேர்த்து.
 
:)
 
அன்பின் நானானி - அக்டோபரில் தான் நானும் பிறந்தேன் - இந்த வருடம் அறுபதாவது பிறந்த நாள் - மணி விழா நவம்பர் 19 - காரைக்குடியினை அடுத்த ஆத்தங்குடியில் நடைபெறுகிறது. அழைப்பு அனுப்புகிறேன் - முன்னதாகவே ரங்க்ஸைக் கூட்டிக் கொண்டு வந்து ஆசிர்வாதம் செய்யணும். ஆமா சொல்லிப்புட்டேன். கோல்டன் கேர்ள்ஸ் மூவருக்கும் அழைப்பு உண்டு . நட்புடன் சீனா
 
தூயா,
அதென்ன? ஏதாவது சொல்றது!!
 
அன்பு சீனா,
உங்கள் பிறந்த நாளுக்கான வாழ்த்தை சுவரொட்டியில் நானும் பதிந்துவிட்டேனே பாக்கலையா?

ஆனாலும் மீண்டும்...”ஷஷ்டியப்தபூர்த்தி வாழ்த்துக்கள்!!!”
திருக்கடையூரில் இல்லையா?

எங்கேன்னாலும் இந்த நானானி ரங்க்ஸையும் கூட்டிட்டு வருவாள்.சேரியா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]