Monday, December 22, 2008

 

அடையடையாம் அடையடையாம் - சமையல் குறிப்பு

அடைகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.
இந்த விதம் கிடைத்தது..."பொங்கி வருக தமிழே ! சங்கப்புலவர் காண வருக...!"என்று ஔவையார் பாடியதும் பொற்றாமரை திருக்குறளை ஏந்தி வந்த மாதிரி....
எனக்கொரு தாமரை கொண்டு தந்த குறிப்பு இது.

முழுவதும் கொண்டைக்கடலையால் செய்த அடை!!
முதல் நாள் இரவே கடலையை ஊற வைக்க வேண்டும்.
காலையில் அதன் மேல் தோலை பிதுக்கி எடுத்து பருப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாமரை சொன்னது,'உங்களுக்கு பொறுமை இல்லையானால் பாதித் தோலையாவது பிதுக்கி எடுங்கள்!!' வந்ததே ரோஷம்!!!எனக்கா இல்லை பொறுமை...?
என் பொறுமை உலகறிய வேண்டாமா? அத்தனைக் கடலையிலிருந்தும் தோலை பிதுக்கி...பிதுக்கி எடுத்தேன்....கவிழ்த்தேன் மிக்ஸிக்குள்!!

அத்தோடு இஞ்சி, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, பச்சைக் கொத்தமல்லி சேர்த்து அரைத்தெடுத்தேன். உப்பும் பெருங்காயம் சேர்த்து கலந்து...

முறுகல்...முறுகலாக அடை வார்த்தெடுத்தேன். பச்சைமிளகாய்,கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்தரைத்த தேங்காய் சட்னியை அடையின் உள்ளே தடவி அடைரோலாக செய்து தட்டில் வைத்தேன். மேஜைக்குப் போகுமுன் வீட்டிலுள்ளோர் எடுத்தது கண்டேன்...வாயில் கடித்ததும் கண்டேன். தொண்டையில் இறங்கியதையும் கண்டேன்.

மிக்ஸியில் கொண்டைக்கடலையைப் போட்டு அரைக்கு முன், 'அம்மா...! எனக்குக் கொஞ்சம் கடலை வேண்டும். தனியாக எடுத்து வையுங்கள்!!' என்ற அரைகூவல் கேட்டது.
என் மகள்தான். எதற்கு? கட்லெட் செய்ய என்றாள். அவளுக்கு எடுத்து வைத்த தோலுறித்த
கொண்டைக்கடலையோடு பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, ஜீராபொடி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொதிக்கும் எண்ணெயில் கட்லெட்கட்லெட்டாக பொறித்தெடுத்தாள்.

இதுக்கு என்ன பேர்றீ என்றதுக்கு...பலாஃபல் கட்லெட் என்றாள்!!!

அதிலும் கொஞ்சம் தோல் உறிக்காத கடலை எடுத்து வைத்திருந்தேன். எதுக்கு? சாயங்காலம்
நானே கோத்து தட்க்ஷிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலையாக சாத்தி அர்ச்சனையும் செய்து வந்தேன்.

ஆஹா...!ஊற வைத்த கொண்டைக்கடலை மூன்று விதமாக உபயோகமாயிற்று.
என்ன சாமர்த்தியம் என் சாமர்த்தியம்!!!!!!!!

Labels:


Comments:
செய்து பாத்துட்டா போச்சு, ஒரு டவுட்டு அரிசி மாவு ஏதும் சேக்காம அடை வார்க்க வருமா,
அவ்வளவே. அதோடு மிளகாய்களின் எண்ணிக்கையும் சொல்லிவிடுங்கள், இல்லேனா சொதப்பிடுவேன் நான்.
 
மேஜைக்குப் போகுமுன் வீட்டிலுள்ளோர் எடுத்தது கண்டேன்...வாயில் கடித்ததும் கண்டேன். தொண்டையில் இறங்கியதையும் கண்டேன்.
அட்ரா சக்கை, வயிற்றுக்கு ஈந்ததோடு இல்லாமல் செவிக்கும் ஈகிறீர்கள்.
 
