Friday, December 5, 2008

 

காக்டெயில் புலாவ் - சமையல் குறிப்பு

' என்ன சமையல் செய்யலாம்? அதை எப்படி அழைக்கலாம்?' என்று பாடிக்கொண்டே
என் ஆஸ்தான அறைக்குள்(அதான்!..கிச்சனுக்குள்)நுழைந்தேன். சில சமயம் ஒரு மாதிரி போரடிக்குமே? அப்படித்தானிருந்தது அன்றும். பிரிட்ஜைத் திறந்தேன். 'என்னை ஏதாவது பண்ணேண்டீ!!!இங்கே குளிர் தாங்கலை!' என்று என்னைப்பார்த்துத் தவிப்போடு கூவியது, பாதி கட் பண்ணி மீதியிருந்த பப்பாளி, அன்னாசி ஒரு கொத்து திராட்சை, ஒரு முழு ஆப்பிள், ஒரு சாத்துக்குடி.
கொஞ்சம் பொறுங்கள்!!என்று சொல்லிவிட்டு என் ஐடியா கோடவுனை சிறிது....சிறிதுதான் திறந்தேன்...பசக் என்று ஸ்பைடர்மேன் மாதிரி என் மனதில் வந்து ஒட்டிக்கொண்டது ஓர் ஐடியா!!

அவ்வளவுதான். போரடித்த போரையெல்லாம் 'ஆனைகட்டி போரடித்து' விரட்டினேன்.
மளமளவென்று வேலை ஆரம்பித்தாயிற்று.

குளிரில் வெடவெடத்த பப்பாளி, அன்னாசி,திராட்சை, ஆப்பிள், சாத்துக்குடி அனைவரையும் வெளியே எடுத்தேன். சந்தோஷமாக வெளியே குதித்தோடி வந்தன அவைகள். அடுத்து நடக்கப் போகும் கொடுமையறியாமல்.
சாத்துக்குடியை தனியாகப் பிழிந்து சாறெடுத்துக்கொண்டேன். பப்பாளி,ஆப்பிளை சேர்த்து மிக்ஸியில் அடித்து ஜூஸாக்கினேன். அன்னாசியையும் திராட்சையையும் அதேபோல் அடித்து
வடிகட்டியில் கொட்டையில்லாமல் ஜூஸாக்கினேன். ஐந்து பழரசமும் சேர்ந்து மூன்று கப் எடுத்துக்கொண்டேன். (இதுக்கு நாங்கள் ப்ரிட்ஜிலேயே இருந்திருக்கலாமென்று முனங்கின பஞ்ச பழங்களும்)


பின்னர் வழக்கம் போல் வெங்காயம் ரெண்டு நீளமா நறுக்கி இஞ்சி பூண்டு விழுது, பச்சை பட்டாணி, ஏலம் கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, தேங்காய்ப்பால் ஒரு கப், நெய் அல்லது ரிபைண்ட் ஆயில், பிரியாணி அரிசி ரெண்டு கப் எல்லாம் தயார் செய்து கொண்டு அடுப்பை ஏத்தி அதில் என்னோட பேமஸ் ஏ எம் சி பாத்திரத்தை வைத்து சிறிதே சிறிது எண்ணை ஊற்றி மசாலா சாமான்களைப் பொறித்து பின் வெங்காயம் பட்டாணி சேர்த்து சிறிது வதக்கினேன்.

பிறகு பத்து நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரில்லாமல் வடிகட்டிய பிரியாணி அரிசியையும் சேர்த்து பிரட்டிக் கொடுத்தேன்.

ரெண்டு கப் அரிசிக்கு நாலு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் ஒருகப் தேங்காய்ப் பாலும் மூன்று கப் ஐந்து வகை பழரசமுமாக பாத்திரத்திலிட்டு நன்கு கலக்கி கொதிக்கவிட்டேன்.
பாதி வேக்காட்டில் தேவையான உப்பு சேர்த்தேன்.

முக்கால் வாசி வெந்ததும் மறுபடி நன்றாக பிரட்டிவிட்டு அரிந்த கொத்தமல்லி தூவி நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸும் தூவி மூடிவிட்டேன். அடுப்பையும் அணைத்துவிட்டேன்.

சாப்பிடுமுன் திறந்ததும் பொலபொல வென பொலாவ் உற்சாகமாக மலர்ந்திருந்தது!!
மணமும் எல்லா அறைகளிலிருந்தவர்களையும் அறைந்திழுத்தது!!

சரி இதுக்கு என்ன பேர் வெக்கலாம்?
பார்களில் பல மதுபான வகைகளை சரியான அளவில் கலந்து 'காக்டெயில்'ன்னு பரிமாறுவார்களே(ளாமே) அது போல் பல வகை பழரசங்கள் கலந்த இதுவும் ஒருவகையான காக்டெயில்தான். ஆகவே இந்த புலாவுக்குப் பேர் "காக்டெயில் புலாவ்!!"

பேரைப் படிக்கும் போதே கிக் ஏறுதா? சாப்பிட்டும் ஏறுச்சான்னு சொல்லுங்க.....!சேரியா?

Labels:


Comments:
மீ த பர்ஸ்ட் போட எம்புட்டு நேரமா வெயிட் பண்றதும்மா... இருங்க படிச்சிட்டு வர்ரேன்.
 
டிஸ் எல்லாம் ஏகப்பட்ட ஐட்டத்தோட இருக்கே..:)) வாசனை இங்க வந்துச்சு..:)
 
ஐய! உங்க மீ த் பர்ஸ்டை காணோமேன்னு நானும் எம்மா நேரமா காத்துனுகீறது? வா ராசா வா!!
 
