Thursday, December 11, 2008

 

சைக்கிள் முதல் ஸ்னோ மொபைல் வரை - பாகம் ரெண்டு

முதல் முறை அமெரிக்கா சென்ற போது அங்கு சம்மர், அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆறு மாதங்கள் போயிருந்தோம். நம்ம கையும் காலும் மாதிரி வாயும் சும்மாயிருக்கவில்லை. 'இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஸ்னோ பாக்கலையே?' ஸ்னோ பார்க்க இன்னொரு முறை வருவேன்!' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

நாங்கள் இந்தியா திரும்பி இரண்டு மாதங்களில் வர வேண்டிய மருமகனும் மகளும் ப்ராஜெக்ட்
முடியவில்லை என்று எக்ஸ்டெண்ட்.....எக்ஸ்டெண்ட்...எக்ஸ்டெண்ட் என்று எக்ஸ்டெண்ட் ஆகி மகளுக்கு குழந்தை உண்டாகி அங்கேயே பிரசவம் என்றும் முடிவாகியது!!!நான் வணங்கும் தெய்வம் எப்படி கொண்டு வந்து விடுகிறது பாருங்கள்!!!! பிரசவத்துக்கான ட்யூடேட் டிசம்பரில்!!!!புது வெள்ளை மழை என் மேல் பொழிந்தது.

அக்டோபர் கடைசியில் சன்னிவேல் போய் சேர்ந்தோம். டிசம்பரில் சகப் பிரசவம். என் ஆசையை தெரிந்து கொண்ட மருமகன் பேரனுக்கு மூன்றாவது மாதத்தில் அவனையும் எடுத்துக்கொண்டு ஸ்னோ பார்க்க லேக்தாகு என்ற இடத்துக்கு அவரது நண்பர்களோடு ஐந்து கார்களில் சென்றோம்.

காலிபோர்னியாவில் கடுங்குளிர் இருக்குமே தவிர பனிப் பொழிவு இருக்காது. ஆறு ஏழு மணிப் பிரயாண தூரத்தில் இருக்கும் லேக்தாகு என்னுமிடமே ஸ்னோ பார்க்கத் தோதான இடம். மக்கள்ஸ் வாரயிறுதியில் ஸ்னோ ஸ்கீயிங் செய்ய குழந்தை குட்டிகளோடு இங்குதான் வருவார்கள்.

அதிகாலை கிளம்பி பத்து மணி வாக்கில் அங்கு போய் சேர்ந்தோம். முதலில் போன இடம்

ஒரு அடிக்கு மேல் பனி மூடிய மைதானம்.

அங்கு ஸ்னோமொபைல் என்னும் ஸ்கூட்டர் ரைட் செய்யுமிடம். இரண்டிரண்டு பேராக இந்த மொபைலில் ஜாலிரைட் போகலாம். இதில் சக்கரங்களுக்குப் பதில் பனியில் வழுக்கிக் கொண்டு போக ஏதுவாக ஸ்கீயிங் கட்டைகள். ஐந்து இளம் ஜோடிகள்...முன்று கிழம் ஜோடிகள்!!எங்களையும் சேர்த்து! ஆம்! எங்களைப் போல் மகளுக்கு பிரசவம் பாக்க வந்த இரு அப்பா-அம்மாக்கள்! ஒரு மணி நேரத்துக்கு இருபது டாலர்கள் என்று டிக்கெட்டுகள் வாங்கினார்கள். ஹெல்மெட் மட்டும்தான் போட்டுக் கொள்ள வேண்டும். வேறு எந்த தடையும் இல்லை. நானும் சரியென்று ஹெல்மெட் எடுத்து போட்டுக்கொண்டு கிரவுண்டுக்குப் போனோம். போகும் வரை எந்த ஐடியாவும் இல்லை.

