Tuesday, July 14, 2009

 

House wife- ம் Computer Programmer-ம்

"ஓர் உதாரணம் சொல்றேன். அப்ப உனக்குப் புரியும்." என்றாள் விஜயா, தன் தங்கை சுதாவைப் பார்த்து. சுதா எட்டாவது படிக்கிறாள். தனியே கம்ப்யூட்டர் க்ளாஸும் போகிறாள்.
விஜயா கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கிறாள்.
பேஸிக் மொழியை விளக்கிக் கொண்டிருக்கிறாள். சுதாவும் கவனமாக கேட்டுக் கொள்கிறாள்.

"இப்ப நீ கடைக்குப் போய் ஐஸ்கிரீம் வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள். அப்ப என்ன செய்வாய்?"
"ஓயிப் போய் ஐகீம் வாங்கணும்" என்று அவள் மூன்று வயது தம்பியைப் போல் மழலையில் சொன்னாள்.
விஜயா சிரித்துக் கொண்டே....'சரி..அதுக்கு முன் என்னல்லாம் செய்வாய்? யோசி!'

'ங்ஏஏஏஏஏ' என்று விழித்தாள். நானே சொல்றேன்.

முதலில் கடைக்குப் போகிறாய் அதனால்;
1) நல்ல ட்ரெஸ் பண்ணிக்கணும்.
2) ஹாண்ட் பாகில் தேவையான பணம் எடுத்துக்கணும்.
3) கடையிருக்கும் தூரத்துக்கேற்ப, காரிலோ ஆட்டோவிலோ பஸ்ஸிலோ அல்லது நடந்தோ போவது பற்றி தீர்மானிக்கணும்.
4) அவ்வளவு தூரம் போகும் போது வேறு ஏதாவது வேலைகள் உள்ளனவா?என்று யோசித்து அதுக்குத் தேவையானவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5) வீட்டைவிட்டு கிளம்பும் போது க்யாஸ்,லைட், ஃபான், டிவி இவற்றை மறக்காமல் ஆஃப் செய்துவிடவேண்டும்.
6) பூட்டு சாவியை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டி சாவியை பையில் போட்டு காலில் செருப்பை மாட்டி கடைக்குப் போக வேண்டும்.
7) கடைக்குப் போய் தேவையான ஐஸ்கிரீம் வகையை தெரிவு செய்ய வேண்டும்.
8) உரிய பணத்தைக் கொடுத்து....ஒன்று..ஐஸ்கிரீமை அங்கேயே சாப்பிட வேண்டும். அல்லது உருகாதபடி பாக் செய்து வீடு வந்து, சாவியை வைத்துப் பூட்டைத் திறக்கணும்
9) கதவைத் திறந்து செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே போய் நிதானமாக
ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிட வேண்டும்.

ஐயோ!!!எனக்கு ஐஸ்கிரீமே வேண்டாம்!
என்று கூவினாள் காதிரெண்டையும் கைகளால் பொத்திக்கொண்டு. ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு இந்தப் பாடா?

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த அம்மா, "அட! அப்ப நானும் கூட ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர்தானோ?"

எப்படி அம்மா சொல்ற?
பின்ன? நானும் காலையில் எழுந்து ப்ரஷ் பண்ணி, முகம் கழுவி, காப்பிக்குத்தண்ணி வச்சுட்டு, அது கொதிக்கு முன் வாசல் தெளித்து கோலம் போட்டு, டிக்காஷன் போட்டு,பால் காய்ச்சி, காலை டிபன் ரெடி பண்ணி, மதியத்துக்கு உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணி, அதை டிபன் பாக்ஸில் போட்டு, தண்ணீர் பாட்டிலும் சேர்த்து கூடையில் தயாராக எடுத்து வைத்து, இடையில் உங்கள் கூவல்களுக்குப் பதில் சொல்லி,அப்பாவையும் விஜயாவையும் ஆபீஸுக்கும் சுதாவை ஸ்கூலுக்கும் அனுப்பிவிட்டுத்தானே என்னோட ப்ரோக்ராம் ரன் ஆகி எண்ட் ஆகுது?

