Tuesday, September 28, 2010

 

கல்யாணமாலை கொண்டாடிய ‘விவாஹபிரார்த்தனா’

சென்ற ஞாயிறு-19-9-10 அன்று மனதுக்கு இதமான நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். கல்யாணமாலை நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட பூஜை.

தங்களிடம் பதிந்திருக்கும் வரன்களுக்கும் பதியாத வரன்களுக்குமாக ஒரே இடத்தில் மகா யாகம் மற்றும் சிறப்புப் பூஜைகளை அழகாக ஏற்பாடு செய்திருந்தனர்.


சென்னை சேத்துப்பட்டிலிருக்கும் குசலாம்பாள் திருமணமண்டபத்தின் முகப்பு தோற்றம்.


மண்டபவாசலிலிருந்து பூஜை நடைபெறும் இடத்துக்குக்குச் செல்லும் நுழை வாயில்.


அந்நுழைவாயிலில் அழகாக அலங்கரிக்கப்பட்டு வீற்றிருக்கும் விக்னங்கள் களையும் விநாயகர்.


மக்களைப் பெற்றவர்கள் ஆவலோடு வருகிறார்கள்.மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அம்மை அப்பனின் திருமணக்கோலம்


பூஜை நடைபெறும் ஹாலின் வாசலில் இரு ஆளுயர குத்துவிளக்குகளோடு கம்பீரமாய் காட்சியளிக்கும் ‘கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணி’


ஆஹா...! என்ன அழகு!!!மண்டபத்தில் ஒரு ‘பாட்ச்’ சுமார் 800 முதல் 1000 பேர் வரை அமர்ந்து பூஜையில் குங்கும அர்ச்சனை செய்கிறார்கள்.இப்படி பாட்ச் பாட்சாக வந்திருக்கும் அனைவரும் பூஜையில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.


இன்னொரு கோணம்.


கல்யாணமாலை மோகன் அவர்கள் ஒரே நேரத்தில் பூஜையயும் ஹோமத்தையும் எல்லோரும் காணும் விதமாக இரண்டு இடங்களிலும் எல்சிடி டிவி பொருத்தியிருப்பதியும் அனைவரும் கண்டு களித்து இறைவன் அருள் பெறுமாறு அன்போடு அறிவிக்கிறார்.


மணமேடையில் எம்பெருமானும் பிராட்டியும் திருமண கோலத்தில் கைத்தலம் பற்றியபடி காட்சியளித்து அருள் பாலிக்கிறார்கள்.
திருமணஞ்சேரி உத்வாகநாதர், கோகிலாம்பாளின் சிலைகளைப் போன்ற கோலத்தில்.
இத்துடன் “சுயம்வர பார்வதி விக்ரஹமும்” பூஜையில் வைக்கப் பட்டிருந்தது.காலை ஆறு மணி முதல் மாலை நான்கு மணிவரை நடை பெற்ற இவ்விழாவில் நடை பெற்ற பலவிதமான ஹோமங்கள், ஹரித்ரா கணபதி ஹோமம், குபேர மஹாலஷ்மி ஹோமம், சுதர்சன ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், நவகிரஹ ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

ஹரித்ரா கணபதி ஹோமம்:
மங்களத்தின் தொடக்கம்.

குபேர மஹாலஷ்மி ஹோமம்:
‘என் குழந்தைகளுக்கு திருமணத்தின் போது இதைச் செய்ய முடியவில்லையே’ என்ற ஏக்கம் எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது. நிறைந்த மனத்தோடு வேண்டிய எல்லாவற்றையும் செய்யுமளவு அவர்களிடம் பொருட்செல்வம் குறைவின்றி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

சுதர்சன ஹோமம்:
உடல் ஆரோக்கியத்துக்காக. எத்தனை செல்வமிருந்தாலும் உடல் ஆரோக்கியம் சரியாக இல்லாவிட்டால் இல்லற வாழ்வு மகிழ்ச்சியைத்தராது.

சுயம்வர பார்வதி ஹோமம்:
எல்லாவற்றிற்க்கும் மேலாக மிகப் பொருத்தமான வரன், விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதற்காக.

