Wednesday, April 7, 2010

 

I for வவ்வவ் மம்மம்

I FOR வவ்வவ் மம்மம்!!!
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களேயான.......ங்கிற இக்கால ரேஞ்சிலும் இல்லாமல்,

அந்தக்காலத்தில், சாயங்காலம் ஆறரை மணிவாக்கில் எங்கள் தெருவில் டண்டனக்கடி..டண்டனக்கடி என்று கொட்டடிக்கும் சத்தம் கேட்டு ஹோம்வொர்க்கை பாதியில் விட்டு விட்டு வாசலுக்கு ஓடுவோம்.
அங்கே மாட்டு வண்டியில் ஒருவர் ஒக்காந்துகொண்டு நோட்டீஸ்களை விசிறிக்கொண்டே வருவார். மற்றவர், நெத தியேட்டரில் என்ன படம் என்பதை ஃபனல் மாதிரி வாயில் வைத்துக்கொண்டு, “பாலஸ்-டி-வேல்ஸில்..மாயாபஜார், பாலஸ்-டி-வேல்ஸில் மாயாபஜார்!!” என்று அப்போதைய படத்தை பானர் கட்டி பாலாபிஷேகம் செய்யாத குறையாக கூவிக்கொண்டே போவார். சிறுவர்கள் எல்லாம் பின்னாலேயே ஓடி நோட்டீஸ்களை வாங்கிவருவார்கள்.

இப்படி அக்கால ரேஞ்சிலும் இல்லாமல் நான் கொடுத்த விளம்பரம்தான், “I for வவ்வவ் மம்மம்”
,முந்தய பதிவு.
சேரி..சேரி...இன்னும் மேட்டருக்கு வராவிட்டால் மேலே பாஞ்சு குதறிவிடுவீர்கள்.

முதன் முதலாக பள்ளித்தலத்துக்குள் அடியெடுத்து வைக்கும் சின்னஞ்சிறு சிறார்களுக்கு பள்ளியில் ஒரு நேர்காணல் வைப்பார்கள். ஸோ கால்ட் இண்டர்வியூ!!

அதில் கிடைத்த சுவாரஸ்யங்கள்தான் பதிவுக்கான மேட்டர். சப்பை மேட்டர் இல்லீங்க...நல்ல கொழுத்த மேட்டர்!!!

செயிண்ட் லூயிஸில் இருக்கும் அண்ணன் பேரன் ஷிவ். பத்மா ஷேஷாத்திரி பள்ளிக்கு எல்கேஜி இண்டர்வியூக்கு அம்மாவோடு போனான்.
டீச்சர், முகத்திலுள்ள உறுப்புகளைக் காட்டிக் காட்டி குழந்தையிடம் கேட்க,
இயர்
நோஸ்
மவுத். இப்படியே சொல்லிக்கொண்டு வர கண்ணைக்காட்டிக் கேட்டதும்
ஐஸ்! என்று சொல்லிவிட்டு உடனே,”ஐஸ் சாப்பிட்டால் கோல்ட் பிடிக்கும்.” என்ற கூடுதல் தகவலையும் சொல்ல டீச்சர் சிரித்துவிட்டார்கள். அம்மாவின் கண்டிப்பை அங்கே தெரிவித்து விட்டான்.

அதேபோல் மிருகங்களின் படங்களைக் காட்டி கேட்டுக்கொண்டே வர அனைத்தையும் சரியாக சொன்ன ஷிவ் பசுமாட்டின் படத்தப் பார்த்து,”ம்பா!” என்றதும் கொல்லென்ற சிரிப்பு. அம்மாவிடம் விளக்கம் கேட்டதும் சொந்த ஊருக்குப் போனபோது அங்கு மாட்டு கொட்டாயில் பசுமாட்டை “ம்பா” என்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்!!!
எப்படி யோசிக்கிறார்கள் பாருங்கள்!!!

இது தொண்ணூறுகளில் நடந்தது.

போன மாதம் இண்டர்வியூவில் ‘கலக்க போனது யாரு?’ தெரியுமா?
எங்க வீட்டு வாண்டு ஷன்னுதான்.

