Monday, October 19, 2009

 

தீபாவளி சிறப்புப் பதிவு 2009

திடீரென்று என் மெயில் இன்பாக்ஸில் ஜில் ஜில் ஜில்னு ஒரே சதங்கை சத்தம் திறந்து பாத்தால்..இன்ப அதிர்ச்சியாம்..! வந்து பாருங்கோ என் அழைத்திருந்தார், நண்பர் சதங்கா. ஹூம்! எத்தனை வகையான அதிர்ச்சிகளையெல்லாம் பாத்திருக்கோம். இத்தப் பாக்க மாட்டோமா? ஆனா அங்க வெச்சிருந்தாரே ஓர் ஆப்பு! எவ்வளவோ தொடரெல்லாம் தொடர்ந்திருக்கோம்...இதையும் தொடருவோம், ஏன்னா? நம்ம மேலே இத்தனை நம்பிக்கை வச்சிருக்காரே சதங்கா...! அந்த நம்பிக்கையை சதாய்க்கலாமா? தட்டிருவோம்...! அட! கீ-போர்டைத்தானுங்க!

ஆட்டையை ஆரம்பிப்போம்.
1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

ஹம்பிள்,சிம்பிள் குடும்பத்தலைவி. என்னைச் சுற்றியிருப்பவர்களை சந்தோசப்படுத்திப் பார்க்கும் ஓர் ஆத்மா. மழலையின்பத்தில் மகிழும் ஜீவன். எதிர்காலத்தை அது எவ்விதமாயினும் ஏற்கத் தயாராயிருக்கும் ஒரு மனுஷி. போதுமா?

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

சிறு வயதில் ஐந்து அண்ணன்மார்கள் மூன்று சகோதரிகளுடன் புத்தாடைகள் உடுத்தி பெற்றோர் ஆசி வாங்கி, பின் குன்னக்குடியில் குடி கொண்டு ஒரே திசையை நோக்கி வீற்றிருக்கும் நவகிரகங்கள் போல் ஒன்பது பேரும் ஒரே மாதிரி ஆளுக்கொரு கல்வெடி பாக்கெட்டுகளை(சிறிய பேப்பர் உருண்டைகள் போலிருக்கும்) எங்க வீட்டுத் திண்ணையிலிருந்து ஒரே நேரத்தில் தரையில் வீசிவீசி வெடிப்போமே அதுதான் மறக்க முடியாதது.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போகும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. தீபாவளிக்கு மட்டுமல்ல எப்போதும் இருப்பது சென்னை அடையாறில்தான்.

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

பிள்ளைகள் கூட இருந்த காலத்தில் வழக்கம் போல் அதிகாலை எழுந்து குளித்து புத்தாடைகள் அணிந்து பூஜைமுடித்து காலை உணவு இனிப்பு கார வகைகளோடு உண்டு வீட்டுக்கு வெளியில் பட்டாசுகள் வெடித்து சொந்தங்களை சந்தித்து மகிழ்ந்து கொண்டாடியது சில காலம் முன்பு. இப்போது இரு சீனியர் சிட்டிசன்கள் கொண்டாடும் தீபாவளி....வருடம் 365 நாட்களில் ஒன்று போல் கழிந்தது.

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

எப்போதும் போல் ‘ராசி சில்க்ஸ்’

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

வீட்டில் பலகாரக் கடாய் வைக்க வேண்டுமே என்று நான் செய்தது SPLENDA SWEETNER சேர்த்து செய்த பாதாம் அல்வா. ரங்கமணிக்காக. மற்றபடி வருவோர்க்கு, அக்கம் பக்கம் கொடுக்க கடையில் வாங்கினேன். மிக்ஸர், தட்டை, லட்டு, பாதுஷா, மஸ்கோத்து அல்வா. அம்புட்டுதேன்.


7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

தொலைபேசி, கைபேசி மூலம்தான். ‘வாழ்த்துஅட்டை!?’ எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்?

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

ரெண்டும் கொஞ்சம் கொஞ்சம்.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

இந்த வருடம் அப்படியேதும் இல்லை. மற்றபடி நாங்கள் வழக்கமாக உதவி செய்யும் தொண்டு நிறுவனம்....”உதவும் கரங்கள்”

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அவர்கள் அலறாவண்ணம் நான் அழைக்கும் நால்வர்:

KVR/ராஜா http://kvraja.blogspot.com/
அபிஅப்பா http://abiappa.blogspot.com/
ஆயில்யன் http://kadagam.blogspot.com/
சீனா http: //cheenakay.blogspot.com/


வலையுலக சக்கரவர்த்திகளல்லவா? அன்போடு அழைக்கிறேன். மெல்ல வந்து பதிந்து போகவும்.

Labels:


Comments:
வந்தேன் வணக்கம் தந்து தொடர்கிறேன் பதிவினை :)

அழைத்தமைக்கு நன்றி நானானி அம்மா!
 
Simple ! Listla enga akka perai kanome... Athai.... No No.... amma... :-))
 
ஐ ஃபர்ஸ்ட்.
இப்போ உங்க ஊர் ஆர்.எம்.கே.வி., போத்தீஸ் எல்லாம்
சென்னை வந்து விட்டதே.
//எப்போதும் போல் ‘ராசி சில்க்ஸ்//
அதுதான் உங்களுக்கு ராசியா
 
அன்பின் நானானி

இயல்பான பதில்கள் - சாந்தமான நானானியின் இயல்பான பதில்கள் - பல ஏன் அனைத்துப் பதில்களூமே எங்களுக்கும் பொருந்துகின்றன - ஒன்பது என்பது பத்து அவ்வளவுதான்.

