Saturday, April 4, 2009

 

சாத்தூர் ஆயிர வைசிய உயர்நிலைபள்ளி S.S.L.C MARCH 1959 மாணவர் குழு - பொன்விழாக் கொண்டாட்டம்.

மேற்சொன்ன பள்ளியில் 1959 வருடம் பள்ளியிறுதி முடித்த மாணவர்குழுவின் பொன்விழாக் கொண்டாட்டத்துக்கு, அந்த வருடம் படித்த மாணவர்களையெல்லாம் மிகுந்த சிரமங்களுக்கிடயே தேடிக் கண்டுபிடித்து தகவல் சொல்லியது. அதில் எங்க ரங்கமணியும் ஒருவர். எங்கெங்கோ நூல் பிடித்து தொலைபேசி எண்ணையும் கண்டுபிடித்து அவரிடம் பேசினார் அதன் பொறுப்பாளர். இப்படியே சுமார் ஐம்பது பேர்களை கண்டுபிடித்துவிட்டார்கள்.

இப்பதிவு எதற்கென்றால் இன்னும் உலகெங்கும் இருக்கும் இப்பள்ளியின் பழைய மாணவர்கள், குறிப்பாக 1959-ம் வருடத்திய மாணவர்கள் எவெறேனும் இருந்தால் தெரிந்து கொண்டு, விரும்பினால் தொடர்பு கொள்ளத்தான். அழைப்பிதழை ஸ்கேன் பண்ண நேரமில்லாததால் அப்படியே தருகிறேன்.

TEAM 1959 SSLC AYIRA VYSYA HIGH SCHOOL
SATTUR

Invites Your August Presence
During The Golden Jubilee Celebration of
Completing out the School studies in March 1959

The Function is Consented by His Holiness
MUDURAI 292ND MAHA SANNIDHANAN SRI ARUNAGIRINATHA SRI GURUNGNANA
SANBHANDHA DESIKA PHARAMACHARI
to PRESIDE and DELIVER His blessings

Sri J.RAMAMOOTHY M.B.A., B.L.,
Managing Trustee
Thirupparankundram Velliambalam Trust, MADURAI.
Will unveil the Portrait of
Sri M.NAVAEETHA KRISHNAN B.A.L.T.,
(Then Headmaster og the school)

Time:9.30 am
Date: 12.4.09 Sunday
Venue: A.V.Higher Sec.School Campus, Sattur

YOU ARE CARDIALLY INVITED

இவ்விழா பற்றிய மேலதிக தகவல் அறிய தொடர்பு கொள்ள:

L.Suryakannu
"Jayasurya"
3/762, Surveyor Conony
Madurai-625 007
CELL: 99408 98472

P.Paapuraj
CELL: 94448 13141

K.Sendurandy
Kamaraj Bhavan
16/573, Periyar Nagar
Sattur
CELL: 94424 34696

S.Muthu
CELL: 96008 37325

"அன்புள்ள நண்பர்களே!
தாராள உள்ளங்களால் விழா ஏற்பாடுகள் செவ்வனே நடைபெற்று வருகின்றன.
இது நாம் 50 ஆண்டுகள் கழித்து கலந்து கொள்ளும் மகிழ்ச்சித் திருவிழா.

உள்ளத்தில் அன்பும், உதிரத்தில் நன்றியுணர்ச்சியும் ஊற நம் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு விழா எடுக்கும் வெற்றித் திருநாள்.

எனவே, உற்சாகத்துடன் ஊற்றார், உறவினருடன் மனைவி, மக்க: பேரக் குழந்தைகளுடனும், பேருவகையுடன் கலந்து கொள்வோம்.
அந்த மகிழ்ச்சித் திருநாளில் சந்திப்போம்"
என்கிறார்கள் விழாக் குழுவினர்.

ஒரு பள்ளி ஐம்பது வருடங்களுக்கு முன் தன்னிடம் படித்த மணவர்களை நினைவு கூர்ந்து...காலத்தால் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தவர்களை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு விழாக் கொண்டாடுவது மிகவும் அபூர்வம்! இது கின்னல் புத்தகத்தில் இடம் பெறக் கூடிய சாதனைதான்.

