Tuesday, June 15, 2010

 

ஹவாக்கே ஸாத் ஸாத்.....கட்டாக்கே சங் சங் சாத்தி சல்ல்ல்...

கடுங்கோடை காலத்தில் பள்ளிப் பிள்ளைகள் வீட்டிலேயே அடைந்து கிடக்கவும் முடியாமல் வெளியில் போகவும் முடியாமல் தவிக்கும் பிள்ளைகளுக்காகவே வந்ததுதான் “சம்மர் கேம்ப்”கள்.

எத்தனை வகையான கேம்ப்புகள்....!!!ட்ராயிங், பெயிண்ட்டிங், க்ராப்ட் வேலைகள், ஸ்போக்கன் இங்லீஷ், ஸ்விம்மிங், கராத்தே, வாய்ப்பாட்டு, கீபோர்டு, டான்ஸ், ஸ்கேட்டிங்...இத்தியாதி...இத்தியாதி.

இந்த இத்தியாதிகளில் ஒன்றான ஸ்கேட்டிங்-ஐ தன் மகனுக்காக தேர்ந்தெடுத்தாள் என் மகள்.
அதற்கு ஒரு மாசம் கோர்ஸ்க்கான பணம் கட்டி, தேவையான ரத,கஜ,துரக,பதாதிகளையும் வாங்கிவந்தாள்.
மறுநாள் மாலை ஐந்து மணிக்கு பெசண்ட்நகர் பீச்சில் ஸ்கேட்டிங் தளத்துக்குப் போனோம்.
அதற்கு முன்பே குழந்தையிடம் என்னென்ன செய்யணும், செய்யக்கூடாது எல்லாம் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி அழைத்துப்போனோம்.

ர.க.து.பதாதிகளையெல்லாம் மாட்டிக்கொண்டு கிளம்பியாச்சு. கெட் செட் கோ....

முதல்நாள், வேகமாக உருளாதவாறு சக்கரங்களை சிறிது டைட் செய்துவிட்டார் மாஸ்டர்.
பின் கைகளை முன்பக்கம் நீட்டியவாறு கால்களை தூக்கி தூக்கி வைத்து நடக்க வைத்தார்.

அம்மாக்கள் கூட போக வேண்டாம் என்றாலும் சில அம்மாக்கள் பிள்ளைகள்கூடவே நடந்தார்கள். அவர்களில் மகளும் ஒருத்தி. ஷன்னு எப்பவும் வெளியே போனால் அக்கம்பக்கம்
என்ன நடக்கிறது என்று கவனித்துக்கொண்டே வருவான்.

அதேபோல் ரோலரோடு நடக்கும் போதும் அக்கம்பக்கம் பார்க்காமல் மேலே பார்த்துக்கொண்டே வந்தான். “அம்மா! ஏரோப்ளேன்!!!!அம்மா! காக்கா!!!என்று கூவிக்கொண்டே நடந்தான்.
மாஸ்டர் ஓடிவந்து, ‘’நோ..நோ..நேரே பாத்து நடக்கணும்.” என்றது கொஞ்சதூரம் நேரே பார்த்துப் போவான், திடீரென்று நான் உட்கார்ந்திருக்கும் இடத்தை கண்டவுடன், “ஆச்சீ...என்று ட்ராக் என்னை நோக்கி திரும்பிவிடும். பேரன் நடப்பதைப் பார்க்கும் ஆசையில் உக்காந்திருப்பேன். உடனே, அம்மா..அம்மா நீ இங்கே உக்காராதேயேன், ப்ளீஸ்...! பீச்சில் கொஞ்சநேரம் வாக் போய்ட்டு வா!என்று என்னை துரத்திவிடுவாள். நானும் தேமேன்னு மணலில் அரைமணி நேரம் வாக்கிவிட்டு வருவேன்.
என்னடா...கண்ணா? அதுக்குள் டயர்டாச்சா? கமான் கெட்டப்!

