Wednesday, October 21, 2009

 

தீபாவளி அன்று நான் ரசித்த இரு டிவி நிகழ்ச்சிகள்


வழக்கமான குத்தாட்டப் பாடல்களையும். மைக் பிடித்து மேடையில் பாடும் நிகழ்ச்சிகளையும் வெறுத்து ரிமோட்டை க்ளிக்கிக்கொண்டே வரும்போது எதேச்சையாக மதியம் ஜெயா டிவியில் கண்ட ‘வடிவேலுவோடு ’தூள்’ பாடகர் மாணிக்கவினாயகமும் டைரக்டர் மனோபாலாவும் தொகுப்பாளரும் இணைந்து நிகழ்த்திய உரையாடல் தொகுப்பு...வடிவேலு பற்றிய ஒருவரது எண்ணங்களை கட்டாயம் மாற்றியிருக்கும்.
அசந்து போனேன்!!!
தெளிவான கருத்துக்களோடு படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவங்களையும் மனோபாலாவோடு சேர்ந்து சிரிப்பு வெடிகளோடு(தீபாவளி அல்லவா?) விவரித்தவிதம் நன்றாக இருந்தது. தான் வல்கரான வசனங்களை பேசுவதை தவிர்த்து விடுவதையும் அக்கரையோடு சொன்னார்.
பாம்பாட்டி ஷூட்டிங்குக்கு கொண்டு வந்த பாம்பு பல் பிடுங்கியதுதான் என்று காட்ட தன் கையில் கொத்தவிட்டு சாய்ந்த கதையை நடித்தே காட்டியது, இன்னும் இதுபோன்ற பல காமடிகளை இருவரும் குலுங்க குலுங்க சொல்லியது எல்லாமே இன்னுமொரு படம் எடுக்கத் தேவையான சம்பவங்களைக்கொண்டது.

இது எல்லாவற்றுக்கும் மேலே.....அவர் எம்ஜியார் சிவாஜி பாடல்களைப் பாடுவார் என்பது மட்டுமே நமக்குத்தெரியும். ஆனால் இந்தளவுக்குப் பாடுவார் என்பது கண்டு கேட்டு மகிழ்ந்தே போனேன்.
மைக் பிடித்து மேடையில் பாடும் பாடகர்கள் எல்லோரும் முன்னால் ஒரு ஸ்டாண்டில் பாட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பாடுவார்கள்.
ஆனால் இவரோ..? மந்திரவாதி வெறும் காற்றில் கைகளை மாறிமாறி வீசி ரிப்பன், பூக்கள், புறா என்று வரவழைப்பது போல், தன் நினைவுக் காற்றிலிருந்து டக்டக்கென்று சிவாஜி பாட்டு, எம்ஜியார் பாட்டு என்று சுருதி சுத்தமாகவும் அட்ஷர சுத்தமாகவும் ஆர்கெஸ்ட்ராவோடும் இணைந்து, இசைந்து பாடியது கண்டு நிஜமாகவே
அசந்துதான் போனேன்!!!!

அதிலும் குறிப்பாக ஒரு பாடல். ‘மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா..’ என்ற வரிகளைப் பாடிவிட்டு உடனே, ‘கிணுகிணு..கிணுகிணு..கிணுகிணு..’என்று அதன் பிஜியெம்மையும்(பின்ன்ணி இசை) சேர்த்து பாடினாரே பார்க்கலாம்!!
எந்த அளவுக்கு அப்பாடல்களையெல்லாம் அக்காலத்தில் ரசித்திருப்பார் என்பது, என்னைப்போல், வல்லியம்மாவைப் போல் சிறுவயதில் பள்ளிவிட்டு வந்ததும் காதுகளைப் பிய்த்து ரேடியோவின் ஸ்பீக்கரில் ஒட்டிவைத்துவிடும் பிரகஸ்பதிகளுக்கு நன்றாகவே புரியும்.

ஹைனா வல்லி?

அதுவும் அக்காலத்தில் வசதியில்லாத வடிவேலு எங்காவது ரேடியோ சத்தம் கேட்டால் அங்கு போய் நின்று கொள்வாராம். வெறும் கேள்வி ஞானத்தில்தான் வளர்ந்தது அவரது பாடும் திறமை.அவர் பாடிய பாடல்களில் நான் விரும்பிக் கேட்பது, ஒரு படத்தில் அம்மனை ஊஞ்சலில் வைத்து பாடும் தாலாட்டுப் பாடல், ‘சந்தனப் பொட்டு வச்சு...’ அழகான மெலோடி!!

