Monday, December 22, 2008

 

வெள்ளம்....வெள்ளம் எவ்ரிவேர்!!!

சென்ற மாதம் பெய்த அடை(நான் அடை ஸ்பெஷலிஸ்ட் அல்லவா?) மழையில் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப் பட்டனர். கொட்டிய மழையில் குடிக்க ஒரு சொட்டு நல்ல தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர்.
பொதுவாக குடிசை வாசிகள் கிடைத்த தண்ணீரை அப்படியே குடிப்பார்கள். நடுத்தரமக்கள் கொதிக்க வைத்துக் குடிப்பார்கள். மேல்தட்டு மக்கள் சொல்லவே வேண்டாம்....இருபது, இருபத்தைந்து லிட்டர் கேன்களில் அல்லது ஒன்று, இரண்டு லிட்டர் பாட்டில்களிலும் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரிலேயே குடித்தனம் நடத்தி விடுவார்கள்.

ஆனால் இப்போது பெய்த மழை குடிசை, கீழ்தட்டு, மேல்தட்டு மக்கள் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சும்மா ஜம்முன்னு எல்லோர் வீடுகளுக்குள்ளும் ஒரு ரவுண்டு புகுந்து புறப்பட்டு வந்தது.

முட்டளவு, இடுப்பளவு, கழுத்தளவு நீரில் குழந்தைகளையும் உடமைகளையும் சுமந்து கொண்டு வெளியேறிய காட்சி....பரிதாபமாயிருந்தது.

'வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும்....' என்பது போல் வீதியும் ஒரு நாள் ஏரியுமாகும்என்பது கண் கண்ட காட்சி!!!!பெரிய டேக்ஷாகள், கிடைத்த தர்மோகோல் அட்டைகள் எல்லாம்
படகாக மாறிய விந்தையைக் கண்டது தர்ம மிகு சென்னை!!

காரணம் கேட்ட போது எங்கோ ஏரி ரொம்பியதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டதே காரணம் என்று தெரிந்தது. ஏரி ரொம்பியது சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான்...ஏன் ரொம்பியது? பொங்கிப் பெருகி வரும் உபரி மழை நீரை சேமிக்க போதுமான ஏரிகளோ குளங்களோ நகரிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் இல்லை. இல்லையா? இருந்தது. ஆனால் அவையெல்லாம் குப்பைகளால் நிரப்பி கோட்டங்களாகவும் பல மாடிக் கட்டிடங்களாகவும் ரொம்பிவிட்டது. யாரை நோவது என்றே தெரியவில்லை.

அசோகர் குளம் கட்டினார், ஏரி வெட்டினார், மரம் நட்டார், என்று பிள்ளைகள் படிக்கும்(கொஞ்சம் நக்கலாகவும் இருக்கும்) போதே அதன் முக்கியத்துவத்தையும் சேர்த்தே சொல்லிக்கொடுக்கவில்லை. அதனால்தான் இப்போது....கட்டிடம் கட்டினார், மரங்களை வெட்டினார், கோட்டம் நட்டார் என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
தாழ்வான இடங்களில் வீடு கட்டி குடியேறியவர்களின் பாடுதான் பெரும் திண்டாட்டமாகிவிட்டது.

இவைகளையெல்லாம் பார்த்தபோது நான் பட்ட பாடு ஜுஜூப்பிதான்!!பாருங்களேன் என் ஃப்ளாட்டை சுத்தி வெள்ளம் வந்த காட்சிகளை!!!

கேட் வழியாக கார் உள்ளே வரும் அழகு!!

வீதியில் வாகனங்கள் போகும் போது அலையலையாக தண்ணீர் உள்ளே வரும்.

பார்க்கிங் ஏரியாவில்

போர்டிகோ மேல் ஏறித் தவழும் மழைநீர்!

போர்டிகோ வரை வந்த மழைநீர் வீட்டு வாசல் வரை வர விடாமல் மணலும் மணல்மூட்டைகளைக் கொண்டும் எங்களைக் காப்பாற்றிக் கொண்டோமாம்!!!

உண்மையிலேயே மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் முறையாகப் போய்ச் சேர்ந்தனவா? கடவுளுக்கே வெளிச்சம்!!

Labels:


Comments:
"இவைகளையெல்லாம் பார்த்தபோது நான் பட்ட பாடு ஜுஜூப்பிதான்!!பாருங்களேன் என் ஃப்ளாட்டை சுத்தி வெள்ளம் வந்த காட்சிகளை!!'என்ற உங்கள் வரிகள்!உனக்கும் மேலே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற பாடலை உள்வாங்கியிருக்கும் ம‌ன‌தைக் காட்டுகிற‌து.
அருமையான பதிவு ,அழகான படங்களுடன்.[ஒரே ஒரு சந்தேகம் கோட்டம் நட்டார் என்றால் ...]
 
இதெல்லாம் ரொம்ப கம்மிங்க,இங்கே பாருங்க.
 
பள்ளமான பகுதிகள் வெள்ள நீரால் ரொம்ப மக்கள் பட்ட பாட்டை படங்களுடன் காட்டியிருக்கிறீர்கள். உள்ளம் நொந்து கடைசியில் முன் வைத்த கேள்விக்கும் விடை நீங்களே சொல்லி விட்டீர்கள்.

//உண்மையிலேயே மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் முறையாகப் போய்ச் சேர்ந்தனவா? கடவுளுக்கே வெளிச்சம்!!//

ஆம்:(!
 
வெட்டினார்...கட்டினார்...நட்டார். முதல் ரெண்டுக்கும் பொறுத்தமானவை கிடைத்தன. நட்டாருக்கு கோட்டம்(வள்ளுவர்)தான் மிஞ்சியது. சேரிதானே?
 
அங்கே பார்த்தேன்!!சும்மா சொல்லக்கூடாது...நல்...லாவே இருக்கு. நீங்க எந்த படகிலே போனீங்க?
நமக்கும் வாழ்கையில் ஒரு சேஞ் வேணுமில்லையா?
 
ஆமாம்! ராமலக்ஷ்மி! ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும் போது பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் சொல்லும் தொழில் நுட்ப அறிவுரைகளை...வெறும் புலம்பல்கள் என்று எந்த அரசும் கண்டுகொள்வதேயில்லை.
இதுதான் நம் சாபம். விமோசனம்?ஹுஹூம்!!
 
நோ விமோசனம் ஏன் தெரியுமா? ,இந்த அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் ,
"வி ஆர் மோசனமான சனம்,சோ நோ விமோசனம்"
 
சபா...ஷ்! சரியாகச் சொன்னீர்கள்...கோமா!
 
ஓ.. இந்த பதிவைப் பார்க்கலியே? சமீபத்தில் ஒரு பதிவர் பிரிட்டிஷ் கால சென்னை வரைபடம் போட்டிருந்தார். சென்னையில் பல பகுதிகளில் பெரிய ஏரிகள் இருந்ததற்கான அடையாளங்கள் இடப்பட்டிருந்தன... அவையனைத்தும் இன்று மாடி வீடுகளாக மாறியதே சென்னை அவ்வப்போது மூழ்க காரணம். அதோடு வடிகால் வசதியே இல்லாமல் சாலைகள் அமைப்பும் முக்கிய காரணம் வகிக்கின்றன.
 
தமிழ்பிரியன்,
உண்மைதான். அரசுக்கும் பொறுப்பில்லை, மக்களுக்கும் தட்டிக் கேட்க தைரியமில்லை. ஆட்டோ வந்திடுமில்லா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]