Friday, April 17, 2009

 

நவகிரக சன்னிதிகள் - பாகம் ஒன்று

சென்ற 8-ஆம் தேதி பங்குனி உத்திரம் அன்று எங்கள் சொந்த ஊரான ஆத்தூரில் உள்ள குலதெய்வம் சாஸ்தா கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு, அங்கிருந்து மதுரை வந்து நாத்தனார் அவளது ரங்கமணி மற்றும் நாங்களிருவர் வாடகை வண்டி எடுத்துக்கொண்டு
ஒன்பது நவகிரக ஸ்தலங்களுக்கு(நவ என்றாலே ஒன்பதுதானே!) யாத்திரை கிளம்பினோம்.

தெய்வ அனுகிரகம் இருந்தால் அந்தந்த கோவிலுக்குச் செல்லமுடியும் என்ற என் நம்பிக்கை நிஜமானது. மேப் வாங்கி ரெண்டு ரங்கமணிகளும் சுலமாக செல்ல ரூட் போட்டுக் கொண்டார்கள். ஒன்லி நவகிரக கோயில்கள், வேறு எங்கும் டேக் டைவர்ஷன் கேக்கக் கூடாது என்று கண்டிஷன் வேறு. எனக்கு இத்தலங்களுக்குப் போகவேண்டுமென்று வெகு நாளாக ஆசை. ஆகவே "ஓகே!" என்றேன்.

மதுரையிலிருந்து முதலில் சென்றது பிள்ளையார்பட்டி. என்ன நீங்களே டைவர்ஷன் எடுக்கிறீர்களே? என்றதுக்கு, ஆனைமுகனை வணங்கி விட்டுச் சென்றால் நல்லதுதானே என்றார்கள். அதானே!!!!

அங்கிருந்து தஞ்சாவூர் வழியாகப் போகும் போது...என்னோட "முந்திரி நீ பிந்திரி" பதிவில் வந்த அதே இடம் வந்தது. அதேபோல் முந்திரியை வறுத்து தோல் நீக்கி பாக்கெட் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். அயல்நாட்டவரும் (அவர்கள் பாக்காத முந்திரியா?) அதை படமெடுத்துக் கொண்டும் விலைக்கு வாங்கிக்கொண்டுமிருந்தார்கள்.நானும் ஒரு கிலோ வாங்கிக்கொண்டு அதோடு பொடிப்பொடியாக உடைந்த முந்திரியும் வாங்கிகொண்டேன். அன்று படமெடுக்காத குறை தீர படமும் எடுத்துக் கொண்டேன்.

அடுத்து தஞ்சாவூரில் காலை உணவு. அந்த ஹோட்டல் வாசலில் நான் பார்த்த தஞ்சாவூர் ஓவியம்! திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பது போல் தஞ்சாவூரிலேயே பிடித்த ஆளுயர தஞ்சாவூர் ஓவியம்!!

