Monday, September 7, 2009

 

வந்தேன்...வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...!!!

குடும்பத்தில் திடீரென்று நிறைவேற்ற வேண்டிய சில கடமைகளாலும் இணையத் தொடர்பு சரிவர அமையாத காரணத்தாலும் பதிவுலகிலிருந்து சில காலம் விலகியிருக்க வேண்டியதாகி விட்டது. "நானானி காணும்...நானானி காணும்"ன்னு தேடியிருப்பீர்கள். ஆம்! அன்பு வல்லியின் பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன். உள்ளம் சிலிர்த்தது, அவ்வன்பு நெஞ்சங்களை நினைத்து.

முதற்கண் என் பிறந்த நாளை நினைவில் வைத்து வாழ்த்துக்களை பதிவு செய்த அன்புச் சகோதரி வல்லிக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!!!
அப்பதிவுக்கு வந்த பின்னோட்டங்கள், ஆஹா! நமக்கும் இத்தனை பேர் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்களே...என்று ஆனந்தமாயிருந்தது.


Monday, August 24, 2009
பிறந்த நாள் வாழ்த்துகள் நானானி!!

நைன்வெஸ்ட்
தளத்தின் உரிமையாளரும்
இனிய குணம் கொண்டவரும்,
பதிவர்களின் அன்பரும்
நண்பருமான நானானிக்கு
இன்று பிறந்த நாள்.

அன்பு நானானியும்,அவர்தம் குடும்பமும் எல்லா வளமும் பெற வாழ்த்தலாம் வாருங்கள் .

ஹாப்பி பர்த்டே நானானி .
வரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் .

வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!! வணக்கங்கள்!!!

10 Comments:
அபி அப்பா said...
ஹய் அக்காவுக்கு பர்த்டே வா??????? எனக்கு வாழ்த்த வயதில்லை!!!!!!!! ஆசி வேண்டும்!!!!!!!

என் மனமார்ந்த ஆசிகள் உங்களுக்கு என்றும் உண்டு, 'அபியும் நானும்' இல்லையில்லை அபி அப்பா!!!!!


ஆயில்யன் said...
நானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய வாழ்த்துக்களுக்கு என் இனிப்பான நன்றிகள்!!


வல்லியம்மா, போட்டோ சூப்பர் :) அதே! அதே!!

மதுரையம்பதி said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி!

வல்லிசிம்ஹன் said...
அன்பு ஆயில்யன் நன்றி ம்மா.
நானானிக்கு இப்ப கையில் இணையத் தொடர்பு இல்லை. இல்லாவிட்டால் அவங்களே எல்லோருக்கும் நன்றி சொல்வாங்க.
அதுக்காகவே இச்சிறப்புப் பதிவு.

அன்பு அபி அப்பா உங்கள் வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்,. அவங்க கட்டாயம் ஆசிகளை அனுப்புவாங்க.
அனுப்பிட்டேனே!!!

அன்பு மௌலி கண்டிப்பா உங்க வாழ்த்துகளைச் சொல்கிறேன்
கேட்டுக் கொண்டேன்!!


துபாய் ராஜா said...
நானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
துபாய் ராஜாவுக்கு என் வணக்கங்கள்!!


தமிழ் பிரியன் said...
நானானிம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மகனின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டேன்.

அவங்களைக் கொஞ்ச நாளாக் காணோமே அம்மா,
எங்கிருந்தாலும் No 9, west பக்கம் அனுப்பி வைங்கம்மா.
கொஞ்சம் பிஸியாகவும் இணைய தொடர்பு துண்டிக்கப் பட்டதாலும் சொந்த வீட்டுக்கே வரமுடியவில்லை. ரொம்ப தேடீட்டயா செல்லம்?


வல்லிசிம்ஹன் said...
அன்பு துபாய் ராஜா, அன்பு தமிழ்ப்பிரியன், இணைய இணைப்பு கிடைத்ததும்
மீண்டும் எழுதுவார்கள்.
தற்காலிகமாக ஒரு தொடர்பு கிடைத்தது. எனவே இப்பதிவு.
நான் தொலைபேசியில் சொல்கிறேன்.
சொன்னாங்களே!!!


கோமதி அரசு said...
நானானியை இன்று தான் நினைத்தேன்,
அவர்களுக்கு100 வயது.
ஆஹா! நூறு வயதா..?! அம்மாடியோவ்!!
கோமதி அரசுவின் முதல் வருகை வாழ்த்துக்களோடு வருகிறது. நன்றி!!
சேரீ.....என்னை எதற்காக அன்று நினைத்தீர்கள்? அத்த சொல்லவில்லையே?
நானானிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நன்றி!! கோமதி அரசு!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...
வாழ்த்துக்கள்.. :)
நன்றிகள்!!

