Saturday, March 21, 2009

 

இம்மி...இம்மி...இம்மி...!!!

"இம்மி...இம்மி...இம்மி...இம்மி!!!"
என் செல்லப் பேரன் செய்யும் குறும்புகளைச், "சொல்லச் சொல்ல இனிக்குமடா சண்முகா...."
விளையாட்டுகள் தவிர செய்யக்கூடாததை எல்லாம் செய்யும் போது அதைத்தடுக்க, நான் கூவிக்கொண்டே போகும் கூவல்தான், "இம்மி..இம்மி..இம்மி!!"

சமையலறை இழுவறைகளை இழுத்து போத்தல்களை இறைக்கும் போதும்..இம்மி..இம்மி!கார் சவாரியின் போது பின்னிருக்கையின் மேலேறும் போதும், இம்மி..இம்மி!


கடைக்குக் கூட்டிச் சென்றால் அங்கிருக்கும் விளையாட்டுச் சாமான்களை வாரி அழையும் போதும், இம்மி..இம்மி!


அங்கிருக்கும் ஹூலாஹூப்களையும் உருட்டி இறைக்கும் போதும், இம்மி..இம்மி!


அவனோட டாய் ட்ராயரை விருட்..விருட்டென்று இழுக்காதே என்றால் அதுனுள்ளேயே ஏறி அமர்ந்து விளையாரும் போதும், இம்மி..இம்மி!


விளையாட்டுச் சாமான்கள் ஏ..கமிருக்க என் பட்டுக் குஞ்சம்..துடைப்பத்தோடு விளையாடும் போதும், இம்மி..இம்மி!


இது போல் இன்னும் ஏகப்பட்ட இம்மிகள் இருக்கு. இப்போதெல்லாம் அக்குறும்புகளைச் செய்யு முன் எனக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டே செய்கிறான்.
வாசல் கதவு திறந்திருந்தால், "ஆச்சி! இம்மி..இம்மி!!" என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடிவிடுகிறான்.
பாத்ரூம் கதவும் திறந்திருந்தால் என்னைப் பார்த்து,"இம்மி..இம்மி!" என்றுவிட்டு தண்ணீரில்
விளையாடுகிறான்.
சமையலறை ட்ராயரைத் திறக்குமுன்,"இம்மி..இம்மி!" சொல்லிக்கொண்டே திறக்கிறான்.
"தீராத விளையாட்டுப் பிள்ளை - ஷன்னு
வீட்டிலே எங்களுக்கோயாத இன்பத் தொல்லை"

Labels:


Comments:
சூப்பர் நானானியக்கா! பேரனுக்கு சுத்தி போடுங்க! அருமையோ அருமை!!!
 
இம்மி இம்மி னா என்னங்க?
 
ஒவ்வொரு வரியையும் படங்களையும் இம்மி இம்மியாக ரசித்தேன்:)! இன்பத் தொல்லையிலே இன்னும் இன்னும் திக்குமுக்காட வாழ்த்துக்கள்:) [அந்த டாய் ஷாப் எங்கியோ பார்த்தாப்லே இருக்கே:)?]
 
ஹாய்... இம்மி! இம்மி! இம்மி!
 
இம்மி இம்மி - சொல்லவே இனிக்குதே - பேரனைக் கண்ட்ரோல் பண்றதுக்கு இம்மி இம்மியா

ம்ம்ம்ம்ம்ம் - கொடுத்து வைக்கணும் பாட்டி இதுக்கெல்லாம்

நல்வாழ்த்துகள் நல்ல பேரனுக்கும் பாட்டிக்கும்

இம்மி இம்மி இம்மி இம்மி இம்மி
 
இம்மி என்றால் என்ன? என்னுடைய nick name இம்மி!
 
ரொம்ப சந்தோஷம்! அபி அப்பா!
ஒரு வேடிக்கை தெரியுமா? என் உறவினர்களிடம் எல்லாம், 'அபி அப்பா பாத்தாச்சா? அபி அப்பா பாத்தாச்சா?' என்று கேட்க அவர்கள், 'அபி அப்பாவா?' என்று குழம்ப, நான் ஞே! என்று விழித்திருக்கிறேன். அது 'அபியும் நானும்'
 
ஆ. ஞானசேகரன்! முதன்முதலாக எட்டிப்பார்த்திருக்கிறீர்கள். வணக்கம்!
ஏதாவது விபரீதமாக நடக்கும் போது, 'ஐயையோ!' என்றோ 'அம்மாடீ!' என்றோ பதறுவோமே? அதற்குப் பதிலாக என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்தான், "இம்மி..இம்மி..!"
இதன் அர்த்தம் என்னவென்று அகராதியில் கூட பார்க்க முடியாது.
 