தமிழ் திரையுலகம் வடிவேலுவை ஒரு நல்ல பாடகராகவும் நல்ல குணச்சித்திர நடிகராகவும் பயன் படுத்திக்கொண்டால் அவர் பல உச்சங்களைத் தொடலாம்.


மாலையில் அசத்தியது யாரு?
நடிகரும் ஓவியருமான சிவக்குமார்!!!
முழு நிகழ்ச்சியையும் ’ஒன்மேன் ஷோ’ வாக தன் பேச்சாற்றலால் நிகழ்த்திக் காட்டினார்.
திரையுலகத்திலிருந்து விலகியதும் தன்னுடைய ஓய்வு நேரத்தை எவ்வளவு உன்னதமாகவும் உபயோகமாகவும் கழித்திருக்கிறார் என்றறியும் போது அவர் மீது ஒரு மதிப்பு எழுவதை தவிர்க்க முடியாது. அவருள்ளிருந்த ஒரு தமிழன், தமிழ்காதலன், தமிழ் ஆர்வலன் வெளிவந்து, கம்பராமாயணம் என்ன, திருக்குறள் என்ன, சங்க இலக்கியங்கள் என்ன என்று அருவியாய்.....ஹூஹும்!! நயாகராவாய் பொங்கிப் பெருகி தமிழ்த் தேனாய் வழிந்தான்.
இந்தத் தலைமுறைக்கு எடுத்துரைத்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை. சட்டியில் இருந்து வழிந்த சரக்குப் போல்தான் சபையும் நிரம்பி வழிந்தது.

Labels:


Comments:
அன்பின் நானானி

தீபாவளியன்று ரசித்த இரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்த விதம் அருமை நானானி

இடுகை இடுவதில் ஏடோ குழப்பம் - படங்கள் இனைக்கும் பொழுது திரும்பத் திரும்ப பத்திகள் வருகின்றனவா

வெட்ட வேண்டுமா - பாருங்களேன்

நல்வாழ்த்துகள் நானானி
 
அடடா... வழக்கம்போல பத்தோட +1 என்றெண்ணி, இந்த நிகழ்ச்சிகளை பார்க்காம விட்டுட்டேனே!!! ஏதேனும், youtube அல்லது tubetamil -ல் பார்க்க வழியிருக்கா???

நன்றி!!!
 
இரண்டு நிகழ்ச்சிகளையும் நானும் பார்த்தேன்
அருமை. மற்றும் ஒரு நிகழ்ச்சி கே.டிவியில்
காமடி நடிகர் விவேக் அப்துல் கலாமுடன்
பேட்டி நன்றாக இருந்து.
 
அடடா...ஆமா சீனா!
முதலில் டைப் செய்தது ஸேவ் செய்வதற்குள் கரண்ட் கட்டானதால் ஸேவாகவில்லை. ஸோ அத்தனையையும் திருப்பி அடித்து மேலும் சுவை கூட்டி அடித்து பிரசுரித்தால்....பாவி ப்ளாக்கர் ஸேவாகாத பழைய வரிகளையும் சேர்த்து பிரசுரித்துவிட்டது. ஏற்கனவே சிஸ்டத்தில் ஏக கோளாறு.
இப்ப சரிசெய்துவிட்டேன். பாருங்கள்.
நன்றி! சீனா, நீங்க சுட்டிக்காட்டாவிட்டால் கண்டிருக்கவே மாட்டேன்.
 
காரணம் ஆயிரம்!
//எனக்குத் தெரியவில்லையே//
யாராவது தில்லலங்கடிகளிடம் கேளுங்களேன்.

இந்த பேருக்கு ஒரு காரணம் சொல்லுங்களேன்!!
 
வெங்கட்,
வணக்கம் முதல் வருகைக்கு.
விவேக்-அப்துல்கலாம் நிகழ்ச்சியையும் பார்த்தேன்..ரசித்தேன்.
தமது ஆராய்ச்சி பற்றியும் கல்யாணத்தைப் பற்றியும் காதலைப் பற்றியும் அருமையாகவும் எளிமையாகவும் சொன்னார்.
 
