Friday, February 20, 2009

 

வாகனம், பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!!!

வாகனங்கள் என்றால் கொஞ்சம் பிரியம். அதிலும் விதவிதமான வாகனங்கள்
என்றால்...? என் கண்களில் பட்ட பல வகை வாகனங்களை ஆங்காங்கே கிளிக் செய்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பிடிச்சிருக்கா சொல்லுங்க. சேரியா?

செயிண்ட் லூயிஸில் ஒரு 'சாராய பாக்டரியை சுத்திப்பாக்க அழைத்துச் செல்ல வந்த ஒரு பஸ்!!!

சன்னிவேல் ஃப்ளாட்டை பராமரிப்புக்காக சுத்திவரும் க்ளப்கார்!

ஆஹா! இந்த டூவீலரை ஓட்டிப் பாக்க மிகவும் ஆசை! சில இடங்களில் வாடகைக்கே தருகிறார்கள். 'விழுந்துகிழுந்து வைக்கப்போறே!' என்றதால் கை நழுவியது ஆசை!!கமலின் தசாவதாரத்தில் இதைப் பார்த்த நினைவு.

செல்லம் போல இந்த ஜீப் ரொம்ப ஆசையை கிளப்பிவிட்டது.

கோகார்ட்டிங்க் கார்!

மாலில் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஷாப்பிங்க் செய்யத் தோதான கார் வடிவிலான ட்ராலி

விடுமுறையைக் கழிக்க சென்ற இடங்களில் சுகமாக சவாரி செய்ய இது போன்ற சைக்கிள்கள் கிடைக்கின்றன. குடும்பம் மொத்தமும் கவலையில்லாமல் விஸ்ராந்தியாக மிதிப்பதைப் பார்ப்பதே ஒரு சுகானுபவம்!!

இதுவும் ஒரு வகை சைக்கிள்தான். ரிலாக்ஸ்டாக நான்கு பேர் சேர்ந்து ஒற்றுமையாக மிதித்தால், வாழ்க்கைப் பயணம் போல் எவ்வித தடங்கலுமில்லாமல் ஓடும். நானும் ரங்ஸும் அவர் தம்பியும் அவரது தங்ஸும் சேர்ந்து மிதிக்க ஆசைப்பட்டேன். எங்களோடு ஒருவர் வந்தால் ஒருவர் இருக்கமாட்டார். இப்படியாகத்தானே இந்த ஆசையும் 'பணால்!!'

சாலை பராமரிப்புக்கான வாகனம் இதுவென்று நினைக்கிறேன். வழியில் பார்த்தேன்...படம் பிடித்தேன்!!

இந்த சிங்கிள் டோர் காரும் மிகவும் பிடித்தது.

ஒரு பஸ் நீளத்துக்கு இருக்கும் இக்காரை எங்கு எப்படி பார்க் செய்வார்கள்? இருந்தாலும் சுவாரஸ்யமான ஒரு வாகனம்தான்.

நான்கு பேர், முன்னால் ஒரு குழந்தையையும் வைத்துக்கொண்டு செல்லும் அழகே அழகு. 'ஆசைகள் வளர்வது பருவ நெஞ்சிலே ஆனந்தம் மலர்வது பழகும் அன்பிலே!' என்று பாடிக்கொண்டே போகலாம்!!!!!!!!

போலீஸ் கார் சர்சர்ரென்று வந்து நம்மை மறிப்பதற்கு வாகான மூன்று சக்கர வாகனம். நச்சுன்னு சொன்னா 'ஆட்டோ!'

தண்ணீரில் சீறிப் பாயும் வாட்டர் ஸ்கூட்டர்!!!

என்னோட செல்லக் கார் நிழலில் இளைப்பாறுகிறது!!!!

கடைசியாக...நியூயார்க் வீதிகளில் அலைந்த போது, திடீரென ஒரு வாகனம்...விவரிக்கத் தெரியவில்லை. கன்னாபின்னாவென்று இருக்கைகள் வேறு வேறு திசைகள் பார்த்தபடி இளைஞர்கள் சிலர் அமர்ந்தபடி பைக் மாதிரியான தோற்றத்தில் கலகலவென்று சாலை வளைவில் உல்லாசமாக திரும்பி ஓடியது. நான் பார்த்து வியந்து சுதாரித்து க்ளிக்குமுன்னே
சிட்டாகப் பறந்துவிட்டது. யாருக்காவது அது என்ன மாதிரியான வாகனம் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்!!!!!!!!!!!

