Tuesday, September 14, 2010

 

ஐயையோ...அப்புரம் என்னாச்சு...?

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சதாப்தி சல்லுன்னு வேகமெடுத்து தண்டவாளத்தில் உருண்டோடிக்கொண்டிருக்கிறது. லஷ்மியும் சுப்புவும் பெரியம்மா சின்னம்மா பொண்ணுகள். பெங்களூருக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்....தத்தம் குழந்தைகளோடு, ஒருவனுக்கு மூன்று வயது மற்றவனுக்கு ஒன்றரை வயது.

எதிரெதிரே அமரும் இருக்கைகள்.

எதிரே இருந்த பெண், ‘நீங்க எங்கே இறங்கறீங்க?’

‘கண்டோன்மெண்டில்தான்.’

‘நாங்களும் அங்கேதான்.’

’ஆர்டி நகருக்குப் போக அதுதான் பக்கம்.’

‘அடடே! எங்க வீடு ஆர்டி நகருக்குப் பக்கத்தில்தான்.’

சாப்பாடு வந்தது. சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.
கையில் கொண்டு வந்திருந்த கொறிக்ஸ்களை ஒருவர்க்கொருவர் பரிமாறிக்கொண்டார்கள்.

சில நட்புகள் பசக் என்று ஒட்டிக்கொள்ளும்.
சிலவை இழுஇழு என்று இழுக்கும். மற்றவை என்ன பசை போட்டாலும் ஒட்டாது.

இந்த நட்பு ‘பசக்’ ரகம்.

எதிர் இருக்கைப் பெண் ரமா தன் நான்கு வயது பெண்ணைக்காட்டி, ’இவளுக்கு நாளை மாலை பிறந்தநாள் கொண்டாடுகிறோம். நீங்க இருவரும் குழந்தைகளோடு அவசியம் வரணும்.’ என்று இயல்பாக அழைத்தாள்.

‘கட்டாயம் வருகிறோம். உங்க மொபைல் நம்பர் கொடுங்க.’

மிஸ்டுகால்கள் மூலம் எண்களை வாங்கிக் கொண்டார்கள்.

ரயில் சுகமாக ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் இருவரும் தூங்கிவிட்டார்கள்.

‘சுப்பு! பாட்டிலில் தண்ணீர் காலி!’

‘அடுத்து நிற்கும் ஸ்டேஷனில் இறங்கி வாங்கிக் கொள்ளலாம்.

‘சரி’

வண்டி வேகம் குறைந்து நின்றது. சுப்பு,’ஏதோ ஸ்டேஷன் போல, நான் தண்ணி பாட்டில் வாங்கிட்டு வாறேன்.’ பதிலுக்குக் காத்திருக்காமல் தோளில் ஹாண்ட்பாக்கோடு இறங்கிவிட்டாள்.

சிறிது நேரமாச்சு வரவில்லை. பதட்டத்தில் லஷ்மியும் கைப்பையோடு இறங்கி விட்டாள்.

தூரத்தில் பாட்டிலோடு சுப்பு வந்துகொண்டிருக்கிறாள்.

‘சீக்கிரம் வா!’ என்று கை காட்டிக்கொண்டிருக்கும் போதே வண்டி கிளம்பிவிட்டது. சூப்பர் ஃபாஸ்ட் ஆனதால் எடுத்ததும் வேகம் பிடித்தது.

இருவரும் பதறி விட்டார்கள்.

ஐயையோ அப்புரம் என்னாச்சு?

“ஐயோ பிள்ளைகள் ரயிலில் தூங்கி கொண்டிருக்கிறார்களே!!!என்ன செய்வது?’

ஒரு கணம் சுதாரித்துக்கொண்டு ஸ்டேஷ்ன் மாஸ்டர் அறைக்கு ஓடி விபரம் சொன்னார்கள், உடம்பெல்லாம் பதற.

அவர், அட! அடுத்து கண்டோன்மெண்டில்தானே நிற்கும்!’என்றார் கூலாக.

லஷ்மிக்கு அடுத்த கணம் பொறிதட்டியது. ஸ்டேஷன் மாஸ்டர் வேஸ்ட் என்று வெளியே வந்து சற்று முன் தான் வாங்கிய ரமாவின் செல்லுக்கு அடித்தாள்.

‘ஹலோ! ரமா, நாங்க ரெண்டு பேரும் ஸ்டேஷனில் மாட்டிக் கொண்டோம்.’

ரமா,’கவலைப் படாதீர்கள் பிள்ளைகள் இன்னும் தூங்கி கொண்டுதானிருக்கிறார்கள்.’என்றாள்.

