Friday, July 16, 2010

 

மயிலோடு விளையாடி...மயிலோடு உறவாடி!!

காடுகளிலும் வயல்வெளிகளிலும் கூண்டுக்குள் அடைபட்ட நிலையில் காட்சியகத்திலும் மட்டுமே கண்களுக்கு தென்படும் மயில்கள், இங்கே நெல்லையில் அண்ணன் வீட்டில் சர்வ சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. இயல்பான அவைகளின் நடமாட்டம் பார்க்கப் பரவசமாயிருக்கிறது.

அதிகாலை ஆறுமணிக்கு ஆறுமுகனின் வெஹிக்கிள் வந்து தன்னை ரீசார்ஜ் பண்ணிக்கொண்டும் ஃப்யூயல் ரொப்பிக்கொண்டும் என்ஜினை ஓவராயில் பண்ணிக் கொண்டும் ஃப்ரெஷாக வலம் வருகின்றன. காரணம் அண்ணனின் கம்பெனி வொர்க்‌ஷாப் எதிர்வீட்டிலேயே இருக்கிறது.


மயிலே உனக்கனந்த கோடி நமஸ்காரம்!!!! மதனி வாரியிறைக்கும் பொட்டுக்கடலையை ஒவ்வொன்றாக கொத்தித் தின்னும் அழகே அழகு.

மழையையும் அருவியையும் வானத்தையும் தொட்டியில் நீந்தும் மீன்களையும் பார்த்துக்கொண்டேயிருந்தால் எவ்வளவு அழகோ, எவ்வளவு கண்ணுக்கு குளிர்ச்சியோ அவ்வளவு அழகு, குளிர்ச்சி!!!!பின் வாசலுக்கு நேரே ஒரு சின்ன தொட்டியில் தண்ணீரும் ஒரு கிண்ணத்தில் அரிசியும் எப்போதும் மயில்களுக்காகவே வைக்கப் பட்டிருக்கும். வாசலில் பொட்டுக்கடலை கொறித்துவிட்டு பின்பக்கம் வந்து அதுக்கான அரிசியையும் விழுங்கிவிட்டு தண்ணீர் அருந்தும் காட்சி ரசிக்க வேண்டிய ஒன்று.என் பேரன், மயில் அரிசி சாப்பிடுவதை மீண்டும் பார்க்கவேண்டும் என்றதால் மதினி கையில் சிறிது அரிசியை வைத்துக்கொண்டு, ‘வாடா!’ என்று அழைத்தார்கள்.

ஹூஹும்!!! வரவில்லை. ‘ஆச்சி! அதுக்கு தொந்தி ஃபுல்லாயிடுச்சா? அதான் வரலையா?’ என்றான். அதுவும் ஒரு காரணம்.

நாங்கள் எல்லோரும் கூட்டமாக இருந்தோமல்லவா அதுதான் முக்கிய காரணம். நாங்கள் வீட்டுக்குள் வந்த பிறகு ஷன்னு மட்டும் பொட்டுக்கடலை கையில் வைத்துக்கொண்டு, “வாடா...வாடா...!” என்று அழைத்துக்கொண்டிருந்தான். அது தண்ணீர் தொட்டிக்குப் பின்னால் ஓடி மறைந்தது.

இங்கு அவைகளுக்கு பாதுகாப்பு கிடைக்குமென்பதால் இங்கே உலவி வருகின்றன. வேறு இடங்களில் மயிலைப் புடிச்சு, அடிச்சு குழம்பு வெச்சுடறாங்களாம்.(என்ன கொல வெறியான வார்த்தைகள்! மயிலே! எனக்கனந்த கோடி மன்னிப்பு!!)

மாலையில் பின்புற ஷெட்டின் மேற்கூரையில் அங்குமிங்கும் மயில்நடை நடந்து அங்கு கிடைப்பதை உண்டு பசியாறுகின்றன.

அந்த மரம் புளிய மரம், ஒரு வேளை புளியம்பழங்களைத்தான் கொத்துகின்றனவோ?

அங்கு கிடைத்த மயிலின் பலவகையான போஸ்கள்.

ம்யிலே..மயிலே! நீ இறகு போட வேண்டாம். அட்லீஸ்ட் கீழே இறங்கி வந்து உன் அழகான தோகை விரித்து....”ஆடிக்காட்ட மாட்டாயா...மயிலே, ஆடிக்காட்டமா...ட்டாயா?

எப்போதுதான் ஆடுமாம்? ரெண்டு வீடு தள்ளி ஆளில்லாத வீட்டின் தட்டட்டியில் ஆடியன்ஸ் தேவையில்லாமல் தனக்குத்தானே முழு தோகையையும் விரித்து மகிழ்ச்சியாக தன் ஆட்டத்தை தானே ரசித்துக்கொண்டு ஆடுமாம். என்னே தட்டட்டி செய்த பாக்கியம்!!!!!
இரவில் அவ்வீட்டின் தென்னை மரத்தின் மேல் மயில் துயில் கொள்ளுமாம்.

