Tuesday, March 16, 2010

 

இது என்ன...இது என்ன....இது என்ன?

என்ன...என்ன...என்ன...இது என்ன?
மேடைகளில் ‘பூனை நடை’ நடப்பது போல் அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி திரும்பி போஸ் கொடுக்கும் இதுதான் என்னங்கிறேன்?

ப்ளாட்களில் வசிப்போருக்கு இது ஒரு வரப்பிரசாதமாம்! அப்டீன்னாரு அந்தக் கடைக்காரர்.


திருநெல்வேலியில் என் ஓர்ப்படிக்குத் துணையாக பாத்திரக்கடை ஒன்றுக்கு

சென்றிருந்தேன்.

அவர் அங்கே தேவையானவற்றைத் தேடி வாங்கிக்கொண்டிருக்க.....வலையில்தான் surfaலாமோ? நான் இலக்கில்லாமல் அக்கடையில் ச்சும்மா ஸர்ஃபிக்கொண்டிருந்தேன்.

அங்கே ஒரு ஷெல்பில் உட்புறத்தில், ‘என்னைப் பாரேன்...என்னைப் பாரேன்.’ என்று தவித்துக்கொண்டிருந்தது இந்த வஸ்து.

என் கண்களில்தான் இம்மாதிரி வித்தியாசமான பொருட்கள் படும்.

உள்ளே கையை விட்டு உருவி எடுக்க முயன்றால், பாரேன் பாரேன் என்றது வர, மாட்டேன் மாட்டேன் என்று கமுக்கமாய் இருந்தது.

சாதாரணமான் தட்டு என்று லகுவாக எடுக்க முயன்றபோது, செம கனம் கனத்தது. விடாக்கண்டியாக பலப் பிரயோகம் செய்து எடுத்துப் பார்த்து என்னவென்று புரியாமல் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டிருந்தபோது, ஓடோடி வந்தார் கடைக்காரர்.

‘அம்மா! இது ப்ளாட்களில் வசிப்ப்பவர்களுக்கு உபயோகமானது.’ என்றார். அப்படி என்ன உபயோகம்? ‘டட்டடையிங்!’ தேங்காய் உடைக்கவாம்!!

அறிவாளோ, கல்லோ, அம்மிநுனியோ தேவையில்லை. நடுப்பாகத்திலிருக்கும் கூர்மையான பகுதில் (யாரை வேணுமானாலும் நினைத்துக்கொண்டு) ஒரு கண்ணை மூடிக்கொண்டு, உங்க கண்ணையில்லை தேங்காயின் ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே போடு!

தேங்காய் ரெண்டாக உடைந்து உள்ளிருக்கும் நீர் தட்டில் சிந்தாமல் சிதறாமல் வடிந்துவிடும்
தட்டில் சேமித்த தேங்காயின் தண்ணீரை தூசு தும்பு இல்லாமல் வடிகட்டி, தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டு ஓடி வரும் பேரனுக்கோ பேத்திக்கோ தரலாம்.
அடிப்பாகத்தில் கனமான கருங்கலை வைத்து ஸ்க்குரு பண்ணியிருக்கிறார்கள். அதனால்தான் அந்த கனம் கனத்தது. சமையலறை மேடையில் அங்கிங்கு நகராமல் ஸ்திரமாக அமர்ந்து தேங்காயை உடைக்கத் தோதாக அமைந்த்து.
இது எப்படியிருக்கு? நல்லாருக்குத்தானே?

Labels:


Comments:
ஃப்ளாட் மட்டும் இல்லீங்க, எங்கள் வீட்டிலும் தேங்காய் உடைக்க கிச்சனில் வழி இல்லை.எங்கே வாங்கினீர்கள்னு சொல்லுங்களேன்
 
அட்டகாசமா இருக்கே எனக்கு ஒன்னு ஆர்டர் செய்யறேன்.. :) நான் ஒரு சுத்தியலை வைச்சுக்கிட்டு படாத பாடு படுவேன்.
 
சூப்பரா இருக்கு நானானிம்மா.. எந்தக்கடைன்னு சொன்னீங்கன்னா அடுத்த தடவை நான் போகும்போது தேங்காத்தொட்டியை பிக்கப் பண்ணிக்குவேன்.

இதைப்பாத்தா, சில கோயில்களில் வெச்சிருக்கிற தேங்காத்தொட்டி ஞாபகம் வருது.
 
சூப்பர் ஐடியா!!!!

ஆமாம். மேடை மேல் வச்சு இந்தப் போடு போட்டால் மேடைக்கு ஒன்னும் ஆகாதுதானே?

