Tuesday, July 7, 2009

 

அது எப்படிங்க...? இப்படி?

இப்ப எனக்கொரு உண்மை புரிஞ்சாகணும்...ஆமா!

இன்னா பிரியணும்? சொல்லுமே! பிரியவெக்கரேன்.

சில விஷயங்களை இந்த சினிமா டைரக்டர்கள் ஏன் கவனத்தில் கொள்வதில்லை? இல்லை, உதவி டைரக்டர்களும் எடுத்து சொல்வதில்லை...பயமா?

கண்ணை உறுத்தும் இம்மாதிரியான சில சமாச்சாரங்களை பகுந்துக்கிறேன்.
அறுபதுகளிலிருந்து இன்றுவரை மனதில் உறுத்திக் கொண்டும் ஓடிக்கொண்டுமிருக்கிறது.

காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா சிலித்துக்குவாரே...."என் பணமென்ன? என் அந்தஸ்தென்ன? என்று. அப்படிப் பேசும் போது அவர் தன் பிள்ளைகளுடன் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அவ்வளவு

அந்தஸ்து உள்ளவரது சாப்பாட்டு மேஜையில் விதவிதமான பாத்திரங்களில் உணவு பாதார்த்தங்கள் இருக்குமா? இருக்காது. ஷூட்டிங்க்குக்காக ஏதோ ஒரு ஹோட்டலில் வாங்கி வந்த பெரிய டிபன் கேரியர் பாத்திரங்களே மேஜை மேல் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அது, அப்போதே என் கண்களை உறுத்தியது. உங்கள் கண்களை...?

அடுத்து.....வீடுகள், அது பங்களாவானாலும் சரி நடுத்தர வர்க்கத்து வீடானாலும் சரி குடிசையானாலும் சரி, எது வேணானாலும் நுழையலாம் என்பது போல் திறந்தேயிருக்கும்.
வில்லன்கள் தடாலடியாக நுழைந்து கொலை செய்யவோ அல்லது தனியேயிருக்கும் ஹிரோயினை நாசம் செய்யவோ ஏதுவாயிருக்கும்.
இருவர் பேசும் ரகசியங்களை ஒட்டுக்கேக்கவும் இன்னும் எதுஎதுக்கோ வாக்காயிருக்கும். காலிங்பெல் என்பதே காலாவதியகியிருக்கும்.

குறைந்த பட்சம் நான்கு பேர் உள்ள வீடாயிருக்கும். ஆனால் நார்மலாகவோ அல்லது கொடுமைக்கார மாமியாராலோ, கிணற்றடியில் கழுவ பரத்திக் கிடக்கும்
பாத்திரங்களோ?...நம்ம கடோத்கஜன் சாப்பிட்டு முடித்த பாத்திரங்கள் போல் அண்டா குண்டாவாக இருக்கும். கொஞ்சம் லாஜிக்கை யோசித்துப் பார்த்தால் அது ஓங்கி உதைத்திருக்காது?

காதலர் இருவர் ரெஸ்டொரண்ட்க்குப் போவார்கள். ஒரு இட்லி வடையோ, சட்னி சாம்பாரோ.... ஒரு ஃபலூடாவோ அட! ஒரு சாதாரண ஐஸ்கிரீமோ ஆர்டர் செய்வார்களோ என்று பார்த்தால்...பிஸ்சாத்து, ' கூல்ட்ரிங்!' என்று கேட்பார்கள். ஃபாண்டாவோ பெப்ஸியோ பாட்டிலை உடைத்து வைக்கோலைப் போட்டுத் தருவான் சர்வர்.
அடப்பாவிகளா! இதை எந்த பெட்டிக்கடையிலும் கேட்டாலும் தருவான்களே!!

சரி வீடுகளுக்குப் போனால் உபசாரம் என்ற பேரில் காலி தம்ளாரையோ கப் ன் சாசரையோ காபி என்று நீட்டுவார்கள். அதை சிப்பிவிட்டு எடுக்கும் போது
உதடு காய்ந்தவாறு இருக்கும், தொண்டையில் ட்ரக் இறங்கிய சுவடே தெரியாது.அட்லீஸ்ட் தண்ணீரையாவது ரொப்பிக் கொடுக்கக் கூடாதா?

