Sunday, November 8, 2009

 

சித்துசிறுக்குன்னு ஒரு கொலு - இந்த வருடம்

இந்த வருட கொலுவும் சித்துசிறுக்குத்தான், அதற்கான பதிவும் சித்துசிறுக்குத்தான். அன்னை ஆதிபராசக்தியின் உருவச் சிலையை பிரதானமாக வைத்து நான் அமைத்த இக்கொலு சித்துதானே? சிறுக்குதானே?

துர்காதேவியும் முக்கியமானதால் தேவி அவளும் வந்தமர்ந்து கொண்டாள்.

எல்லாமே ரொம்ப சிம்பிளாக இருந்துவிட்டால்....வரும் விருந்தினருக்கு வித்தியாசமாக ஏதாவது இருக்க வேண்டுமே? அதுக்காக ரூம் போட்டெல்லாம் யோசிக்கவில்லை. இருக்கும் ட்ராயிங் ரூமிலேயே
உக்கார்ந்து யோசித்ததில் கிடைத்ததுதான் இந்த ஐடியா! பழங்கள், காய்கறிகளில் கார்விங்க் செய்து விதவிதமான வடிவங்களை வடிவமைக்கும் கேட்டரிங் கம்பெனி ஒன்றிற்கு போன் செய்து ரெண்டு மூணு பீஸ்கள் செய்துதருவீர்களா என்று கேட்டதற்கு, ஒரு பீஸ் கூட செய்துதருவோம் என்ற பதில் கிடைத்தது. சும்மா விடலாமா?

மஞ்சள் பூசனிக்காயில் சரஸ்வதி.

தர்பூசனிப்பழத்தில் வெண்தாமரை, செய்துதரக் கேட்டேன்.ஒரு நாள்தான் வாடாமல் இருக்குமென்பதால் நவராத்திரி ஒன்பதாவதுநாள் காலை வந்து சேர்ந்தது, பூசனிக்காயில் சரஸ்வதியும் தர்பூசனிக்கனியில் வெள்ளைத் தாமரையும் அழகாக வந்து சேர்ந்தது.


ஏடடுக்கி அலங்கரித்த அம்மன் பாதங்களில் கம்பீரமாக வீற்றிருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, எதிர்பார்த்த பாராட்டையும் வாங்கித்தந்தது.

துள்சியின் பதிவில் சிறப்புக் கவனத்தையும் பெற்றது.எங்கம்மா மகராசி, என் வீட்டில் ஆட்சி செய்யும் ஆதிபராசக்தி!!!

தீப ஒளியில் அவளின் அருளாட்சி!

சங்கீத சௌபாக்யமே....என்றும் குன்றாத பெறும் பாக்யமே!!!!


பி.கு:
படங்கள் அப்லோடிங் பிரச்சனையால் சற்று தாமதமன பதிவு. பரவாயில்லைதானே?

Labels:


Comments:
தேவியரின் உருவங்களும்

மஞ்சள் பூசனிக்காயில் சரஸ்வதி

தர்பூசனிப்பழத்தில் வெண்தாமரை

யாவுமே கொள்ளை அழகு.

அனைவரையும் கவர்ந்திழுத்ததில் ஆச்சரியமில்லை.
 
நான் வராத கொலுவை எனக்குக் காட்சி கொடுக்கவைத்தற்கு நன்றி நானானி.ரொம்பவே அழகாக் கலை நயத்தோட அமைச்சு இருக்கிங்க.
வீணை வாசிப்பீங்களாமே.
பார்த்தவங்க சொன்னாங்க.:)
 
பூசணியை என்ன சமைத்தீர்கள்? தர்பூசணியை ஜூஸ் பண்ணினீங்களா? சொல்லவில்லையே?
 
அன்பின் நானானி

அருமை அருமை

கொலு அருமை - பார்த்துப் பார்த்து, தேர்ந்தெடுத்து, வைக்கப்பட்ட கொலு
வித்தியாசமான கொலு

மிகவும் ரசித்தேன்

நன்று நன்று நல்வாழ்த்துகள் நானானி
 
உண்மைதான் மாதேவி!
மூன்று தேவியரின் சங்கமத்தில் மாதேவியும் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி!
கார்விங் செய்தவர்கள், 'இதுவரை கல்யாணங்களுக்குத்தான் விதவிதமாய் செய்து கொடுத்திருக்கிறோம். தனிப்பட்ட முறையில் கொலுவுக்காக செய்வது இதுதான் முதல் முறை.' என்றார்கள். அந்த வகையில் இதுவும் புதுமைதானே?
 
இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com
 
லேட்டானா என்ன நானானி,
பதிவும் படங்களும் சூப்பர்.

வித்தியாசமா காய்கறி கார்விங் அருமை
 
வல்லி,
நீங்க வராதது வருத்தம்தான். ஆனாலும் கொலுவை காட்டிவிட்டேனே!!
என் வீணை வாசிப்பைப் பற்றி 'எட்டுக்கு எட்டினேன்' என்ற பதிவில்தான் முன்னமேயே எழுதியிருக்கிறேனே!!
 
அதானே பாத்தேன்! நீங்க சகாதேவனா? அல்லது பீமனா?
ஒரு நாள்தான் ஃப்ரஷ்ஷாக இருக்குமென்றார்கள். என் அக்கா மறுநாள்தான் வந்தாள் அவளுக்காக கலைக்காமல் வைத்திருந்ததில் கண்களுக்குத்தான் விருந்தாயிற்றே தவிர நாவுக்கு விருந்தாகவில்லை.
 
அன்பு சீனா,
கொலுவுக்கு வருகை தந்து சிறப்பித்தற்கு நன்றியோ நன்றி!
 
RR,
உங்க தகவலை பிரசுரித்துவிட்டேன்.
யாருக்கேனும் பயன் பட்டால் மகிழ்ச்சி.
 
தென்றல்,
பாராட்டுக்கு நன்றி. உங்களுக்கெல்லாம் பிடித்திருப்பது ப்ற்றி சந்தோசம்.
 
நானானி
தங்கள் ஈமெயிலை பார்க்கவும் .2007 கொலு அங்கே கொலுவீற்றியிருக்கும்.
இந்த ஆண்டும் சித்துச் சிறுக்கு பெத்த பெரிசாகத்தான் இருக்கு.
 
வரவேற்பரையிலேயே நல்லா யோசிச்சிருக்கீங்க.. :))
 
அருமை அருமை.
பூசணியில் தேவியர்
புதுமையோ புதுமை.
 
கோமா!
2007 கொலு பற்றி அப்பவே பதிந்துவிட்டேன். இருந்தாலும் ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி!
 
முத்துலெட்சுமி,
ஹி..ஹி..ஹி!!!
 
ராமலஷ்மி,
கொலு பாக்க வந்து மஞ்சள்-குங்குமம் வாங்கிச் சென்றதுக்கு மகிழ்ச்சி!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]