வரிக்கு வரி ரசித்தேன் - குறும்புடன் மகிழ்வுடன் எழுதப் பட்ட இடூகை

நானானி நல்வாழ்த்துகள்

அழைப்பிற்கு நன்றி நானானி
 
http://kadagam.blogspot.com/2009/10/blog-post_20.html போஸ்டியாச்சு :))
 
நானானிம்மா,

அழைப்பினை ஏற்று சுடச் சுட தொடரைத் தொடர்ந்தமைக்கு முதற்கண் நன்றி.

அனைத்து பதில்களும் அருமை.

முதலாவது ஹம்பிளான பதிலும் கூட.

இரண்டாவதைப் படித்து நான்காவது படித்தபோது மனதை என்னவோ செய்தது.

//‘வாழ்த்துஅட்டை!?’ எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்?//

யாராவது பயன்படுத்துகிறார்களா என்று தெரிந்து கொள்ளத்தான் :))

'டென்'னு டாப் 'டென்'னு. கலக்கலான நண்பர்களை அழைத்திருக்கிறீர்கள். சுடச் சுட அவர்கள் பதில்களையும் பார்ப்போம் பொறுத்திருந்து.
 
நவகிரகங்கள் போல் ஒன்பது பேரும்....

என்று இருக்கிறதே. நவகிரகங்களும் ஒன்றை ஒன்று பார்க்காது,ஒன்றோடொன்று சேராது.....!!!!

உதாரணம் உதைக்கிறதே!!!
 
நினைவுகளை வெகு அழகாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நிறைவான பதிவு. இங்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்:)!
 
ரொம்ப நல்லது ஆயில்யன்!
காத்திருக்கிறேன்.
 
சகா!
//இப்போ உங்க ஊர் ஆர்.எம்.கே.வி., போத்தீஸ் எல்லாம்
சென்னை வந்து விட்டதே. //

அவையெல்லாம் சென்னை வருமுன்பே நமக்கு ராசியானது ராசிதான்.
 
// எங்களுக்கும் பொருந்துகின்றன - ஒன்பது என்பது பத்து அவ்வளவுதான்.//

அன்பு சீனா!
இங்கும் பத்துதான். கடைசி போகி முன்பே கழன்று கொண்டது. அதெல்லாம் பெரிய கதை.
 
//இரண்டாவதைப் படித்து நான்காவது படித்தபோது மனதை என்னவோ செய்தது.//
சதங்கா!
மனதை ஒரே நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். “வாழ்கையில் இதெல்லாம் ச..ஜ..ம..ப்..பா!!’’

’வருத்தப்படாத வயோதிகர் சங்கம்’ ஒன்று ஆரம்பிக்கலாமா என்றிருக்கிறேன்.
நீங்களெல்லாம் பிற்காலத்தில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். சேரியா?
 
//வலையுலக சக்கரவர்த்திகளல்லவா? //

ஏன் இந்தக் கொலவெறி :-)?

அடுத்தத் தொடரா!!! போட்டுடுவோம் :-)
 
கோமா!
// நவகிரகங்களும் ஒன்றை ஒன்று பார்க்காது,ஒன்றோடொன்று சேராது.....!!!!//

ஆனால் ஒன்பதும் ஒரே திசையை நோக்கி அமர்ந்திருக்கும் அரிய காட்சியை குன்னக்குடி முருகன் கோவிலில் காணலாம்.

இப்ப இடிக்குதா...?
 
ராஜா /KVR !

//வலையுலக சக்கரவர்த்திகளல்லவா? //
இல்லையா பின்ன?
 
ராஜா கையை வச்சா அது ராங்கா போனதில்லே...
மாதிரி ,நான் தலையிட்டால், நல்லதே நடக்கும் .எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் குன்னக்குடியில் நவகிரகங்களும் ஒரே திசை பார்த்து நிற்கும் என்பது .

இன்று என் பின்னூட்டம் ,ஆன்மீக தகவலுக்கு ,ஒரு திறவு கோலானது
நன்றி நானானி
 
சதங்கா,
முந்தைய பின்னூட்டத்தில் ஒரு திருத்தம், உஸ்...!துள்சி பார்க்குமுன் திருத்திவிடுகிறேன்.

“வாழ்கையில் இதெல்லாம் ச..க..ஜ..ம..ப்..பா!”
 
தொடர்ந்தாச்சு http://kvraja.blogspot.com/2009/10/2009.html
 
கண்டிப்பா போட்டா போச்சு. தொடர் பதிவு அப்படின்னா தான் யோசிச்சு மண்டையை பிச்சுக்காம மேட்டர் கிடைக்குது:-))

உங்க தீபாவளி நினைவுகள் எல்லாமே அருமை நானானியக்கா!!!!!
 
ரொம்ப அழகா பதில் சொல்லியிருந்தீங்க நானானி,

வாழ்த்துக்கள்
 
ஓ அந்த தீபாவளிக்கு சீனியர் சிட்டிசன் தீபாவளின்னு பேரு ..அதுக்கு ஸ்வீட்னர் சேர்த்த ஹல்வா .. ஹ்ம்.. நல்லா இருக்கே இது..:)
 
Go to this web page to see how we celebrate Deepavali

http://mscfl.smugmug.com/2009MSCFPROGRAMS/2009-Diwali-Recognition-Awards/10322756_JKyBN#717440813_8uFrY
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]