Saturday, September 18, 2010

 

கரு சுமந்த கண்மணிகளுக்கு......பாகம் ரெண்டு

கர்ப்பிணியான பொண்ணுக்கு ஆசையாக அருமையாக வளைகாப்பு, சீமந்தம் செய்து பின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அதாவது பெற்ற தாயின் அரவணைப்பில். அது அனேகமாக ஏழாம் மாதமாயிருக்கும்.

தன் கைகளில் அவள் வந்தவுடன் தாய் செய்ய வேண்டியது, கருவுற்றகாலத்தில் தரும் பராமரிப்பு. ஆம் அது ஆரம்பித்துவிடும்.
முதலில் அவளுக்கு கொடுக்க வேண்டியது ‘குடினி’. இதை ஏழாம் மாத குடினி என்பார்கள்.

சுலபமாக பிரசவம் ஆக பெரிதும் உதவும் இந்தக் குடினி.
அம்மா கொண்டு வந்து, “குடி நீ...குடி நீ!” என்று நீட்டுவதால் வந்த பேரோ?
இதன் செய் முறை:
குருந்தட்டி வேர் - 50 கிராம்
சுக்கு - 25 கிராம்
சாரண வேர் - 50 கிராம்
மூன்றையும் இடித்து ஒரு ஸ்பூன் எடுத்து 1/12 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விடவும். 3/4 டம்ளராக ஆனதும் அதில் பனங்கற்கண்டு அல்லது க்ருப்பட்டி சேர்த்து வடிகட்டி அருந்தக் கொடுக்கவும்.
இதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கவும்.
அடிக்கடி பார்லி தண்ணியும் குடித்தால் மிக நல்லது.
பிரசவம் ஆகும் வரை இதைக் குடிக்கலாம்.

தொடரும்

Labels:


Comments:
பெண் குழந்தைகளை பெத்தவங்க( நான் உட்பட) பத்திரப்படுத்த வேண்டிய குறிப்புகள் நானானிம்மா..
 
பத்திரப்படுத்த வேண்டிய குறிப்புகள்//
நிச்சயமா..
 
அமைதிச்சாரல், முத்துலெட்சுமி,
உங்களுக்கு உபயோகப் படுமானால் எனக்கு ரொம்ப சந்தோசம்!!
 
நானானிம்மா ஒரு ரெக்வெஸ்ட்,

இந்தத் தொடர் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் போடுங்களேன். எல்லோருக்கும் உதவியா இருக்கும்.
 
கட்டாயம் தென்றல்!

போட்டால் போச்சு!

ரிக்வெஸ்ட்டுக்கு நன்றி. ஆனாலும் சும்ம சொன்னாலே போதும்
 
நானானி. இப்பதான் பார்க்கிறேன் பா.
ஒரு பதினோரு வருஷம் முன்னாடித் தெரியாம போச்சே. பரவாயில்லை இப்பவாவது கத்துக்கிறேன்.
 
பெட்டர் லேட் தன் நெவர், வல்லி!

இன்னும் பேரன் பேத்திகள் பிறக்கத்தான் போகிறார்கள். அப்போது உபயோகப்படுமே!!
 
சாரணவேருக்கு இன்னொரு பேரும் உண்டு மூக்குஇரட்டை.

எங்கள் ஊரில் சாரணவேர் என்றால் தெரியவில்லை,அப்புறம் அம்மா கடையில் சாரணவேர் காட்ட அவர் இது மூக்கு இரட்டை என்றார்.

இன்றைய தலைமுறைக்கு அவசியமான பதிவு.
நன்றி.
 
கோமதி அரசு,
காலத்துக்கேற்ப நாம் அதையு இதையும், பேர் தெரியாமல் வாங்க சிரமப்படுவதைத் தவிர்க்க எல்லாமே பொடிகளாக செய்து நாட்டு மருந்துக்கடைகளில் விற்கிறார்கள்.

நாம் போய் பிரசவத்துக்கு என்று கேட்டால் முழுப் பேக்கேஜையும் சப்ஜாடா தந்துவிடுகிறார்கள். என்ன ஒரு சௌகர்யம் பாருங்கள்!!!

அந்தக்காலத்தில் குழந்தை உண்டான உடனே மருந்துகள் வாங்கி இடித்து சலித்து, கிண்டி, உருட்டி சலிக்காமல் ஒரு தவம் போல் ரெடி பண்ணீ விடுவார்கள். அடுத்த வீட்டு அல்லது முன்பின் தெரியாத பெண்களுக்காகவும் அக்கறையோடு செய்து தருவார்கள். அது அக்கால மனசு!!!
 
நானும் சென்னையில் பொடி வாங்கி இருக்கிறேன்.

பிரசவப் போடி என்று விற்பதை என் தங்கை வாங்கி தந்தாள்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]