அங்கு போனதும் எங்கள் எல்லோரையும் கூட்டி அங்கிருந்த இன்ஸ்ட்ரக்டர் எப்படி ஸ்னோமொபைலை ஓட்ட வேண்டும். டூஸ் அண்ட் டோண்ட்ஸ் எல்லாம் அழகாக டெமோ
செய்து காண்பித்தார். எனக்குள் ஓர் உற்சாகம் பீ..ரிட்டுக் கிளம்பியது. எல்லோரும் தலையை தலையை ஆட்டிக் கொண்டார்கள்.

ரங்கமணி ஓட்ட நான் பின்னால் அமர்ந்து கொண்டேன். இவருக்கு வண்டி ஒத்துழைக்கவில்லை. அல்லது அவரால் முடியவில்லை.

ஒரு ரவுண்ட் முடிவதற்குள் பல இடங்களில் தடுமாறி தடுமாறி நின்றது. அவருக்கு மட்டுமல்ல
கூட வந்த எங்கள் நண்பர்கள் சிலருக்கும் இதே பிரச்சனைதான்.

ஒவ்வொரு முறையும் அந்த இன்ஸ்ட்ரக்டர் ஓடோடி வந்து கிளப்பி விடுவார். ஸ்டக்ப் ஆகி நிற்கும் வண்டிகளை கிளப்பி..கிளப்பிவிட்டே அவர் சோர்ந்திருப்பார்.

ஒரு ரவுண்ட் முடிந்ததும் ரங்கமணி இறங்கிக் கொண்டு 'நீ ஓட்டு' என்றார். இன்னும் அரைமணி நேரம் ஓட்டலாமே என்றதுக்கு வேண்டாம் நீயே அரை மணியும் ஓட்டு என்றார்.
ஓகே என்று இடம் மாறி உக்கார்ந்து கொண்டிருக்கையிலே...நான் ஓட்டப் போகிறேன் என்பதை உணர்ந்த அந்த அமெரிக்கர்...பார்க்க அமெரிக்கையாக இருக்கும் இந்த ஓல்டி என்ன செய்யப் போகிறாளோ என்று எனக்கு சொல்லிக் கொடுக்க ஓடோடி வந்தார்.

அவர் வருமுன்னே 'எடுத்தது கண்டார்..' என்ற அர்ஜுனன் பாணம் போல் சீறிப் பாய்ந்தேன்!
ஒரு இடத்திலும் வண்டி நிற்கவில்லை.எதிர்பார்த்து காத்திருந்த இன்ஸ்ட்ரக்டருக்கு ஏமாற்றம்தான்!!

வெண்ணெயாய் வழுக்கிக்கொண்டு சென்றது ஸ்னோமொபைல். ஆஹா! என்னவொரு ஆனந்தம்!!!

ஓட்டும் வழிமுறைகளையெல்லாம் அவர் சொல்லிக் கொடுக்கும் போதே கவனமாகக் கேட்டுக்கொண்டதும் ஏற்கனவே எனக்குள் இருந்த வெறியும் சேர்ந்து கொண்டு இதை சாத்தியமாக்கிற்று. ஒவ்வொரு முறையும் ஆரம்ப இடத்தை அடையும் போது அங்கிருந்த நண்பர்களெல்லாம், "ஆண்டீ!!!கலக்கிறீங்க!!" என்று கூவும் குரல் காதுகளில் விழும்போது
'புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது' என்பதுபோல் என் மேல் பனிமழையாய் பொழிந்தது. அரை மணிநேரமும் வானத்தில் பறப்பது போல் உணர்ந்தேன்.
நான் என் வசமே இல்லை. இது எனக்குள்ளேயே நான் அனுபவித்த சந்தோஷம்!!

அரைமணி நேரம் முடிந்ததும் கொடிகாட்டிய அந்த அமெரிக்கர் நான் வண்டியை நிறுத்தியதும்
ஓடோடி வந்து என் கைகளிரண்டையும் பிடித்து குலுக்கோ குலுக்கென்று குலுக்கி,' யூ மேட் இட்! மேம்!' என்று வாழ்த்தினார்.

என் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட மகளும் மருமகனும் மீதி அரைமணிநேரத்தையும் நீங்களே உபயோகித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.எதுவே எதேஷ்டம்!
என்று நான் அடைந்த சந்தோஷம் நீங்களும் அடையுங்கள் என்று திருப்தியோடு குழந்தையை
கைகளில் வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தேன்.

ஸ்னோ பார்க்க வேண்டுமென்றுதான் விரும்பினேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்றோ அதை இப்படி முழுமையாக பயன் படுத்திக்கொள்வேனென்றோ நினைத்தும் பார்க்கவில்லை!!!!நான் நினைத்தையெல்லாம் எனக்கு நடத்திக் கொடுக்கும் என் 'அம்மா'வுக்கு நன்றி!!!

Labels:


Comments:
'அனுபவம் புதுமை’ அதை
விவரித்த விதமோ அருமை.

//ஒரு இடத்திலும் வண்டி நிற்கவில்லை.எதிர்பார்த்து காத்திருந்த இன்ஸ்ட்ரக்டருக்கு ஏமாற்றம்தான்!!//

‘வெற்றி மீது வெற்றி வந்து
உங்களைச் சேரும். அதைக்
கொண்டு சேர்த்த பெருமை யாவும்
‘அம்மா’வைச் சேரும்.

அழகாய் முடித்திருக்கிறீர்கள்.
 
மீ த பர்ஸ்ட் போட முடியலை... இணையம் ஒரு மணி நேரமா சொதப்பிடுச்சுது...;)
 
பனியிலும் வெற்றிகரமாக வண்டி ஓட்டியதால் இன்று முதல் நீங்கள் பனி வென்ற வீர மங்கை என்ற பெயரால் அழைக்கப்படுவீர்கள்!

///நான் நினைத்தையெல்லாம் எனக்கு நடத்திக் கொடுக்கும் என் 'அம்மா'வுக்கு நன்றி!!!///

அம்மாவுக்கு அம்மாவுக்கு நாங்களும் நன்றி சொல்லிக்கிறோம்.
 
நம்மைச் செலுத்துவது எண்ணங்கள் தாம்!

நம்மால் முடியும்,கலக்குவோம் என்றெண்ணிக் கொண்டே ஒன்றில் இறங்கினால் கலக்குவோம்தான்.

பயத்துடன் ஒன்றில் கை வைக்கும் போது அது சொதப்பிவிடுவதும் பலருக்கும் நடக்கும்.

மற்றபடி you live your life !
 
பனியிலும் வெற்றிகரமாக வண்டி ஓட்டியதால் இன்று முதல் நீங்கள் பனி வென்ற வீர மங்கை என்ற பெயரால் அழைக்கப்படுவீர்கள்!
///
வழிமொழிகிறேன்.. :)))
 
என் சந்தோஷத்தை எல்லோடும் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் சந்தோசம்தான்!
 
பரவாயில்லை, தமிழ்பிரியன்.
மன்னித்தோம்!!!!
 
ஆஹா! பட்டங்கள் எல்லாம் வேறு வந்து குவியுதே!!தன்யளானேன், தமிழ்பிரியன்!!
இப்படிக்கு
பனி வென்ற வீர மங்கை
 
//you live your life !//

//நம்மைச் செலுத்துவது எண்ணங்கள் தாம்!//
மிகச் சரி! அறிவன்!
எண்ணம் நல்லதானாலே மண்ணும் பொன்னாகுமே!!
 
வழிமொழிந்த கயல்விழி முத்துலெட்சுமிக்கும் நன்றி!!!
 
நானானி உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன்.

இன்னைக்கு காலேல எனக்கும் வண்டி ஓட்டணும்னு ஆசை வந்திடுச்சு(முருகன் மெச்ஜ் அனுப்பிட்டான்)

முதல் முயற்சியா டூவீலர் ஓட்டக் கத்துக்கபோறேன்.(சைக்கிள் ஓட்டத் தெரியும் ஆனாலும் மு்றையாக் கத்துகிட்டா நல்லது பாருங்க)
 
இந்தப் பதிவு என் எண்ணத்திற்கு மேலும் வலு சேர்க்குது.

