Wednesday, March 25, 2009

 

அக்கு வேறு ஆணி வேறா நான் பாத்த அக்குவேரியம்!!!

மீனே மீனே மீனம்மா என் விழியைத்தொட்டது நீயம்மா!!
விதவிதமான பல வண்ணங்களில், சிறிதும் பெரிதுமாக நம் கண்மீன்களைக் கவர்ந்து அங்கும் இங்குமாக சுழலவைத்தது, சிகாகோ நகரின் டவுன்டவுனில் நான் கண்ட அக்குவேரியம்.

அங்கு வரிசையில் காத்திருக்கும் நேரத்தில் போரடிக்காமலிருக்க பெரியபெரிய ட்ரம்கள் ஒலிக்க ட்ராகன் ஷோ ஒன்றை நடத்தி, நாம், 'புரிச்..புரிச்!' என்று முணுமுணுக்காதபடி பார்த்துக்கொண்டார்கள். கொழுத்தும் பன்னிரெண்டு மணி வெயிலில் உச்சி காயவில்லை,
பாதங்கள் சுடவில்லை. "ஏய்! அதான் தலையில் ஸ்கார்ப் கட்டியிருந்தாய், காலில் ஷூ போட்டிருந்தாயே!" 'சேரி..சேரி! அடங்கு! வெயில் இதமாக இருந்தது என்று சொல்ல வந்தேன்.' என்று மனசாட்சியை அடக்கிவிட்டு வரிசையில் நகர்ந்து உள்ளே நுழைந்தோம்.


உள்ளே நுழைந்து வலம் வர ஆரம்பித்தோம். 'ஏன் இடம் வர ஆரம்பிக்கக் கூடாதா?' 'ஏய்! மறுபடி அடங்கு!!'


உள்ளே நுழைந்ததும்.......

"வாவ்!" சினிமாவில் வருவது மாதிரி ஏதோ ஒரு மந்திர மோதிரத்தை விரலில் அணிந்து கொண்டவுடன் சமுத்திரத்தின் அடியில் எவ்வித சிரமுமில்லாமல் போய் அங்குள்ள காட்சிகளைக் காண்பது போல் உணர்ந்தேன். உங்களையும் அழைத்துச் செல்லவா? இதோ! மோதிரம்! அணிந்து கொள்ளுங்கள். என்னோடு வாருங்கள்.

கழுத்தில் என் ப்ளாஷ் லைட் அடித்தும் அசராத மீனினம்!


ஜாஸ் படத்தில் நாம் பார்த்து மிரண்ட சுறாக்கள்!! இங்கு சின்ன சைசில்!


அதே சுறாக்கள்...குட்டி குட்டியாக, சிறுவர் சிறுமிகளாக செல்லமாக வலம் வருகின்றன.பார்த்தேயிராத ஒருவகை நீர்வாழ் ஜந்து!


கடல் தாவரங்களிடையே உலா வரும் மீன்கள்!


அதே! அதே!எந்த விட்டலாச்சார்யா அல்லது தோட்டா தரணி கடலுக்குள் இத்தனை அழகான குகையை அமைத்துக் கொடுத்தாரோ? மீன்கள் உல்லாசமாக நீந்திவருகின்றன.சின்ன மீன்களெல்லாம் மேலே நீந்த, பெரிய மீன் நீரின் ஆழத்தில் நீந்துவது அவைகளின் பாதுகாப்புக்கா? அல்லது தனது பகலுணவுக்கா?குச்சி குச்சி ராக்கம்மா!இது அக்கல்லின் மேல் வழிந்து வழிந்து நகர்வது பார்க்க நம் கைகளில் வழிவது போலிருக்கும். இதே போல் ஒரு பந்து கூட இருக்கும்.


மீன்களோடு ஆமையும் புகுந்து விளையாடுகிறது.இரண்டு ராட்சத நண்டுகள் அசையாமல் வெகுநேரம் இருந்தன. பொம்மையோ என்று எண்ணி
ரங்ஸை கண்ணாடிக்குப் பின் நிற்க வைத்து எடுத்தது. காரணமில்லாமல் எடுப்பேனா? அவரது ஸோடியாக் சைன் கான்சர்! அதான்.அம்மாடீ!!!திடீரென்று அவைகள் இரண்டும் நகர ஆரம்பித்த போதுதான் உயிருள்ளவைகள் என்று புரிந்தது.


கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு என்று அறிஞர் அண்ணா சொன்னதைக் கேட்டிருக்குமோ? எப்படி தீட்டியிருக்கிறது பாருங்கள்!!


நீரின் 'உள்ளே வெளியே'சுவாரஸ்யமான பகுதி இதுதான். மீன்களுக்கு பகலுணவு கொடுக்கவேண்டாமா? அவைகள் பசித்திருக்குமே! நீர்மூழ்கி ஜாக்கெட்டுகள் அணிந்த பெண் ஒருவர் அந்த பிரம்மாண்டமான தொட்டிக்குள் மூழ்கி தன் கையில் மாட்டியுள்ள பையிலிருந்து இறந்த மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து நீட்ட ஆவலுடன் வளைந்து நெழிந்து வந்து கவ்விக்கொண்டு போகும் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.


கையிலிருக்கும் மீனை லாவகமாக கவ்விக் கொண்டு போகிறது பசித்த ஒரு மீன்.


உணவை வாங்கிக்கொண்டு போகும் மீனை வாஞ்சையோடு தடவிக்கொடுக்கிறார்.


எங்கெங்கு நோக்கினும் மீன்கள்தான். நம் காலுக்கடியிலும் மீன்கள்!!


தலைக்கு மேலும் மீன்கள்!!பாறைகளுக்கிடையே மதிய ஓய்வெடுக்கும் நீரினங்கள்.


வண்ண வண்ண மீன்கள் காணக்காண திகட்டாது.


இறுதியாக மனிதனோடு சகஜமாக உறவாடும் டால்பின்கள். அவைகள் செய்யும் விளையாட்டுக்கள்!!


பயிற்சியாளரின் விசிலுக்கு பதில் விசில் கொடுக்கிறது. அவர் கை சொடுக்கியபடியெல்லாம் சுழல்கிறது.


தண்ணீரிலிருந்து தாவி மறுபடி தண்ணீருக்குள் பாய்ந்து வரும் போது என் காமிராவுக்குள் பிடிபடாத வேகம். எனவேதான் தண்ணீர் மட்டும் தெரிகிறது.


இனி நீங்கள் உங்கள் கையிலிருக்கும் மோதிரத்தைக் கழற்றி விட்டால் சமுத்திரத்திலிருந்து வெளியே வந்து நமது சொந்த இடமான நிலத்தில் நிற்பீர்கள்!! பத்திரமாக கூட்டிப்போய் பத்திரமாக வெளியே கொண்டுவந்து விட்டேனா?

Labels:


Comments:
மோதிரத்தை கழட்டி உங்க கிட்ட குடுக்கனுமா நானே வச்சுக்கலாமா ?

கமெண்டரி சூப்பர்.. காதுல ஹெட்போன்ல் உங்க வாய்ஸ் சொல்ல சொல்ல ஒன்னு ஒன்னா பார்த்தோம்..

அந்த பந்து சூப்பரா இருக்குமில்ல தூக்கிபோட்டா ஒட்டிக்கும் .. :) எங்க வீடு பூரா கிடந்தது
 
ஆஹா! முத்துலெட்சுமி...தாராளமாக என் ஞாபகமாக நீங்களே வைத்துகொள்ளுங்கள். ஆனா யாராவது வில்லன்கள் கைகளுக்குப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சேரியா?

அந்தப் பந்து எங்க வீட்டிலும் இருக்கு.
களுக் களுக் என்று. அதைப் பிதுக்கினால் உள்ளே சிறிய மீன்கூட நீந்தும்.
 
நோ அந்த மோதிரம் எனக்கு தான்!எல்லா படமும் சூப்பர்.சமீபத்துல அண்ணாமலை பல்கலைகழகத்திலே ஒரு அக்வேரியம் வச்சிருக்காங்க. மிக பிரம்மாண்டமாக, அதும் நல்லா இருக்கு. அதுபோல துபாயில் புர்ஜ் அல் அராப் பில்டிங்கில் கடலுக்கு அடியே ஸாரி நிலத்துக்கு அடியே 'நேச்சுரல் அக்வேரியம்" இருக்கு, அது செம சூப்பர்!
 
பார்த்து பரவசம் அடைந்த எங்களை பத்திரமாகவே வெளியே கொண்டு வந்து விட்டீர்கள்:)! மோதிரத்தை நாங்களே வைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி விட்டீர்கள். நன்றி. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ மறுபடி மாட்டிக் கொண்டு ஒரு ரவுண்டு போய் வர வசதியாயிருக்கும்:)!
 
