Saturday, January 17, 2009

 

யானை படுத்தால் குதிரை மட்டம்...விமானம் படுத்தால் படகு மட்டம்!!!!!

காணாத காட்சியெல்லாம் கண்டோம். ஹட்சன் ஆற்றில் ஒரு கையை உயரே துக்கிய படி நிற்கும் சுதந்திரதேவி சிலை, கையைக் காட்டி, 'ஸ்டாப்!!' என்று சொன்னதோ?

அது சொன்னபடிக் கேட்டு பதமாக யாருக்கும் ஆபத்தில்லாமல் நீரிறங்கியதோ விமானம்?

வானத்தில்தான் இப்படி ரெக்கைகளின் மேல் நின்றபடி பறக்க முடியாது. அந்த அனுபவத்தையும் பெற்றார்கள் பயணிகள்!!

அப்பாட!!!எல்லோரையும் பத்திரமாக கரை சேத்தாச்சு!!தினம் தினம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு நாளாவது தண்ணீரில் இறங்கி, ஒரு 'முங்காச்சு' போடணுமுன்னு ஆசை!! இன்று ஆசை தீர முங்காச்சு போடலாம்...ஹையா!ஜாலி!!

'யானை படுத்தால் குதிரை மட்டம்'என்பார்கள். இங்கு வலையில் மாட்டிய சிங்கத்தின் மேல்
சுண்டெலிகள் துள்ளித் துள்ளி ஓடுவதைப் போல் விமானத்தை சுற்றி மீட்புப்படகுகள் !!!

போட்டிலே வந்தும் பயணிகள் போர்டிங் செய்யலாமோ?

ஆஹா! பைலட் கூட அவர் காபினுக்குள் போட்டிலிருந்து போர்டிங் செய்யலாம்.

விமானத்தின் வாலருகில் வந்து வாலாட்டுகிறார்கள்!!!!!சுழற்றி அடிக்கமுடியாது என்ற தைரியத்தில்!!!

பயணிகள் அனைவரும் உயிர்ச் சேதமின்றி மீட்க்கப்பட்டார்கள் என்று அறிந்த பின் தோன்றிய
கமெண்டுகள்!!!!
அவர்களுக்கும் இது ஒரு திகிலூட்டிய அனுபவமாயிருக்கும்தானே?
விமானிக்குப் பாராட்டுகள்!!!!

Labels:


Comments:
விமானிக்கு வாழ்த்துக்கள்.
 
//ஒரு நாளாவது தண்ணீரில் இறங்கி, ஒரு 'முங்காச்சு' போடணுமுன்னு ஆசை!! இன்று ஆசை தீர முங்காச்சு போடலாம்.//

:))))))))))))))
 
நல்ல த்ரில் அனுபவம் அக்கா!

அன்புடன்
அபிஅப்பா
 
நம்ம ஊர்ல பஸ்ஸை மரத்தில் மோதிட்டு எத்தனை ட்ரைவர்கள் எஸ்கேப்ப்ப்ப்ப்ப் ....

கடைசி வரை இருந்து, எல்லோரும் பத்திரமாக இருப்பது அறிந்தே, பின்னர் கரைசேர்ந்ததாக விமானி பற்றி செய்தி வாசிக்கையில் பிரம்மிப்பாகவும் இருக்கிறது. ரியல் ஹீரோக்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் !!!!
 
சுவாரஸ்யமாக படத்துக்குப் படம், கமென்ட்டுகள் அருமை.
 
பயணிகள் அனைவரும் உயிர்ச் சேதமின்றி மீட்க்கப்பட்டார்கள் என்று அறிந்த பின் தோன்றிய
கமெண்டுகள்!!!//

கலக்கலான கமெண்டுகள்.
 
நானானிக்கே கை வந்த கலை - கமெண்ட்ஸ் போட்டு படம் காட்டி - தலைப்பிட்டு - எந்த ஒரு நிகழ்வையும் சுவாரஸ்யமாக்குவதில் நானானிக்கு இணை நானானிதான்

நல்லாருக்கு

சுதந்திர தேவி சிலை ஸ்டாப் சொன்னதா --- பலே பலே !!
 
இங்கே இறங்கினால்தான் பத்திரமாக பிழைக்க முடியும் என்றே நிறுத்தச் சொல்லியிருக்கிறார் சுதந்திரதேவி. கற்பனை நன்று.

விமானிக்கு ஒரு பெரிய சல்யூட்.
 
9/11 அன்று சுதந்திர தேவி அந்த இரு விமானங்களையும் ஸ்டாப் சொல்லியிருக்கக் கூடாதா
சகாதேவன்
 
நன்றி! ராஜ நடராஜன்!
கப்பலின் காப்டன் மாதிரி பைலட் கடைசி பயணி வரை காப்பாற்றி வெளியேறி அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டார்.
 
தண்ணீரில் இறங்கினால் யாருக்குத்தான் அந்த ஆசை வராது? ஆயில்யன்!!
 
உண்மைதான்...அபி அப்பா!
 
ரொம்ப சரி! சதங்கா! உண்மையான ஹீரோக்கள் கண்ணுக்குத் தென்படாமல் நிறைய் இருக்கிறார்கள்.
இன்றைய பேப்பரில் கூட ஆட்டோவில் தவற விட்டுச் சென்ற
மூன்று லட்சம் ரூபாயை உரியவரிடம் சேர்க்க முடியாமல் காவல் நிலையத்தில் பொறுப்போடு ஒப்படைத்த அந்த ஆட்டோ ட்ரைவர் கூட ஒரு ஹீரோதான்!!!!
 
படங்கள் பார்த்ததும் ஆசையாயிருந்தது...அதான்!!
 
சந்தோஷம்!!புதுகைத் தென்றல்!!
 
//சுதந்திர தேவி சிலை ஸ்டாப் சொன்னதா --- பலே பலே !!//
நல்லாருக்கில்ல?
 
அதே...அதே..!ராமலக்ஷ்மி!!
 
சகாதேவன்....அவ்விருவிமானங்களும் சொன்ன பேச்சுக்கேட்காத முரட்டு விமானங்கள். ஆனால் இது ரொம்ப சமத்து!!
 
யானை எப்பொழுது எழுந்து நிற்கப் போகிறது என்று காத்திருக்கிறேன்
 
படங்களோடு கமெண்டுகளும் அருமை..கண்களுக்கு விருந்து..!!
 
நாம விளங்கறதுக்கும் அது உள்ளே இருந்தவர்களுக்கும் எத்துனை வேறுபாடு
 
:)
 
chloe purse
chloe paddington handbag
chloe uk
dior
christian dior
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]