Monday, April 19, 2010

 

ஆவாரம்பூவு ஆரேழுநாளாய்........சமையல் குறிப்பு

மங்கலமான மஞ்சள் நிறத்தில் தகதகவென தங்கம் போல் பளபளத்து கண்ணைப்பறித்து ,”என்னைப் பறித்து எப்போ சமைக்கப்போகிறாய்?” என்று என் கவனத்தையும் பறித்துக்கொண்டேயிருந்தது.
ஏப்ரல் மாசம் இம்மரத்தில் ஆவாரம்பூ பூத்து குலுங்கிக்கொண்டிருக்கு. எங்க வாட்ச்மேனிடம் ஒரு கூடையைக் கொடுத்து எங்க ப்ளாட்டுக்கு வெளியே நிற்கும் மரத்திலிருந்து பறித்துத் தருமாறு சொன்னேன். அவரும் நான் கொடுத்த கூடை நிறைய மஞ்சள் பூக்களை நிரப்பித் தந்தார்.

முதன்முறையாக செய்வதால் தனி ஆவாரம்பூ மட்டுமில்லாமல் அதோடு பாலக்கீரையும் வழக்கம் போல் நம்மோட தோஸ்த் மாங்காயிஞ்சியும் சேர்த்துக் கொண்டேன்.

பொடியாக அரிந்து கழுவிய பாலக்கீரை, தண்ணீரில் நன்கு அலசி எடுத்த ஆவாரம்பூ, பொடியாக அரிந்த மாங்காயிஞ்சி.

பாத்திரத்தை அடிப்பிலேற்றி, சிறிது எண்ணையூற்றி, அரிந்த வெங்காயம், இஞ்சி, பூண்டு வதக்கி, அதோடு பாலக் கீரை, ஆவாரம்பூ, மாங்காயிஞ்சியும் சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றிவேகவிடவும். தேவைக்கேற்ப காரம் உப்பு சேர்த்துக்கொண்டு நன்கு வேகவிடவும்.

வெந்ததும், வேகவைத்த துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் தேங்காய், ஜீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த விழுதை கூட்டில் விட்டு நன்கு கலக்கி சிறிது கொதிக்கவிட்டு தாளிதம் சேர்த்து இறக்கினால் ஆவாரம்பூ கூட்டு ஆரவாரமாய் மணக்கும்.

நான் தேங்காய் சேர்ப்பதில்லை, அதற்கு பதிலாக, பொட்டுகடலை, வேர்கடலை, முந்திரிப் பருப்பு, பாதாம்பருப்பு இவற்றை 2:1:1:1 என்ற விகிதத்தில் மிக்ஸியில் பொடி பண்ணி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்வேன். தேங்காய் வேணுமென்ற இடங்களில் இப்பொடியை தண்ணீரிலோ அல்லது பாலிலோ கரைத்து கூட்டில் கலந்து கொள்வேன். தேங்காய் இடத்தை அழகாக சுவையாக பிடித்துக்கொள்ளும்.உலர்ந்த ஆவாரம்பூவை குளிக்க உபயோகிக்கும் பயத்தமாவில் சேர்க்க வேண்டிய வாசனைப் பொருட்களோடு சேர்த்து மிஷினில் அரைத்து உபயோகித்துத்தான் பழக்கம். இப்பூவை சமைக்கலாமென்பதை, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் ஒருமணிக்கு மக்கள் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கை மணம்’ நிகழ்ச்சியிலிருந்து தெரிந்து கொண்டேன். புழக்கத்திலில்லாத தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற தானியங்களிலிருந்து சுவையான சமயற்குறிப்புகளை வழங்குகிறார்கள்.

Labels:


Comments:
அன்பின் நானானி

ஆவாரம்பூ - சமையலா - கேள்விப்பட்டதே இல்லையே - மக்கள் தொலைக்காட்சி கைங்கர்யமா - பலே பலே - சாப்பிட்டவங்க என்ன சொன்னாங்க - அதச் சொல்லுங்க மொதல்ல -

சமையல் குறிப்பு நல்லாவே இருக்கு - வூட்ல கூப்பிட்டுக் காமிச்சேன் - ஒண்ணும் ஆரவம் காட்டலே - பாப்போம்

நல்வாழ்த்துகள் நானானி.
 