கேட்டுக் கொண்டே வந்த அவள் தம்பி சங்கரன், "அக்கா! நீ ப்ரோக்ராமர் மட்டும் இல்லை.
அனாலிஸ்டும் நீயே! டீம் லீடும் நீயே! ஏன்? ப்ராஜெக்ட் மேனேஜரும் நீயே!!" என்றான்,
சரஸ்வதி சபதம் படப் பாடல் மாதிரி.
"நதி நீயே!"
கடல் நீயே!"

அக்கா! இனி நீ ஹவுஸ் வெய்ஃப்தான் என்று சொல்லாதே! நீதான் எல்லாம்.

உண்மைதானே? குடும்பத்தின் அச்சாணி அதன் தலைவிதானே?
ஒரு நாள்...ஒரே நாள் அவள் வேலைகளை அவள் துணையில்லாமல் பிற அங்கத்தினர்கள் யாராவது செய்து பார்க்கட்டுமே!!

"சீதா! உப்பு டப்பா எங்கிருக்கு?...பால் கார்ட் எங்க வெச்சிருக்கே? இப்படிப் பட்ட கேள்விகள்தான் பறக்கும்.

Labels:


Comments:
அம்மாவின் ப்ரோக்ராமை இன்னும் என்ஹான்ஸ் பண்ணலாம். நீளம் கருதி சுருக்கிட்டேன்!!
 
நானானி அம்மா, நல்லா இருக்கு இந்த இடுகை.
ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன். யாராச்சும் கடைக்குபோயி ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்தா சாப்பிட ஆளு நானு. ஹிஹி
 
சூப்பர்.


அம்மா ப்ரோக்ராம் நெவர் எண்டிங் ஸ்டோரி.

முழுவேலையும் முடிச்சாச்சுன்னு ஒரு நாளும் நிம்மதி வராதாம். த ஜாப் நெவர் எண்ட்ஸ்(-:
 
அட நல்ல கதையா இருக்கே!
நீங்க மட்டும்தான் ப்ரோகிராமர் நாஙகெல்லாம் வெத்துவேட்டுகளா...
ரெண்டு பேரும் சமம்னு நினைங்கம்மா கண்ணுங்களா.
இந்த ஹவுஸ் வொய்ஃபுக்கே இந்த இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் இருக்கு.
 
நீ இல்லாம எதுவும் முடியாதுன்னு என்னிக்காச்சும் உங்க தங்கமணிகிட்டே சொல்லி அவரைச் சந்தோஷப் படுத்திருக்கீங்களா...யோசிங்க யோசிங்க யோசிச்சு கிட்டே இருங்க
 
நல்லா ப்ரோகிராம் எழுதியிருக்கீங்க..( பக் இல்லாம )

அடுத்த வெர்ஷனையும் போடுங்க...டிசைன் டாகுமென்ட் நான் ரெடி பண்றேன்.
 
அம்மா ப்ரோகிராமில் பதிவு எழுதறது பின்னூட்டம் போடறதெல்லாம் ஏன் விட்டுட்டீங்க நானானி :))
 
//அக்கா! இனி நீ ஹவுஸ் வெய்ஃப்தான் என்று சொல்லாதே! நீதான் எல்லாம்.

உண்மைதானே? குடும்பத்தின் அச்சாணி அதன் தலைவிதானே?//

அழகாய் சொல்லிட்டீங்க.
அதனாலதான் இப்பல்லாம் ஹவுஸ் வொய்ஃப் என சொல்லிக் கொள்வது குறைந்து ஹோம் மேக்கர்னு சொல்லிக்கறோம்:)!

அ.மு. செய்யதுவின் வாசகர் விருப்பத்தையும் கவனியுங்க.
 
