Thursday, July 2, 2009

 

நலங்கெட புழுதியில்...உரையாடல் சிறுகதை பாகம் இரண்டு

நல்ல நாள் பார்த்து, நல்ல வேளை பார்த்து, சரியான முகூர்த்தம் பார்த்து மேளதாளம் முழங்க
உற்றார் உறவினர் வாழ்த்த செல்வன் ஸ்ரீனிவாசன் செல்வி ஜெயலக்ஷ்மியின் கரம் பிடித்தான்.
பிடி சரியான கிடுக்கிப் பிடி.

திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குள் ஜெயா நுழைந்து ஒருவாரம் நன்றாகவே சென்றது.
ஒரு நாள்..

'அம்மா ஜெயா! உன்னைத் தேடி யாரோ வந்திருக்கா பார்!' மாமனார் அழைத்தார்.

'இதோ வரேன் மாமா!' என்றபடியே மாடியிலிருந்து இறங்கி வந்தாள். அன்றிலிருந்து ஆரம்பித்தது இறக்கம்.

வந்தவர் சபா செகரட்டரி. 'அம்மா! வரும் 28-ம் தேதி வாணிமகாலில் கச்சேரி இருக்குது. ஞாபகப் படுத்தான் வந்தேன்.'

'நல்ல நினைவிருக்கு ஸார்! கட்டாயம் வந்திடுவேன்.' என்று உறுதியளித்தாள் வழக்கம் போல். வழக்கம் இப்போது மாறியிருப்பதை அறியாதவளாக.

குடுகுடுவென்று மாடிக்கு ஓடினாள். ஆசையாக கணவனைப்பார்த்து, 'ஸ்ரீ!' என்றளைத்தாள் செல்லமாக. விருட்டென்று திரும்பினான். அவன் முகபாவத்தை கவனிக்காதவளாக, 'ஸ்ரீ! நாளன்னைக்கு

எனக்கு கச்சேரி இருக்கு. வழக்கமாக அம்மாதான் எனக்கு புடவை நகை செலக்ட் பண்ணித் தருவாள். இனிமே நீங்கதான் எனக்கு செலக்ட் பண்ணணும்.' என்றாள் முகமெல்லாம் மகிழ்ச்சியாக.

ஸ்ரீனிவாசன் இந்த உற்சாகத்தை உடனே உடைக்க வேண்டாம் என்று எண்ணினானோ என்னவோ?
'உனக்கு எது பிடிக்குதோ அதையே போட்டுக்கொள்.' என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.மாலையில் ஆபீசிலிருந்து போன் செய்து, 'ஜெயா! எனக்கு நிறைய வேலையிருக்கு. நீ அப்பா அம்மா கூட கச்சேரிக்குப் போய்வா.' என்று தன்மையாக சொல்லிவிட்டான்.

'மகளே! வீட்டுக்கு வா, உனக்கு கச்சேரி அங்கிருக்கு.' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.


இரவு வீடு திரும்பியதும் அம்மா, 'சீனி! நீயும் வந்திருக்கணும். என்ன அருமையா பாடினாள் தெரியுமா!'


'சரி சரி எனக்கு தூக்கம் வருது. படுக்கப் போறேன்.' என்று ரூமுக்குள் சென்று விட்டான்.


மூவரும் சாப்பிட்டு முடித்தவுடன் ஜெயா மாடிக்குச் சென்றாள். அங்கு...தூக்கமாவது ஒண்ணாவது! கட்டிலில் கொட்டகொட்ட விழித்திருந்தான், மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன்!!


'ஜெயா! இப்படி வா! இந்த கச்சேரி கிச்சேரி எல்லாம் இன்றோடு விட்டுவிடு. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை. பொண்டாட்டியா லட்சணமா வீடோடு இருந்து வீட்டையும் என்னையும் கவனித்தால் போதும்! முதல் தடவையானதால் சம்மதித்தேன். இனிமேல் இதெல்லாம் வேண்டாம். கச்சேரியில் உன் பாட்டைக் கேக்க பத்து பேர் வந்தால் உன் அழகை ரசிக்க நுறு பேர் வருவான்கள்.' என்று தன் வக்கிர மனத்தையும் முகத்தையும் ஒரு சேரக் காட்டினான்.


வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென்று கடலில் விழுந்தாற்போல், பெரிய சுனாமி வந்து தன்னை சுருட்டிக் கொண்டு போனாற்போல், வானமே இடிந்து தலையில் விழுந்தாற்போல், இன்னும் என்னவெல்லாமோ போல் உணர்ந்து விக்கித்து செய்வதறியாது நின்றாள் பாடும் அந்தக் குயில்! ஆகாயத்தில் சுதந்திரமாக பறந்துகொண்டிருந்த அக்குயிலின் விரிந்த இறக்கையிலிருந்து பிடுங்கியெறியப் பட்டது முதல் இறகு.

பிறந்ததிலிருந்து அச்செல்ல மகளுக்கு நினைத்தெதெல்லாம், கேட்டெதெல்லாம் கிடைத்தது. எதையும் போராடிப் பெற வேண்டிய அவசியமில்லாமலிருந்தது. எனவே எதிர்த்துப் பேச அறியாத அப்பாவை
அடங்கினாள். அது அக்காலமாதலால் அது சாத்தியமானது. இப்போனா...? பிடி டைவோர்ஸ்! என்று பிறந்தகம் ஏகியிருப்பாள்.


அடுத்த ப்ரோக்ராம் வந்தபோது இவளே முந்திக்கொண்டு போன் செய்து, 'உடம்பு முடியவில்லை. தயவு செய்து கான்சல் செய்துவிடுங்கள்.' என்று சொல்லிவிட்டாள்.