நந்து மாஸ்டர் வந்து தட்டிக் கொடுத்து ரோலரில் உருட்டி விடுவார். மறுபடி கிளம்பும். ரெண்டு நாள் கழித்து ஸ்க்ரூவை கொஞ்சம் லூஸ் பண்ணி விட மெதுவாக உருளப் பழகினான்.
ஒரு வாரம் நல்லாவே இருந்தது. பிறகு அம்மா கால் வலிக்குது நோ ஸ்கேட்டிங் என்று சொல்லவாரம்பித்தான். “நீ ஒழுங்கா ஸ்கேட்டிங் போனால் வரும் போது ப்ளானடெம்மில் பாட்டரி கார் ஓட்டலாம், தோசை சாப்பிடலாம்” என்றெல்லாம் தாஜா பண்ணி மேலும் நாலு நாட்கள் ஓடியது. உண்மையிலேயே குழந்தைக்கு முடியவில்லை போலும், கால்களில் அணிந்திருந்த ரோலரின் கனம் அவனுக்கு தாங்கவில்லை, பார்த்தாலே தெரிந்தது. வேண்டாம் போதும் இந்த வயசுக்கு இது அதிகம். அடுத்த வருடம் பாத்துக்கலாம் என்று மாஸ்டரிடமும் சொல்லிவிட்டு அவரின் ஒப்புதலோடு, அன்றோடு ‘தம்மானது’.

ஆனாலும் அவன் ஸ்கேட்டிங் போன நாட்களில் நான் கண்ட காட்சிகள் மனதுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. நம் குழந்தையை மட்டும் ரசிக்காமல் அங்கு ஸ்கேட்டிக் கொண்டிருந்த பல சிறுவர் சிறுமிகளையும் இன் கேமராவுக்குள் அடக்கினேன். பார்க்கப் பார்க்க பரவசம்!!! காற்றிக் கிழித்துக்கொண்டு அவர்கள் சல்லுன்னு பறப்பதைப் பார்க்கும் போது நாமும் கால்களில் ரோலரை மாட்டிக் கொண்டு பறக்கலாம் போலிருக்கும்

தனியே தன்னந்தனியே...
உக்கார்ந்திருக்கும் அம்மாக்கள்
என்ன ஒரு லாவகம்....!!!!!
இடையில் மாஸ்டர் விசிலடித்து அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து பயிற்சிகள் கொடுக்கிறார். ஸ்கேட்டிங் செய்யும் போது தேவையான நெழிவு சுழிவுகளை செய்து காட்டுகிறார்.
சிட்...ஸ்டாண்ட்!!!!
குனிந்து நிமிர்ந்து

பெரியவர்களோடு குட்டீஸ்களும் அரக்கப் பரக்கப் பார்த்து செய்வது பார்க்கப் பரசவசமாயிருக்கும்
நந்து மாஸ்டரின் கவனிப்பில் குழந்தைகள்.
அப்பாடா.....!!!கொஞ்சம் ரெஸ்ட்!!!!
ஸ்பைடர் மேன் உடையில் வந்த ரெட்டைச் சிறுமிகளில் ஒருத்தி. அவர்களின் அப்பாவிடம் இருவரையும் சேர்த்து படமெடுக்க அனுமதி கேட்டேன். அவர் ஓகே என்றார். அதற்குள் கேட்டுக் கொண்டே வந்த அம்மா நோ...நோ...! என்றுவிட்டார். அவரிடத்தில் நான் இருந்திருந்தால் அப்படித்தான் சொல்லியிருப்பேன். திருஷ்டி அல்லவா? முன்பின் தெரியாதவர்கள் தானே நாம். ஆனாலும் விடவில்லை. ஒரு குட்டி இங்கே!!
இன்னொரு குட்டி இங்கே
ஸ்பைடர்கேர்ள் தொப் என்று விழுந்துவிட்டாள்.

ரோலரில் வழுக்கி வழுக்கி தொப் தொப் என்று விழுவதும் ரசிக்கும்படியாயிருக்கும்.
வேகம் வேகம் போவோம் போவோம்.....
மாஸ்டரின் ஆணைப்படி நன்கு பழகிய சிறுவர்கள் ரயில் வண்டி மாதிரி வரிசையாக சல்லுன்னு காற்றைக் கிழித்துக்கொண்டு போகிறார்கள்.

பார்ப்போம் அடுத்த வருடம் எங்கக் குட்டி இப்படி சல்லுன்னு போகிறானா என்று.

Labels:


Comments:
Excellent!
 
படங்கள் எல்லாம் அருமை.

எப்பவாச்சும் அந்தப் பக்கம் போகும்போது கொஞ்சம் நின்னு வேடிக்கை பார்ப்பேன். ஆனாலும் வகுப்பு நடக்கும் நேரத்தில் போனதில்லை.


ஷன்.....ஷைன் ஆகிருவான் அடுத்தவருசம். குழந்தைதானே.....

நமக்குத்தான் எல்லாத்திலும் ஒரு அவசரம்.
 