"என் பொறுமை உலகறிய வேண்டாமா? அத்தனைக் கடலையிலிருந்தும் தோலை பிதுக்கி...பிதுக்கி எடுத்தேன்...." பொறுமைக்கு வாழ்த்துக்கள்.
அடை, கட்லட் க்கும் கூட.
 
கொண்டைக் கடலையில் அடையா?
ஹூம்..நீங்கள் வார்த்து வைத்திருக்கும் அடை ரோலையும் மகள் பொரித்து வைத்த கட்லட்டையும் இப்பவே அங்கு வந்து சாப்பிடணும் போலிருக்கிறதே!
தட்க்ஷிணாமூர்த்தி அருள் புரிவாராக:)!
 
கொண்டைக்கு பேர் போன ஆண்டாளுக்கு ஏற்ற மாதமானதால் ,
எல்லாமே கொண்டைக்கடலையில்தானா.
கொண்டைக்கடலை அடையிட்டு ஆண்டவனைக் கொண்டாடுவோம்,
கொண்டைக்கடலை கட்லெட் செய்து அவன் பாதம் கட்டிடுவோம்,
கொண்டைக்கடலை மாலை சாற்றி மனம் மகிழ்வோம்.
[பிதுக்கிய தோல்கள்? தோல்களை துளசிச் செடிக்கு உரமாகப் போட்டால் போச்சு]
 
நான் எந்த அடை செய்தாலும் அரிசி கிட்டவே வராது. சூப்பராக வார்க்க வரும். மிளகாய்களின் அளவு உங்களுக்கு ஒத்துக் கொள்ளும் காரத்தின் அளவைப் பொறுத்தது. சேரியா?
நான் கற்றது எல்லாம் கையளவே!!!
(என்ன ஒரு அடக்கம்!)
 
இல்லையென்றால் பதிவு ஈஈஈஈஈஈஈஈஓட்டிக்கிட்டு இருக்கும்.
ஹி..ஹி..!
 
மாதேவியின் வாழ்த்துக்களுக்கும் வலதுகால் எடுத்து வைத்து முதன்முறை வந்ததற்கும் நன்றிகள்!!!
 
உங்கள் முத்துச்சரம் போல் கோத்த கொண்டைகடலைச்சரம் வாங்கிக்கொண்ட குருவின் பார்வை உங்களுக்கும் கிட்டட்டும்.
 
ஆஹா..! என் மார்கழி மாத பதிவுக்கு மகுடமே...அல்ல...கொண்டையே போட்டுவிட்டீர்கள்.
வேஸ்டையும் வேஸ்டாக்காமல் துளசிக்கு உரமாகப் போடச்சொன்ன உங்கள் ஐடியாவும் நன்று.
 
மீ த 11 போட்டுக்குறென்.. ஊருக்கு வரும் பிஸி... :)
 
ஊருக்கு வருகிறீர்களா? நல்லது தமிழ்பிரியன்!!குடும்பத்தோடு பொழுதுகள் மகிழ்ச்சியாகக் கழிய
வாழ்த்துக்கள்!!!!!
 
ஏன் விமோசனம் இல்லை தெரியுமா?நம் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள்,"வி ஆர் மோ..சமா..ன ,சனம் ,சோ.. நோ விமோசனம்"
 
பொங்கி வருக மாவே,
அடை ஊற்ற வருக என்று ஒளவையார் பாணியில் பாடி என்னை பொற்றாமரை லெவலுக்கு உயர்த்திவிட்டீர்களே. நன்றி.
நல்லா இருந்ததா?. நீங்கள் கட்லெட் செய்து, பின் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சார்த்தி......
மகளே உன் சமர்த்து.
தாமரை.
 
சப்பாத்தி ரோல், தோசை ரோலெல்லாம் சாப்பிட்டு சலிப்பாகிப்போயிருக்கும் வீட்டு மக்களுக்கு புதுசா இந்த அடைரோலையும் செய்து கொடுத்து அசத்திரவேண்டியதுதான் :)

நன்றி நானானி அம்மா.
 
தாமரையின் வாழ்த்துக்கு...சூரியனைக் கண்டது போல் பூத்தேன்!!
 
அசத்து...சுந்தரா...அசத்து!!!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]