ஆபீஸில் வேலை செய்யும் நாயகனுக்கு நாயகியோ அல்லது வேலையாளோ ஐந்தடுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு கொண்டு போவார்கள். இது மாதிரி சமயங்களில் நாம் என்ன செய்வோம்?
கேரியரில் இருக்கும் குழம்பு, ரசம் இவைகள் சிந்தாமல் மெதுவாக தூக்கி மேஜைமேல் வைப்போம். ஆனால்...இங்கோ? அனாயாசமாக சொய்ய்ய்ய்ய்ய்ன்னு தூக்கி மேஜைமேல்
'டங்' என்று வைக்கப்படும். 'டங்' என்றால் காலிப் பாத்திரம் என்று அர்த்தம். கேலிக்கூத்து என்றால் இதுதானோ?

படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் கோபித்துக்கொண்டோ....கெட்வுட் என்று சொல்லப் பட்டோ வீட்டைவிட்டு வெளியேறுகிறது என்று வைத்துக்கொள்வோம், ஒரு சின்ன சூட்கேஸ் அல்லது ஒரு ஒரு பை எடுத்து கட்டிலில் மேல் போட்டு பீரோவில் ஹங்கரில் தொங்கும் நாலு பாண்ட் சட்டையோ அல்லது நாலு புடவையோ(ஜாக்கெட் வேண்டாம் போல) அள்ளி திணித்துக்கொண்டு ஜிங்ஜிங் என்று வெளியேறிவிடுவார்கள். மற்ற இன்னர் உடுப்புகள், பெஸ்ட் பிரஷ் மற்றும் கை செலவுக்குப் பணம் இதெல்லாம் பின்னாலேயே யாராவது கொண்டு வருவார்களோ?

வெளியூரிலிருந்து ரெண்டு மூணு லக்கேஜ்களோடு வருவார்கள். அவற்றைத் தூக்கி வரும் அழகைப் பாக்கணுமே!!! உள்ளே காற்றுதான் இருக்கும் போல. எவ்வளவு சுலபமாக எடுத்து வருவார்கள்!!!!டைரக்டர் கொஞ்சம் கவனம் செலுத்தி, கனமாக இருப்பது போல் தூக்கி வரச் சொல்லியிருக்கலாமில்ல? உதாரணம்..."புதிய வானம் புதிய பூமி...", மலையாளக் கரையோரம் தலையாட்டும் குருவி..."

இன்றைய இளம் தலைமுறை டைரக்டர்கள் இவற்றையயெல்லாம் பாத்து என்னைப் போல் நொந்து போயிருப்பர் போலும். இப்போது போலித்தனம் இல்லாமல் எல்லாம் இயல்பாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் வெளிவந்த "சுப்ரமணியபுரம்" . எழுபதுகளை கவனத்தில் கொண்டு என்ன அழகாக உடைகள், பேச்சு, சுவற்றில் ஒட்டியிருக்கும் தங்கம் தியேட்டர் போஸ்டர், இடயில் சிறுவன் ஓட்டிச் செல்லும் மூணுசக்கர சைக்கிள், கதாநாயகி அணிந்திருக்கும் டாலர் செயின் என்று பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார்கள். படம் பாத்ததும் என் மனதில் இருந்த உறுத்தல்கள் எல்லாம் போயே போச்! சினிமா இனி இயல்பாயிருக்கும் என்ற நம்பிக்கையும் வந்தாச்!

சினிமா பத்திய ஒரு கேள்வி..... கேக்கலாமா?
1950-களிலிருந்து இன்று வரை படத்தின் டைட்டில்களில் தவறாமல் இடம் பெறும்....."டெக்னீஷியன்கள்" பெயர்கள், (திரை மறைவில் படம் நன்றாக ஓட இவர்களது பணி இன்றியமையாதது) குறைந்த பட்சம் மூன்று(எனக்கு அவ்வளவுதான் தெரியும்) பேர்களைச் சொல்லமுடியுமா? இவர்களது பணியின் முக்கியத்துவம் இப்போதுதான் உணரப்படுகிறது. விருதுகளும் வழங்கப் படுகின்றன.

எனக்குத் தெரிந்ததை நாளை சொல்லவா?

Labels:


Comments:
இதெல்லாம் கவனிக்க அவங்களுக்கு நேரமில்லயாம்.. சுப்ரமணியபுரம் எடுத்துங்க என்ன படாத பாடு பட்டிருப்பாங்கன்னு யோசிங்க..