இப்போ பூக்காலம்தானே... செஞ்சு சாப்பிடவேண்டியதுதான்.
 
அன்பு சீனா,
பல பதிவுகளாக காணோமே?

//சாப்பிட்டவங்க என்ன சொன்னாங்க - அதச் சொல்லுங்க மொதல்ல//
ரங்ஸ் சாப்பிட்டுவிட்டு ஒண்ணுமே சொல்லாமல் போய்விட்டார்கள். அப்படீன்னால் நல்லாருக்குன்னுதான் அர்த்தம்!!!

//வூட்ல கூப்பிட்டுக் காமிச்சேன் - ஒண்ணும் ஆரவம் காட்டலே - பாப்போம்//
இது இன்னொருவகையான தங்ஸ் போலும்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! உங்களுக்கும் உங்க வூட்டுக்கும்.
 
அமைதிச்சாரல்,
உண்மையிலே நல்லாவே இருந்தது.
இயற்கை நமக்களித்த வளங்களை, ஒன்று அழிப்போம் அல்லது பயன்படுத்தாது விடுவோம். சேரிதானே?
 
ஆவாரம்பூவு ஆரேழுநாளாய் உங்களை சமைக்க சொல்லி கேட்டுக் கொண்டதோ!

நல்ல சமையல் குறிப்பு.

செய்துப் பார்த்து விடுகிறேன் ஊருக்கு வந்து.
 
கோமதி அரசு,

//ஆவாரம்பூவு ஆரேழுநாளாய் உங்களை சமைக்க சொல்லி கேட்டுக் கொண்டதோ!//

ஆமாம், போன வருட சீசனிலேயே பறிக்காமல் விட்டுவிட்டாய், இந்த வருடமாவது பறி, சமை! என்று ஆரேழுநாளாய் ஒரே தொல்லை!

அனேகமாக நீங்களும் அடுத்த வருட சீசனில்தான் சமைக்கமுடியுமென நினைக்கிறேன். காரணம், நீங்க ஊருக்குத் திரும்பும்போது சீசன் முடிந்திருக்கும்.
 
தேவாரம் பூ:[பாவாரம் பூவிடம்]

அதோ அதுதான் நானானி வீடு ....சத்தம் போடாம வா....நாம அவங்க கண்ணில் பாட்டா ,அவ்வளவுதான் ......கிள்ளி, ஆஞ்சு ,வதக்கி ,கிளறி போட்டுடுவாங்க....
 
பாவாரம் பூ, தேவாரம் பூவிடம், :அப்ப சேரி, வா இதுதான் கோமா வீடு சும்மா சத்தம் போட்டுக்கிட்டே போவலாம். அவங்க கண்ணில் பட்டாலும் ஒண்ணுமில்லே.
அவங்களுக்கு கிள்ளவும் தெரியாது, ஆயவும் தெரியாது, வதக்கவும் தெரியாது, கிளறவும் தெரியாது.

தேவாரம் பூ: ஐயா ஜாலி!!!!
 
ஹி ஹி
 
அட நல்லா இருக்கே அந்த தேங்காக்கு மாற்று.. செய்துப்பாத்துடலாம்..
 
கயல்,
தேங்காக்கு மாற்றாக நான் உபயோகிப்பது. இது ஒரு மல்டி-பர்பஸ் பொடி. வறுக்கும் காய்களில் மொறுமொறுப்புக்காகவும் குருமாக்களில் திக்காக ஆக்கவும் இன்னும் பல வகைகளில் பயன்படும் மேஜிக் பொடி! செய்து பாருங்கள். அதன் சிறப்பை உணர்வீர்கள். சேரியா?
 
ஆரவாரமா ஒரு ஆவாரம்பூப் பதிவா!!!!

அந்த தேங்காய்க்குப் பதில் ரொம்பப் பயன். செஞ்சு பார்த்துரணும் சீக்கிரம்.
 
நானானிம்மா, மஹாராஷ்ட்ர சமையலிலும், தேங்காய்க்கு மாற்றா வேர்க்கடலைப்பொடி சேர்த்துப்பாங்க பார்த்து ஃபாலோ பண்ணியிருக்கேன். உங்க மல்டி பர்ப்பஸ் பொடி சூப்பர்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]