கவிநயா said...
நானானி அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
கவிநயாவுக்கு என் அன்பு!!!

(பூ ரொம்ப அழகா இருக்கு வல்லிம்மா! பிள்ளையார்/லக்ஷ்மி படமும் கண்ணை பறிக்குது!)
வெண்மை நிறத்தில் (என் மனசு போல்!!!!????) பளிச்சென்றிருக்குது.மற்றும் பதிவைப் படித்துவிட்டு எனக்கு தகவலும் வாழ்த்துக்களும் போனில் சொன்ன துள்சிக்கும்

வருடாவருடம் தவறாமல் வாழ்த்துவது போல் இந்தவருடமும் வாழ்த்தி "மீ த ஃபஸ்டா?" என்று பதிவுலக மொழியில் கேட்டு உறுதி செய்து கொண்ட அன்பு மருமகள் ராமலக்ஷ்மிக்கும்

நேரில் வந்து வாழ்த்தி பரிசளித்த என் இரு சகோதரிகளுக்கும்

எதேச்சையாக பிறந்தநாள் அன்று சிகாகோவிலிருந்து என்னை போனில் அழைத்து வேறு விஷயங்கள் பேசிக்கொண்டிருந்த அன்பு சகோதரன் சகாதேவனிடம் ,"இன்று என் பிறந்தநாள்..வாழ்த்தத்தான் அழைத்தாய் என்று நினைத்தேன்." என்று அவரை திகைக்க வைத்து வாழ்த்துக்களை அவர் வாயிலிருந்து பிடுங்க வைத்த சகாதேவனுக்கும்

அழகான ஒரு புடவையை கிஃப்ட் பார்சல் செய்து, "ஆப்பி ஆப்பி ஆ தூ தூ யூ!"(ஹாப்பி பர்த்டே டூ யூ வாம்) என்று பாடி வாழ்த்தி என் கைகளில் தந்த என் செல்லப் பேரன் ஷன்னுவுக்கும்

என் மனமார்ந்த நன்றிகள்!!!!!!!!!!!!!! இந்நினைவுகள் என்றும் பசுமையானவை.

பிலேட்டட் வாழ்த்துக்கள் போல் இது பிலேட்டட் நன்றிகள்!!!!!


பிகு:
குடும்பத்தில் எதிர்பாராத கடமைகள் என்றேனே? அதை உங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? ரங்கமணிக்கு ஒரு பை-பாஸ் சர்ஜரி போன மாதம் நடந்தது. அதனால்தான் பதிவுப் பக்கம் வரமுடியவில்லை. இப்போது நலமுடன் இருக்கிறார். இனி அப்பப்ப வருவேன்.

Labels:


Comments:
நானானி மீண்டும் வந்தது மகிழ்ச்சி.


நானானியை நீண்ட நாள் காணலயே
என்று அன்று தான் நினைத்தேன்.

வல்லி அவர்கள் பதிவு மூலம் உங்கள் பிறந்தநாள் தெரிந்தது.

நினைத்தவுடன் வந்ததால் நூறு வயது தானே.

உங்கள் கணவர் நலமுடன் இருப்பது
அறிந்து மகிழ்ச்சி.

அவர்கள் நலமுடன் வாழ
வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
 
வாழ்த்துக்கள் :)
 
உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.

நேரம் தாழ்த்திய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனைய்யா...அதாகப் பட்டது....

பாடல் நினவுக்கு வந்ததே....
 
பிறந்த நாளா ?சொல்லவே இல்லையே!!!
ஒரு ஸ்பெஷல் வாழ்த்தோடு காத்திருந்தேன்...இருக்கட்டும் அடுத்த வருஷம் வாழ்த்துகிறேன்.
 
போன வருஷம் உங்களுக்கு பிறந்த நாள் பரிசாக மோர்க்களி பதிவு போட்டேன்.

இந்த முறை என் கைவலி காரணமாக அப்பப்போ தான் பதிவு பக்கம் வந்தேன்.

தாமதமானாலும் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் நானானி
 
//ரங்கமணிக்கு ஒரு பை-பாஸ் சர்ஜரி போன மாதம் நடந்தது. அதனால்தான் பதிவுப் பக்கம் வரமுடியவில்லை. இப்போது நலமுடன் இருக்கிறார்//

சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி.

Belated Bday wishes too :-)
 
"சகோதரன் சகாதேவனிடம் இன்று என் பிறந்தநாள்..வாழ்த்தத்தான் அழைத்தாய் என்று நினைத்தேன்"
என்னை மாட்டி விட்டீர்களே. ஆனால் எப்படி கரெக்டாக பிறந்த நாளன்று கூப்பிட்டேன்.
 
