Friday, December 25, 2009

 

மதர் அலெக்ஸின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!!

மதர் அலெக்ஸின் நூறாவது பிறந்த நாளை வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் குதூகலமாகவும் மிகுந்த பாசத்தோடும் நேசத்தோடும் கொண்டாடினோம்.


மதர் அலெக்ஸின் தோற்றம் அறுபதுகளில்.

சென்ற 2008-ஆம் வருடம்

இன்றைய தோற்றம். அதாவது 10-12-2009-ல்விழா மண்டபத்துக்கு வீல்சேரில் அழைத்துவரப்படுகிறார்.

கூடியிருந்தோ அனைவரும் தமது வலது கையை அவரை நோக்கித் திருப்பி வாழ்த்துக்களை வழங்குகிறோம்.

வாழ்த்துக்களை இருகரம் கூப்பி ஏற்றுக்கொள்கிறார்.

எங்கள் குழு சார்பில் கொண்டு சென்றிருந்த பிறந்தநாள் கேக்...அவர் முன்.

அவர் கைகளால் அதை வெட்ட வைத்து, அதில் ஒரு துண்டை அன்போடு ஊட்டிவிடுகிறார் அவரது உதவியாளர். மிகவும் உணர்ச்சிவசப்படுவதால் அருகில் வந்து வாழ்த்தவருபவர்களை அரை நிமிடத்துக்கு மேல் பேசவிடவில்லை. நான் உட்பட. ‘நாட்டி கல்யாணி’ என்று சொன்னவுடன் ஞாபகம் வந்து அன்போடு வருடி நெற்றியில் சிலுவையிட்டு ஆசி வழங்கினார்.

வாழ்த்த வந்த அன்பர் ஒருவர்.

ஆசி பெற்ற பதிவர் ஒருவர்.

அவருக்குப் பிடித்தமான பாடல்களைப் பாடி மகிழ்விக்கும் அவரது குடும்பத்தார்.

நன்றி நவில மேடைக்கு அழைத்துவரப் படுகிறார்.

நன்றியை தம் மழலை மொழியில் தெரிவிக்கிறார்.

மேடையில் குடும்பத்தாரோடு உல்லாச நடனம்!!

என் முந்தைய பதிவைப் படித்து தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கச் சொன்ன சகபதிவர்களது வாழ்த்துக்களையும் எடுத்துச் சென்று மதரிடம் சேர்ப்பித்த வாழ்த்து அட்டை!!!

இன்றைய செயிண்ட் இக்னேஷியஸ் பள்ளியின் தலைமையாசிரியர் எங்களிடம் வந்து பள்ளியின் ‘ஸ்கூல் ஆந்தம்’ அசெம்பிளியில் பாடுவது, நாம் எல்லோரும் சேர்ந்து பாடலாமா? என்றார்கள். அவரவர்க்கு ஞாபகம் வந்த வரிகளை கூவினோம். வாருங்கள் சேந்து பாடலாம் என்று மேடைக்கு அழைத்தார்கள். அப்படி நாங்கள் பாடிய எங்கள் பள்ளின் பாடல்.

Once more, time-honoured halls,
Resound with youthful song:
And tell us by your ringing walls
That you and we belong!
O dearest school,to thee our youth
We do entrust to learn the truth
That VIRTUE IS OUR STRONGEST SHIELD
And we will never and we will never
And we will never never, yield!!

விழா முடிந்து அருமையான சாப்பாடு. பள்ளியிலேயே தயாரித்த உணவு அருமையாயிருந்தது. தோழி ஒருத்தி ‘டுகோ’ செய்வதைப் பார்த்து நானும் ஒரு பார்சல் எடுத்துக்கொண்டேன், ரங்கமணிக்காக. அதைப் பார்த்து, ‘என்னக்கா? கூலா பாக் பண்றீங்க? என்றாள் நான்,’யாரைக்கேக்கணும்? இது நம்ம அம்மா வீட்டு சாப்பாடு!’ என்றேன். அப்ப நாங்களும் எடுத்துக்கிறோம்....!என்றார்கள். இது எப்படியிருக்கு?

மொத்தத்தில் வெள்ளை ஜாக்கெட்டும் வெள்ளை தாவணியும் பச்சைப் பாவாடையுமாக அங்கு உலா வந்தது போல் ஒரு பிரமையிலிருந்தோம்.

மதர் அலெக்ஸ் அவர்கள் நீடூழி வாழ ஏசு அவதரித்த இந்த கிறிஸ்துமஸ் நந்நாளில் வேண்டுகிறோம்.

உலக மக்கள் அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!!!!!!!!

Labels:


Comments:
அன்பு நானானி,உங்கள் மதர்க்கு எங்கள் நல் வாழ்த்துகள்.
மற்ற அனைவருக்கும் அவருக்கும் உங்களனைவருக்கும் இயேச்யு பிறந்த நாள் வாழ்த்துகள்.
பாடல் வெகு அழகாக அமைந்திருக்கிறது.
 
’அம்மா வீட்டு சாப்பாடு’. அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். நெகிழ்வான பதிவு. படங்களுக்கு நன்றி.
மதர் அலெக்ஸுக்கும் அவரைக் கவனித்து வரும் குடும்பத்தார் அனைவருக்கும் கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
 
வாழ்த்துகள்!
பாளை இக்னேஷியஸ்?!
என்னுடைய லொயோலா கான்வெண்ட் நினைவுகளைத் தூண்டுகிறது இந்தப் பதி்வு.
 
வல்லி,
அப்பாடலை மறுபடி பாட நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததில் ஏக சந்தோஷம்
 
ராமலஷ்மி,
அதனால்தான் அது அம்புட்டு ருசியாயிருந்தது.

மதரை கவனித்துக் கொள்பவர்கள், பள்ளியிலுள்ள சிஸ்டர்ஸ்.

உறவினர்கள் வெளியூரிலிருக்கிறார்கள்.
நெகிழ்வு பதிவில் மட்டுமல்ல, அன்றைய நிகழ்விலும் கூட!!!
 
ஷங்கி,
அதேதான் நீங்கள் ஐந்தாவது வரை அங்கு படித்துவிட்டு, பின் செயிண்ட் சேவியர்ஸ் பள்ளிக்கு தாவியிருப்பீர்கள்தானே?
 
நேர்ல் வர இயலாதவற்களையும் விழாப்பந்தலில் அமர்த்திவிட்டீர்கள்
 
போட்டோக்கள் எல்லாம் portrait format-ல் close upஆக நன்றாக எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
//எங்க வீட்டு சாப்பாடு// அடடா. என்ன உரிமை?
 
புகைப்படங்களினை பார்த்து கலந்துகொண்டது போன்ற நினைப்போடு மனம் நிறைகிறது!

வாழ்த்துக்கள்!
 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
 
அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!

வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
 
உங்கள் போட்டோ எல்லாம் portrait format-ல் எடுத்து நல்ல close up ஆக இருக்கிறது. பாராட்டுக்கள்.
 
உண்மைதான் கோமா!
 
உண்மைதான் கோமா!
 
சகாதேவன்!
பாராட்டுக்கு நன்றி!

அது தனி உரிமையல்லவா!
 
ஆயில்யன்!
உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கு நன்றி!!
 
ராமலஷ்மி!
உங்களுக்கும் அதே அதே!!
 
சங்கர்!
வாழ்த்துக்கு நன்றி!

உங்கள் பதிவைப் படித்துவிட்டு வருகிறேன். சேரியா?
 
நாங்களும் வாழ்த்து சொல்லுவோம்ல . வாழ்த்துக்கள் அம்மா !
 
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]