Thursday, January 15, 2009

 

பங்குச் சந்தை காளை மாட்டுக்கு...மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!!!!!!

பொங்கல் திருநாளுக்கு மறுநாள், நமக்கு பலவிதத்திலும் உதவியாயிருக்கும் பசுமாடுகள், காளைமாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக கொண்டாடப்படுவதுதான் 'மாட்டுப் பொங்கல்'. 'பசு பால் கொடுக்கும்' காளை உழவுக்கும் வண்டிகளில் பூட்டி சவாரி செய்யவும், சரக்கு(இது வேற சரக்கு) ஏற்றிச் செல்லவும் நமக்காக அலுக்காமல் உழைக்கும்
அந்த பிராணிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனே மாட்டுப் பொங்கல்!!!


பசு மாடுகளுக்கும் காளை மாடுகளுக்கும் அன்று கொண்டாட்டம்தான். நல்ல குளிப்பாட்டி, சந்தனம் குங்குமம் இட்டு கொம்புகளுக்கு வண்ண வண்ணமாய் பெயிண்ட் அடித்து மாலை போட்டு அதன் தொழுவின் அருகிலேயே பொங்கலிட்டு மாடுகள்க்கு கற்பூரம் காட்டி, ஒரு தாம்பாளத்தில் பொங்கல் சோறு, சர்க்கரைப்பொங்கல், பழம் வைத்து அவைகளுக்கு நம் கையால் உண்ணக் கொடுத்து பின் பொங்கல்சோறு, சர்க்கரைப் பொங்கல், மற்ற காய்கறிகள் எல்லாவற்றையும் அப்படியே ந்ம் வயலில் வேலை செய்யும் உழவனுக்கே கொடுத்து விடுவார்கள். அதன் பிறகு மாட்டின் கொம்பில் வேஷ்டி, துண்டு, ரூபாய் ஆகியவற்றைக் கட்டி
வாசல் படிக்குக் கீழே வைகோலால் நெருப்பு மூட்டி மாடுகளை நெருப்பைத் தாண்ட வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். இது ஜல்லிக்கட்டு இல்லையென்பதால் ஓட்டிச்செல்லும் உழவனே அவற்றை எடுத்துக்கொள்வான். மாடுகளும் அலங்காரம் செய்துவிட்ட பெருமிதத்தோடு 'கேட் வாக்' மாதிரி, கேட்டில் வாக்' போகும் அழகே...அழகு.

பங்குச் சந்தை...பங்குச்சந்தை என்கிறார்களே? அது என்ன 'பொள்ளாச்சி மாட்டுச்சந்தையா?'
அது ஏறு முகமாக இருந்தால் 'காளை' என்றும் இறங்கு முகமாக இருந்தால் 'கரடி' என்றும் சொல்கிறார்கள். எலோரும் அலறுவதை பார்த்தால் இப்போது 'பூஜை வேளை கரடியாய்' கரடிதான் நுழைந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அப்ப காளை..? குப்புர படுத்துக்கொண்டதா?

வால் தெரு

அங்கு செய்வதறியாமல் திகைத்து நிற்கும் மக்கள்

வால் தெருவுக்கு வழி சொல்லும் வழிகாட்டி! இனி நல்ல வழி காட்டும்!!!

இந்த மாட்டுப் பொங்கல் தினத்தில் பங்குச் சந்தை காளையையும் வாலை முறுக்கி, 'ஹை!ஹை! ட்ரிக்!ட்ரிக்!' என்று உசுப்பி நாலுகால் பாய்ச்சலில் ஓடவிட வேண்டாமா?
பார்த்தேன்....ஓடினேன் வால்ஸ்ட்ரீட்டுக்கு. தேடினேன் காளையை. நொந்து போய் ஓய்ந்து கிடந்த 'பங்குச் சந்தை காளையை உசுப்பினேன்!!!! 'உலகமே அலறிக் கொண்டிருக்கு! நீ இங்கே சொகுசாய் படுத்துக் கொண்டிருக்கிறாயா...காளையே?' என்று நல்ல வார்த்தை சொல்லி கிளப்பி விட்டிருக்கிறேன்.

பாருங்கள்!!!!!வரும் நாட்களில் பங்குச் சந்தை ஏறு முகமாக, 'காளைச் சந்தையாயிருக்கும்!!!!'