ஆனா அந்த கெட் அவுட்ன்னதும் கிளம்பரவங்க மட்டும் எனக்குமனசு ஆறவே ஆறாது.. ஹேங்கரோடவே ட்ரஸ் நாலு தூக்கிபோட்டு நாலு செண்ட் பாட்டில் வேற போடுவாங்க.. சோப் ப்ரஷ் ஏன் எடுக்கலன்னு இப்பத்தெரியுதா..
 
அந்தப் பாடு பட்டதுக்கு எத்தனை விருதுகள் வாங்கிக் குவிச்சிருக்கு!

சேரீ....கடைசிக் கேள்விக்கென்ன பதில்?
 
அதான் நீங்க நாளைக்கு சொல்றேன்னு சொல்லி இருக்கீங்கள்ளா.. அப்பறமென்னான்னு விட்டுட்டேன்.. சேரிதானே..:)
 
ஹூஹும்! கட்டாயம் முயற்சி செய்யணும்.
சிறுமுயற்சி இப்படி சோரலாமா?
 
அது எப்படிங்க?? இப்படி???

எப்ப்ப்பூடி?(பசங்க படம் பாத்தீங்களா? அதுல ராகமா இழுது ஒரு பையன் எங்க ஊரு ஸ்லாங்கல் பேசுவான்,அது மாதிரி படிக்கணூம்.) அப்படின்னு கேக்கற மாதிரி சூப்பாரா இருக்கு.

அடுத்த போஸ்டுக்கு மீ த வெயிட்டிங்
 
உண்மைதான், புதுகைத் தென்றல்!

தமிழ் சினிமா உயர்வு நவிர்ச்சியை விட்டு அணிமாறி இயல்புக்கு திரும்பியிருப்பது நல்லாருக்கில்ல?

பசங்க சிடி வாங்கி வைத்திருக்கேன்.
துருட்டு எல்லாம் இல்லை கடையில் வாங்கினேன். எல்லாப் படமும் தியேட்டருக்குப் போய் பார்ப்பதென்பது நடக்கிற காரியமா?
 
மாபெரும் [காலி] சூட்கேஸை அநாயசமாய் தூக்கிக் கொண்டு நடப்பாள் நாயகி. அழுகை வந்தால் நாயகியர் பல படிகள் ஏறி மாடிக்கு ஓடி மெகா சைஸ் மெத்தையில் விழுந்துதான் அழுவார்கள்.

நல்லாக் கேட்டிருக்கீங்க வரிசையா எப்படிங்க இப்படின்னு.

முத்துலெட்சுமி, கெட் அவுட் சொல்லபட்டவங்க வாக் அவுட் பண்ணற அழகைப் புட்டு வச்சுட்டீங்க:))!
 
வாங்க ராமலக்ஷ்மி!

நாயகி, 'வீல்'ன்னு கத்தும் போது தவறாமல் புறங்கையை வாயில் வைத்துத்தான் கத்துவாள். இன்னும் சொல்லிக்கொண்டே போலாம்.
 
எல்லாப் படமும் தியேட்டருக்குப் போய் பார்ப்பதென்பது நடக்கிற காரியமா?///

அதுவும் சரிதான். சீக்கிரமா பசங்க படம் பாத்துட்டு சொல்லுங்க.

ஃப்ரெம் பை ஃப்ரேம் எங்க் ஊரு, எங்க ஊர் வட்டார மொழி
 
அதிலும் சாவித்திரி அம்மா காலேஜுக்குப் போகும் போது ஒரு பெரிய டிஃப்ஃபன் கேரியரைத் தூக்கிக் கொண்டு போவார்...படத்தின் பெயர் தெரியவில்லை [மிலன் என்ற ஹிந்தி படத்தின் தமிழாக்கம்]
 
அதிலும் சாவித்திரி அம்மா காலேஜுக்குப் போகும் போது ஒரு பெரிய டிஃப்ஃபன் கேரியரைத் தூக்கிக் கொண்டு போவார்...படத்தின் பெயர் தெரியவில்லை [மிலன் என்ற ஹிந்தி படத்தின் தமிழாக்கம்]
 
தென்றல்!

//ஃப்ரெம் பை ஃப்ரேம் எங்க் ஊரு, எங்க ஊர் வட்டார மொழி//

அதா எனக்குத் தெரியுமே!
எப்படி?
நீங்கதானே இப்ப சொன்னீங்க!
 