அறைக்குள் நடந்தது தெரியாத மாமியார், ' என்னம்மா? நல்லத்தானே இருக்கே! ஏன் வரலைன்னு சொன்னாய்?' என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்க வந்த ஸ்ரீனிவாசன், 'அம்மா! நாந்தான் இனிமே கச்செரிக்கெல்லாம் போகவேண்டாமென்று சொல்லிவிட்டேன்.' என்றான். முதல்முதல் அவள் கச்சேரியை கேட்ட போது அவளுக்குக் கிடைத்த பாராட்டுகளும் புகழாரங்களும் பரிசுகளும் அவன் மனதில் அசூயை அரக்கனையும் பொறாமை சாத்தானையும் வலிய வரவழைத்து இருத்திக்கொண்டான். எங்கே விட்டால் தன்னை விட பேர் வாங்கிவிடுவாளோ என்ற அகங்காரம் ஆட்டிவைத்தது. விளைவு? குயிலைப் பிடித்தான் கூட்டிலும் அடைத்தான் ஆனால் பாட மட்டும் சொல்லவில்லை.

கலையரசியை வீட்டுக்காவலில் வைத்ததுக்கு சங்கீத உலகமே அவனை சபித்தது. எதைப்பற்றியும் அவன் கவலைப் படவில்லை.

காலம் ஓடியது ஆணொன்றும் பெணொன்றுமாக குழந்தைகளும் பிறந்தன. பத்து வயது வரை 'அம்மா அம்மா!' என்று தன் காலைச் சுற்றிவந்த குழந்தைகளை 'அம்மாவுக்கு ஒண்ணூம் தெரியாது.' என்று சொல்லிச் சொல்லி அவர்கள் மனங்களிலும் விஷ விதைகளை விதைத்தான். அவள் இறக்கைகளிலிருந்து ஒவ்வொரு இறகாக விழவாரம்பித்தன. விபரமறியாத குழந்தைகள் தந்தை சொல் மந்திரமோ என்று விதைத்த விதைகளுக்கு தண்ணீர் ஊற்றின....உரமிட்டன. அன்று முதல் குழந்தைகளுக்கும் தாய்க்குமிடையே பெரும் பள்ளம் விழுந்தது. அம்மா என்றால் நமக்கு வேண்டியதைச் செய்யவும் உணவு சமைத்துத் தரவுமே படைக்கப் பட்டவள் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்தது.

ஜெயாவும் தன்னை மறந்து, தன் நாமம் கெட்டு வாழப் பழகிக்கொண்டாள். காலையில் வேலைகள் முடிந்து தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொள்வாள். மாலையிலும் அப்படியே. அங்கு அவள் என்ன செய்கிறாள் என்று யாருக்கும் தெரியாது, தெரிந்துகொள்ள அக்கறையுமில்லை.

தொடரும்

Labels:


Comments:
//குயிலைப் பிடித்தான் கூட்டிலும் அடைத்தான் ஆனால் பாட மட்டும் சொல்லவில்லை//

பாவமில்லையா ஜெயா? நடப்பினை சொல்லியிருக்கிறீர்கள். அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறோம். கிடுக்கிப் பிடியிலிருந்து வீணை வெளிவந்ததா இல்லையா?
 
ராமலக்ஷ்மி! அது வீணையில்லை. குரல்! கிடுக்கிப்பிடியில் அந்த குரல்வளைதான் மாட்டிக்கொண்டது.
 
ராமலக்ஷ்மி! தலைப்பிலேயே அந்த இனிய நாதம் இழைக்கும் வீணை எங்கிருக்கிறது என்று புரியாதா?
 
//தலைப்பிலேயே அந்த இனிய நாதம் இழைக்கும் வீணை எங்கிருக்கிறது என்று புரியாதா?//

ஆம் புரிந்ததால்தான் ஒரு நப்பாசையில் கேட்டிருக்கிறேன், ஏனெனில் முடிவு உங்கள் கையில் அல்லவா?
 
அப்படியா கதை!!!!????
 
சஸ்பென்ஸ் வீணை புழுதியிலிருந்து எடுக்கப் படுமா படாதா.. .இது தெரியாமல் இன்று ராத்திரி என் ..தூக்கம் போச்சுதே யம்மா...
 
நடந்தவற்றை படிப்பது போல் உள்ளது. நீங்க சொன்ன அதே தான் ... இந்த காலம் என்றால், 'பிடி டைவோர்ஸை' !!!!!
 
//சஸ்பென்ஸ் வீணை புழுதியிலிருந்து எடுக்கப் படுமா படாதா.. .//

அப்படித் தான் போகிறது கதை :(
 
ராமலக்ஷ்மி!

//முடிவு உங்கள் கையில் அல்லவா?//

இல்லையம்மா...எல்லா முடிவும் ஆண்டவன் கையில்தான்.
 
ஆமா! கோமா!
அப்படித்தான் கதை...அது அப்புரம் எப்படி எப்படியெல்லாம் போகுது தெரியுமா? ஓஹோ! கதையே அப்புரம்தான் போகுதா?
 
கோமா!

// இன்று ராத்திரி என் ..தூக்கம் போச்சுதே யம்மா...//

நாளை ராத்திரி நல்லா தூங்கவும்.
 
சதங்கா!

டைவர்ஸ் சர்வ சாதாரணமாகிப் போன இக்காலத்தில் தன்னையே இழந்து அவள் வாழ்ந்த வாழ்க்கையைப் போல் இப்போதும் பலர் வாழ்கிறார்கள்.
 
சதங்கா!

வீணை புழுதியோடு புழுதியாகிப் போனதே....!என் செய்வது?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]