லஷ்மி,’ரமா! உடனே சங்கிலியைப் பிடிச்சு இழு. என்ன ஃபைனானாலும் நான் கட்றேன். குயிக்..குயிக்!’ என்றாள் சமயோசிதமாக.

பதறியபடியே லஷ்மியும் சுப்புவும் ப்ளாட்பாரத்தில் நிற்க, சிறிது நேரத்தில் சதாப்தி ரிவர்ஸில் வந்து கொண்டிருந்தது.


இது நிஜமல்ல கதை

இதுதான் நான் தலைப்பாக வைக்க நினைத்தது. ஆனால் சஸ்பென்ஸ் தெரிந்து விடுமே!

அதனால்தான் தலைப்பாக வைக்க வேண்டியதை “கால்ப்பாக ” வைத்து விட்டேன்.

ஆனாலும் ஒன்று, உண்மையிலேயே இது ஒரு கனவுதான். என் மகள் கண்ட கனவு. ஓடி வந்து என்னிடம் சொன்னபோது நானும் கனவென்பதையும் மறந்து பதறி நான் சொன்னதுதான் இப்போது தலைப்பாக இருக்கிறது.

சதாப்தியில்தான் தண்ணீர் பாட்டில்தான் கிடைக்குமே?
சதாப்தி பாயிண்ட் டு பாயிண்ட் அல்லவோ? என்றெல்லாம் கேள்விக்கணைகளாக பாய வேண்டாம். பிகா...ஸ் இது வெறும் திரில்லர் கனவு.

Labels:


Comments:
நானானி, இது த்ரீ மச். எதுக்குப்பா செயின் ஏன் பிடிச்சு இழுக்கணும்.
ஒர் டாக்சி பிடிச்சு ட்ரெயினைத் துரத்தலாமே. இன்னும் த்ரில்லிங்கா இருக்குமில்ல.:)
கனவுதானேப்பா. என்ன வேணா நடக்கும்:)
வே டு கோ நானானி.!!!
 
அன்பின் நானானி

அருமையான த்ரில்லர் கனவு - உண்மையிலேயே நடக்க வாய்ப்புகள் உண்டு. என்ன செய்வது ......

மனம் பதறி இறுதி வரை படித்தேன். நல்ல முடிவு

நல்வாழ்த்துகள் நானானி
நட்புடன் சீனா
 
நான் மீ த ஃபர்ஸ்ட் இல்லயா - ம்ம்ம் எனக்கு வட வேணும்ம்ம்ம்ம்ம்
 
அம்மா....இது டென் மச்சாகக் கூட இருக்கலாம். டாக்சி பிடிச்சி போகலாம்தான். படிப்பவர்களை ரொம்பவும் நாக்காலி நுனிக்கு போக வைக்க வேண்டாம்முன்னுதான் கனவு அப்படி வரவில்லை. கனவு கண்டவளின் ப்ரன்ஸன் ஆஃப் மைன்டைப் பாராட்டு வீர்களா...அத்தவுட்டுட்டு....
 
அன்பு சீனா,
நீங்களும் என்னைப் போல் பதறினீர்களா? அப்ப சேரி!
நன்றி!
 
வடையா...? இப்பல்லாம் ‘மீ த ஃப்ர்ஸ்ட்க்கு வடை தர்றாங்களா?

அடுத்த முறை வாருங்கள்...வரையென்ன? பாயாசமும் சேத்து தந்தால் போச்சு!!!
 
எல்லோரும் உட்கார்ந்து யோசிச்சேன் என்பார்கள். நீங்கள் படுத்துக்கொண்டே (கனவு) யோசிச்சிருக்கீங்க. நல்ல கதை. ஆமா அப்புறம் என்னாச்சு. செல் போன் வந்தது நல்லதுதான்.
சகாதேவன்
 
மூணாவது இருக்கையில் நான் உக்கார்ந்து 'சம்பவத்தை' கவனிச்சுக்கிட்டு இருந்தேன். அதைக் கனவில் பார்க்கலையா?

ஆனாலும்.............. ரொம்பத்தான்.

நேத்துதான் உங்க பேச்சு நம்மூட்டுலே நனவில்:-)
 
சகாதேவன்,
படுத்துக்கொண்டே இல்லை..இப்பல்லாம் ரூம் போட்டுத்தான் யோசிப்பார்கள்.
செல் போனின் அருமை உங்களைவிட வேறு யாருக்குத் தெரியும்? இல்ல?
 
துள்சி,
மூணாவது இருக்கையில் இருந்து சும்மா வேடிக்கைப் பார்த்தீர்களா? இது லெவன் மச்!!!
லஷ்மியைத் தெரியும்...நீங்களே சங்கிலியைப் புடிச்சு இழுத்து ஃபைனையும் நீங்களே கட்டியிருக்க வேண்டாமா?
‘இது உனக்கு வேணுமா’ன்னு கோபால் சொல்வது காதில் கேட்கிறது.
 