அதுக்கா மனசிருந்தா அழகா தோகை விரித்து ஆடுமாம். ஆடும் மயிலே ஆட்டமெங்கே?

இம்முறை எங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை.

அடுத்த முறை கெஞ்சிக் கூத்தாடி ஆடச் சொல்லவேண்டும்.

மயில் எனக்காகவே கொடுத்த போட்டோ செஷன்!! எப்படி?

மேலே உள்ள படம்தான் எனக்குப் பிடித்தது.

அடுத்த செஷனில் இன்னும் சூப்பரா பிடிச்சிடுவோமில்ல!!!!! விரித்த தோகையோடு!!!

Labels:


Comments:
நல்லாவே உறவாடி விளையாடி இருக்கீங்கன்னு தெரியுது.. :)
 
very nice pics
 
சூப்பர்ம்மா............. சூப்பர்!!!!!!

குமரன் வரக்கூவுச்சா?

அதான் ஷன்னு இருக்காரே!
 
உங்க அண்ணன் பெய்ர் முருகனா?

மயிலாடணும்னா கலா மாஸ்டர்,குஷ்பு மாஸ்டர்லாம் வரணுமோ என்னவோ
 
அழகான மயில்.. அழகான படங்கள்.
 
அழகு!!!
 
பார்த்துப் பரவசமானதும்
விளையாடி உறவாடியதும்
படம் எடுத்துப் பதிந்ததும்
அழகு அழகு அழகு!!!
 
@ கோமா,
வேல் இருக்கும் இடம் மயில் இருக்கும். விந்தையென்ன இதிலே:)?!
 
கயல்!

ரொம்பவே நல்லாருந்துது.
 
விதூஷ்,
மிக்க நன்றி.
 
துள்சி,

ஆமா...அந்த சின்னக்குமரனுக்காகவே கூவுச்சு.
கூவும்...ஹ...அது குயிலல்லோ!
அகவும் குரல் கேட்டுத்தான் வெளியே ஓடிவருவோம்.

மயிலு...மயிலுன்னு கமல் மாரி கூப்பிட்டாலும் அது விலகி விலகியே ஓடும்.
 
கோமா,

மயிலாடனுமின்னா கருமேக மாஸ்டர்தான் வரணும்.
 
அமைதிச்சாரல்,

அழகான, அமைதியான உங்கள் பின்னூட்டமும் அழகு.
 
அம்பிகா,
நன்றி, ரசித்தமைக்கு.
 
ராமலஷ்மி,

சந்தோசம்!
 
ஆமா, ராமலஷ்மி,
வடிவேலும் மயிலும் துணை....!
 
மயில் அழகாக இருக்கின்றது... மயில் அனுபவம் ஒரு ரசனை தான். ;-)
 
ஆஹா, அற்புதமா இருக்கு நானானி அம்மா
 
நான்கு நாளாக ஆபீஸில் ஒரே வேலை. இரண்டு நாள் வெளியூர் பயணம். அதான் உங்கள் பதிவை பார்ப்பதில் தாமதம்.
வீட்டு வாசலில் இரண்டு வாகனங்கள். உள்ளே இருப்பதும் உங்கள் அண்ணனின் வாகனமோ?
அப்படி யானால் கோமா கேட்டது போல் அவர் பெயர் வடிவேலா? முருகனா? இல்லை வடிவேல் முருகனா?
சகாதேவன்.
 
அன்பின் நானானி

அருமை அருமை

மயிலின் பல்வேறு நிலைகளைப் புகைப்படமாக்கி ரசித்துப் பகிர்ந்தமை நன்று -நல்லதொரு சூழ்நிலையில் நல்லதொரு மன நிலையில் - நல்லதொரு காட்சியினைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நானானி.

ஷன், ஆச்சி அய்யனுடன் மயிலுக்குப் பொட்டுக்கடலை வழங்கும் காட்சி -மனதில் கற்பனைக் குதிரை தறி கெட்டு ஓடுகிறது

வடிவேலோ முருகனோ சன்முகனோ - அண்ணனிடமும் மதினியிடமும் எங்கள் அன்பினைத் தெரிவிக்கவும்

அடுத்த விஜயத்தின் போது ஆடும் மயில் காண நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா
 
சந்தோஷம் சீனா!

அடுத்த முறை ஆடும் மயிலையும் புடிச்சிடுவொம்...போட்டோதான்!

வடிவேலன், முருகன், சண்முகம், மதினி ஆகியோருக்கு உங்கள் அன்பை தெரிவிக்கிறேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]