Labels:


Comments:
நானானி,

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
 
நானானி வாக்கு
நல்வாக்கு ஆகட்டும்!
பங்குச் சந்தை காளை
நாலுகால் பாய்ச்சல் காட்டட்டும்!
எல்லோரும் நலம் பெற்று வாழட்டும்!
 
சும்மா படுத்துக்கிடந்த வால் ஸ்ட்ரீட் காளையை நீங்கள் எழுப்பி விட்டீர்களா? ஒபாமா சார்பில் உங்களுக்கு நன்றி
சகாதேவன்
 
பொங்கல் வாழ்த்தை ஏற்றுக் கொள்கிறேன்...ஆளவந்தான்! ஆனால் தமிழ் புத்தாண்டு வாழ்த்தை சித்திரை வருடப் பிறப்பன்று வாங்கிக்கிறேன். சேரியா? ஆளவந்தோர் அவர் இஷ்டப்படியெல்லாம் மாற்றுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

'தை மாதப் பிறப்பு' என்றும்
'சித்திரை வருடப் பிறப்பு' என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
 
'புஸ்ஸ்ஸ்ஸ்...புஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று
மூக்கிலிருந்து புகை வர ஓடி வந்து கொண்டிருக்கிறது பாருங்கள்!!!!
ராமலக்ஷ்மி!!!
 
அப்ப இத ஓபாமாவுக்கும் சொல்லீட்டிங்கதானே? ஒண்ணும் பிரச்சனை வராதே? சகாதேவன்!
எங்கே ஆளையே காணோம்? பேரன், பேத்திகளோடு விளையாடும் மும்முரமா?
 
ஆளவந்தோர் அவர் இஷ்டப்படியெல்லாம் மாற்றுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.//

மிகச் சரியான அதே சமயம் உறுதியான உங்கள் முடிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இன்றைக்கு தியாகய்ய ஆராதனை கூட. அதைப் பத்தி பதிவு போட்டிருக்கேன்.
 
ரொம்ப சந்தோஷமா இருந்தது, நானானி அவர்களே! என்னோட பதிவுக்கு வந்ததும் கமெண்ட் போட்டதும், ரொம்பவே நன்றி. மாட்டுப் பொங்கலிலே இருந்து பங்குச் சந்தைக்குக் கூட்டிப் போய் அங்கிருந்து எல்லாரையும் வாழ்த்திய உங்கள் புதுமையை ரசிக்கின்றேன். ரொம்ப நன்றி. பொங்கல் வாழ்த்துகள்.
 
ஆகா ஆகா - மலரும் நினைவுகள் - மலர்ந்தன இனிமையாக - அதிக நேரம் செலவழித்தேன் - நினைத்து நினைத்து மகிழ்ந்தேன்

இளவயதில் - அப்பா அம்மா தாத்தா பாட்டி அண்ணன் தம்பி தங்கைகள் என கூட்டுக் குடும்பத்தில் தஞ்சைத்தரணியில் வீட்டிலிருந்த பசு மாடுகளுக்கும் கன்றுக்குட்டிகளுக்கும் இனிய மாட்டுப்பொங்கல் கொண்டாடிய நிகழ்வினை நினைவுறுத்திய அருமையான பதிவிற்கு நன்றி

மாட்டுப்பொங்கல் வால் தெருவில் போய் காளை மாட்டு வாலைப் பிடித்து முறுக்கி பொஸ் பொஸ் என ஓட வைத்தமைக்கும் நன்றி

நல்ல பதிவு நானானி
 
என் உறுதியான முடிவுக்கு நீங்கள் வழிமொந்ததுக்கு மிக்க நன்றி! புதுகைத் தென்றல்!!
 
கீதாம்மா! ரொம்பநாள் கழிச்சு ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வந்திருக்கிறோம். சந்தோசமாயிருக்கு. இனி அடிக்கடி வந்துபோய்க் கொண்டிருப்போம். சேரியா?
 
நீங்க மகிழ இப்பதிவு அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி! சீனா!
 
:-)) பழைய வழக்கத்தையும் சொல்லொ புதியதொரு வழக்கத்தையும் அறிமுகப் படுத்தியிருக்கீங்க!! ஆனா நாந்தான் ரொம்ப லேட்!
 
Nice info,

follow my classified website - indian latest online classiindia classified - www.classiindia.in
 
அருமை. இந்த பதிவு பழைய களக்காடு வாழ்க்கையை நினைவு படுத்தியது. திரும்ப திரும்ப கிடைக்காத ஒன்று
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]