திருட்டு பயம் இருக்குன்னு சங்கிலியைப் போட்டுக்கிட்டு வரலை அன்னிக்கு!
 
//நேத்துதான் உங்க பேச்சு நம்மூட்டுலே நனவில்:-)//

துள்சி,
அதான் நேற்று பொரை(றை?) ஏறிக்கொண்டே இருந்ததா?

அடிக்கடி இப்படிபொறை ஏறணுமுன்னு ஆசையாயிருக்கு.

ஏன்னா நம்மையும் நினைக்க ஆள் இருக்கே!!!!!
 
ஓஹோ..! கழுத்திலிருக்கும் சங்கிலியை இழுத்தாலும் ரயில் நிக்குமா? தெரியாமப் போச்சே!!!
 
சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88

ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_


(www.jeejix.com ) .
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
 
OK . maappu. maappu. naanaani:)
chain pidiccu izhuththathu thaan
seri:)
 
செம த்ரில்லர் நானானிம்மா... பிரிஞ்சவங்க ஒண்ணு சேரும்போது குடும்பப்பாட்டெல்லாம் பாடலையா??.. பத்து நிமிஷம்தானே பிரிஞ்சாங்கன்னெல்லாம் கேக்கப்படாது :-)))))
 
பதிவு கலக்கல்..ன்னா
பின்னூட்டம் எல்லாம் செம கலக்கல்..:)
 
வளவன்,
நன்றி!
ஆனா என் பதிவு என்ன சமூக மாற்றங்களை செய்யப் போகிறது?
 
வல்லி,
மாப்பினோம்..மாப்பினோம்.

//ஒர் டாக்சி பிடிச்சு ட்ரெயினைத் துரத்தலாமே.//

அடுத்த கனவு அப்படிக் காணச் சொல்கிறேன். சேரியா?
 
தெலுங்கு படம் பாத்த மாதிரி இருக்கும்.
 
அமைதிச்சாரல்,

//குடும்பப்பாட்டெல்லாம் பாடலையா??..//

பத்து நிமிஷ பதறலில் பாட்டு வேற வேணுமா?

எங்க வீட்டில், குடும்ப பெட்ஷீட், குடும்ப பெயிண்ட், குடும்ப குங்குமம்,குடும்ப குசும்பு எல்லாம் உண்டு.

குடும்ப பாட்டு இன்னும் எழுத வில்லை. வைரமுத்துவை எழுதச் சொல்லலாமா அல்லது வாலியா?
இசை இளையராஜா? ஏஆர். ரஹ்மானா? யோசிச்சு சொல்லுங்க.
 
முத்துலெட்சுமி,

//பதிவு கலக்கல்..ன்னா
பின்னூட்டம் எல்லாம் செம கலக்கல்..:)//

இப்படி கலக்குமுன்னு நானே எதிர்பாக்கலை.
 
நல்ல த்ரில்லர்:)!
 
கனவிலும் லஷ்மி எல்லாமே சரியாகத்தான் பார்த்திருக்கிறாள்.

பாயிண்ட் டு பாயிண்ட் கேள்விக்கணைக்கெல்லாம் சான்ஸ் இல்லை:)!

சென்னை டு பெங்களூர் வண்டி கண்டோன்மெண்டில் நிற்கும். சென்னை போகும் போதுதான் நிற்காது.

அது போல காட்பாடியில் நடுவில் இரண்டு நிமிடம் நிற்கும். அப்போதுதான் தண்ணி பிடிக்க இறங்கியிருக்கிறாள்.

ட்ரெயின்ல் கொடுத்த பாட்டில்? அது பசங்களும் அம்மாக்களும் குடிச்சு காலி செஞ்சிருக்க மாட்டாங்களா:)?

[‘காட்பாடி’தான் அந்த ஸ்டாப் என்பதை வெரிஃபை செய்துட்டு வந்து லேட்டாய் இந்த இன்னொரு பின்னூட்டம்:)!]
 
கலக்கல் கதை நானானி அம்மா
 
ராமலஷ்மி,

பெங்களூருரம்மா கொடுத்த தகவல்கள் எல்லாம் சரியாகவே இருக்கின்றன.

எடுத்த சிரமத்துக்கு நன்னி!
 
சின்ன அம்மணி,
பிடிச்சிருந்துதா? நன்றி!
 
போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!
 
இளா,

சந்தோசமாயிருக்கு. ரொம்ப நன்றி!
 
электронные сигареты купить в интернет магазине - влияют ли сигареты на печень
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]