Monday, June 29, 2009

 

என் கேள்விகளுக்கு என் பதில்கள்!! 32 கேள்விகள்.

ஏதானாலும் என்னை இழுத்துவிடுவது அன்பு சீனாவுக்கு மிகவும் பிடிக்கும். சமீப சந்திப்பில் புதுகைத் தென்றலுக்கும் சகோதர பாசத்தில் சகாதேவனுக்கும் என் ஞாபகம் வந்துவிட்டது. மூவரின் அன்பு கிடிக்கிப்பிடியில் இடுங்கிவிட்டேன். பிடி அன்புப் பிடியாதலால் விலக்க மனமில்லை. சொந்த வேலையில் சிறிது நாட்கள் பிஸியாக இருந்ததால் கணினியும் என்னைப்பார்த்து, "னீ உன் வேலையை கவனி!" என்று சொல்லிவிட்டது.

ஹப்பா! இன்றுதான் நேரம் வாய்த்தது. அதுவும் ஒரு மணி நேரம்தான். 'என்ன? நேரப்படிதான் எல்லாம் செய்வாயோ?' என்றது மனசாட்சி..தன் செவ்வாய் திறந்து. ஹி..ஹி..ச்சும்மா எல்லாம் ஒரு பில்டப்தான்.
வாருங்கள் கேள்விகளுக்குப் போவோம். கேள்வியை நீ கேட்கிறாயா..அல்லது நான் கேட்கவா?
'மடச்சி! ரெண்டுமே நீதாண்டி!' என்றது மறுபடியும் உட்குரல். சேரி...சேரீ..!


1. உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அந்தக்காலத்தில் நாமிருவர் நமக்கிருவர் தத்துவமெல்லாம் கிடையாது. முதல் ரெண்டு ஆண்பிள்ளைகளுக்கும் அப்பா தாத்தா, அம்மா தாத்தா பெயர்கள்...அடுத்து ரெண்டு பெண்பிள்ளைகளுக்கும் அப்பா ஆச்சி, அம்மா ஆச்சி பெயர்களை எழுதி வாங்கிக் கொண்டேதான் பிறப்பார்கள். அடுத்தடுத்து வரும் பிள்ளைகளுக்கு தெய்வங்களின் பெயர்கள். நம் நாட்டில் சாமி பேர்களுக்கா பஞ்சம்? அந்த வகையில் மூன்றாவதாகப் பிறந்த எனக்கு அம்மா ஊரான ஆழ்வார்குறிச்சியில்(சிவசைலம்) கோயில் கொண்டிருக்கும் பரம கல்யாணி அம்மனின் பேரைத்தான் நான் கொண்டிருக்கிறேன். ரொம்பப் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்போது?
மூன்று வருடங்கள் முன்பு அருமை சின்னக்காவின் திடீர் மறைவின் போது. இப்போதும் இரவில் கண்மூடினால் 'ஹ..லோ!' என்று அழைத்து கண்களுக்குள் வந்து நிற்பாள்.

3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என்னக்குப் பிடிக்காம..? தலையெழுத்து எப்படியோ? கையெழுத்து நல்லாவே இருக்கும். கான்வெண்டில் ஹாண்ட்ரைட்டிங் என்று ஆங்கிலமும் தமிழும் நோட்டு நோட்டாக கை ஒடிய எழுதியது வேறு எதற்காம்?

4. பிடித்த மதிய உணவு என்ன?
பூண்டு போட்டு வத்தக் குழம்பு, சௌசௌ கூட்டு, தயிர்சாதம் பழங்கறி,சுண்டக்கீரை + மாம்பழம்!!ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

5. நீங்கள் வேறு யாருடனும் உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
மாட்டேன். அலைவரிசை ஒத்துப் போகுதா என்று கொஞ்சம் நிதானிப்பேன். காரணம் நட்பல்லவா? அது வைரம் மாதிரி பழுதோ தோஷமோ இல்லாமலிருக்கணும். என்ன நாஞ் சொல்றது?

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் முழங்கால் நனைய நிற்கத்தான் பிடிக்கும். அருவி? ஆஹா!!உச்சரிக்கும் போதே முதுகில் தொம்தொம் என்று விழுகிறதே!குற்றாலம், மணிமுத்தாறு திற்பரப்பு இந்த அருவிகளில் எல்லாம் குளிக்கப் பிடிக்கும். சீசனை மிஸ் பண்ணுகிறேனே!!

7. முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகத்தை. பின் கண்களை அவை சொல்லிவிடும் அவரது நடைஉடை பாவனைகளை.

8.உங்க கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காதது என்ன?
யாருக்கும் உதவி என்றால் ஓடுவது. பேசவேண்டிய நேரத்தில் பேசாமல், பிறரை எந்தவிதத்திலும் காயப்படுத்திவிடுமோ என்று நான் காக்கும் மௌனம்.

9. உங்க சரிபாதி கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் எது. பிடிக்காத விஷயம் எது?
அவர் சேர்த்து வைத்திருக்கும் நண்பர்கள் கூட்டம். வெளியே கிளம்பியதும் பர்ஸை சாவியை தேடுவது.

10. யார் பக்கத்தில் இல்லாததற்கு வருந்துகிறீர்கள்?
என் அம்மாதான்!!

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
க்ரீம் கலரில் ஆஷ் கலரில் பிரிண்ட் போட்ட புடவை. அஃகோர்ஸ்! மேட்சிங் ப்ளவுஸ்.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க?
மானிட்டரைப் பார்த்து தட்டிக் கொண்டிருக்கிறேன். இன்று வாங்கிய எம்.எல். வசந்தகுமாரியின் சினிமா பாடல்கள் அடங்கிய சிடி. பாடல், 'பத்துவிரல் மோதிரம் எத்தனை ப்ராகாசம்...'

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பச்சை நிறமே பச்சை நிறமே!!!

14. உங்களுக்கு பிடித்த மணம்
பன்னீர் ரோசாவின் நறுமணம். ஸ்ப்ரே செய்யும் பாட்டிலில் பன்னீர் கொஞ்சம் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறேன். தேவைப்படும் போது முகத்தில் ஸ்ப்ரே செய்து புத்துணர்ச்சி பெறுகிறேன்.

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? அவர்களை ஏன் பிடிக்கும்? அழைக்க காரணம் என்ன?
யாரைத்தான் சொல்லுவதோ..? அநேகமாக எனக்குத்தெரிந்த பதிவர்கள் அனைவரும் பதில் சொல்லிவிட்டார்கள். திரும்ப அழைத்தால், சத்யராஜ் மாதிரி இருந்த இடத்திலிருந்தே அடிப்பார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் பாத்து நான் அழைப்பது,
ஸ்க்கிரிபிளிங் வித்யா
செல்வி சங்கர்
தமிழ்பிரியன்
இவர்களையெல்லாம் எனக்குப் பிடிக்கும். அம்புட்டுத்தான்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் பிடித்த பதிவு எது?
சீனா அவர்கள பின்னூட்டங்கள் இட்டே பேர் வாங்கியவர்.
புதுகைத் தென்றல் ஸேம் ப்ளட்.
சகாதேவன் நல்ல தகவல்களைத் தேடித்தேடி பொறுக்கியெடுத்து பதிபவர்.

17. உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
ஃப்ரீசெல், ஸ்க்ராபிள், கார்ட்ஸ்.

18.நீங்கள் கண்ணாடி அணிபவரா?
கழற்றாமல் இருப்பவர். (கேப்பீகளே! தூங்கும் போதும் குளிக்கும் போதும் மட்டும் கழற்றுபவர்)

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சிரித்து சிரித்து கண்கள் பனித்து வயிறு வலிக்கும் படியான சுத்தமான வசனங்கள் உள்ள படங்கள்(கலாட்டா கல்யாணம், மற்றும் க்ரேஸி மோகன் வசனமெழுதிய படங்கள். இவர் படங்களில் வசனங்களை ஃபாலோ செய்யாவிட்டால் சிரிக்க முடியாது.)

20. கடைசியாக பார்த்த படம் எது?
அபியும் நானும். மனதை வருடிச் சென்ற படம்.

21. உங்களுக்கு பிடித்த பருவ காலம் எது?
தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலம்.

22. இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எது?
நான் ஒரு கூட்டுப் புழுங்க. புத்தகப் புழு இல்லை. கேட்டதற்காக...இன்று வந்த மங்கையர்மலர்.

23. உங்கள் டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
நினைக்கும் போதெல்லாம்.

24. உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
மெல்லிய குழலோசை. ஒரு தகர துண்டை சுவற்றில் இழுக்கும் போது வரும் சத்தம். ஐயோ! உடம்பெல்லாம் அதிருமில்ல.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா, கனடா.

26.உங்களுக்கு தனித்திறமை ஏதாவது இருக்கிறதா?
கொஞ்சம் வரைவேன், கொஞ்சம் பெயிண்ட் செய்வேன், கொஞ்சம் வீணை வாசிப்பேன். ஆனா முழுசா ஒண்ணுமேயில்லையே!?

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியத ஒரு விஷயம்
நாட்டு நடப்பு

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்
வெளியேயும் அதுதானிருக்கு. அது ஒரு முரட்டு சாத்தான்.

29. பிடித்த சுற்றுலா தலம்.
கொடைக்கானல். மிதமான குளிர்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
காலம் கடந்த கேள்வி. இப்போது போல் கடைசி வரை இருந்தாலே போதும்.

31. மனைவி/கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்
ஷாப்பிங்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
கிடைத்ததில் திருப்தி, நன்றே வரினும் தீதே வரினும் இரண்டையும் ஒன்றாகப் பாவித்து மன அமைதியோடு வாழ்வதுதான் "வாழ்வு"

Labels:


Comments:
வாழ்வு பற்றிய கூறியது அருமை !

எது வந்தாலும் மன அமைதியோடு ஏற்றுகொள்கின்ற பக்குவம் பெற்றுவிட்டாலே போதும் எல்லாமே சிறப்புத்தான்!
 
//பிடித்த மதிய உணவு என்ன?
பூண்டு போட்டு வத்தக் குழம்பு,//

நாக்கில் நீர் ஊறுகின்றது நினைத்துப்பார்க்கையில்...!

:)
 
நான் தான் முதல் கமென்ட்டர்.
வழக்கம் போல உங்கள் ஸ்டைலில் தொடங்கியிருக்கிறீர்கள்.
எல்லா பதில்களும் அழகு.
எம்.எல்.வியின் சினிமா பாட்டு:'பத்து விரல் மோதிரம்' நான் கேட்ட ஞாபகம் இல்லை.எந்த படம் சொல்லுங்களேன்.
// இருந்த இடத்திலிருந்தே அடிப்பேன்//
இந்த வசனம் பிரகாஷ் ராஜ் திருவிளையாடல் படத்தில் சொன்னார்.
நல்ல தகவல்களை பொறுக்கி எடுத்து பதிபவர் என்று புகழ்ந்தமைக்கு நன்றி
 
நானானிம்மா,

ஏன் இந்தக் கேள்விகள் என்று என்னுள் இன்னும் அந்தக் கேள்வி இருக்கு... அதுபாட்டுக்கு இருக்கட்டும் :)

உங்கள் பதில்கள் சட்டு சட்டுனு மனதில் ஒட்டுவதாய் இருந்தாலும் ...

எட்டும், இருபத்தி ஆறும் அப்படியே நான் சொல்வது போலவே இருக்கிறது :))
 
நீ...ண்ட இடைவெளிக்குப் பின் நானானீ...!

எல்லாப் பதில்களையும் ரசித்தேன்.

குறிப்பாக, வாழ்வு பற்றிய வரி அருமை.
 
Asatheeteenga Mam... romba crispa erunthuthu unga answers... neenga books padika mattengala.... acharyama eruku... u r a very good writer..
 
நானானி
உங்கள் பாஷையில் சொன்னால் பதில்கள் அனைத்தும் நச் நச் ,மனதில் பச்சக் பச்சக் என்று ஒட்டிக் கொண்டன.
 
உங்கள் வழக்கமான பாணியில் தொடங்கிய அழகான பதில்கள்.
//இருந்த இடத்திலிருந்தே அடிப்பேன்// இந்த வசனம் திருவிளையாடல் படத்தில் பிரகாஷ் சொன்னார்'உட்கார்ந்த இடத்திலிருந்தே அடிப்பேன்'.அவர் கோவிச்சுக்குவார். சமீபத்தில் சன் டிவியில் பார்த்தேன்.
நீங்கள் ஷாப்பிங் பண்ணிக்கொண்டே இருந்தால் ரங்கமணி பர்ஸை தேட வேண்டியதுதான்.
நல்ல தகவல்களை தேடி பதிபவர்னு பாராட்டியதற்கு நன்றி
சகாதேவன்
 
ஹி ஹி ஹி 32ம் பளிச் பளிச் ..
 