சின்ன அம்மிணி!
நீங்களே அந்த ஐஸ்கிரீம் ப்ரோக்ராமுக்குள் போய் "ரெண்டு ஐஸ்கிரீம் பார்சேல்ல்ல்ல்!" னு சொருகீட்டு வந்திடுங்க. சேரியா?

இன்னும் யாருக்கெல்லாம் வேணுமோ அவங்கல்லாம் ரெண்டோ மூணோ தேவையான எண்ணை சேத்துக்கலாம்.
 
துள்சி என்ன ஆளையே காணோம்?
நல்லருக்கிகளா?

// த ஜாப் நெவர் எண்ட்ஸ்(-://

பட் ஒன் டே இட்'ல் எண்ட்!!
 
காற்று!! தென்றலாக வரலாமல்லோ?

யாரும் வெத்து வேட்டுகள் இல்லை. அவரவர் வேலைகளை அவரவர் செய்யும் போது ஒரு...அது என்ன..ஒரு ரெக்கனிஷன் வேணுமில்லையா?

//இந்த ஹவுஸ் வொய்ஃபுக்கே இந்த இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் இருக்கு.//

அந்த காம்ப்ளெக்ஸ் வரக் கூடாதுன்னுதான் அவர்களை உசுப்பி விட்டிருக்கேன்.
 
காற்றே..!
நாந்தான் தங்கமணி. ரங்கமணிகள் அப்படி சொல்லீட்டா அவுக கௌரவம் என்னாவது?

ஒருவரில்லாமல் ஒருவர் இல்லை.
 
அ.மு.செய்யது!
இப்பத்தான் வர்றீங்களா? சந்தோசம்.

அப்பாடா! ப்ரோக்ராம் நல்லா வரணுமேன்னு மனது "பக் பக் பக்ன்னு" அடிச்சிட்டிருந்துது. இப்பத்தான் நிம்மதி!
அடுத்த வர்ஷனா? அம்மாடியோவ்!!
ஆனாலும் நன்றி!!!
 
கயல்!!
கட்டாயம் போடுவேன் . அம்மாவுக்கு நல்வரவு!
 
ராமலக்ஷ்மி!
காற்று சொன்னா மாதிரி அந்த காம்ப்ளெக்ஸ் மறையணும் என்றே இப்பதிவை ப்ரோக்ராம் செய்தேன்.

அதிலும் "நான் ஹவுஸ்வொய்ஃப்வாத்தான் இருக்கேன் என்று ஒரு சோர்ந்த முகத்தோடு சொல்லும் போது, முகத்தில் அங்கே இங்கே தட்டி நிமிர்ந்து நிற்க வைக்கணும் போலிருக்கும்.
 
//
ஐயோ!!!எனக்கு ஐஸ்கிரீமே வேண்டாம்! என்று கூவினாள் காதிரெண்டையும் கைகளால் பொத்திக்கொண்டு.//:):):)
 
காற்று!! தென்றலாக வரலாமல்லோ?
காற்று எப்பவுமே தென்றலாத்தான் வரும் ஆனா யாராவது உசுப்பிட்டா போதும் சுனாமிதான் அனல்காத்துதான்...

அடுத்த பதிவின் பின்னூட்டம் பாருங்களேன் எப்படி ஜிலு ஜிலூன்னு வரேன்ன்னு...
நன்ரி நானானி
 
ரங்கமணிகள் அப்படி சொல்லீட்டா அவுக கௌரவம் என்னாவது?

ஒருவரில்லாமல் ஒருவர் இல்லை.
--
இதை இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்...
50/50
நீ பாதி நான் பாதி..


ஓ ரங்கமணி தங்கமணி இப்பதான் புரியுது...ஹி ஹி ஹி நான் தொழிலுக்கு புதுசுங்கோ
 
நல்லா சொல்லியிருக்கீங்க. நான் கூட ஹோம் மேக்கரும் அஷ்டாவதனிதான் அப்படின்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.
 