பசுமை நிறைந்த நினைவுகளோடு தாங்கள் படித்து, பாடிக் களித்த தோழர்களை பறந்து வந்து சந்திக்க நல்லதொரு வாய்ப்பு. பதிவர்களில் யாரேனும் இருந்தால் அங்கு கூட்டிச் செல்லவே இதைப் பதிகிறேன்.

யாருக்கேனும் இது உதவியாயிருந்தால் எனக்கு பெரும் மகிழ்ச்சி!!!

Labels:


Comments:
1959-ல் படித்த மாணவர்களுக்கு சந்திக்க ஒரு வாய்ப்பு!!
 
இருங்க இப்பவே போறேன் எங்க சீமாச்சு அண்ணா கிட்ட! அண்ணா உடனே ஆவன செய்யவ்வும் நம்ம ஸ்கூல்லயும் இது மாதிரி செய்யனும்ன்னு! ( அண்ணா தான் இப்ப கமிட்டி மெம்பர் ஆகீயாச்சே)
 
இவ்வளவுதானா? அப்ப உங்க சீமாச்சு அண்ணா சாத்தூர் பள்ளி மாணவர் இல்லையா?
சேரி...யாருக்கேனும் ஐடியாவாவது கெடச்சுதே...அம்மட்டும் சந்தோஷம்!!!
அது...எது உங்க இஸ்கூல்?
 
//அபி அப்பா said...
இருங்க இப்பவே போறேன் எங்க சீமாச்சு அண்ணா கிட்ட! அண்ணா உடனே ஆவன செய்யவ்வும் நம்ம ஸ்கூல்லயும் இது மாதிரி செய்யனும்ன்னு! ( அண்ணா தான் இப்ப கமிட்டி மெம்பர் ஆகீயாச்சே)///

நானும் உண்டு!

நானும் உண்டு!!
 
//நானானி said...
இவ்வளவுதானா? அப்ப உங்க சீமாச்சு அண்ணா சாத்தூர் பள்ளி மாணவர் இல்லையா?
சேரி...யாருக்கேனும் ஐடியாவாவது கெடச்சுதே...அம்மட்டும் சந்தோஷம்!!!
அது...எது உங்க இஸ்கூல்?

April 4, 2009 3:15 PM//


மாயவரத்துல போயி நேஷனல் ஸ்கூல்லுன்னு சொல்லி கேட்டுப்பாருங்கம்மா

சும்மா அதிரும்ல :)))
 
இல்ல நாங்க மாயவரம் மாஃபியா!:-))

எல்லேராம், சீமாச்சு அண்ணா, ரஜினி ராம்கி, நான், ஆயில்யன், பெருந்தோட்டம் மதி, நான், மூக்கு சுந்தர், மயிலாடுதுறை சிவா,முகமூடி, VSK, ராமசந்திரன் உஷா அண்ணியின் கணவர்,முத்துகுமார், முத்து லெஷ்மி(ஆனா அந்த பள்ளி இல்லை), இதை தவிர 8 ஆங்கில பதிவர்கள் இன்னும் பலபேர் அதே ஸ்கூல் தான்!

உங்க பள்ளிக்கும் என் வாழ்த்துக்கள்!

நாங்களும் கொண்டாடுவோம்ல!
 
ஆரிய வைசிய பள்ளில எல்லாம் படிக்கலை ...ஆனா சாத்தூர்னதும் எட்டிப் பார்க்க ஆர்வம் வந்துச்சு .எங்க பாட்டி 1989-90 வாக்குலன்னு நினைக்கறேன் வாரம் தவறாம சாத்தூர் முருகன் தியேட்டர்ல முப்பெரும் தேவியர் ...கை கொடுப்பாள் கற்பகாம்பாள் ... ராஜ ரிஷி...இப்படி படங்களுக்கா கூட்டிட்டுப் போவாங்க கூட ஒரு ஏழெட்டுப் பாட்டிங்க ...என் அத்தை ...அக்கா இப்படிப் போவோம் ,சும்மா இல்லை போகும்போதே லாலாக் கடை அல்வா வேற சூடா வாழை இலைல மடிச்சுக் கட்டி ஆளுக்கு 100 கிராம் வாங்கிக் கொடுப்பாங்க பாட்டி.பஸ் ஸ்டாண்ட்ல இருந்து நடந்தே போவோம் தியேட்டர் வரை,அது ஒரு காலம்.இப்போ முருகன் தியேட்டர் இருக்கானு தெரியலை.ஊர்ப்பக்கம் போய் ரொம்ப நாளாச்சு .
 