முதல் வருகைக்கு நன்றி! அப்பாத்துரை!
 
துள்சி,
எனக்கும் அங்கிருக்கும் போது உங்களையும் அழைக்கலாம் என்று நினைப்பேன். உங்க வீட்டிலிருந்து ரெண்டே எட்டில் வந்துரலாமே! இருவரும் சேர்ந்து ரசிக்கலாமே!

ஆனால்,’இன்னொன்னு ஆச்சி’ ன்னு உங்களையும் நோக்கி வந்துவிட்டால், மகள் நம்மிருவரையும், வாக் போங்கன்னு துரத்திவிடுவாள். அதான்
 
பதிவின் தலைப்பில் நீங்கள் பாடும் பாட்டு சீதா அவுர் கீதா படம்தானே?
அருமை.
அதென்ன //பின் கைகளை முன்பக்கம் நீட்டியவாறு// "பிறகு" என்று திருத்துங்கள். அல்லது "பின்"ஐ எடுத்து விடுங்கள்.
சகாதேவன்
 
யப்பா...! துள்சிக்கு அண்ணாச்சி வாங்க.

‘பின்’னுக்குப் பின்னாடி ஒரு கமா போட்டுக்குங்க. மேட்டர் டாலியாயிடும்.
சேரியா?
 
//ட்ராயிங், பெயிண்ட்டிங், க்ராப்ட் வேலைகள்//இதெல்லாம் முன்னெ பள்ளியிலேயே வகுப்பில் கற்றுத் தந்தார்கள். இப்போ பள்ளியில் பாடம் ஹோம் ஒர்க் என்று கஷ்டப்பட்ட பிள்ளைகளை விடுமுறையிலும் படுத்தவென்றே வந்ததுதான் மற்ற //இத்யாதி//களெல்லாம்.

என் பேத்திகளும் சம்மரில் ட்ராயிங் க்ளாஸ் சென்றார்கள். அதற்காக வாங்கி வந்த //ர.க.து பதாதி//களின் பில்லைப் பார்த்தால்.....
அவர்கள் தாத்தாவே அழகாக வரைய சொல்லிக்கொடுப்பார்.

//நாமும் கால்களில் ரோலரை மாட்டிக் கொண்டு பறக்கலாம் போலிருக்கும்//
நம் கையில் ரெக்கை மாட்டிக் கொண்டால்தான் பறக்கலாம். காலில் ரோலர் மாட்டினால் ரோலலாம்.
சும்மா ஜோக்.

தாமரை
 
படங்கள் எல்லாம் அருமை!!
 
சூப்பர் பதிவு
 
பதிவும் படங்களும் நன்று.
 
அருமையாக இருக்குங்க,என் மகனும் ஸ்கேட்டிங் படிச்சப்ப அதே அனுபவம்,அவன் 4th படிச்சாபோ தூத்துகுடியில் நடந்த போட்டியில் கலந்து கிட்டு டிஸ்ட்ரிக்ட் ( ஒரு கிலோ மீட்டர் தூரம்) 2nd வந்தான்.இப்ப +2 அதுக்கு எங்க நேரம்.
 
தாமரை,

ரொம்ப சரி. ரோலலாம்தாம். ஆனால் அப்ப்டி உருளும் போது ரெக்கைகள் இல்லாமலே காற்றை கிழித்துக் கொண்டு பறப்பது போல் பரவசமாயிருக்கும்.
 
திருமதி மேனாகஸதியா,

முதி வருகையா? ஆயின் மிக்க நன்றி!!
 
கோமா,
டாங்ஸ்!!
 
மாதேவி,
ரசித்தமைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி!!
 
ஆசியா ஒமர்,
நீங்க தூத்துக்குடியில் இருந்தீர்களா? அப்ப திருநெல்வேலியா?
உங்கள் மகன் +2 வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி விரும்பிய மேல்படிப்பு படிக்க வாழ்த்துக்கள்!!
 
நல்லாருக்கு மேடம்.
 
அன்பின் நானானி

பேரன் ஷன் ரோலர் ஸ்கேட்டிங்க் கற்றுக் கொள்ளும் காட்சி கண் கொள்ளாக் காட்சி - கூடவே அருமை அம்மா - அவரது அம்மாவ்னை விரட்டியவாறே ! எத்தனை எத்தனை படங்கள் -அத்தனையும் சூப்பர் நானானி

நல்வாழ்த்துகள் நானானி
நட்புடன் சீனா
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]