இம்மி இம்மின்னு இல்லாத வார்த்தைகளையெல்லாம் அகராதியில் கொண்டு வரும் உங்களுக்குச் சொல்லித் தரணுமா
அக்குவேரியம் கிடைச்சா அதை அக்கு வேறு ஆணி வேறாக்க.....தலைப்பு வைப்பதில் சூரர்
 
ராசியிலேதான் எனக்கு நம்பிக்கை இல்லீங்கோ பாருங்களேன் நீங்களும் நானும் ஒரே ராசிதான் ஆனா நான் உள்ளே நீங்க வெளியே...
ஒரு படத்தில் --
கடகம், கடகராசிக்காரரிடம் இப்படி சொல்லியிருக்குமோ
 
நீருக்குள் போய் நிலத்துக்கு வந்தாச்சு. எனக்கு ரொம்ப ரொம்பப்ப் பிடிச்சது டால்ஃபின் ஷோதான்:)
மோதிரத்தை நானே வச்சுக்கறேன்.ஆடுத்த தடவை போகும்போது உபயோகப்படும் இல்லையா:)
 
அக்வேரியத்தை அக்குவேறு ஆணி வேறா பார்க்க வருபவர்களுக்கு ஒரு மோதிரம் இலவசம்!!இப்படி அறிவித்திருக்கலாமோ?
 
பிடிச்சிருந்துதா? மோதிரம் உங்களுக்கேதான்.
 
கண்ணில் கண்டதையெல்லாம் உடனே க்ளிக்கி பதிவிடும் உங்கள் சுறுசுறுப்பும் அப்படித்தான், கோமா!
 
சொன்னாலும் சொல்லியிருக்கும்.
என் காதில்தான் விழவில்லை.
 
எவ்ளோ மீனுக...எவ்ளோ படங்க...அப்புறம் கமெண்ட்ரி எல்லாம் சூப்பரோ சூப்பர்.
 
மோதிரம் இலவசம்தான் வல்லி! எப்போ வேணுமானாலும் போய் வரத் தோதாக. சேரியா? சந்தோஷம்தானே?
 
எவ்ளோ பேருக்குப் பிடிச்சிருக்கு!!

உங்க மோதிரத்தை என்ன செய்தீர்கள், தமிழ்பிரியன்?
 
”....ராசியிலேதான் எனக்கு நம்பிக்கை இல்லீங்கோ பாருங்களேன் நீங்களும் நானும் ஒரே ராசிதான் ஆனா நான் உள்ளே நீங்க வெளியே...”
ஒரு படத்தில் --
கடகமே, கடகராசிக்காரரிடம் இப்படி சொல்லியிருக்குமோ?
 
மோதிரத்தை மீன்வாயிக்குள் போகாமல் பத்திரமா என் கையிலேயே வெச்சிருக்கேன் நானானி.

//கமெண்டரி சூப்பர்.. காதுல ஹெட்போன்ல் உங்க வாய்ஸ் சொல்ல சொல்ல ஒன்னு ஒன்னா பார்த்தோம்.. //

மனமார்ந்த ரிப்பீட்டு
 
///நானானி said...
எவ்ளோ பேருக்குப் பிடிச்சிருக்கு!!
உங்க மோதிரத்தை என்ன செய்தீர்கள், தமிழ்பிரியன்?///
தங்கமணிக்கும், மகனுக்கு போட்டுட்டு கூட்டிப் போகனும்னு ஒளிச்சு வச்சுக்கிட்டேன்..திருப்பி கேக்காதீங்கம்மா
 
நல்லவேளை! தென்றல்!
மீன் வாயினுள் போனாலும் அதனால் அதுக்கு உபயோகம் இல்லாததால் உங்களிடமே திருப்பிக் கொடுத்துவிடும்.
 
மோதிரத்தை ஒளிச்செல்லாம் வைக்கவேண்டாம் தமிழ்பிரியன்!
உங்களுக்கு மட்டும் ஒன்னு கொடுத்தால் ரெண்டு இலவசம்! ஒன்னு பெரிசு, தங்கமணிக்கு, ஒன்னு சின்னது, குட்டிப் பையனுக்கு.
சேரியா? அடுத்த முறை குடும்பத்தோடு போய் வாருங்கள்!!
 
என்னது இது? மீனை விட மோதிரம்
பிரபலமாகி விட்டதே!!!!!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]