பேரனுக்குப் பேரன் பிறந்ததையும் அவன் எள்ளுப் பேரன் என்று சிரிப்போடு விவரித்தது சுவையாக இருந்தது.
 
ரெண்டு நிகழ்ச்சியும் நெட்ல இருக்கான்னு தேடணும். பகிர்வுக்கு நன்றி நானானி அம்மா.
 
அவர் ஆனந்தவிகடனில் தொடர்கட்டுரை எழுதியதில் என்னக் கவர்ந்த ஒரு வர்ணனை.
தீப்பெட்டிதான் கிராமஃபோன்,ஊமத்தம்பூ ஸ்பீக்கர்,ஒரணாதான் ரெக்கார்டு முள்செடியின் ஒரு கூர்மையான பாகத்தை ஓரணா மீது அழுத்தி பாடுவாராம் ....என்ன ஒரு இசை ஆர்வம் அது ஏற்படுத்திய கற்பனை வளம்...அசந்து போனேன்...
 
சின்ன அம்மணி!
நெட்டில் கிடைத்தால் எனக்கும் ஒரு லிங்க் கொடுங்கள். சேரியா?
 
நல்ல தகவல் தந்தீர்கள்! கோமா!
ஆக....நீங்களும் அசந்துதான் போனீர்களா? என்ன ஒரு கற்பனை வளம்! ரசிக்கும் படியாயிருந்தது.
 
கந்தசாமி படத்தில் விக்ரம் மாதிரி மாறுவேஷத்தில் வருகையில், வடிவேலுவிடம் மன்சூர், அன்று பாடிய பாட்டை பாடி என்னை அடி எனவும், எந்த பாட்டுனு தெரியாமல், மருதமலை மாமணியே என்று பிஜிஎம்முடன் அழகாக பாடுவார்.

நல்ல குணசித்திர நடிகர் என்று தேவர் மகனிலே தெரிந்தது. நகைச்சுவையில் எல்லை மீறாமல் நடிப்பார்.

வில்லனாக அறிமுகமான பலர் நகைச்சுவையிலும் குணச்சித்திரத்திலும் பிரகாசிக்க வில்லையா?

வடிவேலு நீங்கள் நினைப்பது போலவே வருவார்
 
அதே போல் சிவகுமார் ஒரு பேட்டியில் தனக்குப் பிடித்த ஒரு ஆங்கிலத் திரைப்படம் பற்ரி சொல்லியிருப்பார்.
படம் ரோமன் ஹாலிடே
.அவருடைய செலக்‌ஷன் நல்லதாகத்தானே இருக்கும் .கிடைத்தால் கண்டு மகிழுங்கள்
அருமையான படம்
 
உண்மைதான் சகாதேவன்!
நல்ல திறமைகள் வீணாகாமல் பார்த்துக்கவேண்டியது முக்கியம்.
 
கையில் கிடைத்தால், நேரமிருந்தால், மூடுமிருந்தால், கட்டாயம் பார்க்கிறேன், கோமா!
தகவலுக்கு நன்றி!
 
தீபாவளி மாமியார் வீட்டில் உறவினர்களுடன் கொண்டாடியதால்
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லை.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை கட்டியம்
கூறும் விளப்பரங்களில்,நீங்கள் குறிப்பிட்ட இரண்டு நிகழ்ச்சிகளையும் கொஞ்சம் பார்த்தேன் நன்றாக இருந்தது.

சின்ன அம்மிணி லிங்க் கொடுத்தால் பார்க்க வேண்டும்,அல்லது மறு ஒளிப்பரப்புக்கு காத்து இருக்க வேண்டும்.
உங்கள் பகிர்வு நன்றாக இருக்கு.
 
இன்று வடிவேலின்” சரவெடி வடிவேல்”
ஜெயா டீ.வியில் மறு ஒளிப்பரப்பு செய்தார்கள், பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது.

உங்களுக்கு நன்றி.
 
எனக்கு அந்த மறுவாய்ப்பு கிடைக்கவில்லை, கோமதி அரசு!
பார்த்துவிட்டு பின்னூட்டியதுக்கு மிக்க நன்றி!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]