முதல் ஸ்கூலில் அப்பா அம்மாவிடம் ஃபார்மலாக பேசிக்கொண்டிருந்தபோது குழந்தை அந்த அறையில் இருந்த பொருட்களையும் விளையாட்டு சாதனங்களையும் ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தான். தடுக்கப் போன அம்மாவை நிறுத்திய டீச்சர். ‘தடுக்கவேண்டாம்.’என்றுவிட்டு பேசிக்கொண்டே அவனையும் கவனித்து கொண்டேயிருந்திருக்கிறார்.
பின் சிறுவனிடம் மிருகங்கள் பறவைகள் படங்களைக் காட்டி கேட்டுக் கொண்டே வந்திருக்கிறார். கிளி படம் வந்தவுடன்,
’What is this?
'Parret.'
'What color is parret?'
'Geen color.' (கீன் கலர்)
'What is this?
'Monkey.'
'Where do you see monkey?
'மத்து மேலே.’ (மரத்து மேலே)

குழந்தைக்கு இன்னும் மழலையே போகலையே? பின்ன மூணு வயசு குழந்தை செந்தமிழ் மாநாட்டில் கவிதையா பாடப்போகிறது? நல்ல கேள்வி.
அதன் மழலையே ஒரு செந்தமிழ் கவிதையல்லவா!!

ரெண்டாவது ஸ்கூல் நேர்காணல். ஒரு சேஸிங், ஒரு மலை உச்சி, ஒரு நீண்ட வசனம் எதுவுமில்லாமல் வந்தது க்ளைமாக்ஸ்!!!!

டீச்சர், A FOR, B FOR, C FOR, D FOR என்று கேட்டுக்கொண்டே வந்து I FOR ? என்று கேட்கவும் வழக்கமாக ICE, அல்லது ICE-CREAM என்று சொல்பவன் அன்று சிலவினாடிகள் நிதானித்து விட்டு சொன்னான்........ ” I FOR வவ்வவ் மம்மம்!!!!!!!!!! ”
டீச்சர் புரியாமல் விழித்தார். ‘என்ன சொல்கிறான்?’ அம்மாவுக்கு சட்டென்று புரிந்துவிட்டது.

முன்தினம் நீல்கிரீஸ் ஸ்டோரில் சுத்தி வந்தபோது செல்லப்பிராணிகளுக்கான ஷெல்பில் அவன் ஒரு பொருளைக் காட்டி அம்மாவிடம்,’அது என்னது?’ என்று கேட்டிருக்கிறான். அம்மா அவனுக்குப் புரியும் வகையில்,’அது வவ்வவ் மம்மம்.’ என்று விளக்கியிருக்கிறாள். அதன் வடிவம் ஆங்கில எழுத்து ’I’ மாதிரி உள்ளதால் என்ன அழகாக 'I'யையும் நாய்க்குப் போடும் எலும்பையும் சிங்ரனைஸ் பண்ணியிருக்கிறான்!!!அவனுக்கு ”மாத்தி யோசி” அப்டீன்னு மணியடிச்சிருக்குமோ?

வவ்வவ்! உன்னோட மம்மம் எதுன்னு உனக்குத்தெரியுமா?
அடடே.....!இது இல்லை...இது இல்லை!
ஹாங்! இதுதான் உன்னோட மம்மம்!!!!!!!!!! இது டோட்டோ லைனில் இருக்கிறது. (ஸ்லீப்பிங் லைன்)
இது நிக்க லைனில் உள்ளது.(ஸ்டண்டிங் லைன்) இதுதான் அவனை அப்படி மாத்தி யோசிக்க வைத்தது.
குழந்தைகளின் கற்பனைக்கு வானமே எல்லை. அவர்கள் ரூம் போட்டெல்லாம் யோசிப்பதில்லை. ஸ்பாண்டேனியஸ் என்பார்களே அது போல் விரல் சொடுக்கும் நேரத்தில் வந்து விழுபவை. இதுபோல் நீங்களும் சுட்டிகளின் நேர்காணல் சுவாரஸ்யங்களை பதியலாமே!
பி.கு.:
சே..ரி...பிகு பண்ணாமல் சொல்லிக்கிறேன். போன பதிவில் தலைப்பை மட்டும் அடித்துவிட்டு வழக்கம்போல் பிறகு வந்து எழுதலாமென்று. ‘SAVE' அடிப்பதற்குப் பதில் தவறி 'PUBLISH' அடித்துவிட்டேன். ஹி..ஹி..!! ஆனாலும் சமாளிச்சுடேனே!!!

