Saturday, July 10, 2010

 

வழிபாட்டு தலங்கள்- ஜூலை பிட்டுக்கு

நம்ம நாட்டில் வழிபாட்டுதலங்களுக்கு பஞ்சமேயில்லை. எல்லா தலங்களுக்கும் எல்லோரும் செல்ல வாய்ப்பு கிடைப்பதரிது, துள்சியைத் தவிர! யம்மா!!!இண்டு இடுக்கு இல்லாமல் சகல தலங்களையும் தரிசிக்கும் பெரும் பேறு வாய்த்தவர்.

ஏதோ எள்ளுருண்டை போல் நான் சென்ற தலங்களின் படங்களை போட்டிக்கு பரத்தியிருக்குறேன். பாத்திட்டு சொல்லுங்க மக்களே!!மதுரையில் கோலோச்சும் மகராணி மீனாட்சியின் திருக்கோயில், குளத்தில் பொற்றாமரையுடன்என்னப்பன் முருகனின் திருச்செந்தூரில் ஆடிய வேல் கோபுரத்தின் மேல் நிலை கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.


சங்கடம் தீர்க்கும் சனிபகவானிந்திருக்கோயிலும் மேலே பறக்கும் அவனின் வாகனமும்.பக்தர்கள் செய்து முடித்த வேள்விப் புகையூடே தரிசனம் தரும் பெருமான்.ஆலமரத்தடி, அரசமரத்தடி கிடைத்தால் கூட போதும் என்று எளிமையாய் அருள் தரும் ஓர் அரசமரத்தடிப் பிள்ளையார்.துவஜஸ்தம்பதோடு காட்சியளிக்கும் தலம்.

Labels:


Comments:
வழிபாட்டுத்தலங்கள் தரிசனம் பெற்றோம்.நன்றி நானானி
 
நானே முதல்.
திருச்செந்தூர் கோபுரம் அழகாக இருக்கிறது. அந்த அரசமரத்து பிள்ளையார், நீங்கள் சொல்வது போல கொசுவர்த்தி ஏற்றி விட்டார். அவரை நான் சின்னப் பிள்ளையிலிருந்தே பார்க்கிறேன். போட்டிக்கு எந்த படம்?

சகாதேவன்
 
முதல் படம் ரொம்ப பிடிச்சிருக்கு நானானிம்மா..
 
கடைசி கோயில் சோழமண்டல வாசம் வருகிறதே எந்த ஊர் அம்மா? :)

என் செலக்‌ஷன் திருச்செந்தூர் :)
 
சகாதேவன்
நீங்க வேற எங்கேயாவது, ‘நானே முதல்’ ஆக இருக்கலாம் ...இங்கே நானே முதல்....
 
தச்சநல்லூருக்குப் போனாலே, தேங்கா வாங்கிடுவார் ,இந்த அரசமரத்துப் பிள்ளையார்...என்னதான் செய்வாரோ அத்தனை தேங்காயையும்....
 
கரிசனத்தோடு தரிசனம் செய்தமைக்கு என் வணக்கம். கோமா!
 
நமது அரசமரத்தடி பிள்ளையாரை மறக்கமுடியுமா, சகாதேவன்!

உறவினர்கள் மதுரை, சென்னைக்கு காரில் செல்லும் போது முன்வாசலில் ஒரு டாட்டா சொல்லிவிட்டு, பின் வாசலுக்கு தடதடவென ஓடி அரசமரத்தடி பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைக்கயில் மற்றுமொரு டாட்டா சொல்லியது எல்லாம்...ம்ம்ம்ம் கொசுவத்தி மணக்குது.
 
நன்றி, அமைதிச்சாரல்!
 
ஆயில்யன்!
ஆம்! கடைசிப் படம் சோழமண்டல வாசம் கொண்டதுதான். நவக்கிரக திரிசனம் செய்தபோது எடுத்தது. ஆனால் எந்த ஊர் மணம் வீசியது என்று மறந்து போச்சே...!
சொல்லுங்களேன்! உங்களுக்கு அந்த மணம் கண்டுபிடிக்கத் தெரியுமே!!!
 
நீங்கதான் முதலாவது வந்திருக்க வேண்டியது...ஆனால் கோமா முந்திக்கொண்டாரே!!
 
கோமா! தேங்காயை அவர் தனக்காக வாங்குகிறார் என்றா நினைக்கிறீர்கள்?
சிதறுகாயாக அடிக்கும் சப்தம் கேட்டு சிதறி கிடக்கும் சிறுவர்களை ஒன்றாக சேர்த்து பொறுக்கச்செய்து, ஒன்று...அவர்கள் கரும்பி கரும்பி திங்கவும் அல்லது வீட்டுக்கு எடுத்துச் சென்று,’அம்மா! சட்னிக்கு வெச்சுக்கோ...குழம்புக்கு அறச்சுக்கோ!’ என்று கொடுக்கவுமே தேங்காய் வாங்குகிறார். ஏழைப்பங்காளனல்லவோ எளிமைப் பிள்ளையார்!!
 
