Saturday, April 10, 2010

 

மாங்காய் + இஞ்சி = மாங்காயிஞ்சி

மாங்கா இஞ்சி! அதை உடைத்து முகர்ந்தால் என்ன ஒரு மணம்!!!!
அவள் இடுப்பழகியோ....கண்ணழகியோ....காலழகியோ.....கையழகியோ மட்டுமல்ல, மொத்தத்தில் அவள் எல்லாம் கலந்த பேரழகி!!!
மஞ்சள் புடவைக்கு பச்சை ரவிக்கை மேட்ச் என்பது போல மாங்கா இஞ்சி, பச்சைமிளகு, எலுமிச்சை ஜூஸ், உப்பு. இதுதான் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த காம்பினேஷன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவள் எல்லோரோடும் சகஜமாக கலந்து கள்ளமில்லாமல் உறவாடும் ஒரு மார்டன் கேர்ள்.

எந்த காய் கூட்டோடும் இயல்பாக சேர்ந்து கொள்வாள். வாயில் கடிபடும்போது தனி ருசி காட்டுவாள்.

எந்த பொரியலோடும் போய் ஒட்டிக்கொள்வாள். பொரியலில் இஞ்சியின் சுவையே மிகையாக தெரிய வைப்பாள்.

தயிர்சாதத்தில் தாளித்து விட்டால் மணத்து ஊரையே கூட்டுவாள். கூட ரெண்டு வாய் வயிற்றுக்குள் போகச் செய்வாள்.

உப்புமாவில் அரிந்து போட்டால் உப்புமாவுக்கே எடுப்பாக தெரிந்து, சப்புக் கொட்டி சாப்பிட வைப்பாள்.

அவியலில் சேர்க்கும் காய் சைசில் நறுக்கி செய்தால் மற்ற காய்களோடு இணைந்து உறவாடி சுவை கூட்டுவாள்.

இவள் இடுப்பழகி மட்டுமல்லதானே? சாமுத்திரிகா லட்ஷணமும் ஒருங்கே பொருந்திய, மிஸ் யூனிவர்ஸ், மிஸ் வர்ல்ட்-க்கு இணையான மகாப் பேரழகி.
ஒத்துக்கிறீங்களா?

Labels:


Comments:
:-)nice
 
Tasty uppuma??? Never!
;-)
 
மாகாளியோடு செம காம்பினேஷனாக நச்சுன்னு வாயில் படும் சுவையை விட்டுடீங்களே நானானி.

எங்க அம்மம்மா செஞ்சு தரும் மாகாளி, மா இஞ்சி ஊறுகாய் ஞாபகம் வந்திருச்சு.
இவளுக்கு இணை இவள்தான்
 
காம்பினேஷன் க்ரூப்பில் லைம்ஜூஸ் தனியே பிழைத்துக் கொள்ளும்,பச்சை மிளகை அம்போன்னு விட்டு விட்டீர்களே.....தகுமா...
 
இயற்கை ராஜி,
புது வரவா? ப்ளாக் உலகிற்கு நல்வரவு. நன்றி!
 
தமிழ்பிரியன்,
உண்மையாகவே!!!சாப்பிட்டுப் பாருங்கள், உப்புமா பிடிக்காதவர்கள் கூட கொண்டா..கொண்டா என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். குதா கீ கசம்!!!!
 
தென்றல்,
மாகாளி நான் உபயோகப்படுத்தியதில்ல்லை. ஊறுகாயிலிருந்து வேறுபட்டு, தினப்படி சமையலில் உபயோகிக்கும் விதம் பற்றியே சொல்லியிருந்தேன்.
 
கோமா,
முதலில் பதிவை சரியாக வாசியுங்கள். பள்ளிப்பாடம் போல் மேம்போக்காக படிக்கவேண்டாம். பச்சைமிளகு+இஞ்சி+லைம்ஜூஸ்+உப்பு காம்பினேஷனை முதல் நாலு ஐந்தாவது வரிகளிலேயே சொல்லிவிட்டேன். பதிவே அந்த காம்பினேஷன் தவிர பிற உபயோகங்கள் பற்றியதுதான். சேரியா?
 
மாங்காய் இஞ்சி எனக்கும் பிடிக்கும்.

தலைப்பையும் அதற்கேற்ற முதல் படத்தையும் ருசித்... இல்லை, ரசித்தேன்:)!
 
எங்க வீட்டு அவியல் நாஞ்சில் நாட்டு பக்குவத்தில் இருக்கும்.. ஆகவே சேர்த்ததில்லை. மற்ற எல்லாவற்றையும் ருசித்திருக்கிறேன்.
 
http://pudugaithendral.blogspot.com/2010/04/blog-post_12.html

விருது கொடுத்திருக்கிறேன். நானானி. வந்து பாருங்க
 
தென்றல்!
பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன்.
தேன்..தேன்..தேன்.
பத்மஸ்ரீ விருதைவிட, சிபாரிசில்லாமல் கிடைத்த இவ்விருது
ரொம்ப ரொம்ப சிறப்பு.
 
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
 
அன்பின் நானானி

மிஸ் யுனீவர்ஸ் மாங்கா இஞ்சியின் பல்வேறு கூட்டணிகள் Kஆண்டு மகிழ்ந்தேன் - எங்க ஊட்ல இந்த இஞ்சி ஊருகா போடுவாங்அக் - எனக்குப் பிடிக்கும்

நல்லாருக்கு
நல்வாழ்த்துகள் நானானி
நட்புடன் சீனா
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]