சென்னையில் 'கிடைக்குமிடம்' உண்டா? இல்லை உங்ககிட்டேயே ஹோல்ஸேல் ஆர்டர் தரலாமா?:-)))))
 
//இது எப்படியிருக்கு நல்லயிருக்கு தானே?//

நல்லா இருக்கு.
 
நீங்கள் ஃப்ளாட்டிலா வசிக்கிறீர்கள்?

ஆள், அம்பு, சேனை உள்ளவர்களுக்குத் தேவையில்லை. ஆனாலும் வாங்கிய இடத்தை சொல்கிறேன். திருநெல்வேலியில் பாளை சந்தை(மார்கெட்)யில் உள்ள
கணேஷ் ஸ்டோர்ஸில் கிடைக்கிறது.
 
//நான் ஒரு சுத்தியலை வைச்சுக்கிட்டு படாத பாடு படுவேன்.//

நான் இதுவரை எப்பவோ மணிமுத்தாறு ஆத்திலிருந்து எடுத்து வந்த வழவழ மொழுமொழு கல்லைத்தான் உபயோகித்தேன். அதை விட்டு விட்டு இப்போ இதை உபயோகிக்கும் போது என்னை ஒரு உக்கிர பார்வை பார்க்குமே பாக்கணும்.
 
முத்துலெட்சுமி,
உங்கள் ஆர்டர் எடுத்துக்கொள்ளப்பட்டது. சேரியா?
 
அமைதிச்சாரல்,
கிடைக்குமிடம் சகாதேவனுக்குச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் திருநெல்வேலியா? அப்ப சுலபமாயிற்று. வேறு கிடைக்கும் இடம் ஊர் எனக்குத் தெரியவில்லை.

உங்கள் ஆர்டரையும் எடுத்துக் கொண்டால் போச்சு!!
 
துள்சி,
யாரையாவது நினைத்துக்கொண்டு நீங்கள் போடும் போடைப் பொறுத்தது. மற்றபடி மேடைக்கு ஒண்ணும் ஆவாது.

சென்னையில் கிடைக்குமிடம்......தேடுங்கள்!!!
இல்லைண்ணா உங்க ஆர்டரையும் எடுத்துக்கவா?
 
கோமதி அரசு,
மிக்க நன்றி!!!நீங்கதான் ஆர்டர் பக்கமே வரலை.
 
ஆங்...!இதன் விலையைச் சொல்லவேயில்லையே!!

380 ரூபாய்!!!!இப்ப நல்லாருக்கா?
 
தர்மபத்தினி நம்மையும் மதித்து கூப்பிடு கையில் ஒப்படைக்கும் வேளையில் இந்த தேங்காய் உடைப்பதும் ஓன்று. அது உமக்கு பொறுக்கலையா ஐயா....இது நியாயமா...
 
நானானி தேங்காய் உடைக்க அம்மிக்கல் இருக்கு. துருவத்தான் ஒரு கருவி வேணும். அது உங்க ஊர்ல இருக்குன்னு சொன்னா நான் ரெடி. பட்டனை அமுத்தினதும் சர்ருனு தேங்காய்த்தூள் வரணும். ஓகேயா!!
 
அட்டகாசமா இருக்கே எனக்கு ஒன்னு ஆர்டர் செய்யறேன்.. :) நான் ஒரு சுத்தியலை வைச்சுக்கிட்டு படாத பாடு படுவேன்.

டிட்ட்ட்ட்டோ....டிட்ட்டோ
 
அருமை. வாங்கியதை அறிமுகப்படுத்தியிருக்கும் விதம் அதனினும் அருமை.

கணேஷ் ஸ்டோர்ஸா? ரைட்:)!
 
ஜீவன் சிவம்,

தர்மபத்தினி அழைக்கும் போது இதாலேயே உடைத்துத் தரலாமே? மதிப்பு இன்னும் கூடுமே!
 
வல்லி,
“பட்டனைத் தட்டிவிட்டா தட்டுல இட்லியும் காபி நம்ம பக்கத்திலே வந்திடணும்” ற மாதிரில இருக்கு.

இவ்வளவு பண்ணிட்டம், இதையும் பண்ணிட மாட்டமா?
 
கோமா,
முத்துலெட்சுமிக்கு சொன்னதே...
டிட்டோ...டிட்டோ..!
 
ராமலக்ஷ்மி,
நெனச்சேன், உடனே ‘அம்மா....’ன்னு கூவிடுவிங்களே!
 
//அங்கிட்டும் இங்கிட்டும்

மதுரைக்காரர்தானே நீங்கள்??

அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
 
சென்னையில் நான் இதை தேடாத இடம் இல்லை. :(

எனக்கும் ஒரு பார்சல்.. :))
 
தேங்காய் உடைப்பானை out door வெளிச்சத்தில் எடுத்திருந்தால் இன்னும் பளிச்சென்று இருந்திருக்குமே...
ஃப்ளாஷ் லைட் பொருளின் அமைப்பைத் தெளிவில்லாமல் ஆக்குகிறது
 
கொஞ்ச நாளாய் தேவைகளை குறைப்போம் திட்ட்த்தில் உள்ளேன்.
அதனால் ஆர்டர் பக்கம் வரலை.

எங்கள் வீட்டில் அரிவாள் கொண்டு தேங்காய் உடைக்கப்படுகிறது. மொழு,மொழு கல் உக்கிரப் பார்வைப் பார்த்தாலே கஷ்டம், அரிவாள் உக்கிரப் பார்வைப் பார்த்தால் என்னவது?

அதனால் ஆர்டர் இல்லை.
 
ஐ, நீங்களும் தின்னவேலியா? சந்தோஷம்.

இங்க (அபுதாபியில) ஃப்ரஷ் தேங்கா துருவலாகவே கிடைக்கிறது. நல்லவேளை.

//பட்டனை அமுத்தினதும் சர்ருனு தேங்காய்த்தூள் வரணும்//

அல்ட்ரா கிரைண்டரோட தேங்கா துருவி ஒண்ணும் கொடுப்பாங்களே, அதுல மூடியை வச்சுப் பிடிச்சுகிட்டா துருவிடுமே (ஆரஞ்சு பிழிவதைப் போல). ஆனா கொஞ்சம் கவனமா இருக்கணும்...
 
கோமா,
இனி இதுமாதிரிப் படங்களை அவுட் டோரிலேயே வச்சுக்கிறேன். என்ன..? அதுகள் கால்ஷீட் ஒழுங்காத்தரணும்.
 
ஹுஸைனம்மா,
அப்ப நீங்களும் தின்னவேலியா? சந்தோஷம்.
 
அன்பின் நானானி

சரி சரி ஆகஸ்ட் 22 நெல்லையிலே ஒரு கல்யாணம் - போகையிலே கணேஷ் ஸ்டோருக்கு ஒரு விசிட் அடிச்சிடுவோம் - ம்ம் வழக்கம் போல தங்க்ஸ் நோ ரெஸ்பான்ஸ் - பாப்ப்போம்

நல்வாழ்த்துகள் நானானி
நட்புடன் சீனா
 
இந்தக் கல்லை தேடித்தேடி கடைக்காரர்களுக்கு 'விளக்கி விளக்கி' களைத்துப் போனதுதான் நிஜம்.

கிடைக்கலை..... அந்த தீஈஈஈஈ நகரில்:(
 
துள்சி!!!!,

// 'விளக்கி விளக்கி' களைத்துப் போனதுதான் நிஜம்.//

சிரிச்சேன்...சிரிச்சேன்...அப்படி சிரிச்சேன்.

விளக்கி விளக்கி பூதம் ஒண்ணும் கொளம்பலைதானே? கொளம்பியிருந்தால் அதும்கிட்டையே கேட்டிருக்கலாம்.

// தீஈஈஈஈ நகரில்:(//
நாந்தான் தீஈஈஈஈன்னவேலின்னு சொல்லியிருக்கிறேனே!
அடடா! சொல்லியிருந்தால் வாங்கி வைத்திருப்பேனே! இருக்கட்டும் அடுத்த முறை போகும் போகும் போது வாங்கி அனுப்புகிறேன். சேரியா?
 
நம்ம வெங்கி கோவில் வெங்கடநாராயணா சாலையில் இப்போ புதுசா தேங்காயெல்லாம் உடைக்கிறாங்க.

வாசலில் தேங்காய் உடைக்க ஒரு கருவி இருக்கு. உடைச்சுத்தர ஒரு ஆளும்.

க்ரைண்டர் ட்ரம் போல் ஒன்னு. உள்ளே ரெண்டு பக்கமும் கல்லால் சேண்ட்விச் பண்ண கூர்மையான கத்தி ஒன்னு. உங்க தின்னவேலி கண்டுபிடிப்பு மாதிரி.

ஒரே தட்டு. ரெண்டாய் உடைஞ்சுருது. பக்கத்துலேயே ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், சரவணபவன், ரத்னா கஃபே இருப்பது ரொம்ப வசதியாப் போச்சு இல்லை:-)))

ஒன்னு வாங்கி வையுங்கப்பா. புண்ணியமாப் போகும். சுமப்பது கண்டெய்னர் என்பதால் ஆசுவாசம்:-))))
 
நானும் பாத்தேன் நம்ம வெங்கி கோயில் தேங்கா ட்ரம்! அட! என்னோட ட்ரம்மின் என்லார்ஜ்மெண்ட் மாதிரியிருக்கே!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]