நவகிரஹ ஹோமம்:
தோஷ நிவர்த்திக்காக.பூஜை ஆரம்பிக்கு முன் தலைமைப் புரோகிதர் பொது சங்கல்பம் செய்வித்தார். அவர் ஆரம்பிக்க மக்கள் தத்தம் பிள்ளைகளின் பேர்,நட்சத்திரம் சொல்லியபின் சங்கல்பத்தை முடித்தார். அத்தோடு ‘சு’க்லாம்பரதரம் ச’சி’வர்ணம் சதுர்ப்புஜம்........’என்ற ஸ்ரீ விக்னேஸ்வர ஸ்துதியையும்,
‘மாங்கல்யம் தந்துநானேநா மவஜிவித ஹேதுநாம்.....’ ஸ்துதியையும் வரிவரியாக சொல்லி பூஜையில் கலந்து கொள்ளும் அனைவரையும் கூடவே சொல்ல வைத்தார். அதன் பின் தேவிக்கு குங்கும அர்ச்சனை ஆரம்பமாகியது. லலிதா சகஸ்ரநாமம். ஒவ்வொரு வரியையும் புரோகிதர்கள் சொல்லச் சொல்ல கூடவே திருப்பிச்சொல்லி அம்பாளின் அருளைப் பெற வைத்தார்கள்.
சமஸ்க்ரத ஸ்லோகங்கள் எல்லோருக்கும் பரிச்சயமாயிருக்க்காது எனவே ‘தெரிந்தவர்கள் கூடவே சொல்லுங்கள், தெரியாதவர்கள் புத்தகத்திலிருக்கும் வரிகளை தொடர்ந்து வாருங்கள்.’ என்றார்கள்.
நானும் அறிந்தவளில்லை. அப்பாவும் அம்மாவும் ஸ்ரீராஜராஜேஸ்வரி பூஜையில் லலிதா சகஸ்ரநாமம் சொல்லித்தான் பூஜை செய்வார்கள் என்று தெரியும். ஆனால் அன்று அதில் ஆர்வமில்லை.
ஆதிபராசக்தியின் அன்பள் ஆனபிறகு பூஜையில் நாங்கள் பாடும் ‘போற்றி மலர்கள்’ அப்படியே லலிதா சகஸ்ரநாமத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு என்று புரிந்தது. தெய்வத்தை வணங்க மொழி ஒரு தடையில்லை. மனமாற ஒரு நிமிடம் நினைத்தாலும் போதும், அந்த மாரியம்மா ஆக்கி வெச்ச சோத்த தின்ன வருவாள்
தலைமை புரோகிதர் மேடையில் பூர்ணாஹூதிக்கு, அதற்கான மந்திரங்களைச் சொல்லி, அதை எல்லோர் பார்வைக்கும் காட்டி பிரார்த்தனையை சமர்ப்பித்து, அதை ஹோமம் நடக்குமிடத்துக்கு எடுத்துச் செல்கின்றார்.பூர்ணாஹூதி நடை பெறுகிறது

கோடி அர்ச்சனையில் வைத்த பூஜை செய்த ஸ்வர்ணகமல புஷ்பம், அதாவது வெள்ளியில் செய்து தங்கத்தில் தோய்த்த காசு. இதில் வழக்கமாக ஒரு பக்கம் ஸ்ரீலஷ்மி உருவம் பொறித்தும் மறு பக்கம் ஸ்ரீசக்கரம் பொறித்தும் இருப்பதற்கு பதிலாக ஸ்ரீசக்கரத்துக்கு பதிலாக தாமரைப்பூ பொறித்தும் இருக்கும். இது இதற்காகவே விசேஷமாக தயாரிக்கப்பட்டது.அனைவரின் வருகை இலவசமானாலும் இந்த சொர்ணகமலபுஷ்பம்....பேர் அழகாயில்லை? மட்டும் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். பூஜையில் வைத்ததல்லவா? பணம் கட்டி(ரூ.501)முன் பதிவு செய்து கொண்டு முன்று நாட்கள் கழித்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்திருந்தார்கள்.

