Monday, January 12, 2009

 

புது வருட புகைப்படப் போட்டிக்கு(சனவரி) என் உபயம்.


இது எனக்கு மிகவும் பிடித்த...சிரமப்பட்டும் பிடித்த படம். படத்திலிருக்கும் சிறுமிகள் இருவரும் ( என் மகள், அக்கா மகள்)என்னிடம் ஒரு போட்டோ செஷனுக்குக்காக வந்தார்கள்.
ரொம்ப ப்ரோபஷனல் வார்த்தையாயிருக்கோ? வேறொன்றுமில்லை இருவரும் ஒரே மாதிரி புடவைகள் உடுத்தி படமெடுக்க வேண்டுமென்று. என்னிடமும் அக்காவிடமும் சிலவை ஒரேமாதிரி இருக்கும். இந்தப்படத்தில் கூட இருவரும் உடுத்தியிருக்கும் பாவாடையும் சுடிதார் டாப்பும் ஒரே புடவையிலிருந்து தைத்ததுதான். இந்தப் போஸ் மட்டும் என்னோட ஐடியா! வீட்டில் காசி அரளி மரம் ஏப்ரல், மே மாதங்களில் பூத்து குலுங்கிக் கொண்டிருக்கும்.
அம்மலர்களையெல்லாம் பறித்து வந்து இருவரையிம் உயரே தூக்கிப் போடச்சொல்லி க்ளிக்கியது. நாலைந்து டேக்குகளுக்குப் பிறகு சரியாக வந்ததுதான் இப்படம்!!!!

இது ஏற்கனவே பிரதிபலிப்புக்கு அனுப்பியது.

இதுவும் ஒரு வகை பிரதிபலிப்புதான். கலர் காம்பினேஷன் அழகாயிருக்கும்.
இரண்டாவதும் மூன்றாவதும் பார்வைக்கு.

முதல் படமே போட்டிக்கு. சேரியா? நண்பர்களே?

Labels:


Comments:
மூன்று போட்டோக்களுமே அருமை!

போட்டியோட ஸ்பெஷ்லிட்டி எதுக்கு ஏன் அப்படின்னுல்லாம் இருக்கறதால நீங்க முதல் போட்டோ தேர்ந்தெடுத்ததும் நல்ல செலக்‌ஷந்தான் :)


முதன் முதலாய் கேமரா கையில் கிடைத்த நாளில் பூவினை தூக்கிப்போட்டு பிடிப்பது போன்ற விளையாட்டினை பலமுறை முயன்று,பூவும் வேஸ்டானுச்சு போட்டோக்களும் வேஸ்டானுச்சு! :(

ஆனா அந்த நினைப்பு மட்டும் மாறல என்னிக்காச்சும் ஒரு நாள் எடுத்துடமாட்டேனா என்ன?! :)))
 
முதல் படம் மிக அருமை... நான் உங்க உழைப்பை சொன்னேன் :)
 
முதல் படம் சொல்லவே வேண்டாம்.

சந்தோஷம் “பூத்து”க் குலுங்குகிறது.

பூ மழை போல் பரிசு மழை பொழிய வாழ்த்துக்கள்.

இரண்டாவது என்னை ரொம்பவும் கவர்கிறது.
 
முதல் படம் அருமை
வாழ்த்துகள்
 
மூன்றுமே அருமை..2,3 வண்ணங்கள் அழகு!! வாழ்த்துகள், போட்டிக்கு!
 
//

// முதன் முதலாய் கேமரா கையில் கிடைத்த நாளில் பூவினை தூக்கிப்போட்டு பிடிப்பது போன்ற விளையாட்டினை பலமுறை முயன்று,பூவும் வேஸ்டானுச்சு போட்டோக்களும் வேஸ்டானுச்சு! :(//

அடப்பாவமே!! எதுக்கு? எதுக்குன்னு கேக்குறேன்..இந்த விளையாட்டு!

//ஆனா அந்த நினைப்பு மட்டும் மாறல என்னிக்காச்சும் ஒரு நாள் எடுத்துடமாட்டேனா என்ன?! :)))
//

இது..இது எங்க ஆயில்ஸ் அண்ணா! சீக்கிரம் ஆர்குட்-ல போடுங்க!!
 
நானும் இதுக்கு நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். பூக்களை வீசிவிட்டு கைகளை மேலேயே வைத்திருப்பார்கள். அதில் முகம் மறைந்திருக்கும். அல்லது கைகளை விதவிதமாக கொண்டுபோயிருப்பார்கள். கடைசியாக கேமரா-கம்-இயக்குனர் வேலையையும் எடுத்துக் கொண்டு, பூக்களை மேலே வீசிவிட்டு உடனே கைகள் கீழே வந்துவிடவேண்டும், முகம் மட்டும் மேலே சிரித்த வண்ணம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும், இரண்டு பேரும் ஒரே போல் செய்ய வேண்டும் என்று சொல்லி ரெண்டு மூன்று முறை செய்து நான்காவது முறைதான் சரியாக வந்தது.
இது டிஜிட்டல் கேமரா அல்ல பிலிம் ரோல் போடும் கேமரா!!

நினைப்பு மாறாமல் முயலுங்கள், ஆயில்யன்!!வேஸ்ட்டிலிருந்துதான் எவ்வளவோ நல்ல விஷயங்கள் கிடைத்திருக்கின்றன.
என்னிக்காச்சும் ஒரு நாளுக்காக காத்திருக்கிறேன்.
 
உழைப்புக்கு என்றுமே பலனுண்டு, ஆளவந்தான்!!!நான் உங்க பாராட்டைச் சொன்னேன்.
 
இரண்டாவதும் மூன்றாவதும் நல்லா இருந்தாலும் சிரமமில்லாமல் எடுத்தது.
முத்தக்கா!!!
 
நன்றி! திகள்மிளிர்!!!
 
சந்தனமுல்லையின் வாழ்த்துக்கு, சந்தனமும் குங்குமமும் தரலாம்!!
 
//அடப்பாவமே!! எதுக்கு? எதுக்குன்னு கேக்குறேன்..இந்த விளையாட்டு!//
'ஆயில்'யனின் டாங்கை ஏன் காலியாக்குகிறீர்கள்...சந்தனமுல்லை?
ஃபில்லப் செய்து ஃபுல் டாங்கில் ஓடவிடுவீர்களா...?
நீங்கள் டாப்கியரில் எகிறுங்கள், ஆயில்யன்!!!
 
மேலே எழுந்த மலர்கள் வெற்றி மாலையாகக் கழுத்தில் விழட்டும்
 
Chithi all the best for the contest... Photo suppppppeeeerrrrrr.....
 
ம்ம்ம் கை வசம் தொழில் இருக்கு - கவலை ஏன் - நல்லாருக்கு - படங்கள்

நல்வாழ்த்துகள் நானானி
 
நன்றி!கோமா!
 
கைவசம் நிறய தொழில்கள் இருக்கு....என்ன ப்ரோசனம்?
 
Thanks SUBBUlakshmi!!!
both of you are so cute in the picture.
 
Chithi still remember those days... Posing for the pics in different sarees... Nice days, wish those days come back...:-) (Sorry tamil fonts illa, adhan tamil blog - english writing)
 
Those days are still there. so make it come again. Thanks SUBBU!
 
பூமழை தனிக் கவனம் பெற்று பாராட்டைப் பெற்றுள்ளது இன்றைய பிட் பதிவில். வாழ்த்துக்கள்!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]