இரண்டுமே சென்சிடிவானது... சின்ன பிரச்சினை என்றாலும் மக்கர் பண்ணும்.. இது தலைப்பைப் பார்த்ததும் தோணியது.
 
குடும்பத்தின் ஆணி வேரே அவுக தானே... நல்ல இடுகைம்மா!
 
நேற்று நான் தான் முதலில் (நீங்க பி.கு. மாதிரி ஒரு கமெண்ட் போட்டு விட்டீர்களே) வரணும்னு நினைத்தேன். பேரன் அருண் வந்து கீ போர்டில் தட்டத் தொடங்கிவிட்டான். எங்க வீட்டு ப்ரொகிராமர், டீம் லீடர், அனாலிஸ்ட், ப்ராஜெக்ட் மானேஜர் வந்து அவனை தூங்க வைங்கனு ஒரு கமாண்ட் கொடுத்தார்களா, நான் ஷட் டவுன். காலையில் பார்த்தால் 15 கமெண்ட்.
சகாதேவன்
 
ராப்!
நானும் ஹி..ஹி..!
 
காப்பிக்குத்தண்ணி வச்சுட்டு, அது கொதிக்கு முன் வாசல் தெளித்து கோலம் போட்டு,

நானானி நானானி
எனக்கும் சூப்பர் ஃபாஸ்டா அப்ப்டி ஒரு கோலம் சொல்லித் தாங்களேன்
காபிக்குத் தண்ணி அண்டாவில் வைப்பீர்களா ,அல்லது கோலம் 2புள்ளி 2 வரிசையா..
 
காற்றே...ஆடிக்காற்றே!
சிலுசிலுன்னு உன் வரவை எதிர்பார்க்கிறேன்.
 
காற்று!
அப்பாடா பதிவு சூப்பரா ரன் ஆயிற்று.
நன்றி!
 
எனக்கும் இந்த ரங்கமணி-தங்கமணி குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது. இதற்கு யாரும் விதி விலக்கல்ல.
காற்றும் சற்று திசை மாறியது பரவாயில்லை.
 
தென்றல்!
அஷ்டாவதானி மட்டுமல்ல...தசாவதானின்னும் சொல்லலாம்.
அதை பல பேர் உணராமலிருக்கிறார்களே!
 
தமிழ்பிரியன்!
பல பதிவுகளாகக் காணோம்? மீ த ஃபர்ஸ்ட் எல்லாம் இப்ப இல்லையா?

//இரண்டுமே சென்சிடிவானது... //

என்ன? உள் குத்தா? ரெண்டுமே லேசா தட்டிக் கொடுத்தா..பிச்சிக்கிட்டு ஓடும்.
 
ரொம்ப சரி....தமிழ்பிரியன்!
ரொம்பவும் நன்றியும்.
 
ஒரு ப்ராஜக்டில் இனிசியேஷன் முதல் க்ளோஷர் வரையில் இருக்கும் ஸ்டெப்ஸை (ச்சே ஒரு வரியில் எத்தனை ஆங்கிலச் சொற்கள்) எளிமையான உதாரணத்தோட விளக்கி இருக்கிங்க. நல்லா இருக்கு.

குடும்பத்திற்கு தலைவன், தலைவி ரெண்டு பேருமே அச்சாணிகள் தான்.
 
சில சமயம் கிட்சனுக்குள் நுழைந்து விட்டால் நான் கஷ்டவதானியாகி இஷ்டவதானியாக சமையல் நடக்கும்.
ரங்கமணி ஏதாவது சொன்னால் அவர்தான் அன்று நஷ்டவதானி....[வேற அவதானி தெரிந்தால் சொல்லுங்களேன்]
 
சகாதேவன்! உங்க வீட்டு தங்கமணியை எப்படி ஒசத்தீட்டீங்க! ஹூம் இப்படித்தான் இருக்கோணும்.