அன்பு நானானி,
கோமாவும் ,சகாதேவனும் முதலுக்கு வம்பில் இறங்கும் போது என் பதிவு தான் நினைவுக்கு வந்தது.:)
என்னைக் கேட்டால் பக்திமணம் கமழும் அத்தனை படங்களுக்கும் வோட் கொடுப்பேன்.
ஆனால் வேள்வி நடுவெ இருக்கும் சிவனார்க்கு முன்னுரிமை:)
 
அரச மரப் பிள்ளையாரை வணங்கிவிட்டு அவர் தம்பியை அனுப்பி வையுங்கள் போட்டிக்கு:)! வாழ்த்துக்கள்.
 
வல்லி!
நீண்ட நெடுங்காலமாயிற்று பார்த்து.
உங்கள் தேர்வையும் மனதில் கொள்கிறேன். ஆனாலும் முழுதும் வெண்நீரணிந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் செந்தூர் கோயில் கோபுரமே மனதில் ஓடுகிறது.
 
ராமலஷ்மி,

ம்ம்..தங்கள் சித்தம் என் பாக்கியம்.
 
கரி முகனைக் கரிசனத்தோடு தரிசனம் செய்தேன்..
--------
உறவினர்கள் மதுரை, சென்னைக்கு காரில் செல்லும் போது முன்வாசலில் ஒரு டாட்டா சொல்லிவிட்டு, பின் வாசலுக்கு தடதடவென ஓடி அரசமரத்தடி பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைக்கயில் மற்றுமொரு டாட்டா சொல்லியது எல்லாம்...ம்ம்ம்ம் கொசுவத்தி மணக்குது.

நானானி நீங்கள் ஏற்றி வைத்திருப்பது கொசுவத்தி இல்லை.
சைக்கிள் பிராண்ட் ஊதுவத்தி...ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு...ஊதுவத்தி மணக்குது
 
அது என்ன பதிவு வல்லிசிம்ஹன்...லின்க் கொடுங்களேன்...நாங்களும் வாசிக்கிறோம்
 
//நானானி said...

ஆயில்யன்!
ஆம்! கடைசிப் படம் சோழமண்டல வாசம் கொண்டதுதான். நவக்கிரக திரிசனம் செய்தபோது எடுத்தது. ஆனால் எந்த ஊர் மணம் வீசியது என்று மறந்து போச்சே...!
சொல்லுங்களேன்! உங்களுக்கு அந்த மணம் கண்டுபிடிக்கத் தெரியுமே!!!//

இந்த லொக்கேஷன் - கொடி மரம் பின்னே மண்டபம் -பெரும்பாலான காவிரி தென்கரை கோவில்களில் காண இயலும்! ஸோ கொஞ்சமா கன்ப்யூசன் இருக்கு!

நவக்கிரகம் சொல்றதால ரெண்டு ஊர் என் சாய்ஸ் 1. கஞ்சனூர் 2.ஆலங்குடி
 
ஆயில்யன்,
உங்களுக்கே கம்ப்யூசனா? ஊர்காரர்களே குழம்பும்போது போது, எப்போதோ வந்து போகும் எங்களுக்கு...?

சென்னையில் ஓரிடத்துக்கு வழி கேட்டால், அதே பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் என்ன சொல்வார்கள் தெரியுமா? “தெரியாது” என்று கூலாக சொல்வார்கள். இது எப்படியிருக்கு..?
 
வெண்ணீரணிந்ததென்ன?
வேலைப்பிடித்த்தென்ன? - என்று திருச்செந்தூர் கோபுரமே போட்டிக்குச் செல்கிறது. சேரியா?
 
இப்போல்லாம் புள்ளைகளோட ஆட்சிதான் அதுவும் கடைக்குட்டியின் ஆட்சிகள் நடக்கிறது ஆதலால் எங்கப்பன் திருச்செந்தூர் முருகனை அனுப்பவும்...
 
அன்பின் நானானி

அழகான் தரிசனம் - அத்தனையும் முத்துகள் - துளசிக்கு வாய்த்த வரம் நானானிக்கும் கிடைக்க நல்வாழ்த்துகள் - என் தேர்வு - அரசமரத்தானின் அருமைத் தம்பி - கடற்கரைக் கோவிலான் தான். அட்டகாசம்

எங்கூரு ஆட்சி செய்யும் மீணாச்சியின் கோபுரம் சூப்பர் - இதனையும் அனுப்பலாம் - தப்பில்ல

சரி சரி வரட்டா

நல்வாழ்த்துகள் நானானி
நட்புடன் சீனா
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]