நல்லா பதில் சொல்லிட்டீங்க... :)
///பூண்டு போட்டு வத்தக் குழம்பு, சௌசௌ கூட்டு, தயிர்சாதம் பழங்கறி,சுண்டக்கீரை + மாம்பழம்!!ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!///
எனக்கும் ரொம்ப பிடிக்கும் இவைகளை.. :)
 
///கண்ணுக்கெட்டிய தூரம் பாத்து நான் அழைப்பது,
ஸ்க்கிரிபிளிங் வித்யா
செல்வி சங்கர்
தமிழ்பிரியன்
இவர்களையெல்லாம் எனக்குப் பிடிக்கும். ////
பாசத்தில் கண்ணீர் கண்னை நிறைக்குதும்மா... ஆனா நான் ஏற்கனவே எழுதிட்டேனே.. அழைப்புக்கு மிக்க நன்றி!
 
//கொஞ்சம் வரைவேன், கொஞ்சம் பெயிண்ட் செய்வேன், கொஞ்சம் வீணை வாசிப்பேன். ஆனா முழுசா ஒண்ணுமேயில்லையே!?//


தன் அடக்கமா?
 
பதில்கள் அருமை நானானி,

உங்களை நேரில் சந்தித்து அளவளாவியது போல இருந்துச்சு.
 
உண்மைதான் ஆயில்யன்! வாழ்கை எனும் ஆற்றில் சிலநேரம் அதன் போக்கிலும் போகணும் சிலநேரம் எதிர்நீச்சலும் போடணும். ரெண்டையும் உற்சாகத்தோடு செய்யோணும்.
 
அதிலும் நான் செய்யும் எங்க வீட்டு வத்தக்கொழம்பு சூப்பர்தான்.
 
சகாதேவனுக்கே தெர்லையா?
மாமியார் மெச்சிய மருமகள் படத்தில் முதலிம் வரும் 'தொகையறா'. அப்டீன்னா தெரியுமா? அடுத்து, 'இங்கே இருப்பதா அங்கே வருவதா...?' என்ற பாடல்தான் அது. இப்ப ஞாபகம் வருதா...ஞாபகம் வருதா..?
 
'இருந்த இடத்தில் இருந்தே அடிப்பயே!' இந்த வசனம் 'மக்கள் என் பக்கம்' படத்தில் போனில் மிரட்டும் வில்லன் சத்யராஜிடம் சொல்வது.
 
அப்படியா சதங்கா? ரொம்ப மகிழ்ச்சி!!

கேள்விகள் எதற்காவது இருந்துவிட்டுப் போகட்டும்தான். ஆனால் "உன்னையே நீ எண்ணிப்பார்" என்று சாக்ரட்டீஸ் சொன்னதும் "உன்னை உனக்குள்ளேயே தேடு" என்று ரமண மகரிஷி சொன்னதும் நினைவுக்கு வருதா?
 
சந்தோசம் ராமலக்ஷ்மி!
 
புத்தகப் புழு இல்லை என்றுதான் சொன்னேன். ஆனால் கையில் கிடைத்த நல்லவைகளை கட்டாயம் வாசிப்பேன். தினமும் நாங்கள் பேசிக்கொள்வதைத்தான் எழுத்திலும் வடிக்கிறேன். நல்ல ரைட்டர் என்ற பாராட்டுக்கு நன்றி! வர்தினி!
 
உங்க பதிலும் அப்படியே பதிந்து விட்டது, கோமா!
 
ரங்கமணீயின் பர்ஸை பிடுங்கிக் கொண்டல்லவா நான் ஷாப்பிங்க் போவேன்!!!
 
எது பற்களா? கோமா?
 
பரவாயில்லை பிரியன்! உக்காந்த இடத்திலிருந்து அடிக்காத வரை சந்தோசம்!
 
தன் அடக்கம் இல்லை! ஜானி வாக்கர், "ஏக்கம்"
 
அழைத்தவர்களை மதிப்பது என் வழக்கம். அப்படி அழைத்த மூவரையும் மதித்திருக்கிறேன்.
நன்றி! தென்றல்!
 
தன் அடக்கம் இல்லை! ஜானி வாக்கர், "ஏக்கம்"

பதிலில் கிக்கு ஏறுதே....
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]