50களிலிருந்து டைட்டிலில் வருபவர்கள்.
மனோரமா (மலையிட்ட மங்கை)
கமலஹாஸன்(களத்தூர் கண்ணம்மா)
விஸ்வநாதன்(ராமமூர்த்தி)
இன்னும் நினைவு வந்தால் எழுதுகிறேன்
ஏ.வி.எம் சேர்த்துக்கலாமா?
சகாதேவன்
 
சகாதேவன்! சொல்ல மறந்துட்டேன்.
நடிக நடிகைகள் பற்றியில்லை.

நம் கண்களுக்கு மறைவாக காமராவுக்கு பின்புறம் இருந்து படம் வெற்றிகரமாக ஓட உழைக்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள்!!! அதாவது டெக்னீஷியன்கள்! இப்ப சொல்லுங்க.
 
பானுமதி,
மற்றதை மற்றவர்கள் சொல்லட்டும் எனக்கு பானு மட்டும் மதி
 
ஹையோ! கோமா!
நடிகர்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் பானுமதி கண்டிப்பாக இல்லை. இப்போதைய டைட்டில்களில்
அவர் பேர் உள்ளதா?

நான் "டெக்னீஷியன்கள்" என்று குறிப்பிடாமல் விட்டது தவறுதான்...தவறுதான்.
 
இப்போது பதிவைப் படியுங்கள் நன்றாகப் புரியும். உங்களை குழப்பியதற்காக சாரி!
 
எனக்கு தெரிந்து CDவிஸ்வநாதன் பெயர்தான் அதிக முறை வந்திருக்கும். அவர் யாருன்னு சரியா யூகிங்க பார்க்கலாம்?
 
நீங்க என்ன சொல்ல வரீங்க. இப்போ பொய் துப்பாக்கியால் சுட்டு அல்லது அட்டை கத்தியால் குத்தப்பட்டு, டொமெட்டோ சாஸ்ஸைப் பிழிந்து கொண்டு, நிறைய வசனம் பேசிவிட்டு கண் மூடுகிறார்களே அதை மாற்றி இளம் டைரக்டர்கள் இனி அசல் துப்பாக்கியால் சுட்டு/கத்தியால் குத்தி, அசல் ரத்தம் சிந்த 'ஆ'ன்னு கத்தி உடனே கண்ணை மூடவைக்கணும்னா?
சகாதேவன்
 
//அதான் நீங்க நாளைக்கு சொல்றேன்னு சொல்லி இருக்கீங்கள்ளா.. அப்பறமென்னான்னு விட்டுட்டேன்.. சேரிதானே..:)//

அதே ! அதே !!

//ஹூஹும்! கட்டாயம் முயற்சி செய்யணும்.
சிறுமுயற்சி இப்படி சோரலாமா?
//

சரீ....

ஸ்டில்ஸ் ரவி
எடிட்டர் லெனின்
உடைகள் ராமு
....
 
இளா!
CDவிஸ்வநாதன், நான் ஊகித்தவர்களில் இல்லை. இருந்தாலும் அசர் அன்றிலிருந்து இன்றுவர டைட்டிலில் இருக்கிறாரா? எந்தத் துறை?

ஏளா! சொல்லுங்க...இளா!
 
சகாதேவன்!
சமீபகால டிவி நியூஸ்களில் நிஜ வன்முறை காட்சிகளைப் பார்த்து மிரண்டு போய்விட்டீர்களா?
 
//அதே அதே!//
இதைச் சொல்லியே காலம் கழிக்கிறீர்களே...சதங்கா!

நீங்க சொன்ன மூன்று பேரும் அன்றிலிருந்து இன்றுவரை இருக்கிறார்களா? எந்தத் துறைஇ? அதை சொல்லலையே!
 
சரி நானே விடைகளைச் சொல்லி விடுகிறேன்.

T.S.ரங்கசாமி --எடிடிங்
J.J.மாணிக்கம் --ரீ-ரெக்கார்டிங்
சுந்தரலிங்கம் ---மேக்கப்

பழைய படங்களிலிருந்து இன்றைய படங்கள் வரை செக் செய்து பார்த்தால் புரியும் தெரியும்
இதில் சுந்தரலிங்கம் சிவாஜி, எம்.ஆர்.ராதா முதல் ராதாரவி வரை
இவர்தான் மேக்கப்மேன்.

இன்னும் எத்தனையோ பேர்கள் இருக்கலாம். நான் கவனித்ததில் இவர்கள்தான் நிற்கிறார்கள் நினைவில்.
 
ippa thaan pa paarththen.
j.j.manikkam,rangasaminnu Ninaichen. sollitteenga:))
 
வல்லி!
"அது எப்படீங்க....?"
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]