உள்ளே நுழையும் முன் வரிசையாக சாஸ்திரிகள் நின்று கொண்டு ஒவ்வொருவருக்கும் வரன்களின் பேர், நட்சத்திரம் கேட்டு தனித்தனியாக சங்கல்பம் செய்த பின் எல்லோருக்கும் வழங்கிய இப்பையில் லலிதா சகஸ்ரநாமம் புத்தகம், சில விளம்பர துண்டு பிரசுரங்கள் இருந்தன.
கலந்து கொண்ட அனைவருக்கும் அம்பாளின் அருள் பூரணமாக கிடைத்து அவர்கள் விரும்பிய வரன் அமையப் பெற கல்யாணமாலையின் வாழ்த்துக்களோடு மன நிறைவாக விடைபெற்றோம்.
அன்று, என் குடும்பத்தில் கல்யாணத்துக்கு காத்திருக்கும் ஆண், பெண் வரன்களுக்குமாக சேர்த்து சங்கல்பம் செய்து, அவர்களுக்கும் நல்ல வாழ்கைத் துணை அமைய அம்மாவை வேண்டிக் கொண்டேன். அதோடு அன்று கலந்து கொண்ட அனைவரது விருப்பமும் நிறைவேற மனமாற வாழ்த்துகிறேன்.


Labels:


Comments:
அழகாக தொகுத்திருக்கிறீர்கள்
 
அட்டகாசமான நேர்முக வர்ணனை.

சி.செ.யில் இந்த மாதிரி திடீர்திடீர்னு பல நல்ல விஷயங்கள் நடக்குது. எல்லாத்தையும் மிஸ் பண்ணிக்கிட்டு இங்கே வந்து உக்கார்ந்துருக்கேன்:(

படங்கள் அத்தனையும் அழகு. அதிலும் அந்தத் துங்கக் கரி முகன்....அபாரம்!
 
//இந்த சொர்ணகமலபுஷ்பம்....பேர் அழகாயில்லை?//
விரைவில் ஸ்வர்ணாவோ கமலாவோ புஷ்பாவோ தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்று அம்பாளை வேண்டுகிறேன்.
தாமரை
 
ரொம்ப சந்தோஷம், கோமா!
 
//எல்லாத்தையும் மிஸ் பண்ணிக்கிட்டு இங்கே வந்து உக்கார்ந்துருக்கேன்:(//

இதெல்லாம் ஜுஜூப்பி..துள்சி!

அகில உலகத்தையும் தன் திறந்த வாயில் காட்டினானாமே, கண்ணன்! அதைப்போல் உங்கள் பதிவுகள் மூலம் எங்களுக்கு காட்டிக்கொண்டிருக்கிறீர்களே...அதைவிடவா?
ஆனால் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். லக்கி ப்ளாண்டைப் பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.
 
ஆஹா...!என்ன அழகாக பதம் பிரித்து அர்த்தம் சொல்லியிருக்கிறீர்கள், தாமரை!!!

நன்று..நன்று. வாழ்த்துக்கு நன்றி!!

இது நீங்களே சொல்லியதா? அல்லது மண்டபத்தில் யாராவது.....?
 
அனைவர் விருப்பமும் நிறைவேற அருள் கிடைக்கட்டும்.

படங்களும் பகிர்வும் அருமை.

சொர்ணகமலபுஷ்பமாக 25 ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் இருபது பைசா நாணயங்கள் உபயோகிக்கப் பட்டது நினைவுக்கு வருகிறது. பித்தளையால் ஆனதென நினைக்கிறேன்,ஒரு பக்கம் தாமரை பொறிக்கப்பட்டிருக்கும். புளி வைத்து தேய்க்கப்பட்டு பளபளவென இருக்கும். பலரும் 108 நாணயங்களை சேகரித்து வைத்திருந்தனர் பூஜையின் போது பயன்படுத்த.
 
உண்மைதான் ராமலஷ்மி,
என் சின்ன மதினியும் இது போல் 108 தாமரை பொறித்த 20 பைசா நாணயங்களை சேர்த்து வைத்திருந்தார்கள். பூஜையில் பயன் படுத்த. எனக்கும் அதௌ நினைவு வந்து 108 சொர்ணகமலபுஷ்பம் வாங்கத்தான் ஆசை......!
 