சந்திரனுக்கான கோவில் 'திங்களூர்' இங்கு கோவில் கொண்டிருக்கும் பிறையணி அம்மனின் மீது கார்த்திகைமாத பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி அம்மன் மீது படுமாம். எங்கு பார்த்தாலும் தாமரைக் குளமாக இருக்கும் அப்பகுதியில் உள்ள தடாகத்தில் பூத்த தாமரைகளையே அர்ச்சனைக்கு மலராக வைத்திருந்தார்கள்.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்!!கும்மி கொட்டத் தயாராய் அடுக்கியிருக்கும் தாமரை மொட்டுக்கள்!!!!
அடுத்து சென்றது குருஸ்தலமாகிய ஆலங்குடி. மழையாயிருந்ததால் படமெடுக்க இயலவில்லை. சூரியனார்க்கு உரிய தலம், சூரியனார்கோவில்!
சூரியனுக்கான கோவிலின் கோபுர வாசல்
அதே கோபுரவாசல்! சூரியனார் கோவிலில்தான் மற்ற எட்டு கிரகங்களுக்கும் தனித்தனியாக சன்னதிகள் இருக்கின்றன. ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் சன்னதிகள் இருப்பது..ஒரே இடத்தில் அத்தனை பேரையும் தரிசித்து விடலாம்தானே?
இங்குள்ள குளத்தில் நீந்தும் பெரியபெரிய மீன்களுக்கு காசு கொடுத்து பொரி பாக்கெட் வாங்கி தூவி அவைகள் தாவி வந்து கொத்தித் தின்றது. மீன்கள் உள்ள குளத்தில் கால்களை வைத்தால் அவைகள் நம் பாதங்களை கொத்திகொத்தி சுத்தப் படுத்தும் என்று அறிந்திருந்தேன். நாத்தனாருக்குப் பயம். நான் கீழ் படியில் அமந்து கொண்டு ரெண்டு கால்களையும் நீருக்குள் வைத்ததுதான் தாமதம்..........! என்ன ஆச்சு? மீன்கள் எல்லாம் அலறி அடித்து ஓடிவிட்டன. ஏற்கனவே சுத்தமாய்த்தானே இருக்கு இதில் நாமென்னத்த சுத்தம் செய்வது என்று எண்ணிற்றோ என்னவோ?
திருநாகேஸ்வரம்!!!நாக தோஷமுள்ளவர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய தலம்.
29/01/09 அன்று நிகழ்ந்த ஓர் அதிசயத்தைப் படமெடுத்து வைத்திருக்கிறார்கள். பெரிது பண்ணி பார்த்தால் விபரம் புரியும்.


அன்றைய கோட்டா ஆறு கோவில்கள். கடைசியாக சென்றது கஞ்சனூர், சுக்கிரனுக்கானது. மற்றது வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாயுடையது. பக்கத்தில்பக்கத்தில் நிறைய கோவில்கள் இருந்தாலும் ஒரே மனசாக ஒன்பது கோவில்களில் ஆறு கோவில்களை முதல் நாள் முடித்துவிட்டு இரவு தங்குவதற்கு சென்ற இடம் திருக்கடையூர்!!!!!!!!ஆஹா! அபிராமி அழைக்கிறாளா...?அபிராமி...அபிராமி...!!

மீதி முன்று கோவில் தரிசனம் அடுத்தபதிவில். சேரியா?

Labels:


Comments:
அட்டகாசம் நானானி.

படங்கள் அத்தனையும் லட்டு.

பேசாம நம்ம தொடருக்கு இங்கிருந்து 'சுட்டு'ப் போட்டுறலாமான்னு இருக்கேன்:-)

முந்திரியைக் கோட்டை விட்டுட்டேன்(-:
 
நான் கீழ் படியில் அமந்து கொண்டு ரெண்டு கால்களையும் நீருக்குள் வைத்ததுதான் தாமதம்..........! என்ன ஆச்சு? மீன்கள் எல்லாம் அலறி அடித்து ஓடிவிட்டன. ஏற்கனவே சுத்தமாய்த்தானே இருக்கு இதில் நாமென்னத்த சுத்தம் செய்வது என்று எண்ணிற்றோ என்னவோ?
......
இந்த தன்னம்பிக்கை எல்லா பெண்களுக்கும் இருந்தால் ...உலகத்திலே அவங்களை யாரும் அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது...
 
நவகிரக தரிசனமா? வாழ்த்துக்கள்! படங்கள் எல்லாம் கலக்கல்! எல்லாம் கும்பகோணத்தை சுற்றி தானே.. இரண்டு நாளில் பார்ப்பது சரி தான்.
ஆத்தூரில் நம்ம பிரண்ட் ஒருத்தர் இருக்காரே. :)
 
நவக்கிரக டூரா சூப்பரேய்ய்! :))

எங்க ஊரை கிராஸ் பண்ணாமலா போயிருப்பீங்க !

ஒரு வரி கூட இல்லியே சரி பரவாயில்ல :))

(பர்ஸ்ட் கோயிலு படம் திங்களூரா அல்லது கஞ்சனூரா?)
 
ஆயிரம் தாமரை மொட்டுக்கள் அழகாய் ஆனந்தக் கும்மி கொட்டுகின்றன.

