Tuesday, July 13, 2010

 

கோதுமை ரவா தோசை - சமையல் குறிப்பு

வெறும் பாம்பே ரவா தோசை சாப்பிட்டிருப்பீர்கள். நான் சொல்லப் போவது,
கோதுமை ரவா தோசை. ஐம்பது வகை தோசை, நூறு வகை தோசை லிஸ்டில் கூட நான் கண்டதில்லை உண்டதில்லை.

என் மகளின் மெனுகார்டில் உள்ளது இந்த கோதுமை ரவா தோசை!!

எப்படி செய்வது?

அரை கப் கோதுமை ரவையை(பொடி ரவை) ஒரு மணி நேரம் ஊர வைக்கவும். அதோடு ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் அரிசிமாவு கலந்து தண்ணீர் விட்டு நன்கு கரைக்கவும்.

கொஞ்சம் நீர்க்க இருக்கலாம், அப்போதுதான் தோசை முறுகலாக வரும்.
அதோடு பொடியாக அரிந்த வெங்காயம் பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-காரத்துக்கேற்ப, ஜீரகம்,மிளகு ஒரு டீஸ் ஸ்பூன், உப்பு சேர்த்து தயாராக்கவும்.

ஆங்..! மானே தேனேயை மறந்துவிட்டேனே!! அதாங்க கறிவேப்பிலை, கொத்தமல்லி!!!அவற்றையும் பொடியாக அரிந்து போட்டுக்கோங்க. சேரியா?

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி நன்கு காய்ந்ததும் கல்லின் ஓரங்களில் ஊற்றவும். அங்கிருந்து வழிந்து மீதி மாவு நடுவில் சேரும். சுற்றிலும் எண்ணை அல்லது நெய் ஊற்றி
இருபக்கமும் முறுகவிட்டு எடுக்கவும். தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி நன்கு இழையும்.

சூப்பராயிருக்கும் இத்தோசை ஊற்ற ஊற்ற டைனிங் டேபிளுக்கு போய்க் கொண்டேயிருக்கும், அடி பிடின்னு. ஊற்றுபவருக்குத்தான் கை வலிக்கும், அவருக்கும் டேஸ்ட்டுக்குக் கூட மிச்சம் மீதி இருக்குமோ என்னவோ?

Labels:


Comments:
டேஸ்ட்டி
 
மானையும் தேனையும் ரசித்தேன்:)!

அருமையான குறிப்புக்கு நன்றி.
 
கோமா,
அட..உடனே செஞ்சு, ஊத்தி, சாப்பிட்டு பாத்திட்டீங்களா?

//டேஸ்ட்டி//
செம ஃபாஸ்ட்டி!!!
 
ராமலஷ்மி,

இன்னும் இருக்கு...’மானே தேனே பொன்மானே..’ இதெல்லாம். எல்லாம் மொத்தமாக சேந்து ‘கடுகு, உளுத்தம்பருப்பு(தாளிதம்), கறிவேப்பிலை, கொத்தமல்லி.’

சமையல் குறிப்பு சொல்லும் போது,
இந்த மானே,தேனே, பொன்மானே என்றால்...காரம்வகை என்றால் மேலே சொன்னவைகள். இனிப்பு என்றால், ‘ ஏலக்காய், முந்திரி, திராட்ஷை என்று அர்த்தமாக்கும்.
 
இ தை போல நான் முப்பது நாள் தோசை புக் ல ஒன்னு பாத்தேன். ஆனா அதுல தக்காளியை கூடை அரைச்சு கலக்கச் சொல்லி இருந்தாங்க . நிஜம்மாவே நீஙக சொல்றமாதிரி அடிபிடி தான்
 
கண்டிப்பா செஞ்சு பாக்குறேன்.
 
அன்பின் நானானி

தினந்தினம் சுடும் தோசையை சுட்டுச் சாப்பிடுவதை - ஒரு சாதாரணமான நிகழ்வினை - இவ்வளவு சுவார்ஸ்யமாக ஒரு இடுகையாக எழுதுவதுதான் நானானியின் கை வந்த கலை. மிகவும் ரசித்தேன் வரிகளை.

சிறு சிறு குறிப்புகள் - எதையும் விட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் வாழ்க.

நீர்க்க இருக்கலாம் - பொடியாக அரியணும் - மானே - தேனே -அதுவும் பொடியாக அரியணும் - நல்லாக் காஞ்ச கல்லுலே ஓரத்துலே ஊத்தணும் - சுத்டி எண்ண - நெய் ஊத்தி இருபக்கமும் முறுக விடணும் - தேங்காச் சட்னி - கை வலிக்க வலிக்க ஊத்தணும் -

அப்பா இவ்வளவு வேலை இருக்கா தோச சுடறதுலே - நல்ல வேளை நான் அந்தப் பக்கமே போறதுல்ல - டைனிங் டேபிளோட சரி

எந்த ஒரு செயலையும் ரசித்து முழு ஈடுபாட்டுடன் செய்யும் கலை அறிந்த நானானிக்கு நல்வாழ்த்துகள்

நாங்க வரூம் போது ( ??? எப்போ ??? ) - இந்த தோச வேணும் - சேரியா

நட்புடன் சீனா
 
//நாங்க வரூம் போது ( ??? எப்போ ??? ) - இந்த தோச வேணும் - சேரியா//

???எப்போ???
நானும் அதைத்தான் கேட்கிறேன்!
 
நானானி நலமா?
இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில்
வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html?showComment=1388105779571#c1927188437863207263
 
வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_27.html?showComment=1388106172450#c4072647375032658530
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_27.html?showComment=1388106172450#c4072647375032658530
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
வித்தியாசமான சுவையான தோசை..

வலைச்சர அறிமுகத்துக்கு
வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]