நன்றி
 
பனி வென்ற வீர மங்கை என்ற பெயரால் அழைக்கப்படுவீர்கள்!//

பட்டம் நல்லா இருக்கு.

முத்துலெட்சுமி ஒடியாங்க.

நீங்கதானே பட்டமளிக்கன்னே ஒரு பல்கலைக்கழகம் வெச்சிருக்கீங்க.
 
again கலக்கீட்டீங்க..! You made it maam :)

திரும்ப சன்னவேல் வருவீங்களா? இந்த வருடமும் ஸ்னோ இருக்காம்!
 
புதுகைத்தென்றல்!!
ஒரு பரம ரகஸ்ஸ்ஸ்ஸ்யத்தை உலகறிய சொல்லீட்டீங்களே!
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!! இதில் ஸேம் ப்ளட்டாக இல்லாமல் ஃபோர்வீலர் வரை வந்து கம்பீரமாக சாலைகளை கலக்குங்கள்!!!சேரியா?
 
எண்ணத்தில் வலுவும் கைகளில் பலமும் சேர்க்கட்டும். கேரிஆன்!!!!
 
ஆமா! முத்துலெட்சுமி அதே பட்டத்தையே தானும் பறக்கவிட்டுட்டாங்க. வேற புதுசா கொடுத்திருக்கலாமில்ல?
 
அவருக்கு 'பட்ட நாயகி' என்ற பட்டத்தை நாம் வழங்கலாமா..புதுகைத்தென்றல்?
 
நீங்க சன்னிவேலிலா இருக்கீங்க..பொன்ஸ்? அழகான ஊர் மிதமான குளிர், அதிமிதமான வெயில்! மதியம் ரெண்டு மணிக்கு நாங்க வாக் போவோமே! அருனையாயிருக்கும்.
 
//நான் என் வசமே இல்லை. இது எனக்குள்ளேயே நான் அனுபவித்த சந்தோஷம்!!//

இந்த ஒரு வரியில் அடக்கிவிட்டீர்கள் மொத்த பதிவையும்.

படங்கள் யாவும் அருமை. அமெரிக்கையாக ஆகி, ஆனந்தமாய் பனியில் சறுக்கி, பிறருக்கும் வழிவிட்டு ... என கலக்கிட்டீங்க.
 
தூள் ( பனித்தூள்) கிளப்பி இருக்கீங்க!!!

வெல்டன்.

இன்னும் க்வாட் பைக் ஓட்டலையா?
 
இதில் ஸேம் ப்ளட்டாக இல்லாமல் ஃபோர்வீலர் வரை வந்து கம்பீரமாக சாலைகளை கலக்குங்கள்!!!சேரியா?//

கண்டிப்பாய் செய்வேன்
 
அவருக்கு 'பட்ட நாயகி' என்ற பட்டத்தை நாம் வழங்கலாமா..புதுகைத்தென்றல்?//

ஆஹா சூரியனுக்கே டார்ச்சா.

வழங்கிடுவோம்.

:))))))))))0
 
//இந்த ஒரு வரியில் அடக்கிவிட்டீர்கள் மொத்த பதிவையும்.//
உண்மைதான் சதங்கா! சரியான வரிகளை குறிப்பிட்டு புரிந்துகொண்டிருக்கிறீர்கள்!!நன்றி!!
 
அது என்னா பைக் எங்கிருக்குன்னும் சொல்லிடுங்க...துள்சி! அதையும் விடுவானேன்?
 
நான் இங்கிருந்தே(வெளியிலிருந்தே) ஆதரவு தருவேன். பொட்டியெல்லாம் வேண்டாம். தென்றல்!
 
ஆமா! நாம சீரியனுக்கு டார்ச்சும் அடிப்போம், கூலிங்க்ளாசும் போட்டுவிடுவோம்.ஹூக்கும்!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]