ஆனை முகத்தோனை தரிசித்து ஆறு கோவில்கள் சென்று வந்ததை விவரித்து கண்ணுக்கும் படங்களுடன் விருந்து வைத்து விட்டீர்கள்.

அருமை அருமை.
 
//இங்கிருந்து 'சுட்டு'ப் போட்டுறலாமான்னு இருக்கேன்//

செய்யூ.....!
 
நல்லாச் சொன்னீங்க...கோமா!
 
எந்த ஆத்தூர்...தமிழ்பிரியன்? நாங்க போனது திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர்.
 
ஆமாம்! ஆயில்யன்! மயிலாடுதுறை வழியாகத்தான் போனோம். அங்கிருந்து கத்தினால் கத்தாருக்குக் கேக்குமா? வழியெல்லாம் பச்சை பசேலென்றிருந்துது, காவேரி டெல்டா அல்லவா?
 
ஃபர்ஸ்ட் கோயில் திங்களூர்தான். கும்பாபிஷேகத்துக்குத் தயாராகுது போல.
 
ரொம்ப நல்ல அனுபவம்தான், ராமலக்ஷ்மி! மழையுமில்லாமல் வெயிலுமில்லாமல் மேகமூட்டமாகவே இருந்தது அந்த ரெண்டு நாட்களும்...எங்களுக்காகவே!!

சில இடங்களில் லேசான மழையுமாக பிரயாணம் சுகமாக இருந்தது.
 
//நானானி said...

எந்த ஆத்தூர்...தமிழ்பிரியன்? நாங்க போனது திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர்.////
சேலம் ஆத்தூர் இல்ல.. திருச்செந்தூர் பக்கம் ஆத்தூர் தான்.. :)
 
மதுரைப்பக்கம் கூட ஒரு ஆத்தூர் இருக்கு:-)
 
ஆ..த்தாத்தோ...எத்தன ஆத்தூ...ர்?!
 
செங்கல்பட்டில் கூட ஒரு ஆத்தூர் இருக்கே......ஆத்தா....த்தோ ,இன்னுமா!!!!!!
 
படங்கள் கலக்கல்!
 
//Not to publish//

நான் மடிப்பாக்கத்திலே இருக்கேன்ப்பா!
தாராளமா ஒரு மீட் போடலாமே!
என் மொபைல் : 9840908489
தனிமடலிட : sandanamullai.mugilvannan@gmail.com
 
சூப்பரு.. அந்த தாமரை மொட்டுகள் எதோ ஸ்வீட் ஐடம் மாதிரி இருக்குங்க. :)
 
//நான் கீழ் படியில் அமந்து கொண்டு ரெண்டு கால்களையும் நீருக்குள் வைத்ததுதான் தாமதம்..........! என்ன ஆச்சு? மீன்கள் எல்லாம் அலறி அடித்து ஓடிவிட்டன. ஏற்கனவே சுத்தமாய்த்தானே இருக்கு இதில் நாமென்னத்த சுத்தம் செய்வது என்று எண்ணிற்றோ என்னவோ?//

மீன்கள் ரொம்ப புத்திசாலிங்க போல. சென்னையில் தண்ணீர் பஞ்சம் என்ற உண்மையை கண்டுபிடிச்சிருக்குமோ? :))
 
//நான் கீழ் படியில் அமந்து கொண்டு ரெண்டு கால்களையும் நீருக்குள் வைத்ததுதான் தாமதம்..........! என்ன ஆச்சு? மீன்கள் எல்லாம் அலறி அடித்து ஓடிவிட்டன. ஏற்கனவே சுத்தமாய்த்தானே இருக்கு இதில் நாமென்னத்த சுத்தம் செய்வது என்று எண்ணிற்றோ என்னவோ?//

மீன்கள் ரொம்ப புத்திசாலிங்க போல. சென்னையில் தண்ணீர் பஞ்சம் என்ற உண்மையை கண்டுபிடிச்சிருக்குமோ? :))
 
//இருக்கே......ஆத்தா....த்தோ ,இன்னுமா!!!!!!//

கோமா! உங்க பதிலே உங்களுக்கும்!!
 