எவ்வளவோ வருடம் கழிந்து மீண்டும் சந்திப்பது அற்புத நினைவாக இருக்கும். அனைவரும் ஒன்று சேர வாழ்த்துக்கள்!
 
ஆஹா! அபி அப்பாவுக்கு ஜோடி கிடைச்சாச்சு. சீமாச்சு அண்ணாவோட சேந்துகிட்டு கலக்குங்க.
 
அந்த ஆட்டம் போட்டிருக்கிறீங்களா, ஆயில்யன் பள்ளி அதிர? இருக்கும் இருக்கும்.

இப்பவே இந்தப்பதிவைப் பார்த்தே உங்க பள்ளி அதிர ஆரம்பிச்சுடுச்சே!!!

மாயவரம் நேஷனல் பள்ளிக்கு இப்பவே என்னோட வாழ்த்துக்கள்!!!
 
அபி அப்பா! நீங்க சொன்ன ராம்கி நடிகர் ராம்கிதானே? அவர் சாத்தூர் பள்ளியிலும் படித்தவர் என்கிறார்களே?
 
இரண்டு பள்ளிகளுக்கும் என் வாழ்த்துக்கள்!!!இன்னும் எத்தனை பள்ளிகள் அதிரப் போகுதோ?
சந்தோஷமாயிருக்கு. எல்லோரையும் உசுப்பி விட்டதுக்கு.
 
மிஸஸ் டவுட்!!!

சந்தேகமில்லாமல் உங்க நினைவலைகளை உசுப்பிவிட்டது என் பதிவு. ரொம்ப சந்தோஷம்!!
 
ஆமாம், தமிழ்பிரியன்!!
அந்த அற்புத நாளுக்காக காத்திருக்கிறார், எங்க ரங்கமணி!!
 
நல்ல செய்தி. உறவுகளே உறுத்தெரியாமல் மாறும் இவ்வுலகில், இதுபோல பல்லாண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் ஒன்று சேர்ப்பது அபூர்வம், அற்புதம். குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
உண்மைதான் சதங்கா!
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!!
 
வெகு நல்ல செய்தி.
நானானி,

நானும் எங்கள் பள்ளியைச் சேர்ந்தவர்கள் யாராவது கிடைப்பார்களா பார்க்கிறேன்.
உங்கள் மிள் சந்திப்பு மிகச் சிறப்பாக நடக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
எங்கள்
புனித சூசையப்பர் மேல் நிலைப் பள்ளி, திண்டுக்கல்(பெண்கள்)

St.Joseph's higher secondary school for girls!!!
 
சாத்தூர் என்றவுடன் எட்டிப்பார்த்தேன். நல்ல முயற்சி. பொன்விழா இனிதாக நடைபெற்றதா?
 
i belog to Team 1959 S.S.L.C. and the event went very well with our guru vandanam offered to teachers, Sarvashri U Ganesan, Muniappan, Annamalai, Venkatasubramanian our drill master no 89year old young man and meenakshi sundaram. Teachers Velayatham and I Venkaeswaran werenot in good health and not attended () Kudos to surayakannu muhu and papuraj the compere I returned to mumbai with satisfied feelings after meeting friends of 50 years asso. and some friends 56 years asso () out of 72 students studied in 1959 , 12 expired, 45 attended balance 15 were not ableto come good luck
r.s. subramanian/wife gomathi
 
ரொம்ப நன்றி! ஆர்.எஸ். சுப்பிரமணியம் அவர்களே! நான் விழா பற்றி பதிவிடும் முன், அதில் கலந்து கொண்ட உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு. எம். சங்கர் அவர்களை சந்தித்திருப்பீர்கள், அப்படித்தானே. விரைவில் விழா பற்றி பதிவு எழுதப் போகிறேன். அதையும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.
 
I am Rev Dr.I.G.Sundararajan wo had converstaion with you last after noon.

Your tamil fonts are not in correct shape. The matter looks nice.
 
I am Rev I.G.Sundararajan belonging to the 1959 Class . I attendd and now received the Sovenior what a thrill I have . I am alive to see the miralce of Class mates as Born Brothers.
We ,met as if we were separated by time line. I love to be to gether again. All the blessing to Suryakannu and muthu his brother! YOur IGS
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]