வாசனை வந்துச்சா..வந்துச்சா..வந்துச்சா..?
 
பார்த்தேன் !


அழகாய் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்

பழங்கள்

புலாவ்

ரசித்தப்படியே

ம்ம்ம்ம் பார்ப்போம் என்னிக்காச்சும் வாய்ப்பு கிடைச்சா இதை டிரைப்பண்ணிடலாம்!

:)
 
’கிறங்குதே மயங்குதே மனசு காக்டெயில் வாசத்தாலே...’

அடிக்கடி உங்களுக்கு போரடிக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறோம்.
 
இதுக்கு மாக்டேல்-நு தான் பேரு வைக்கணும்.
காக்டேல்-கு சாராயம் ஏதாவது தேவை.

தமிழர்கள் எதை சமைச்சாலும் எண்ணையும் வெங்காயமும் போடாமே இருக்க மாட்டேங்க-நு எங்கேயோ படிச்ச ஞாபகம்.

வெள்ளிக்கிழமை இரவு காக்டேல் பற்றி பேசி சமையல் குறிப்பு கொடுத்து வெறுப்பு ஏற்றியதற்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்!
 
உங்க வீட்டுக்கு வந்தேன் தமிழ்பிரியன்!
நவ ரசத்தில் ஒன்றிரண்டு குறைந்த பதிவு. என்னோட பதிலை அங்கே பின் பண்ணிட்டு வந்திருக்கேன்.
 
என்னுடைய ஃபிரிஜைத் திறந்தால் ,"எங்களை இப்படியே விடேண்டி ,நாங்க நல்லா இருக்றது உனக்கு பிடிக்கலையா...நீ நானானியா இருந்தா எடு இல்லாங்காட்டி வுடு"ன்னு ஏகப்பட்ட ரகளைதான்....ஒரு நாள் வாங்களேன்.."பழமுதிர்ச்சோலை உனக்காகத்தான்" என்று வைத்திருக்கிறேன்
 
ஆகா ஆகா நானானி

காக்டெயில் காலம் போய் இப்போ காக்டெயில் புலாவ் சாப்புட ஆச வந்திருச்சி

பஞ்ச பழங்கள் - பாவம் - குளிர்லே வெடவெடக்கும் பப்பாளி, அன்னாசி, திராட்சை, சாத்துக்குடி, ஆப்பிள் - காக்டெயில் ஜூஸ் பிளஸ் தேங்காப்பால் - கலந்த பிரியாணி - வெஜிடபிள் பிரியாணி -- அய்யோ - வாயிலே எச்சி ஊறுதே !

ம்ம்ம்ம் நல்லாருக்கு நல்லாருக்கு
 
"என்ன சமையல் செய்யலாம் எப்படி அழைக்கலாம்" என்று தொடங்கிய பாட்டை நான் முடிக்கிறேன்.
'காக்டெயில் புலாவ் உங்கள்
காக்டெயில் புலாவ்,
பஞ்ச பழங்களுக்கு நல்ல பெயர்
காக்டெயில் புலாவ்'
சகாதேவன்.
 
வழக்கம் போல நகைச்சுவையோடு, சுவையான ஒரு (ரொம்ப தில்லான ஆளு தான் நீங்க :))) பதார்த்தம் அறிமுகப்படுத்தி அசத்திவிட்டீர்கள்.

யாராவது செஞ்சு கொடுத்தா நல்லா இருக்குமோ ?!!!
 
ஆயில்யன்...நல்லாருக்கா? சும்மா..பொழுது போகலை...அதான்!
 
நான் போரடிக்குதுன்னு சொன்னது கிச்சனுக்குள் போகவே! ஆனால் வேற வழி? கைக்கு கெடச்சதையெல்லாம் போட்டு காக்டெய்லிட்டேன்!!!
 
வந்தாப் போச்சு! கோமா! பழமுதிர்சோலை அல்லவா இருக்கு?
பறிச்சு பறிச்சு தின்னலாமில்ல!
சமச்சு சமச்சு தின்னலாமுன்னா நா வரலைப்பா!
 
வாங்க சீனா!
மதுரைலே பழங்களெல்லாம் சல்லிசா இருக்கும்தானே? அப்புரமென்ன?
 
வந்துட்டார்ப்பா...குவிஸ்மாஸ்டர்..ஜோரா..அந்தாக்க்ஷரி பாட!!
 
தில்லான ஆளுதான்...மனசுல!
இல்லைனா பொழைக்க முடியுங்களா?
 
உங்கள் கிச்சனுக்குள்ளே போவதற்கே போர் அடிக்கும் என்றால் அடுத்த வீட்டு கிச்சனுக்குள் நுழைய போர் அடிக்காதா?இது கூடத் தெரியாமல் இருந்தால், நான் எப்படி ,'கிச்சனுக்குள் நுழையப் பிரியப்படாதோர் சங்கத்தில்' நான் எப்படி மெம்பராக முடியும்?
 
என் பாலிசி தெரியுமா? கோமா?
என் கிச்சனுக்குள் அடுத்தவரை விடமாட்டேன்..அடுத்தவர் கிச்சனுக்குள் நான் நுழைய மாட்டேன்.
இது எப்டி இருக்கு? அந்த சங்கத்துக்கே நாந்தானே தலைவி...தெரியாதா? இப்பத்தான் ஜெயிச்சு வந்தேன். போனாப் போகுது உங்களையும் சேத்துக்கிறேன்!!!
 
ஹும்ம்ம்...

யாராவது செஞ்சிக்கொடுத்தா (நல்லா) சாப்புடுட்டு சொல்லலாம்

தங்கமணி வேற ஊரு போயிருக்கா ...
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]