சுக்ரா கடையில் வெள்ளியில் சின்னதா தாமரை, துளசி இலை, சின்னதா பூ இப்படி பல டிசைன்களில் செஞ்சு விக்கறாங்க. அதுலேதான் 108 தாமரை வாங்கி வச்சுருக்கேன்.

எல்லாம் ஒரு பத்து கிராம்தான் இருக்கும். ரொம்பச்சின்னதாத்தான் இருக்கு. இதுலே காசு டிஸைன்கூட பார்த்த நினைவு.

சொர்ணகமலபுஷ்பம் ஒன்னு 501 ன்னா கட்டுப்படி ஆகாது.
 
வுடு ஜூட் டு சுக்ரா...ஹா.ஹா..!
 
என்னிடமும் எங்கள் அறுபதாம் கல்யாணத்தின் போது பாதத்தில் போட்ட வெள்ளி புஷ்பங்கள் இருக்கின்றன. அதில் ஒரே ஒரு ஒருகிராம் சொர்ண்கமலபுஷ்பமும் சிறு வெல்வெட் பெட்டியில் வைத்து பரிசாக வந்தது இருக்கு. நானும் அது மாதிரிதான் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் இது காசு.
 
அனைவர் விருப்பமும் நிறைவேறட்டும்..

மோகன் மிக அழகாக நிகழ்ச்சியை நடத்துவார்.. :)
 
இவ்வளவு சிறப்பு மிக்க பூஜையை, பெற்றோர்களின் மனதில் நம்பிக்கை துளிர்க்க வைக்கும் வகையில் ,அழகாக ,நடத்தவேண்டுமென்றால்,ரூ.501 தருவது அவசியம்தான்.
இத்தொகை ,நாம் வணங்கும் இறைவனுக்கு,காணிக்கையாகவும்
பூஜையை நடத்தியவர்களுக்கு அன்புப்பரிசாகவும் தந்தால் கட்டுப்படியாகும்
 
தங்கத்தாமரைப்பூவே...என்று மின்சாரக்கனவில் ஒரு பாட்டு வருமே, அது தான் ஸ்வர்ணகமலபுஷ்பம்.
படங்களுடன் உங்கள் வர்ணனை அருமை.
சகாதேவன்
 
கோமா,
‘தங்கத்தாமரை மலருக்காக’ 501 கொடுத்தால் கட்டுப்படியாகும்தான். துள்சியும் நானும் சொன்னது 108 காசு வாங்குவதுதான் கட்டுப்படியாகாது என்று.

நுழைவுக் கட்டணம் வசூலித்திருந்தால் கூட தப்பில்லை. கூடவே வரும்போது சாப்பாடும் போட்டிருந்தால்.
 
ஒரு தொன்னை புளிசாதம்(பிரசாதம்)த் தோடு முடிந்தது.
 
சகாதேவன்,
அது “தங்கத்தாமரை மலரே...”

நன்றி!
 
இது எல்லாம் நமக்குப் புதிசாக இருக்கிறது.

விநாயகர் அழகு.
 
கோமா,
‘தங்கத்தாமரை மலருக்காக’ 501 கொடுத்தால் கட்டுப்படியாகும்தான். துள்சியும் நானும் சொன்னது 108 காசு வாங்குவதுதான் கட்டுப்படியாகாது என்று.

அது கரெக்ட்
 
மாதேவி,
எனக்கும் இது புதிதுதான். ஏன் கல்யாணமாலையும் இப்போதுதான் இது மாதிரி செய்கிறார்கள். போன மாதம் கோயம்புத்தூரில் நடந்தது.
மிக நல்ல விதமாக ஏறபாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 
கோமா,
நீங்கள் சொன்னது ஒரு காசுக்கு 501 கொடுக்கலாம் என்று.
 
கல்யாணமாலை கொண்டாடிய ’விவாஹபிரார்த்தனாவில் கலந்து கொணட அனைவரது விருப்பமும் நிறைவேறவாழ்த்துக்கள்!

படங்களும் நேர்முக வர்ணனையும் அருமை.

உங்களுடன் நாங்களும் கலந்து கொண்ட உணர்வு.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]