பதிவில் சந்தன வாசம் அடிச்சுதேன்னு பாத்தேன்!
 
நம்ம அடையாறு ஆனந்த பவனில் சொல்லிட்டால் தாமரை மாதிரியே ஸ்வீட் செஞ்சு அசத்திடுவாங்களே!!!
முதல் அடி எடுத்து வைத்ததுக்கு நன்றி, சஞ்ஜய் காந்தி!!!
 
சென்னையிலா...? தண்ணீர் பஞ்சமா...? கார்பரேஷன் தண்ணீர் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது மூணு நாலு வருசமா...நீங்க வேற!!
 
//சென்னையிலா...? தண்ணீர் பஞ்சமா...? கார்பரேஷன் தண்ணீர் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது மூணு நாலு வருசமா...நீங்க வேற!!
//

அப்படியும் மாசக் கணக்குல குளிக்காம போய் தண்ணியில் காலை வச்சி அந்த மீனுங்கள எல்லாம் கொல்லப் பார்த்தா என்ன அர்த்தமுங்க அம்மனி? :))
 
//முதல் அடி எடுத்து வைத்ததுக்கு நன்றி, சஞ்ஜய் காந்தி!!!//

முதல் அடியா? முதுகுலையே விழும். ஏற்கனவே வந்திருக்கிறேன். இது துளசி ரீச்சர் ப்ளாக்ல லின்க் பார்த்து வந்தேன்.
 
என் பாதங்களின் சுத்தத்தைப் பார்த்து பாத பூஜை பண்ணலாமென்று அதற்கான சாமான்கள் எடுக்கத்தான் அப்படி ஓடினவோ? நாந்தான் அவசரப்பட்டு கால்களை எடுத்துவிட்டேன். இல்லாவிட்டால் மீன்களின் பாத பூஜையை அனுபவித்து விட்டே வந்திருப்பேன்.
அக்காங்!!
 
பேருக்கு ரெண்டு பக்கமும் வண்ணத்துப்பூச்சி போட்ட சஞ்சய் காந்தி என்ற பேரில் இதுதானே முதல் வருகை? என்னா? சர்தானே?
 
இதென்னப்பா ஒரே கோவில் காட்சியா இருக்கு. பக்தி முத்திப் போச்சு. இருந்தாலும் படங்கள் வெகு அழகு நானானி. தாமரையும் முந்திரியும் வெகு ஜோர்.

கார் பக்கத்தில ரங்கமணி நிக்கிறாரு அவரைச் சொல்லலியே:)
ஆஹா அடுத்தது அபிராமியா. நடத்துங்க. அப்புறம் சேலம் பக்கத்தில ஒரு ஆத்தூர் இருக்கே!!!
 
வல்லி!!!
பக்தி அப்பப்ப முத்தும் பிறகு மறுபடி,
பூவாகி காயாகி கனியாகி முத்தும். நம்ம பக்தியெல்லாம் இந்த ரகம்தான்.
 
அடுத்த பதிவைப் பாத்து என்னங்கப் போறீங்களோ?
 
நவகிரக சன்னிதிகள் - ஆலய தரிசனம் - ஆன்மா இனித்தது. கண்ணில் கண்டு கருத்தில் கொண்ட இறைவனை இடுகையில்கண்டது சென்று வந்தது போலவே சிந்தை மகிழ்ந்தது. நல்ல நிழற்ப்படங்கள். பயனுள்ள இன்பச் செலவு.
 
புகைப்படம்கள் அற்புதம்....

ஒரே ஒரு சிறிய மாற்றம்

முதலில் நீங்கள் போட்டிருக்கும் கோவில் 'திங்களூர்' அல்ல...அது ஆலங்குடி குருபகவான் கோவில்..
 
வெம்பாக்கம் ஸ்ரீசொர்ணகால பைரவர் கோயில் பற்றிய தகவல் அறிய கீழ்க்கண்ட வலைத்தலைத்தை பார்க்கவும்.
Sriswernakalapairavar.blogspot.com
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]