ராமலக்ஷ்மி....! அந்த டாய் ஷாப் உங்க ஊரிலேதானிருக்கு. ஹஹ்ஹஹ்ஹா!!!
 
தமிழ்பிரியன்! உங்கள் செல்ல மகனின் செல்லக் குறும்புகளையும் எங்களோடு பகிர்ந்துக்கலாமே!!
ஊரிலிருந்த போது ரசித்தவைகளெல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டிருப்பீர்கள்தானே?
 
அன்பு சீனா!
நம்மி..நம்மி..நம்மி!! அதாவது
நன்றி..நன்றி..நன்றி!!
 
அனானியின் நிக் நேம் இம்மியா? அட!
எதேச்சையாக வாயிலிருந்து வந்த வார்த்தைகள்தான் அவை. குழந்தைகளை தடுக்க ஓடும் போது 'யம்மா..யம்மா' என்று கூவிக்கொண்டே ஓடுவோமே அதுபோல்தான் இதுவும்.
என் மகளை அவள் தம்பி குழந்தையாயிருக்கும் போது. 'நின்னி..நின்னி' என்றுதான் அழைப்பான். எப்படியெல்லாம் பேர்கள் பாருங்கள்!!!
 
\\என் உறவினர்களிடம் எல்லாம், 'அபி அப்பா பாத்தாச்சா? அபி அப்பா பாத்தாச்சா?' என்று கேட்க அவர்கள், 'அபி அப்பாவா?' என்று குழம்ப, நான் ஞே! என்று விழித்திருக்கிறேன். அது 'அபியும் நானும்'\\

அட என்ன ஒரு ஆச்சர்யம் நானானிஅக்கா! எங்க வீட்டுலயும் அபிஅம்மா இப்படி ஒரு சேதி சொன்னாங்க, எங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாம் அந்த படத்து பேரையே அபிஅப்பான்னு மாத்திட்டதா:-))
 
உங்கள் பேரன் ஆச்சி இம்மி இம்மி என்று அறிவிப்பு கொடுத்து ஆர்ப்பாட்டம் தொடங்குவது உங்களை அங்கே இங்கே இம்மியும் நகராதவாறு உங்கள் பிளாகுக்கு இம்மி நேரம் கூட தராமல் இம்மி இம்மி என்று உங்களை கும்மி கும்மி எடுக்கிறானே .
 
ஆஹா! என்னவொரு ஒற்றுமை!!!
அபியும் நானும்! இல்லையில்லை அபி அப்பா!
இன்னும் எத்தனை பேர் இப்படி குழம்பிக் கொண்டிருக்கிறார்களோ?
ஆனாலும் சுவையான குழப்பம்.
படத்தின் இயக்குனர் 'அபி அப்பா' என்றே டைட்டில் வைத்திருந்தாலும் சரியாகத்தானிருக்கும்.
 
இந்தா வாரேன்....இந்த 'அம்மி'க் குழவி எங்கே காணோம்?

நிங்களும் இப்படி கும்மியடிக்க வாரியளா?
 
சொல்லச் சொல்ல இனிக்குதடா என்று தொடங்கி தீராத விளையாட்டுப் பிள்ளை என்று அழகாக உங்கள் பாணி இம்மி குறையாமல் சொன்னீர்கள். ஒன்று பார்த்தீர்களா? நீங்கள் மம்மியாக இருந்த போது பிள்ளைகள் குறும்பு செய்தால் அடித்துக் கூட இருப்பீர்கள். பேரன் செய்யும் எதையும் ர்சிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இம்மி இம்மி இம்மி ஷன் கீபோர்டை தட்ட வருகிறான். பார்த்துக்கங்க.
சகாதேவன்
 
சொல்லச் சொல்ல இனிக்குதடா என்று தொடங்கி தீராத விளையாட்டுப் பிள்ளை என்று அழகாக உங்கள் பாணி இம்மி குறையாமல் சொன்னீர்கள். ஒன்று பார்த்தீர்களா? நீங்கள் மம்மியாக இருந்த போது பிள்ளைகள் குறும்பு செய்தால் அடித்துக் கூட இருப்பீர்கள். பேரன் செய்யும் எதையும் ர்சிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இம்மி இம்மி இம்மி ஷன் கீபோர்டை தட்ட வருகிறான். பார்த்துக்கங்க.
சகாதேவன்
 