பேரன் கீ போர்ட் தட்டல் இப்ப தெரியுதா?
 
ஹலோ லொள்ளு கோமா!
முந்தய காலத்தில் அண்டாவில் காப்பிக்குத் தண்ணி வச்சுட்டு, அது கொதிக்குமுன் வாசல் தெளிச்சு பெரீஈஈஈய கோலமெல்லாம் போட்டுட்டு வந்தவங்கல்லாம் இருந்தாங்க.
நான் ஒரு கிண்ணத்தில் தண்ணி வச்சுட்டு ஃப்ளாட் வாசலை ஒரு கப் தண்ணி தெளிச்சு சின்ன கோலமிட்டு வரும்போது 'தண்ணி....கொதிச்சிருக்கும்..தளதளன்னு சத்தமும் கேட்டிருக்கும்'
 
கோமா!
உங்களுக்கும் வழி சொல்லட்டுமா?
ஒரு...வேண்டாம்..அரைக் கப் தண்ணியில் வாசல் தெளிச்சு ஒரு புள்ளி வச்சு அதைச் சுத்தி ஒரு வட்டம் போட்டுட்டு ஓடி வந்திடுங்க..சேரியா?

ஆமா..? நீங்க டிக்காக்ஷன் காபியா? இன்ஸ்டண்ட் காபியா? அதைச் சொல்லலையே!!!
 
கோமா!
மொத்தத்தில் உங்களை கிச்சனிலிருந்து
'புஷ்டாவதானி' ஆக்கவேண்டும் போல!!
எனக்குத் தெரிந்த அவதானி இதுதான்.
 
என்னத்தம்மா சொல்ல... வேலை பெண்டை கழட்டுது.... செம பிஸி. சீக்கிரமே மீ த பர்ஸ்ட் போடும் அளவு ஃபிரியாகிடலாம்... :)
 
அன்பின் நானானி

அருமை அருமை - எல்லா தங்க்ஸூமே ப்ரொகிறாமர்ஸ் தான் - இல்லனு சொல்லல

நல்லா நகைச்சுவையா எழுதி இருக்கீங்க

தொடரபோறீங்களா - தொடருங்க - நல்வாழ்த்துகள்
 
ஓஓஓஓகே! தமிழ்பிரியன்!!
வேலையும் முக்கியம் நேரம்கிடைக்கும் போது வரவும்.
ஃப்ர்ஸ்ட், செக்ண்ட் எல்லாம் முக்கியமில்லை. ச்சும்மா..காணுமேன்னுதான் கேட்டேன். உங்க வீட்டு சுட்டி நலமா?
 
சீனா! வாங்க..வாங்க!
ஊரிலிலையோன்னு நினைச்சேன்.
ஆனா எந்த ஊரிலிருந்தாலும் பின்னூட்ட நாயகன் பின்வாங்க மாட்டாரே!!!

//தொடரபோறீங்களா - தொடருங்க -//
தொடருவதா..? நான் எப்போ எப்படி
சொன்னேன்? ஷொல்லவேயில்லையே!!!
 
நாட்டு / வீட்டு நடப்ப தான் கதை,கவிதனு ஆக்குறோம். அதிலே கொஞ்ச டீடெய்ல் சேர்த்தா ப்ரோக்ராம் எழுதிடலாம்னு அருமையா, வழக்காம்போல உங்க காமெடி டச்சோட சொல்லியிருக்கீங்க :)))
 
குடும்பம் என்ற வண்டிஓட குடும்ப தலைவன், தலைவி,என்ற இரண்டு
அச்சாணிகள் தேவை.
 
டிடெய்ல்டா பாராட்டியிருக்கீங்க..சதங்கா!!
மிக்க மகிழ்ச்சி!!
 
கோமதி அரசு!
திருமதியின் முதல் வரவுக்கு நன்றி!!
அச்சாணிகள் மட்டும் போதுமா? ரெண்டு மாடுகள்(அதுவும் கலையாத)?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]