Labels:


Comments:
நானானி
நச்சுன்னு சொன்னா எனக்கு பிடிச்ச வாகனம் அந்த ஆட்டோ.
ஸ்லீக் வடிவமைப்பு ...குளிர்ச்சியான வண்ணம்.
அதிலே பயணித்தீர்களா?
 
போலீஸ் வண்டி இது மாதிரி நம் ஊரில் கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்களா...

பார்த்தால் டூரிசம் வண்டியாக அம்சமாக இருக்கிறது.
 
அதில் பயணிப்பதற்க்காகவாவது சாலை விதியை மீறி வண்டி ஓட்டி விட வேண்டும்...நான் போகும் போது பார்க்கிறேன்
 
மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?
 
பறவைகள் பல விதம் பாட்டின் ராகத்தில் தலைப்பார்த்தாலே தெரிகிறது கார்கள் மீதுள்ள உங்கள் காதல்...
 
தமிழ்பிரியன்
மீ த ஃபர்ஸ்...ட்...ட்.செகண்ட்...அண்ட் தேர்டு......
யூ த ஃபோர்த்...த்...த்..
 
கோமா, போலீஸ் எனக்கு டிக்கெட் கொடுத்திருந்தால் அதில் பயணித்திருப்பேனோ என்னவோ?
 
நம்ம ஊரிலா...? ஹூம்! போர்ட் ஐக்கான் என்ன...குவாலீஸ் என்ன...
இப்படி என்ன, என்ன..என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் சீந்துவார்களா? ட்ரைவர் ஓட்ட பின்னால் உக்காந்து போறவர்களுக்கு தாங்களே ஓட்டிச் செல்லும் இம்மாதிரியான வாகனம், சுகசவாரி கொடுக்காது.
 
கண்டிப்பாக பாருங்கள்...ஆனால் டிக்கெட் வாங்கிவிடாதீர்கள்!!!
 
நான் இரவு பன்னிரெண்டு மணிக்கு, இருபத்திநாலுமணிநேர மால் ஒன்றின்
காலியான பார்க்கிங் ஏரியாவில் இன்னோவா காரில் சுத்திசுத்தி வந்தேன். என்னோட ட்ரைவிங் ஆசை தெரிந்த மருமகள் காரில்.
 
ஓ!!!பிந்தீட்டீங்களே! தமிழ்பிரியன்!
மகன் ரொம்ப க்யூட்டாக இருக்கிறான். அவன் பேரென்ன?
 
அவனோட நீங்க செலவளித்த நாட்களை, அவன் குறும்புகளை பதிவிடுங்களேன்?
 
உண்மைதான் கோமா! கொஞ்சம் பைத்தியம்தான்.
 
ஓகே...ஓகே...கூல்...கூல்...கோமா!
நீங்கதான் பஸ்ட்!!
 
விதம்விதமான வாகனங்கள்.. வித்தியாசமான அனுபவம். அதிலும் அந்த படுத்துக்கொண்டே ஓட்டுவது போன்ற மூன்று சக்கரசைக்கிள் அழகு.!
 
எனக்கும் அந்த படுத்துக்கொண்டே ஓட்டும் சைக்கிள் ரொம்ப பிடித்தது.
எவ்வளவு உல்லாசமாக ஓட்டுகிறார்கள் பாருங்கள்.
 
நல்லாருக்கு வாகனக் கலெக்‌ஷன்!!
ம்ம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்!! :-)
 
இன்னும் இருக்கு முல்லை!!!கலெக்க்ஷன்!!
 
சர்ரென எல்லா வாகனத்திலும் ஒரு ரவுண்டு போய் இறங்கிய ஃபீலிங்கைக் கொடுத்தது பதிவு:)! இன்னும் இருக்கா? போடுங்கள். அடுத்த ரவுண்டு போக நான் ரெடி:)!
 
கலெக்‌ஷன் அருமை. அங்கையெல்லாம் ஒருத்தரோட அனுமதியில்லாம அவங்க வண்டிய படம் எடுக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஒருதடவை அழகா இருக்கேன்னு ஒரு பைக் முன்னாடி படம் எடுக்க பசஙக முயற்சி பண்ணப்ப செக்யூரிட்டி வந்து தடுத்துட்டாரு. பி,கேர்புல்.. :-)
 
அதெல்லாம் எனக்குத் தெரியாது...சாணக்கியன்!!முதன்முதலாக வருகை தந்து எச்சரிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி!!! ஆனா நாந்தான் அத்தனையையும் போட்டோ எடுத்துவிட்டு இந்தியாவுக்கு ஓஓடி வந்துட்டேனே!!!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]