சமையலறையில் நல்ல வேளை ப்ளாஸ்டிக் ஜார்கள். ஷ்ன்னின் பெயர் சண்முகம்தானே. அவனை ஷம்மி, ஷம்மி ஷம்மி என்றே அழையுங்கள்
தாமரை
 
வாரும்..வாரும் சகாதேவரே! எங்கே வெகு நாட்களாக ஆளையே காணோம்?
கண்டிக்கவும் கண்காணிக்கவும் அம்மா!
கண்டு ரசிக்கவும் களிக்கவும் ஆச்சி!
சேரிதானே?
 
பத்மம் தாமரையாய் பூத்ததே!

சமையலறையில் கண்ணாடி பாட்டில்கள் வைத்திருந்தால் நீங்க சொன்னாமாதிரி என்ன வாகும்?
 
//நீங்கள் மம்மியாக இருந்த போது பிள்ளைகள் குறும்பு செய்தால் அடித்துக் கூட இருப்பீர்கள். பேரன் செய்யும் எதையும் ர்சிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இம்மி இம்மி இம்மி //

அதே ! அதே !!

பேரனின் குறும்பை ரசித்து பதிவிட்ட பாட்டிக்கு இம்மி இம்மி இம்மி :))

உங்க பேரனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு ... என்னனு கண்டுபுடிங்க பார்க்கலாம் !!!
 
வாங்க சதங்கா! ரொம்ப நாளாச்சு பாத்து.

என் பேரனுக்கும் உங்களுக்கும் உள்ள ஒற்றுமையா....? என் பேரனைப் போல் கடைகளுக்குப் போனால் பொருட்களை அளைந்து கலைப்பீர்களா? அல்லது காரில் பின்புறம் ஏறிப் ப்டுத்துக் கொள்வீர்களா? இல்லை...வீட்டில் பெருக்கும் வேலை உங்களோடதா?
 
//அனானியின் நிக் நேம் இம்மியா? அட!
எதேச்சையாக வாயிலிருந்து வந்த வார்த்தைகள்தான் அவை. குழந்தைகளை தடுக்க ஓடும் போது 'யம்மா..யம்மா' என்று கூவிக்கொண்டே ஓடுவோமே அதுபோல்தான் இதுவும்.
என் மகளை அவள் தம்பி குழந்தையாயிருக்கும் போது. 'நின்னி..நின்னி' என்றுதான் அழைப்பான். எப்படியெல்லாம் பேர்கள் பாருங்கள்!!!

- My brother instead of calline me thambi, called இம்மி, so that became my nickname.
 
ohhhhhhhhhhhw so cute :)
 
படங்கள் கொள்ளை அழகு! உங்கள் விவரிப்பும் அழகு!!
 
தூயா!
ohhhhhhhhhhhw so nice of you!
 
சந்தனமுல்லைக்கு
வந்தனம்!!!!
 
//வாங்க சதங்கா! ரொம்ப நாளாச்சு பாத்து.//

அலுவலகத்து ஆணிகளின் ஆட்டிப்படைப்பு தான் :)))

//என் பேரனுக்கும் உங்களுக்கும் உள்ள ஒற்றுமையா....? //

ஆமா...

//என் பேரனைப் போல் கடைகளுக்குப் போனால் பொருட்களை அளைந்து கலைப்பீர்களா?//

ம்.ஹிம். ரொம்ப சமத்து. "கடைக்கு வந்தா இப்படியா கைய கட்டிகிட்டு நிற்கறது" என தங்க்ஸ் செல்லமாய் !!! கோபிப்பார்கள்.

// அல்லது காரில் பின்புறம் ஏறிப் ப்டுத்துக் கொள்வீர்களா? //

ம்.ஹிம். தங்க்ஸ் ட்ரைவ் வயித்தை கலக்கும்.

//இல்லை...வீட்டில் பெருக்கும் வேலை உங்களோடதா?//

இப்பவே பேரனுக்கு ட்ரைய்னிங் கொடுக்கறீங்க. எல்லாரும் செய்யறதால ... இதுவும் ம்.ஹிம் தான் :)))
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by the author.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]