Labels:


Comments:
புதுகைத்தென்றல், கோமா,
இப்போ படிச்சுட்டு சொல்லுங்கோ. சேரியா?
 
நல்லா மாத்தியோசிச்சிருக்கான் குழந்தை.இத்தனை நாள் இது என்னவா இருக்கும்ன்னு தலையை பிச்சிக்கிட்டிருந்தேன். உங்க பாணியிலேயே கலக்கலா போஸ்ட் வந்துடுச்சு. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.

நிறைய எழுதுங்கோ நானானிம்மா. நோட்டீஸ் போடும் கொசுவத்தி ஆஹா..
 
என் வகுப்பு மாணவன் வட்டம் பத்தின கிளாஸுக்கு அப்புறம் எல்லாமே வட்டமா தெரிஞ்சு சக மாணவன், மனீத்தின் தலை வட்டம்னு சொன்னான். அதை பதிவா போட்டிருந்தேன். அந்த ஞாபகம் வந்தது. பசங்க செம குறும்பு + அதீத அறிவாற்றல்

:)) பதிவு சுவாரஸ்யம் நானானி. ஆனாலும் அமைதிச்சாரல் சொல்லியிருக்கறமாதிரி மண்டைய பிச்சுகிட்டோம்.
 
மாற்றி யோசித்த விதம் சூப்பர்:))))!

கடந்த பதிவின் டைட்டிலும் புரிந்தது:)!
 
உங்கள் பேரன் நன்றாக கலக்கியிருக்கிறான்.தன் இனிமையான
மழலையால்.(செந்தமிழ் கவிதைதான் பேரனின் மழலை மொழி.)

நல்லா மாத்தி யோசிச்சிருக்கான்.
 
அமைதிச்சாரல்,
ஆஹா...!நல்லாவே தலையை பிச்சுக்க வச்சிட்டேன். தலையிலே மிச்சம் மீதி ஏதாவது இருக்கா?

முதலில் வந்து அமைதியாக கருத்து சொன்னதுக்கு வந்தனம்.
 
புதுகைத்தென்றல்,
இப்ப தெளிவாயிடுச்சா?

குழந்தைகளோடு உரையாடும் போது நமக்கே எவ்வளவு விஷயங்கள் தெரிகின்றன!
 
நல்லது ராமலஷ்மி.
 
அன்பு நானானி ,உங்க பதிவைப் பார்க்கும்போது நாமெல்லாம் சேந்து ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கலாம்னு ஆசை வருது:)எப்போது மழலை கேக்கலாம் இல்லையா.
 
சரியாகச் சொன்னீர்கள் கோமதி அரசு!!
 
வல்லி,
நா ரெடி, அப்ப நீங்க?
 
வல்லிம்மா நல்ல ஐடியா,

நான் ரெடி. :)
 
எனக்கு எப்பவுமே அப்படி ஓர் ஆசை உண்டு, வல்லி. வேலைக்குப் போகும் பெண்களின் குழந்தைகளுக்காக ஒரு ’டே கேர்’ ஆரம்பிக்கணுமின்னு. மழலைகளோடு மழலையாக உழலலாமே!!!
 
//தலையிலே மிச்சம் மீதி ஏதாவது இருக்கா?//

அதைத்தேடப்போனா,உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னு ஆயிடும். :-(
 
புதுகைத்தென்றல்,
நீங்களும் ரெடியா? அப்ப மஜாதான்!!!
 
அடுத்தமுறை நானானி வீட்டுக்குப் போகும் போது மழலை அகராதியோடு போகவேண்டும்.....

ஷன்னு கிட்டே போகும் போதே, நானானி ப்ளீஸ்! ஷன்னு என்ன சொல்றான் சொல்லிங்களேன்னு கெஞ்சவேண்டாம் பாருங்கள்.....
நானே டீல் பண்ணிக் கொள்வேன்.
 
கோமா,
அகராதி கொண்டு வந்து நீங்களே டீல் பண்ணிக்குவீங்களா? சேரிதான்.

அகராதியில் இல்லாததைச் சொல்லும் போது வச்சுக்கிறேன் கச்சேரி...டீலா நோ டீலான்னு.
 
அன்பின் நானானி

மாத்தி யோசிக்கும் ஷன் திறமை வளர்க !

நல்வாழ்த்துகள் ஷன் - நானானி

நட்புடன் சீனா
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]