கோமதி அரசு,
"காணும்"னு தேடியதுக்கு சந்தோசம்!
உங்கள் வாழ்த்துக்கள் "வாழ்க வளமுடன்"னு வாழ வைக்கும்.
 
நல்லது! ஆயில்யன்!!!
 
மாதேவியின் மகிழ்ச்சிக்கு வணக்கம்!!

என் வருகைக்கு மகிழ்வோரும் இருக்கிறார்கள்...மிரள்வோர் அல்ல என்பதை துள்சிக்கு சொல்ல விரும்புகிறேன்.
 
கோமா,
இப்பாடல் 'பஞ்சதந்திரம்' படத்தில் வருவது.

நீங்கள் சொன்ன பாடலோடுதான் நான் பதிவுலகில் முதலடி எடுத்து வைத்தேன். முடிந்தால் சென்று பாருங்கள்.
 
கோமா!

இத்தப் பார்ரா.....!
 
புதுகைத் தென்றல்,
மோர்களி..மறக்க முடியுமா?

கைவலி சீக்கிரம் குணமாகணும். பதிவுகள் பல வரணும்.

தாமதமானாலும் வாழ்த்துக்களை
அன்போடு ஏற்றுக் கொள்கிறேன்.
 
ராஜா/KVR,
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!
 
அன்பு சகாதேவன்,

//என்னை மாட்டி விட்டீர்களே.//
பிறந்தநாளன்று உள்ளதைச் சொல்ல வேண்டுமல்லவா?

//எப்படி கரெக்டாக பிறந்த நாளன்று கூப்பிட்டேன்.//
இந்த சமாளிஃபிகேஷனெல்லாம் வேண்டாம்!!!
 
நீங்கள் சொன்ன பாடலோடுதான் நான் பதிவுலகில் முதலடி எடுத்து வைத்தேன். முடிந்தால் சென்று பாருங்கள்.

முடியவில்லையே.லின்க் தந்தால் செளகரியமாக இருக்கும்.

நான் சொன்ன பாடல் நவராத்திரி சாவித்திரி பாடல்.

பஞ்சதந்திரம் பாடல் மனதிலே நின்னதே கிடையாதே.
 
இந்த முறை என் கைவலி காரணமாக அப்பப்போ தான் பதிவு பக்கம் வந்தேன்.

அடடா !!!புதுகைக்குத் தென்றலுக்குக் கை வலியா ????
அப்டீன்னா, இப்போ எப்டி டைப் பண்றீங்க...புது கையா பழைய கையா...
 
ஆமாம் , அது நவராத்திரி பாட்டுதான்.
தங்கச்சரிகச் சேல எங்கும் பளபளக்காஆஆஆஆஆஅ,:))).
 
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்
 
.புது கையா பழைய கையா..//

பழைய்ய கைதான் கோமா,
அதுக்கு கொஞ்சம் முடக்கு வைத்தியம் மாதிரி கட்டி வேலை நடக்குது.

:)))))))))))
 
Ho Mam,
Very sorry... happy belated birthday wishes.... naanum romba naal achu unga blog pakkam vanthu, Rangamani sir epadi erukaru, neenga pakathula erukum pothu, avaru nallathan eruparu, take care mam...
 
//இனி அப்பப்ப வருவேன்.//

எத்தனை பேர் தேடியபடியே. இத்தனை பேரின் அன்புக்காக அவ்வப்போது வந்தபடியேதான் இருங்க முழுமையா நேரம் கிடைக்கும்வரை:)!
 
சுவரொட்டியில் தமிழ் பிரியன் ஒட்டிய வாழ்த்துக்கும் தனி நன்றி சொல்லிடுங்க:)![ஹி, கடந்த வருடம் நானும் சேர்ந்து ஒட்டினேனாக்கும்]

http://sangamwishes.blogspot.com/2009/08/blog-post_24.html
 
ரங்கமணிக்கு ஒரு பை-பாஸ் சர்ஜரி போன மாதம் நடந்தது. அதனால்தான் பதிவுப் பக்கம் வரமுடியவில்லை. இப்போது நலமுடன் இருக்கிறார்.//

நலமுடன் இருக்க பிரர்ர்த்திக்கிறேன்!
 
அன்பு நானானி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் [தாமதமானாலும்].இன்னும் நூறாண்டு இருவரும் வாழ கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
 
கண்மணியின் வாழ்த்துக்களை கண்ணின் மணி போல் வெச்சுப்பேன்.
நன்றி!! எங்கே ரொம்ப நாளா காணும்?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]